Tuesday, 30 June 2015

ENVIRONMENT TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS

Tnpsc Shouters

ZOOLOGY

Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable diseases


சுற்றுச் சூழல் பாதுகாப்பு

* சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு - புல், மலர்கள், தோல்
* உணவுச் சங்கிலி - புல், ஆடு, மனிதன்
* கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது - பெட்ரோலியம்
* பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு - உயிரி பிளாஸ்டிக்
* கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
* பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
* மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
* படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு - கரி
* கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் - 54 சதவீதம்.
* உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை - தலைகீழ் சவ்வூடு பரவல்
* ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் - சிலிகான் சார்ந்த பொருள்
* ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் - கிர்தேசியப்பூங்கா
* எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் - தார்பந்துகள்.


                                              





DIRECT LINK UPDATED :FREE 

DOWNLOAD NOW  ENVIRONMENT PDF




SEARCHING KEYWORD :TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC ZOOLOGY STUDY MATERIALS TAMIL PDF. TNPSC ZOOLOGY STUDY MATERIALS,TNPSC GROUP 2 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 2A  TNPSC ZOOLOGY STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 7 TNPSC ZOOLOGY STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC ZOOLOGY STUDY MATERIALS .TNTET  TNPSC BOTANY STUDY MATERIALS ,TRB EXAMS TNPSC BOTANY STUDY MATERIALS.

BIO‐ DIVERSITY AND ITS CONSERVATION TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS

Tnpsc Shouters

ZOOLOGY

Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable diseases



                                              


SEARCHING KEYWORD :TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC ZOOLOGY STUDY MATERIALS TAMIL PDF. TNPSC ZOOLOGY STUDY MATERIALS,TNPSC GROUP 2 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 2A  TNPSC ZOOLOGY STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 7 TNPSC ZOOLOGY STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC ZOOLOGY STUDY MATERIALS .TNTET  TNPSC BOTANY STUDY MATERIALS ,TRB EXAMS TNPSC BOTANY STUDY MATERIALS.

HUMAN DISEASES, PREVENTION AND REMEDIES‐COMMUNICABLE DISEASES AND NONCOMMUNICABLE DISEASES TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS

Tnpsc Shouters

ZOOLOGY

Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable diseases

நோய்தடைக்காப்பு மண்டலம்


தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
வைரஸ் - சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா - இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
பாக்டீரியா - காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் - அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
பூஞ்சைகள் - பாதத்துடிப்பு நோய் - ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.

ü  ஒரு செல் உயிரிகள் - மலேரியா - நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
ü  பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
ü  பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.

ü  தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்



                                              


SEARCHING KEYWORD :TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC ZOOLOGY STUDY MATERIALS TAMIL PDF. TNPSC ZOOLOGY STUDY MATERIALS,TNPSC GROUP 2 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 2A  TNPSC ZOOLOGY STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 7 TNPSC ZOOLOGY STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC ZOOLOGY STUDY MATERIALS .TNTET  TNPSC BOTANY STUDY MATERIALS ,TRB EXAMS TNPSC BOTANY STUDY MATERIALS.

GENETICS THE SCIENCE OF HEREDITY TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS மரபும் பரிணமாமும்

Tnpsc Shouters


ZOOLOGY

Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable diseases


மரபும் பரிணமாமும்
ü  மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்.
ü  ஆதி மனிதன் தோன்றியது - ஆப்பிரிக்கா
ü  பாரம்பரியத் தன்மைக் கொண்டது -  மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
ü  இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
ü  உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ü  பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் - னுயேயு
ü  பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்
ü  ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை - அல்லீல்கள்
ü  உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் -  பெர்னீயஸ் இரத்த சோகை.
ü  உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் - லாமார்க்
ü  உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? - எலும்பு மஜ்ஜை
ü  வைரஸ்களுக்கு எதிரான புரதம் - இன்டர்பெரான்
ü  நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது - நிஃப் ஜீன்
ü  டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை - னுயேயு லிகேஸ்
ü  வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் - அசிட்டிக் அமிலம்
ü  ஸ்டிராய்டுகள் - லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
ü  புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் - மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.
ü  இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் - பீட்டா செல்கள்.
ü  இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது - உயிரி உணரி
ü  உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது - உயிரிச்சிப்புகள்
ü  அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
ü  அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
ü  ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
ü  புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
ü  உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் - ஜீன் பாப்தீஸ் லாமார்க்
ü  ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் - னுயேயு வெட்ட உதவுகிறது
ü  மூலச் செல் என்பது - (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
ü  நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
ü  உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை - நொதிகள்
ü  மனித சிற்றினத்தின் பெயர் - ஹோமோசெபியன்
ü  மனித முன்னோடிகள் - ஹோமினிட்டுகள்
ü  னுயேயு தொழில் நுட்பம் - மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.

ü  மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் - 3:1



                                              



DIRECT LINK UPDATED :FREE 



SEARCHING KEYWORD :TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC ZOOLOGY STUDY MATERIALS TAMIL PDF. TNPSC ZOOLOGY STUDY MATERIALS,TNPSC GROUP 2 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 2A  TNPSC ZOOLOGY STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 7 TNPSC ZOOLOGY STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC ZOOLOGY STUDY MATERIALS .TNTET  TNPSC BOTANY STUDY MATERIALS ,TRB EXAMS TNPSC BOTANY STUDY MATERIALS.

ENDOCRINE SYSTEM TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS நாளமில்லா சுரப்பி

Tnpsc Shouters

ZOOLOGY

Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies‐Communicable diseases and noncommunicable diseases


நாளமில்லா சுரப்பி

பிட்யூட்டரி சுரப்பி
பயறு வடிவத்தில் அல்லது சிறு முட்டை அளவாக, பிட்யூட்டரி சுரப்பி அமைந்திருக்கிறது. இதன் எடை 0.5 கிராம் உள்ளது.மூக்கு, கண்களுக்குப் பின் புறமாக,சிறுமூளைக்கு அடியில், கபாலக் குழியில் பிட்யூட்டரி அமைந்துள்ளது. இந்தச் சுரப்பி ஒரு சிறு காம்பு போன்ற பாகத்தால் சிறு மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பி சுரக்கின்ற ஹார்மோன்கள், எல்லா நாளமில்லாச் சுரப்பிகளும் தங்கள் பணியை திறமையாகச் செய்யத் தூண்டுவதால்,இதனை, நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்று கூறுகின்றார்கள்.
பிட்யூட்டரி சுரப்பியை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்
a. சுரப்பியின் முற்பகுதி
b. சுரப்பியின் பிற்பகுதி
                சுரப்பியின் முற்பகுதியானது, மற்றைய சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களை சுரக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.முற்பகுதி சுரக்கும் திரவத்திற்கு டிராபிக் ஹார்மோன்கள் என்று பெயர்.
 இந்த ஹார்மோன்களுக்குரிய பெயர்கள் பின்வருமாறு
I. வளர்ச்சி ஹார்மோன் இது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக, திசுக்களில் புரதத் தொகுப்பைப் பாதித்துப் பணியாற்றுகிறது.
 II. தைராய்டு ஊட்ட ஹார்மோன் இது தைராய்டு சுரப்பியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
 III. அட்ரீனல் ஊட்ட ஹார்மோன் இது அட்ரீனல் சுரப்பிகளின் பணியைத் தூண்டுகிறது.
 IV. இனப்பெருக்க ஊட்ட ஹார்மோன் இது இனப்பெருக்கச் சுரப்பிகளின் மீது வினையாற்றித் தூண்டுகிறது.
பிட்யூட்டரி முன்பகுதி சுரக்கின்ற திரவம் ,சீர் கெட்ட முறையில் அமைகிற போது, உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
பிட்யூட்டரிச் சுரப்பி மிகையாகச் சுரக்கும் போது,தேக வளர்ச்சியில், இராட்சதத் தன்மையை உண்டாக்கி விடுகிறது. இப்படி ஏற்படுகிற வளர்ச்சி ஏறத்தாள 9 அடி உயரத்திற்கும் வளர்த்து விடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியின் சரியில்லா சுரப்பானது, தேகத்தின் வளர்ச்சியை சீரழித்து விடுகிறது.
பிட்யூட்டரி பின் பகுதி சுரக்கின்ற திரவத்திற்குரிய பெயர்கள்
I. ஆக்ஸிடோசின்
II. வேசோபிரசின்
ஆக்ஸிடோசின் திரவமானது,பலவீனமான பிரசவத்தை பலம் அடையச் செய்கிறது.வேசோபிரசின் இரத்த நாளங்களை,குறிப்பாக கர்ப்பப்பையின் இரத்த நாளங்களை, சுருங்கச் செய்து, சிறுநீரைப் பிரிக்கும் செயலில், வினை புரிகிறது. இவ்வாறு சிறு நீரைப் பிரிக்கும் பணியை ஊக்குவிக்கிற ஹார்மோனின் சுரப்புக் குறைவதால், பல மாற்றங்கள் ஏற்படுகிற நோய்க்கு டயபெட்டிஸ் இன்சிபிடஸ் என்று பெயர்.
இந்த நோய் ஏற்பட்டால், அதிகமான தாகம் ஏற்படும்.பெரும் அளவில் சிறு நீர் கழியும், அதிகமான தாகம் என்றால், 20 முதல் 30 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது என்பது தான் இந்த வியாதியின் மகத்துவம்.
 தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பி, கழுத்தின் முன் பரப்பில் அமைந்துள்ளது. இதன் எடை 1 அவின்சு, அதாவது 28 கிராம். சில சுரப்பிகளின் எடை 30 முதல் 60 கிராம் வரை இருக்கும். இதன் வலது பக்கமும் இடது பக்கமும் உருவில் சற்றுப் பெரியதாகவும், இடைப்பட்ட நடுப்பகுதியில் கனம் குறைந்ததாகவும் காணப்படும். இந்தக் கனம் குறைந்த பகுதிக்கு இஸ்துமஸ் என்று பெயர். தைராய்டு சுரக்கும் திரவத்திற்குப்பெயர் தைராக்ஸின்.
தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்,பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி சுரக்கின்ற தைரோற்றோபின் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் தைராக்ஸிஸ் ஹார்மோனானது அயோடின் கலந்த கலவையாக இருக்கிறது. தைராய்டு சுரக்கும் இரண்டு வித ஹார்மோன்கள்:
1) தைராக்சின் 
2) டிரையோடோ தைரானின்
தைராக்சினை விட, டிரையோடோ பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
 பயன்கள்
உடல் வளர்ச்சிக்கு உற்ற துணையாக விளங்குகிறது. வளர்சிதை மாற்றம், உயிரினத்தின் வளர்ச்சி. முதிர்ச்சி, நரம்பு மண்டலத்தின் ஒருங்கிணைந்த சீரியாக்கம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. உடல் சூட்டைக் கட்டுப்படுத்துகிறது.
 பாரதைராய்டு சுரப்பி
பாராதைராய்டு சுரப்பிகள்,தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் அமைந்திருக்கும்.இவை சிறிய முட்டை வடிவமான அமைப்பைப் பெற்றிருக்கின்றன. எண்ணிக்கையில், நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் இருக்கின்றன. அவை, பக்கத்திற்கு இரண்டாக அதாவது இரண்டு மேலாகவும், இரண்டு கீழாகவும் அமைந்துள்ளன.ஒவ்வொரு சுரப்பியின் எடை 0.05 கிராமாக இருக்கிறது.
பாராதைராய்டு சுரப்பி சுரக்கின்ற ஹார்மோனுக்குப் பெயர் பாராதார்மோன். இது,உடலில் உள்ள கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.
பாராதார்மோன் அதிகமாகச் சுரந்தாலும், அல்லது அளவுக்குக் குறைவாகச் சுரந்தாலும்,அது தசைகள்,நரம்புகள்,நரம்புகளின் இயற்கையான செயல்முறைகளைப் பாதித்து விடுகின்றன.
 தைமஸ் சுரப்பி
தைமஸ் சுரப்பி, மார்புக் கூட்டில் உள்ள, மூச்சுக் குழாய் இரு பிரிவாகப் பிரிவதற்கு முன்பாக, தைராய்டு, பாராதைராய்டு சுரப்பிகளுக்கு சற்றுக் கீழாக அமைந்துள்ளது. விஞ்ஞானிகளால் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு, கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இதன் செயல்கள் இருக்கின்றன.
பிறந்த குழந்தையின் தைமஸ் சுரப்பியின் எடை 13 கிராம் என்றும், 11 முதல் 15 வயதுள்ள வளர்ச்சி பெற்றவர்களிடம் 35 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார்கள். தைமஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு தைமிக் ஹ்யூமரஸ் ஃபேக்டர் என்று பெயர்.
தற்கால ஆய்வின்படி, தைமஸ் சுரப்பி உடலில் நுழைகிற வெளிப்புற நச்சுப் பொருட்கள், வைரஸ் கிருமிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தித் தேகத்தைக் காக்கிறது என்று தெரிகிறது. உடல் வளர்ச்சிக்கும்,பால் இனச் சுரப்பிகளுக்கும் இது உதவுகின்றது. குழந்தைப் பருவத்தில், பருவம் அடைவதற்கு முன்பாக, பால் இனச் சுரப்பிகள் முதிர்ச்சி அடைவதை, தைமஸ் ஹார்மோன் கட்டுப்படுத்தித் தடுக்கிறது. பால் இனச் சுரப்பிகள் செயலாற்றத் தொடங்கியதும்,இச் சுரப்பிகள் செயலிழந்து போய் விடுகின்றன.
தைமஸ் சுரப்பி அகற்றப்பட்டால் என்ன ஆகும் என்பதை விலங்குகள் மூலம் ஆராய்ச்சி செய்த பிறகு, கொடுத்த குறிப்புக்களில், எலும்புகள் அமைப்பு மாற்றம் பெறுகின்றன. அதாவது எலும்புகளில் வலிமை குறைந்து மிருவதாக மாறுவதால்,எளிதில் முறிந்து போகக் கூடிய தன்மையுடையனவாக்கி விடுவதுடன்,குன்றிய வளர்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கி விடுகின்றது என்பதே விஷேஷ தன்மையுடைய குறிப்பாகும். 
அட்ரீனல் சுரப்பி
அட்ரீனல் சுரப்பிகள் சிறுநீரகங்களின் மேற்பாகத்தில் அமைந்துள்ளன. அட்ரீனல் சுரப்பி இரண்டு பாகமாக பிரிந்துள்ளது. ஒன்றின் பெயர் கார்டெக்ஸ். மற்றொன்றின் பெயர் மெடுல்லா. ஒவ்வொரு அட்ரீனலும் 7 கிராம் எடையுடன் விளங்குகிறது. இது முக்கோண வடிவம், அல்லது அர்த்தச் சந்திர வடிவுடன் விளங்கும்.
1) கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோனுக்கு கார்டிசோன் என்றும், அல்டோஸ்டிரோன் என்றும் பெயர். கார்டிசோன் என்னும் ஹார்மோன், சக்தியை உற்பத்தி செய்யவும், சேகரித்து வைக்கவும் துண்டுதலாக விளங்குகிறது. உடலில் உள்ள தாதுப் பாருட்களின் நிலைமையை சீர்படுத்துகிறது. உடலில் உள்ள தசைகளின் தன்மைகளை வளர்த்து விடுவதுடன்,தசைச் சோர்வையும் கட்டுப்படுத்துகிறது. நோய்களிலிருந்து தேகத்தைப் பாதுகாக்கிறது. 
பாலுணர்ச்சிப் பண்புகளை, இயற்கைத் தன்மைகளைச் சீர்படுத்திச் செம்மை செய்கிறது. அதாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணை புரிகிறது. புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் போன்றவற்றைச் செரிக்க செய்து, ஏற்படுகிற வளர்சிதை மாற்றத்தில் துணைபுரிகிறது. மாவுப் பொருட்களை குளுக்கோசாகவும் மாற்றவும், அவற்றைக் கல்லீரலில் சேர்த்து வைக்கவும் போன்ற காரியமாற்றத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது.
இந்தச் சுரப்பிகள் பாதிக்கப்பட்டால் அல்லது நோய் வாய்ப்படுகிற போது, உடல் பலவீனம் அடைகிறது. தாது உப்புக்களின் அளவும், தேகத்தில் குறைந்து போகிறது. பாலுணர்ச்சி தடைபடுகிறது. தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை குறைவடைவதால், விரைவில் இறக்கவும் நேரிடுகிறது. 
2) மெடுல்லா : சுரக்கும் ஹார்மோனுக்கு அட்ரீனலின் என்று பெயர். மனிதர்கள் எப்பொழுதும் அடிக்கி கோபம், தாபம், பசி, மூச்சடைப்பு போன்ற உணர்ச்சி வசப்படும் குணாதிசயங்களைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில், இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து,இரத்தத்தோடு கலந்து,உடலுக்கேற்படுகிற அபாயமான நிலைமைகளிலிருந்து பாதுகாக்கிறது.
தேகத்தில் ஏற்படுகிற மாறுதல்களாக, சருமம் வெளிற்றிப்போதல், இருதயத்தில் மிகையான துடிப்பு போன்றவை ஏற்படுவதை, உணர்ச்சி வசப்படும் அனைவரும் உணர்வதை நீங்களும் அறிந்திருக்கலாம். இதற்கு மேலாக, இந்த ஹார்மோன் செய்யும் உதவிகள் பல. இது இரத்தக் குழாய்களுக்கு உணர்ச்சியூட்டி, அவற்றின் அழுத்தத்தை, சீராக்கி உதவுகிறது.இது மாவுப் பொருட்களில் உண்டாகும் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது கல்லீரலில் கிளைகோஜனை குளுக்கோசாக மாற்றி,இரத்தத்திற்கு விநியோகம் செய்கிறது. மேற்கூறிய மாற்றங்கள் யாவும், மனிதர்களுக்கு ஏற்படுகிற அவசர காலங்களில், முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
 பால் இனச் சுரப்பி 
பால் இன ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகளாக விரைகளும், சூலகங்களும் விளங்குகின்றன. இச்சுரப்பிகள் பால் இன ஹார்மோன்களைச் சுரந்து, இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு தரமான காரியங்களைச் செய்கின்றன. முதல்தரப் பாலினப் பண்பு, இரண்டாந் தரப் பாலினப் பண்பு என்பதாக அப்பணிகள் வேறுபடுகின்றன. 
முதல்தரப் பண்பில், பால் இன உறுப்புக்களும், ஆண் மற்றும் பெண்களில் கலவி உறுப்புக்களும் அடங்கும். இரண்டாந் தரப் பண்பில், ஆணிலிருந்து பெண்ணையோ அல்லது பெண்ணிலிருந்து ஆணையோ பிரித்தறியக் கூடிய அமைப்புக்கள் அடங்கும்.
 அவை பின்வருமாறு: 
1. ஆண், பெண் உடலமைப்பு வேறுபாடு, அதாவது உடல் அமைப்பு, தோள்பட்டை, இடுப்புப் பின் பகுதியமைப்பு, மார்புக் கூடு, மண்டை அமைப்பு. 
2. தேகத்தில் தாடி, மீசை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் ஆண்களுக்கு முளைக்கக் கூடிய உரோம அமைப்பு. 
3. பேசும் போது ஏற்படுகிற குரல் வித்தியாசம்
 பால் இன ஹார்மோன்கள் வகைகளை மூன்றாகக் கூறுவார்கள்.
a) ஆன்ட்ரோஜென்ஸ் 
b) ஒஸ்ட்ரோஜென்ஸ் 
c) புரோஜெஸ்ட்ரஜென்ஸ்

ஆண் பால் ஹார்மோன்
இவற்றில், டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஆன்ட்ரோஸ்டீரான் ஹார்மோன்கள் விரைகளால் செய்யப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள், ஆண்களுக்கு ஏறத்தாழ 15 வயதாகிற போது, பூரண வளர்ச்சியடைந்து விடுகின்றன. இதன் தொழில் எடுப்பாக ஆரம்பமாகும் பொழுது, மிடுக்கான பல மாற்றங்கள், ஆண்கள் தேகத்தில் ஏற்பட ஆரம்பிக்கின்றன. 
1. முகத்திலும் தேகத்திலும் மயிர் வளர்ச்சி. 
2. பேசும் குரலில் கனம். அகன்ற குரல். 
3. தேகத்தில் உண்டாகும் தசை அமைப்பு.
15 வயதிற்கு முன்னதாக இச்சுரப்பிகள் அகற்றப்பட்டால், மேற்கூறிய மாற்றங்கள் எதுவும் தேகத்தில் நிகழாது. மேற்கூறிய குணங்கள் இல்லாது போனால், அவர்களை அலிகள் என அழைப்பர். 
பெண் பால் ஹார்மோன்
சூலகத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்களில், ஒஸ்ட்ரோஜென்ஸ் முக்கியமானதாகும். சூலகங்கள் இரண்டும், வயிற்றின் அடிப்பாகத்தில், கருபப்பையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. பெண்களுக்கு 12 அல்லது 13 வயது ஆகும் போது இந்தச் சுரப்பிகள் பூரண வளர்ச்சியைப் பெறுகின்றன. இதன் அறிகுறிகள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாகும்.
 இந்த ஹார்மோன்களின் பணிகள் பின்வருமாறு:
1. பெண்களின் பருவ முதிர்ச்சியைக் காட்டுகிறது. 
2. மார்பகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 
3. மாதவிடாயைக் கட்டுப்படுத்துகிறது.
மூன்றாவதாக உள்ள ஹார்மோன் புரோஜெஸ்டிராஜென்ஸ் ஆகும். இது கர்ப்பத்தின் சகஜமான பணிக்கு உதவுகிறது. இந்த ஹார்மோனை, கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கின்றனர். பெண்பால் ஹார்மோன்கள், ஆண்பால் ஹார்மோன்களைப் போல செல்களின் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கேற்கின்றன.
பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுகின்றது. பெண்களுக்கு 40 முதல் 50 வயதாகும் போது, இந்த ஹார்மோன்கள் சுரப்பது, படுப்படியாகக் குறைந்து போகிறது. இதன் காரணமாக மாதவிடாய் நின்று போகிறது. இதை ஆங்கிலத்தில்மெனோபாஸ் என்பார்கள். மாதவிடாய் நின்று போகிற சமயத்தில், அதிகமான நரம்புக் கிளர்ச்சி, தலைவலி, சிலசமயங்களில் உறக்கம் இன்மை போன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும். என்றாலும், அவற்றை, அறிவாண்மையுடன் பொறுத்துக் கொள்ளுதல் பெண்களுக்கு அழகாகும். அந்த மனப் பண்பாடு இருந்தால்தான், மகிழ்ச்சியோடு வாழ முடியும். மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு மகப்பேறு பெறுகிற பாக்கியம் முடிந்து போய்விடுகிறது.

கணையச் சுரப்பி
கணையமானது, உட் சுரப்பும், வெளிச் சுரப்பும் கொண்ட ஒரு சுரப்பியாகும். இதன் ஹார்மோன் ஒன்று முன் சிறு குடலுக்குச் செல்கிறது. இதைத் தவிர, கணையம் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது.
a. இன்சுலின் இன்சுலின் மாவுப் பொருளைக் கரைக்கும் பணிக்கு உதவுகிறது. இது மாவுப் பொருளைக் கரைக்கவும், கிளைக்கோஜனைத் தசைகளிலும் கல்லீரலிலும் சேர்த்து வைக்கவும் உதவுகிறது. இந்த ஹார்மோன் மந்தமாக சுரந்தால், நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்பட்டு விட்டால், திசுக்கள் சர்க்கரையை சகஜமான முறையில் தன்மயமாக்கிட முடியாமல் போகிறது. கல்லீரலும் கிளைக்கோஜனைச் சேமித்து வைப்பதில் தவறி விடுகிறது. அதனால் சிறுநீரில் சர்க்கரை காணப்படுகிறது. 
b. குளுக்காகோன் குளுக்காகோன் ஹார்மோன், கிளைக்கோஜன் சேமிப்பைச் சீர்குலைக்கும் பணியைச் செய்கிறது. அதாவது, இன்சுலின் செய்கிற விளைவுகளுக்கு எதிரான பணியில் ஈடுபடுகிறது. 
பீனியல் சுரப்பி

பீனியல் சுரப்பி, பெருமூளை எபிபிசிஸ் எனும் இடத்தில், ஒரு சிறிய உறுப்பாக அமைந்திருக்கிறது. இச் சுரப்பியின் பணி பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தைப் பருவத்தில், இச்சுரப்பி சிறந்த முதிர்ச்சிமிக்க வளர்ச்சியை அடைகிறது என்றும், இனப்பெருக்கச் சுரப்பிகள் பருவத்திற்கு முன்னதாக, வளர்ச்சியடைவதைத் தடுப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.



                                              



DIRECT LINK UPDATED :FREE 

DOWNLOAD NOW  ENDOCRINE SYSTEM PDF





SEARCHING KEYWORD :TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC ZOOLOGY STUDY MATERIALS TAMIL PDF. TNPSC ZOOLOGY STUDY MATERIALS,TNPSC GROUP 2 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 2A  TNPSC ZOOLOGY STUDY MATERIALS. TNPSC GROUP 4 TNPSC ZOOLOGY STUDY MATERIALS , TNPSC GROUP 7 TNPSC ZOOLOGY STUDY MATERIALS ,TNPSC VAO TNPSC ZOOLOGY STUDY MATERIALS .TNTET  TNPSC BOTANY STUDY MATERIALS ,TRB EXAMS TNPSC BOTANY STUDY MATERIALS.

Monday, 29 June 2015

SSC EXAM NOTIFICATION JULY 2015 {UPCOMING EXAM}

Tnpsc Shouters


SSC

Exam DateExam Name
21/06/2015SSC- SI in CAPFs, ASI in CISF and SI in Delhi Police Examination -2015
22/06/2015SSCKKR –  SI CPO Exam, 2015
01 to 05/07/2015SSCMPR – CGL 2014 (CPT/ DEST)
09/08/2015 & 16/08/2015SSC – Combined Graduate Level (Tier-I) Exam- 2015
04/10/2015SSC – Constables(GD) in CAPFs, NIA & SSF and Rifleman (GD) in Assam Rifles Exam, 2015
1, 15, 22/11/2015SSC – Combined Higher Secondary (10+2) Exam 2015
08, 15, 29/11/2015Multi Tasking (Non –Technical) Staff (Paper-1) Exam 2015
06/12/2015SSC – Junior Engineer (Civil, Electrical & Mechanical) Exam
27/12/2015SSC – Stenographer Grade ‘C’ & ‘D’ Exam- 2015
17/01/2016SSC – Jr. Hindi Translator in Subordinate Office Exam – 2015

BANK EXAM NOTIFICATION JULY 2015 {UPCOMING BANK EXAM}

Tnpsc Shouters

Searches related to BANK EXAM NOTIFICATION JULY 2015 {UPCOMING BANK EXAM}

upcoming bank exam notification 2015
upcoming bank exam notifications 2015
upcoming bank exam dates 2015



  CLICK HERE : IBPS STUDY MATERIALS EXAM PATTERN RECOMMENDED BOOK LIST 2015


Banks



Exam Date
Name of The bank
Exam Name
30, 31/01/2016
IBPS 
CWE Specialist Officers-V
03/01/2016
IBPS
CWE Clerk-V (Main) Exam
05,06,12,13, 19, 20/12/2015
IBPS
CWE Clerk-V (Preliminary) Exam
31/10/2015
IBPS
CWE PO/MT-V (Main) Exam
03, 04, 10,11/10/2015
IBPS
CWE PO/MT-V (Preliminary) Exam
05,06,12,13,19,20,26,27/09/2015
IBPS
CWE RRB-IV
01/08/2015
SBI
Probationary Officers (Main Exam) 2015 -16
20, 21, 27, 28/06/2015
SBI
Probationary Officers (Preliminary Exam) 2015 -16
30/03/2014 (Postponed)
Indian Overseas Bank
Probationary Officers & Clerks No. 01/2014