DOWNLOAD PDF
- TNPSC GR 2/2A இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 1 இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
- TNPSC GR 4/VAO இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL PDF
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமால் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 அகவை (வயது) நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோஅதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் (இம்பீச்மென்ட்) காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) தீர்மானம் வெற்றிபெற்றாலின்றி அவரை வேறுஎவ்வகையிலும் பணியிலிருந்து நீக்கவியலாது.
இதன் அதிகாரக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இவ்வாணையத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகநாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவே முதன் முதலாக முழுவதும் மின்னணு எந்திரத்தின் மூலம் கடந்தப் பொதுத்தேர்தலை நடத்திக்காட்டியது. இது தேர்தல் ஆணையத்தின் சீரிய முயற்சியால் செயலுருப்பெற்றது.
இவ்வாணையம் வெகுநாட்களாக செயல்பாட்டில் இருந்தாலும் இதன் மீது மக்கள் பார்வை விழக் காரணமாயிருந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான திரு. டி. என். சேஷன், அவர் பணிபுரிந்த ஆண்டு 1990 முதல் 1996 வரை. அவர் பணிக் காலத்தில் தான் அதுவரை தேர்தல்களில் ஊழல் மிகுந்திருந்த நிலை இவரின் கண்டிப்புமிக்க, நேர்மையான செயலால் சற்றுத் தணிக்கப்பட்டது..
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்:
வரிசை எண் | தேர்தல் ஆணையர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) | மார்ச் 21, 1950 | டிசம்பர் 19, 1958 |
2 | கே.வி.கே. சுந்தரம் | டிசம்பர் 20, 1958 | செப்டம்பர் 30, 1967 |
3 | எஸ்.பி. சென் வர்மா | அக்டோபர் 1, 1967 | செப்டம்பர் 30, 1972 |
4 | நாகேந்திர சிங் | அக்டோபர் 1, 1972 | பெப்ரவரி 6, 1973 |
5 | டி. சுவாமி நாதன் | பெப்ரவரி 7, 1973 | ஜூன் 17, 1977 |
6 | எஸ்.எல். சக்தார் | ஜூன் 18, 1977 | ஜூன் 17, 1982 |
7 | ஆர்.கே. திரிவேதி | ஜூன் 18, 1982 | டிசம்பர் 31, 1985 |
8 | ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி | ஜனவரி 1, 1986 | நவம்பர் 25, 1990 |
9 | வி.எஸ். ரமாதேவி | நவம்பர் 26, 1990 | டிசம்பர் 11, 1990 |
10 | டி. என். சேஷன் | டிசம்பர் 12, 1990 | டிசம்பர் 11, 1996 |
11 | எம். எஸ். கில் | டிசம்பர் 12, 1996 | ஜூன் 13, 2001 |
12 | ஜே.எம். லிங்டோ | ஜூன் 14, 2001 | பெப்ரவரி 7, 2004 |
13 | டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி | பெப்ரவரி 8, 2004 | மே 15, 2005 |
14 | பி.பி. தாண்டன் | மே 16, 2005 | ஜூன் 29, 2006 |
15 | என். கோபாலசுவாமி | ஜூன் 29, 2006 | ஏப்ரல் 20, 2009 |
16 | நவீன் சாவ்லா | ஏப்ரல் 21, 2009 | சூலை 29, 2010 |
17 | எஸ். ஒய். குரேசி | சூலை 30, 2010 | சூன் 10, 2012 |
18 | வீ. சு. சம்பத் | சூன் 11, 2012 | சனவரி 15, 2015 |
19 | அரிசங்கர் பிரம்மா | சனவரி 16, 2015 | ஏப்ரல் 18, 2015 |
20 | சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி | ஏப்ரல் 19, 2015 | சூலை 5, 2017 |
21 | அச்சல் குமார் ஜோதி | சூலை 6, 2017 | சனவரி 22, 2018 |
22 | ஓம் பிரகாஷ் ராவத் | சனவரி 23, 2018 | டிசம்பர் 1, 2018 |
23 | சுனில் அரோரா | டிசம்பர் 2, 2018 | தற்போது பணியில் |