TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 54
1.தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
அ) பிரதம அமைச்சர் ஆ) சேர்மன்
இ) மேயர் ஈ) அங்கத்தினர்
2. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 2001 ஆ) 2002 இ) 2003 ஈ) 2004
3. தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்?
அ) ஏ.பி.பரதன் ஆ) ஜோதிபாசு
இ) மீரா குமார் ஈ) எவருமில்லை
4. இந்திய அரசியலமைப்பு ச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்?
அ)25 ஆகஸ்ட் 1947 ஆ) 26 ஜனவரி 1950
இ) 26 நவம்பர் 1949 ஈ) 11 ஜனவரி 1948
5. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?
அ) 10 ஆ)20 இ)250 ஈ)45
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புப் பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?
அ)விதி 51 ஆ) விதி 40 இ) விதி 48 ஈ) விதி 32
7.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அ) வாழ்நாள் முழுவதும் ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள் ஈ) 6 ஆண்டுகள்
8. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
அ) குடியரசு துணைத் தலைவர் ஆ) உள்துறை அமைச்சர்
இ) நிதி அமைச்சர் ஈ) துணை சபாநாயகர்
9. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
அ) 1950 ஆ) 1963 இ)1970 ஈ)1971
10. இந்தியாவின் பிரதம மந்திரி?
அ) ராஜ்ய சபையின் தலைவர் ஆ) லோக் சபையின் தலைவர்
இ) மக்களின் தலைவர் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
11. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது?
அ) 60 வயது ஆ) 62 வயது இ) 64 வயது ஈ) 65 வயது
12. கீழ்க்கண்ட மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி?
அ) உருது ஆ) சமஸ்கிருதம் இ) ஆங்கிலம் ஈ)சிந்தி
13. எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டு திட்டம் செயலாக்கப்பட்டது?
அ) லூயிசியின் வரையறை ஆ) மகலோனோபிஸ் வரையறை
இ) ஹராடு டோமன் வரையறை ஈ) கினிஸின் வரையறை
14.திட்டக் குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
அ) பிரதம மந்திரி ஆ) திட்ட மந்திரி
இ) காபினெட் மந்திரி அந்தஸ்தில் ஈ) சிறந்த பொருளாதார நிபுணர்
15. கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் முதல் இந்திய பிரதம அமைச்சர் பெயரைக் குறிப்பிடுக.
அ) ராஜாஜி ஆ) ராஜேந்திர பிரசாத்
இ) பி.ஆர்.அம்பேத்கர் ஈ) ஜவஹர்லால் நேரு
16. இந்திய அரசியல் சாசனம் எந்த வகையான நீதிமன்றத்திற்கு வழி வகுக்கிறது?
அ) தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆ) இரட்டை நீதிமன்றம்
இ) தனிப்பட்ட நீதிமன்றம் ஈ) இவை அனைத்தும்
17. இந்திய அரசியலமைப்பின் 370வது விதி எதைப் பற்றிக் கூறுகிறது?
அ) ஜனாதிபதியின் அவசரகால அதிகாரம்
ஆ) ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்புத் தகுதி
இ) சிறுபான்மையினருக்கு சிறப்புஸ் சலுகைகள் ஈ) சட்டத் திருத்தங்கள்
18. கீழ்க்கண்டவற்றில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சி அரசாங்கத்தை அமைத்தது எந்தக் கட்சி?
அ) தி.மு.க. தமிழ்நாடு ஆ) சி.பி.ஐ.எம் மேற்கு வங்காளம்
இ) சி.பி.ஐ.எம் கேரளா ஈ) சுதந்திரக்கட்சி ஒரிஸா
19. மாவட்ட கவுன்சிலின் செயலாளர்
அ) முதன்மை பொறியாளர் ஆ) இளநிலை ஐ.ஏ.எஸ்.அதிகாரி
இ)தாசில்தார் ஈ) அரசியல் ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி
20. எந்த வருடத்தில் தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது?
அ) 1952 ஆ) 1957 இ) 1962 ஈ) 1967
21. அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை எது?
அ) சமத்துவ உரிமை ஆ) சுத்ந்திர உரிமை
இ) அரசியல் பரிகார உரிமை ஈ)மேலே கண்ட எதுவுமில்லை
22. கீழ்க்கண்டவர்களில் முதல் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் யார்?
அ) மொரார்ஜி தேசாய் ஆ) எல்.கே.அத்வானி
இ) ஜெகஜீவன்ராம் ஈ) சர்தார் வல்லபாய் படேல்
23. ராஜ்யசபா எத்தனை நாட்களுக்கு ஒரு பண மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்?
அ) 14 நாட்கள் ஆ) 10 நாட்கள் இ) 20 நாட்கள் ஈ) 12 நாட்கள்
24. மாநில ஆளுநருக்கு முழு நிர்வாக அதிகாரத்தை வழங்கும் சட்ட விதி எது?
ஆ) விதி 74 ஆ)விதி 24 இ) விதி 154 ஈ) விதி 144
25. இந்திய குடியரசு ஜனவரி 26, 1950ந் அரசியலமைப்புச் சட்டநிலையில்
அ)ஜனநாயகக் குடியரசாக இருந்தது
ஆ) இறைமையுடைய ஜனநாயகக் குடியரசாக இருந்தது
இ) இறைமையுடைய சமதர்ம மதச்சார்பற்ற குடியரசாக இருந்தது
ஈ) இறைமையுடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருந்தது
26. பொதுநல வழக்கோடு தொடர்புடையவர்
அ) நீதிபதி பகவதி ஆ) நீதிபதி ஆர்.என்.மிஸ்ரா
இ) நீதிபதி வெங்கடாச்சலையா ஈ) இவர்களில் எவருமில்லை
27. இந்திய அரசியலமைப்பின் பகுதி எந்த மாநிலத்துக்கு மட்டும் பொருந்தாது?
அ) பீகார் ஆ) மேற்கு வங்காளம்
இ) ஜம்மு மற்றும் காஷ்மீர் ஈ) ஹரியானா
28. அமைச்சர் குழுவில் இருப்பவர்கள்
அ) பிரதம மந்திரி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிற அமைச்சர்கள்
ஆ) பிரதம மந்திரியும் மற்ற அமைச்சர்களும்
இ) பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி
ஈ) இவர்களில் எவருமில்லை
29. மாவட்ட ஆட்சியர்
அ) மாவட்ட சென்சஸ் அதிகாரி ஆ) மாவட்ட நீதிபதி
இ) மாவட்டத் தேர்தல் அதிகாரி ஈ) இவை அனைத்தும்
30. ஓர் உறுப்பினர் அமைப்பாக இருந்த தலைமை தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்கள் கொண்டதாக எந்த ஆண்டு அவசர சட்டதால் மாற்றபட்டது?
அ) 1990 ஆ) 1992 இ) 1993 ஈ) 1994
விடைகள்:
1.ஆ, 2.ஈ, 3.இ, 4.இ, 5.ஆ, 6.ஆ, 7.இ, 8.ஈ, 9.ஈ, 10.ஆ, 11.ஈ, 12.இ, 13.இ, 14.இ, 15.ஈ, 16.அ, 17.ஆ,18.இ, 19.ஆ, 20.ஈ, 21.ஈ, 22.ஈ, 23.அ, 24.இ, 25.ஆ, 26.அ, 27.இ, 28.ஆ, 29.ஈ, 30.இ