- 1931-ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவே.
- நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன.
- கிராமங்களில் 17.91 கோடி வீடுகள் உள்ளன.
- இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.
- ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் 29.97% நிலமற்றவர்கள். இவர்கள் கூலி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர்.
- எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
- ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். ( இவர்களில் 10 சதவீதத்தினர் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர்.)
- 3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.
- 9.16 கோடி குடும்பத்தினர் உடலுழைப்பு தொழிலின் மூலமே வருவாய் ஈட்டுகின்றர். இது 51.14 சதவீதம் ஆகும்.
- 30.10 சதவீதத்தினர் வேளாண்மை மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.
- தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர்.
- கிராமப்புறங்களில் வசிக்கும் 23.52 சதவீத குடும்பங்களில், 25 வயதுக்கு மேல் படித்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
- நாட்டில் சராசரியாக 68.35 % கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் செல்போன்களைப் பயன்படுத்துகின்றன.
- உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 86.60 % குடும்பங்கள் செல்ப்போன்களை பயன்படுத்துகின்றன.
- கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் 1% குடும்பங்களில் மட்டுமே தரைவழி தொலைபேசி இணைப்பு உள்ளது.
- கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களில் 28% குடும்பங்களில் செல்போன் அல்லது தரைவழி தொலைபேசி இணைப்பு இரண்டுமே கிடையாது.
- நக்ஸல் பாதிப்புகள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் குடும்பங்கள் 28.47 % உள்ளது.
- குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்தும் கிராமப்புற குடும்பங்கள் 11.04 சதவீதமாக உள்ளது. இதில், 69.37 சதவீதத்துடன் கோவா மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
- நாட்டில் வசிக்கும் 20.69 சதவீத குடும்பங்களில், சொந்தமாக மோட்டார் வாகனங்கள் உள்ளன.
- நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் 18.06 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 17,332 தொழிலாளர்களுடன் திரிபுரா முதலிடத்தில் உள்ளது
- கிராமப்புற மக்களில் 36 % பேர் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். ராஜஸ்தான் 47.58 %., மத்திய பிரதேசம் 44.19 %., பீகார்43.85 % பேர் கல்வியறிவு பெறவில்லை.
- கிராமப்புற மக்களில் கேரளா 88.62 %, டெல்லி 86.42 %, கோவா 84.58 % பேர் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
- ஒட்டுமொத்த இந்திய அளவில் 0.12 % கிராமப்புற திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. இதில் மிசோரம் மாநிலத்தில் 1.08 % கிராமப்புற திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது.
- இந்தியஅளவில் 8 % கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே மாதம் ரூ10,000 /க்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றன.
- 10 % கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே மாதாந்திர ஊதியம் பெறும் வேலையில் உள்ளனர்.
- கிராமப்புற குடும்பங்களில் சராசரியாக 5 …( 4.93 ) நபர்கள் வசிக்கின்றனர். அதிகபட்சமாக உ.பி.யில்6.26 நபர்களும், குறைவானதாக ஆந்திராவில் 3.86 நபர்களும் வாழ்கின்றனர்.
- கிராமப்புற வீடுகளில், இந்திய அளவில் 87 % குடும்பங்கள் ஆண்களாலும், 13 % குடும்பங்கள் பெண்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.
- ராஜஸ்தானில் 91 % குடும்பங்கள் ஆண்களாலும், கேரளாவில் 26 % குடும்பங்கள் பெண்களாலும் நிர்வகிக்கப்படுகிறது.
- கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களில் திருமண வயதை அடைந்த 41.46 % பேர் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதில் நாகலாந்தில் மிக அதிகபட்சமாக 56 % பேர் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.
சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - 2011
July 25, 2017
0
Tags