
27th OCTOBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2025 - 2026ஆம் கல்வியாண்டில் இந்தியாவில் மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 அரசு பள்ளிகள் மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் தகவல்
- நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைக்கூட நடைபெறவில்லை எனவும், இது முந்தைய கல்வி ஆண்டைக் காட்டிலும் சதவீதம் குறைவு.
- கடந்த கல்வி ஆண்டின் 12,954 எண்ணிக்கையை விட 5,000-க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஒரு மாணவர் சேர்க்கைக்கூட இல்லாத 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
- மேலும், விசித்தரமாக தேசிய அளவில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
- இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் (463 பள்ளிகள்) உள்ளது.
- இந்தப் பள்ளிகளில் தெலங்கானாவில் 1,016 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 Muzaffarnagar பணியில் உள்ளனர்.
- இதுபோன்று உத்தரப் பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநிலம் முழுவதும் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கையை இல்லாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யத் தயாராகி வருவதாக உத்தரப் பிரதேச கல்வி வாரியம் தெரிவித்திருந்தது.
- நாடு முழுவதும் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
- இந்த பள்ளிகள் ஆந்திரம் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- 2022-23 ஆம் ஆண்டில்,18,190 ஆக இருந்த ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 1,10,971 ஆகக் குறைந்து, சுமார் 6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹரியாணா, மகாராஷ்டிரம், கோவா, அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் ஓர் ஆசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
