அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த கா. ந. அண்ணாதுரை அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த கா.ந. அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற ஒரு கட்சி எம். ஜி ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.
பிறப்பு : செப்டம்பர் 15, 1909
இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
இறப்பு : பிப்ரவரி 3, 1969
தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்
நாட்டுரிமை : இந்தியா
ஆரம்ப வாழ்க்கை:
அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக செப்டம்பர் 15, 1909-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலுள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கிளர்க்காக வேலை புரிந்தார். பிறகு அவர் தன்னுடைய பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார்.
1930-ல் தனது 21வயதில் ராணியை மணம் முடித்தார். பின்னர் 1934-ல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். ஏ (பொருளாதாரம் மற்றும் அரசியல்) முதுகலை பட்டமும் பெற்றார். தன்னுடைய கல்லுரி வாழ்க்கைக்கு பிறகு ஆங்கில ஆசிரியராக பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு பத்திரிக்கை மற்றும் அரசியலில் ஈடுபாடுகொண்ட அண்ணா தன்னை முழு அரசியல்வாதியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
அண்ணாவின் அரசியல் தொடக்கம் :
தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியிலிருந்து பிரிந்து “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949 ல் உருவாக்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிக்கையான குடியரசு பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
திமுக உருவாக்கம்:
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால் மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார், இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948ல் நடந்த “திராவிட கட்சியின் கட்சி” கூட்டத்திலிருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.
திராவிட நாடு:
பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்த போது, அண்ணா பெரியாரின் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு அளித்தார். ஆனால், பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட அவரின் மருமகனான இ.வி.கே சம்பத் இக்கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்பது மட்டும் அல்லாமல் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டு திமுகவிலும் இணைந்தார். ஆனால் அண்ணாவின் திமுக கட்சி தமிழ் திரைப்பட கலைஞர்களை முன்னிறுத்தி செயல்பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத், தி.மு.கவிலிருந்து விலகி 1961-ல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற தனி கட்சியை தொடங்கினார்.
1962 ல் நடந்த மாநிலங்கள் அவையில் அவர் பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற நாடு’என்று உரையாற்றினார். அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப்பட்டது. “அண்ணா திராவிட நாடு, திராவிடர்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அக்கொள்கையை கைவிட்டார்.
இந்தி எதிர்ப்பு :
1928-ல் மோதிலால் நேரு அவர்கள் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த ஹிந்தியை பரிந்துரைத்த போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் ஹிந்தி வட இந்தியர்கள் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிமக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்று கருதி கடுமையாக எதிர்த்தார்கள். இதன் தொடக்கமாக காங்கிரஸ் கட்சி 1938-ல் மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அனைத்து பள்ளிகளிளும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், தமிழ் ஆன்றோர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது மிகபெரிய போராட்டமாக வெடித்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 1938 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
1950 இல், இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறிய போது, இந்தியை இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் 1960-ல் திமுக கட்சி அண்ணாவின் தலைமையில் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தப்பட்டது. பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்ட இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் நிறைவேற்றினார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.
தமிழக முதல்வராக அண்ணா:
1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒன்பது மாநிலங்களில் தி.மு.க வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1967 பிப்ரவரியில் சென்னை மாநில அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். பின்னர் ஜனவரி 3, 1968 ஆம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே 1968 இல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:
அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.
இறப்பு:
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராக பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார். அவர் புற்று நோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார். அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள் :
திமுக வில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
அண்ணாவின் படைப்புகள்:
1939 – கோமளத்தின் கோபம்
1942 – களிங்கரணி
1943 – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி
1942 – களிங்கரணி
1943 – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி
குறிப்பிடத்தக்க படங்கள்:
1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்
காலவரிசை:
1909 – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
1930 – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
1934 – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1935 – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938 – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1944 – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
1948 – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி” திரையிடப்பட்டது.
1949 – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.
1962 – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1967 – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.
1969 – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.
1969–பிப்ரவரி3ம்தேதிதன்னுடைய 59 வது வயதில்சென்னையில்காலமானார்.
1972 – அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.
1978 – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.
1987– திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.
2010 – அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.