Type Here to Get Search Results !

TNPSC TRB TNTET MODEL QUESTIONS -ஐரோப்பிய ஒன்றியம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS



1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது

 பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.

 பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன

நோக்கங்கள்

  • ஐரோப்பியக் குடியுரிமையை ஏற்படுத்துதல்
  • ஐரோப்பியக் குடிமக்களுக்கு குடிமை உரிமைகளை உறுதிசெய்தல்
  • சமுதாய முன்னேற்றத்தை உயற்த்துதல்
  • ஐரோப்பிய பாதுகாப்பைப் வலுப்படுத்துதல்
  • சமநீதியை உறுதிசெய்தல்

ஐரோப்பிய நிறுவனத்தில் ஐந்து அங்கங்கள் உள்ளன. அவை:

  • ஐரோப்பிய நாடாளுமன்றாம்
  • ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
  • ஐரோப்பிய ஆணையம்
  • ஐரோப்பிய நீதிமன்றாம்
  • ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றம்

ஐரோப்பிய நாடாளுமன்றம்
இது ஐரொப்பியக் கூட்டமைப்பின் சட்டம் இயற்றும் அமைப்பாகும். இதன் அங்கத்தினர்கள் உறுப்பு நாடுகளின் குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1979-ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடாளுமன்றாத்தின் தேர்தல் மக்களாட்சி முறைப்படி நடைபெற்றது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் (Strasburg) என்னுமிடத்தில் உள்ளது. தற்போது இதில் 736 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது ஐரோப்பிய சட்டமன்றத்தின் பாதி அளவு ஆகும்.

ஐரோப்பிய ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மாற்றங்கள் செய்வது நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரமாகும்.

ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் 'அமைச்சர்களின் கூட்டமைப்பு மன்றம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பியச் சட்டமன்றத்தின் மறுபாதியாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் இருந்தும் ஒருவர் இந்த அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஹெர்மன் வான் ராம்பே (Herman Van Rampay) என்பவர் இந்த அவையின் முதல் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் ஒன்றாம் தேதி இவர் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுவது ஐரோப்பிய ஆணையமாகும். மேலும் சட்டம் இயற்றுவதற்குத் தூண்டுதலாக இருந்து ஐரோப்பியர் கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்கிறாது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் சட்டங்களை வடிவமைத்து, அதனை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது இதன் முதன்மைப் பணியாகும்.

ஐரோப்பிய நீதிமன்றம்
இது லக்சம்பர்க் நகரில் அமைந்துள்ளது. இதில் 15 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் அனைத்து உடன்படிக்கைகளும், மன்றத்தின் சட்டங்களுக்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது இந்நீதிமன்றமாகும். இம்மன்றத்தின் தீர்ப்புகளும், ஒன்றியத்தின் சட்டங்களும் உறுப்பு நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுக் கணக்குளை நிர்வகிப்பது ஐரோப்பியக் கணக்கீட்டாளர் மன்றமாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் இணைந்து வளங்கள் மற்றும் நிதியைச் சிறந்த முறையில் பங்கீடு செய்கிறது.






































ANSWERS
1----------C
2----------C
3----------D
4----------B
5----------A
6----------C
7----------C



    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel