நாடு முழுவதும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயுக்கான மானியத் தொகையை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரையிலான மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, இந்தத் திட்டத்தின்கீழ் மானியத் தொகையைப் பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தத் திட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பெற விண்ணப்பிக்கப்பட்டது.கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான காரணிகள், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இதேபோன்ற மானியத் திட்டங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும், சமையல் எரிவாயுக்கான நேரடி மானியத் திட்டத்தை, உலகிலேயே மிகப் பெரிய நேரடி மானியத் திட்டமாக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015 IN TAMIL சமையல் எரிவாயுக்கான நேரடி மானியத் திட்டம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
August 21, 2015
0
Tags