Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)

மரபு கவிதை தொடர்புடையவை:
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
3. சுரதா
கண்ணதாசன் 
வாழ்க்கைக் குறிப்பு: 
  • இயற்பெயர் - முத்தையா
  • ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)
  • பெற்றோர் - சாத்தப்பான் -விசாலட்சுமி
  • காலம்: 1927 - 1981

புனைப்பெயர்

  • காரை முத்துப் புலவர்
  • வணங்காமுடி
  • பார்வதிநாதன்
  • துப்பாக்கி
  • ஆரோக்கியசாமி
  • கமகப்பரியா 
  • ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்

  • கவியரசு 
  • கவிச்சக்கரவர்த்தி 
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்

  • மாங்கனி 
  • ஆட்டனத்தி ஆதி மந்தி 
  • கல்லக்குடி மகாகாவியம் 
  • கவிதாஞ்சலி 
  • பொன்மலை 
  • அம்பிகா 
  • அவகுதரிசனம் 
  • பகவாத் கீதை விளக்கவுரை 
  • ஸ்ரீகிருஷ்ணகவசம் 
  • அர்த்தமுள்ள இந்துமதம் 
  • பரிமலைக் கொடி 
  • சந்தித் தேன் சிந்தித்தேன் 
  • அனார்கலி 
  • தெய்வதரிசனம் 
  • பேனா நாட்டியம் 
  • இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)

புதினங்கள்

  • ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி 
  • வேலங்குடி திருவிழா 
  • சேரமான் காதலி

இதழ்

  • தென்றல் 
  • கண்ணதாசன் 
  • சண்டமாருதம் 
  • முல்லை 
  • தென்றல் திரை 
  • கடிதம் 
  • திருமகள் 
  • திரை ஒளி 
  • மேதாவி 
  • தமிழ் மலர்

குறிப்பு

  • திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.
  • இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த "கண்ணே கலைமானே" பாடலாகும்.
  • சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்
  • பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்

சிறப்பு

  • தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
  • செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள் 

காலைக் குளித்தெழுந்து
கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
கருநாகப் பாம்பெனவே
கார்கூந்தல் பின்னலிட்டு

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?

"செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்" என்று பாடியவர் - கண்ணதாசன்

கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் - இராச தண்டனை

 சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் - "சேரமான் காதலி"

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
  • பெற்றோர்: அருணாசலம் - விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகன்
  • ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு
  • காலம்: 13.04.1930 - 08.10.1959
  • மனைவி: கெளரவாம்பாள்
  • குழந்தை: 1959-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. அவருக்கு குமரவேல் என பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு கல்யாண சுந்தரம் மரணம் அடைந்தார்.
  • படிப்பு: பள்ளிப்படிப்பு மட்டுமே
  • இவர் எழுத்திய மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 56
  • இவரை "மக்கள் கவிஞர், பொதுவுடமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்" எனப் போற்றுவர்.
  • உடுமலை நாராயணகவி இவரை "அவர் கோட்டை நான் பேட்டை" எனப் புகழ்ந்தார்.
  • செய்யும் தொழிலே தெய்வம் என்று பாடினார்.
  • 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
  •  "கையும் காலுந்தான் உதவி, கொண்ட கடைமைதான் நமக்குப் பதவி" என்று கூறினார்.
  • "பயிரை வளர்த்தால் பலனாகும் - அது உயிரைக் காக்கும் உணவாகும்" என்று பாடினார்.
  • "வெயிவே நமக்குத் துணையாகும் - இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்" என்று கூறினார்.
  • ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
  • எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.
  • இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
  • திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • நடிப்பாசையின் காரணமாக "சக்தி நாடக சாபா"வில் இணைந்தார்.
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்க அரசு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிண்டபம் அமைத்துள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

சுரதா 
வாழ்க்கைக் குறிப்பு

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பழையனூர் (சிக்கல்)
  • பெற்றோர்: திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
  • படிப்பு: பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.
  • மனைவி: சுலோசனா
  • மகன்: கல்லாடன்; மருமகள்: இராசேசுவரி கல்லாடன்
  • பேரக்குழந்தைகள்: இளங்கோவன், இளஞ்செழியன்
  • சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
  • காலம்: 23.11.1921 - 19.06.2006

சிறப்புப்பெயர்கள்

  • உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்

  • தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு 1986)
  • சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)
  • சாவின் முத்தம்
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும் சுண்ணாம்பும் - 1974
  • துறைமுகம் - 1976
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும் தேனும்
  • தொடா வாலிபம்

கட்டுரை
  • "முன்னும் பின்னும்"

இதழ்

  • சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார்.
  • 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.
  • 1954-இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
  • 1955- இல் காவியம் முதல் கவிதை என்ற வார இதழைத் தொடங்கினார்.
  • இவ்விதழைத் தொடர்ந்து மாத இதழாக இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
  • 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

குறிப்பு

  • பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

மேற்கோள்

  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • "தடைநடையே அவர் எழுத்தில் இல்லை 
  • வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கல் உண்டு"
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
  • மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
  • எதுகை வரப் போல் அடுத்து வந்தால், அத்தி
  • என்பானணோ மோனையைப் போல் முன்னை வந்தான்
  • திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி
  • 1944-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.
  • சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
  • பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

சிறப்பு

  • செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்
  • தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்றவர்
  • வ.ரா(வ.ராமசாமி) மாற்றொரு பாரதி பிறந்து விட்டான்
  • 1969-இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972-இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978-இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
  • 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
  • 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
  • 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
  • சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
  • சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel