- பிப்பரவரி 1986 ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வரி அமைப்பை மாற்ற முன் மொழிந்தார்.
- அதன்பின் 14 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட ஜிஎஸ்டி மசோதா,அதன் பின் 2000ல் பாஜக வின் அடல் பிகாரி வாஜ்பாய் அறிமுகப்படுத்தினார்.இதற்காக நிதியமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
- 2006,பிப்ரவரி 28 ல் நடந்த பட்ஜெட் உரையில் காங்கிரஸ்-திமுக கூட்டனியின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி பற்றி பேசினார்.2010 ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் என கெடு விதித்தார்.இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கடுமையாக எதிர்த்தது.
- பாஜக வின் கடும் எதிர்ப்பை மீறி அப்போதைய காங்கிரஸ் கூட்டனி ஜிஎஸ்டி தொடர்பான வேலைகளில் இறங்கியது.அதற்கு வசதியாக மாநில வரி அலுவலகங்களை 2010 பிப்ரவரி முதல் கணிணிமயமாக்கியது.
- ஆகஸ்ட் 2013 ல் நாடாளுமன்ற நிலைக்குழு ஜிஎஸ்டி மசோதாவைத் தாக்கல் செய்ய தயாராக இருந்தது.அப்போதைய நிதியமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டியின் நோக்கம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினார்.இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பு ஈடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.இதையும் பாஜக மிகக் கடுமையாக எதிர்த்தது.காங்கிரஸ் கூட்டனியில் இருந்த,கம்யூனிஸ்ட்,திமுக ஆதரித்தது.
- அக்டோபர் 2013ல்,ஜிஎஸ்டியால் எங்கள் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 14000 கோடிகள் வருவாய் இழப்பு ஏற்படும் என அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடுமையாக எதிர்த்தார்.
- 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.மோடி பிரதமரானார்.டிசம்பர் 19,2014 ல் மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தினார்.2016 ல் ஜிஎஸ்டி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
- 2017,ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது.அதற்கான அறிமுக விழாவை காங்கிரஸ் புறக்கணித்தது.கூட்டனிக் கட்சிகளான கம்யூனிஸ்டும்,திமுகவும் புறக்கணித்தது.
- அப்போதைய காங்கிரஸ் கூட்டனிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள்,திமுக மற்றும் இதர கட்சிகளின்,கனவுத் திட்டமான ஜிஎஸ்டியை பாஜக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.இதை காங்கிரஸ் கூட்டனி கட்சிகள் எதிர்க்கிறது..
- ஜிஎஸ்டி விவகாரத்தில் பல்வேறு காரணங்களை முன் வைத்து,துவக்கம் முதல் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
- GST அமைப்பை வடிவமைத்த குழு- அசிம் தாஸ் குப்தா
- GST வரி அமைப்பை அமல்படுத்த பரிந்துரைத்த குழு- விஜய் கேல்கர்
- தற்போது இந்தியாவில் உள்ள GST இரட்டை வரி அமைப்பு எந்த நாட்டு மாதிரியை பின்பற்றுகிறது- கனடா
- GST சட்டத்திருத்த மசோதா பாரளுமன்றத்தில் முதன் முதலாக எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது- மார்ச் 22,2011
- GSTன் படி வரி வசூலிக்கும் அதிகாரம் எந்த சரத்தில் கூறப்பட்டுள்ளது- 246A
KNOW ABOUT GST IN TAMIL
July 10, 2017
0
Tags