Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS OCTOBER 2017 TAMIL PDF

  • பிரான்ஸ் நாட்டின் அதி நவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, அந்த விமானங்களை நிறுத்தி வைப்பதற்காக ஹரியாணாவின் அம்பாலா மற்றும் மேற்குவங்கத்தின் ஹாசிமாரா விமானப்படைத் தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
  • பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக அந்நாட்டுடன் இந்தியா சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டது. அதன்படி, இந்தியாவுக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை விற்பனை செய்ய பிரான்ஸ் ஒப்புக்கொண்டது.
  • தற்போது இந்தப் போர் விமானங்களைத் தயாரிக்கும் பணி முடிவடைந்து, அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகள் தொடங்குகின்றன.
  • தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தூய்மையான புனித தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்காக தில்லியில் நடைபெற உள்ள விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விருது பெற உள்ளனர்.
  • மத்திய அரசின் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக சிறந்த புனித தலங்களுக்கான தேர்வில் 10 கோவில்கள் அடையாளம் காணப்பட்டன. இதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், முதல் இடத்தை பிடித்துள்ளது.
  • தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் வரும் 6-ஆம்  தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
  • தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் ஓராண்டுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநராகவே தொடர்ந்து வந்தார்.
  • உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு அவரது பக்தர்களும், பொதுமக்களும் சுமார் 60,000 பேர் வந்து செல்கின்றனர். இதுவரை அங்கு விமான சேவைகள் எதுவும் இல்லை. 
  • இதன் காரணமாக, புணே அல்லது மும்பை வரை விமானத்தில் பயணித்து, அதன் பிறகு தரைவழி மார்க்கமாக ஷீரடி வரும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில், அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை எம்ஏடிசி மேற்கொண்டு வந்தது.
2017 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR MEDICAL 2017)
  • 2017 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மருத்துவத்திற்கான நோபஸ் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 3 பேருக்கு சேர்ந்து பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • 2017ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்துள்ளார்.
  • 'இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெபி சி.ஹால், மைக்கேல் ரோஷ்பஷ், மைக்கேல் டபிள்யூ.யங் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சி (உயிர் கடிகாரம்) செயல்படும் முறையை (molecular mechanisms controlling the circadian rhythm)மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக கண்டறிந்ததற்காக மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.
  • நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் இந்திய மதிப்பில் ரூ.7 கோடி பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
2017 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR PHYSICS 2017)
  • புவியீர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, அமெரிக்காவை சேர்ந்த, மூன்று விஞ்ஞானி களுக்கு, இந்தாண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.ஒரு நுாற்றாண்டுக்கு முன், பிரபல விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன், சார்பியல் தேற்றத்தின் ஒரு பகுதியாக கணித்த, அண்டவெளி மற்றும் காலத்தில், புவியீர்ப்பு அலைகள் குறித்த உண்மைகள், 2015ல், கண்டுபிடிக்கப்பட்டன. 
  • இந்த அலைகள், அண்ட வெளியில் கருந்துளைகள் மோதுவது உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்படுவதாக, அமெரிக்காவை சேர்ந்த, வான் இயற்பியல் விஞ்ஞானிகள், பேரி பாரிஸ், கிப் தார்னே, ரெய்னர் வெய்ஸ் ஆகியோர் கண்டுபிடித்தனர். இது, மிகப்பிரமாண்டமான அண்டம் பற்றி அறிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியது. 
  • உலக விஞ்ஞானிகள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய மூன்று விஞ்ஞானிகளும், இந்தாண்டின், இயற்பியலுக்கான, நோபல் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவீடனை சேர்ந்த, ராயல் அகாடமி ஆப் சயின்சஸ், இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது; மூன்று விஞ்ஞானிகளுக்கும், ஏழு கோடி ரூபாய் பரிசு பகிர்ந்தளிக்கப்படும். 
உலக சுகாதார அமைப்பு துணை பொது இயக்குநராக சௌமியா சுவாமிநாதன் நியமனம்
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி பொது இயக்குநராக உள்ள சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின்(டபிள்யூ.ஹெச்.ஓ) திட்டங்களுக்கான துணைப் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இவர் சர்வதேச அமைப்பில் இரண்டாவது முறையாக உயர்ந்த நிலையை பெற்றுள்ளார். 58 வயதான சௌமியா சுவாமிநாதன் குழந்தைகள் நல மருத்துவராகவும், மருத்துவ விஞ்ஞானியாகவும் இருக்கிறார். காசநோய்க்கான ஆராய்ச்சி மூலம் மருத்துவ விஞ்ஞானியாக அறியப்பட்டார். 
  • இவர் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பசுமை புரட்சியின் தந்தை என்ற அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் செளமியா சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லாபம் பெறும் கன்னியாகுமரி ஆவின்!
  • தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் நிறுவனம் பால்வளத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. 
  • ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் நஷ்டத்திலும், குறைந்த லாபத்திலும்தான் இந்நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லாபத்தை குமரி மாவட்ட ஆவின் நிறுவனம் பெறுகிறது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்குச் மார்ச் 2018-ம் வரை சேவை கட்டணம் இல்லை
  • ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்குச் மார்ச் 2018-ம் வரை சேவை கட்டணம் கிடையாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
  • சேவை கட்டணம் ரத்து சலுகையை மார்ச் 2018 வரை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவில் சலுகைகள்: ஆய்வு செய்ய ஆணையம் அறிவிப்பு
  • ஒ.பி.சி பிரிவில் உள்ள சமூகத்தினரை துணை வகைப்படுத்தும் ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட ஆணையம் அமைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அளிக்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டு பலன்கள் ஒரு சாராருக்கே செல்வதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
  • இதன் காரணமாக ஒபிசி பிரிவில் இருக்கும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கும் சலுகைகள் சென்றடைய வேண்டும் என்றும், அதை உறுதி செய்ய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதற்கான ஆணையத்தை அமைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
  • இந்த ஆணையத்தின் தலைவராக டில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த ஆணையம், ஓபிசி பிரிவில் உள்ள துணைப்பிரிவுகள் குறித்து ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை 12 வாரங்களில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநாடு பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது கட்டலோனியா
  • ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா தனிநாடு கோரிக்கை முன்வைத்துப் போராடி வந்தது. அம்மாநில அரசு நடத்திய வாக்கெடுப்பில் 90% கட்டலோனிய மக்கள் ஸ்பெயினிலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
  • ஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா தொடர்ந்து தனிநாடு கோரிக்கை வைத்து வந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம் இவர்களது கோரிக்கையை நிராகரித்து வந்தது. இந்நிலையில் கட்டலோனிய மாநில அரசு தனிநாடு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்தது.
  • வாக்கெடுப்பில், 90% கட்டலோனிய மக்கள் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு வருடம் தடை
  • ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச பளு தூக்குதல் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்).
  • கடந்த 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷியா, சீனா உள்ளிட்ட ஒன்பது நாட்டு வீரர் / வீராங்கனைகளை மறுபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
  • இதையடுத்து, ரஷியா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் வரும் நவம்பர் 28 முதல் நடைபெற இருக்கும் பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளன.
  • இந்த ஓராண்டு தடை காரணமாக சீன பளுதூக்குதல் வீரர்கள் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழக்கின்றனர்.
1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டெடுப்பு
  • வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டது.திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் சந்திரபுரம் பகுதியில் களப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • சந்திரபுரம் ஏரிக்கோடி பகுதியில் விவசாய நிலத்தில் மிகப் பெரிய நடுகல் கோட்டம் இருப்பதைக் கண்டனர். 
  • தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகல்களிலேயே இது சிறப்புவாய்ந்ததாகும். இது சுமார் 10 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. மேலும் மிக நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
  • மொத்தம் 8 நிகழ்வுகளை விளக்கும் விதமாக 25 மனித உருவங்களும், 5 குதிரைகளும் வடிக்கப்பட்டுள்ளன. நடுகல்லின் மையப் பகுதியில் தலைவனின் உருவம் பெரியதாக வடிக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டையுடன் இடையில் கச்சை, வாளின் உறை இடம்பெற்றுள்ளது. மேலும் கழுத்தில் இரண்டு சங்கிலிகளையும், கால்களில் வீரக் கழலும், கைகளின் மணிக்கட்டு மற்றும் அதற்குச் சற்று மேலே பூணும், நீண்ட காதுகளில் காதணியும் அணிந்துள்ளார். போர்க்களத்தில் எவ்வாறு இறந்தார் என்பதும் இந்நடுகல்லில் விவரிக்கப்பட்டுள்ளது. 
  • தலைவனின் தலையில் ஒரு அம்பும், நெஞ்சுப் பகுதியில் ஒரு அம்பும், வலது காலில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளன. இடது புறத்தில் இருந்து பாய்ந்து அவரின் உடலைத் துளைத்திருக்கும் இவ்அம்புகள் ஒவ்வொன்றும் படிநிலைகளில் அமைந்துள்ளன. அதாவது தலை மற்றும் மார்பில் பாய்ந்த அம்புகள் உடலின் உள்ளே பாய்ந்த நிலையில் வலது காலில் பாய்ந்த அம்பானது காலைத் துளைத்து வெளியே வந்த வண்ணம் அமைக்கப்பட்டது நடுகல்லிலும் சிற்பக்கலை நுட்பத்தினைக் காட்டுகிறது.
  • தலைவன் வலது கரத்தில் பெரிய போர்வாளினை ஏந்தியுள்ளார். கல்லின் வலது புறத்தில் மேற்புறம் நான்கு குதிரைகள் வரிசையாக உள்ளன.அதற்குக் கீழே காவடியும், சாமரமும் வீசியபடி இரு பெண்கள், அதற்குக் கீழே பல்லக்குத் தூக்கியவாறு இரு ஆண்கள், அதற்குக் கீழே குடைகள் ஏந்தியவாறு மூன்று பெண்கள், அருகில் வீரனது குதிரையும் உள்ளன.
  • கல்லின் இடது புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு ஆணும் பக்கவாட்டில் இரு பெண்கள் சாமரம் வீசும் நிலையிலும், அதற்குக் கீழே கைகளில் வில்லுடன் எதிரெதிராகப் போரிடும் வீரர்களின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக விறலியரின் சிற்பங்களும் உள்ளன. அதாவது, நான்கு பெண்கள் காற்றுக் கருவிகளை வாயில் வைத்து இசைக்கின்றனர். கீழே நான்கு பெண்கள் தோல் கருவிகளை வாசிக்கின்றனர்.
  • நடுகல்லின் பக்கவாட்டில் பதுக்கை போல் கற்பலகைகளை நட்டு வைத்துள்ளனர். அதில் இடப்புறம் உள்ள கல் உடைந்து கீழே கிடக்கின்றது.அக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகள் யாவும் சிதைந்த நிலையில் வாசிக்க இயலாவண்ணம் உள்ளன. அவ்வெழுத்துக்களின் அமைப்பு கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். 
  • இதற்கு நேர் எதிரே இன்னொரு நடுகல்லும் இடம் பெற்றுள்ளது.அதில் வீரனொருவர் கையில் வாளுடன் வடிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் பகுதியில் அம்பு பாய்ந்துள்ளது. இந்நடுகல் தலைவனின் தளபதிக்கு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 
  • இந்நடுகல் கோட்டத்தினைச் சுற்றி நான்கு மூலையிலும் பூவரச மரங்கள் உள்ளன. அம்மரங்களின் வேர்கள் வெளிப்புறமாகப் பின்னி ஒரு அடித்தளம் போல மிக அழகாகக் காட்சி தருகின்றன.
  • இந்நடுகல் கோட்டம் இப்பகுதியில் நேர்ந்த போரில் வெற்றியினைத் தேடித் தந்து மறைந்த தலைவன், அவனது படைத்தளபதிக்காக எடுக்கப்பட்டவையாகும். கோடியூரப்பன், முனீஸ்வரன் என்று இக்கோட்டத்தினை இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். 
  • தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேசிய அளவிலான சிறந்த தூய்மையான கோயில் என்ற விருது பெற்றதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 
பாரத ஸ்டேட் வங்கித் தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமனம்
  • பாரத ஸ்டேட் வங்கித் தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டேட் வங்கித் தலைவர் பொறுப்பில் 3 ஆண்டுகள் ரஜ்னிஷ் குமார் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாரத ஸ்டேட் வங்கித் தலைவராக பிரதீப் சவுத்ரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2017 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR PHYSICS 2017)

  • இந்த ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
  • வேதியல் (கெமிஸ்ட்ரி) துறையில் மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
1. ஜேக்கஸ் டுபோசெட்
2. ஜொவசிம் ஃப்ரான்க்
3. ரிசர்ட் ஹெண்டெர்சன்
  • ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. படிக மின்னணு நுண்ணோக்கி எனப்படும் CRYO ELECTRON MICROSCOPY கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2017 ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR LITERATURE 2017)
  • ஜப்பானில் பிறந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் குடியேறிய எழுத்தாளர், கசுவா இஷிகுரோ, 62, இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக, அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.ஜப்பானின் நாகசாகியில் பிறந்து, 5 வயதில் பிரிட்டனுக்கு குடியேறிய, பிரபல எழுத்தாளர், கசுவா இஷிகுரோ, இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • அவருக்கு பரிசாக, 7 கோடி ரூபாய் வழங்கப்படும்.இஷிகுரோ எழுதிய,           'த ரிமைன்ஸ் ஆப் த டே' என்ற நாவல், உலகப் புகழ் பெற்றது. இதற்காக அவருக்கு, 1989ல், புக்கர் பரிசும் கிடைத்தது. எட்டு நாவல்கள், பல்வேறு சிறுகதைகள், திரைப்படம் நாடகங்களுக்கான கதைகளையும் எழுதியுள்ளார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
  • 2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.
  • முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி 45வது இடத்தில் உள்ளார். 
  • கடந்த ஆண்டு இவர் 32வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி 2வது இடத்தில் உள்ளார். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன தலைவர் யோகாகுரு ராம்தேவ் கடந்த ஆண்டு இருந்த 48 வது இடத்தில் இருந்து, தற்போது 19வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.43,000 கோடி.
வயசு வெறும் நம்பர்தான் - ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று நிரூபித்த தமிழர்.
  • ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் 77 வயதான கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று வயது வெறும் எண் மட்டும்தான் என்று நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.
  • கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்.ஏ. சுப்பையா (77). இவர், திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • இவர், தனது 65-வது வயதிலிருந்து தேசிய, ஆசிய, சர்வதேச அளவில் நடைபெற்று வரும் மூத்தோர்களுக்கான பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று வருகிறார்.
  • ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, இதுவரை சர்வதேச அளவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஆசிய அளவில் ஒன்பது பதக்கங்களையும், தேசிய அளவில் 12-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று சாதித்து அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்.
  • போன மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து 25 வீரர்கள் கலந்து கொண்டதில் 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்றார் எம்.ஏ.சுப்பையா.
  • இவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், தட்டு ஏறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதித்துள்ளார்.
சமூக ஆர்வலர் சலீம் அகமதுக்கு மனித உரிமை கவுன்சில் விருது
  • இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் வழங்கப்படும் 2017 ஆம் ஆண்டுக்கான 'மனித சாதனையாளர் விருது' சமூக ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சலீம் அகமது தேசத்துக்காக மிகச் சீரிய முறையில் ஆற்றிய சமூகப் பணி மற்றும் கடின உழைப்புக்காக, விருதுக்கான நடுவர் குழு அவரைத் தேர்வு செய்துள்ளது. புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் 2017 - ஆம் ஆண்டுக்கான மனித சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷுக்கு ரஷிய விருது
  • மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமூத்தபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்க்கு ரஷியாவின் ‘அன்ன பொலிட்கோவஸ்கியா’ விருது வழங்கப்பட்டுள்ளது.
  • முற்போக்கு கருத்துக்களையும், மதவாதத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வந்தவர் மூத்த பத்திரியைாளர் கவுரி லங்கேஷ். இவர் மர்ம நபர்களால் கடந்த மாதம் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு ரஷியாவின் ‘அன்ன பொலிட்கோவஸ்கியா’ விருது அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது. 
ஜிபோடி நாட்டுடன் முக்கிய ஒப்பந்தம்
  • வெளிநாட்டு அலுவலக அளவில், தொடர்ச்சியான கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்த, ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, ஜிபோடியுடன், மத்திய அரசு, நேற்று ஒப்பந்தம் செய்தது.
  • ஆப்ரிக்காவில் உள்ள ஜிபோடி, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு, நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்ட, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், முதற்கட்டமாக, நேற்று முன்தினம், ஜிபோடி சென்றடைந்தார். அங்கு, அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜிபோடி சிட்டியில், நேற்று, அந்நாட்டு அதிபர், ஒமர் குல்லேவுடன், இருதரப்பு உறவு மேம்பாடு குறித்து, ராம்நாத் கோவிந்த் பேச்சு நடத்தினார். 
  • அதன் இறுதியில், வெளிநாட்டு அலுவலக மட்டத்தில், தொடர்ச்சியான கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தும் ஒப்பந்தத்தில், இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
2017 ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR PEACE 2017)
  • அணு ஆயுதத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும், 'ஐகேன்' எனப்படும், 'அணுஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம்' (ICAN)என்ற அமைப்புக்கு, 2017ம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஐகேன்' என்றழைக்கப்படும், அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுடன், ஏழு கோடி ரூபாயும் இந்த அமைப்புக்கு கிடைக்கும்.கிழக்காசிய நாடான வடகொரியா, தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதுடன், பல்வேறு அணு ஆயுத சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. 
காஸ் அடுப்பு, தின்பண்டங்கள், ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் உட்பட 27 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு
  • அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இ-வே பில்: ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரூ.50,000க்கு மேல் மதிப்பிலான சரக்கு போக்குவரத்துக்கு இ-வே பில் கட்டாயமாக உள்ளது.பொருட்களின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேறறம் செய்து இ-வே பில் தயாரிக்கலாம். 
  • இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் நடைமுறைப்படுத்த கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிக்கான ரீபண்ட் காசோலைகள் அக்டோபர் 10ம் தேதியிலும், ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி செய்ததற்கான ரீபண்ட் காசோலைகள் 18ம் தேதியும் வழங்கப்படும். 
  • ஒவ்வொருவருக்கும் இ-வாலட் ஏற்படுத்தப்பட்டு ரீபண்ட் தொகை முன்கூட்டியே இதில் வழங்கப்படும். இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
  1. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகளுக்கு 18%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
  2. வெட்டப்பட்ட உலர்ந்த மாங்காய்களுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு
  3. பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
  4. பிளாஸ்டிக், ரப்பு கழிவுகளுக்கு 18%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
  5. காக்ரா மற்றும் சப்பாத்திகளுக்கு 5% வரி.
  6. பிராண்ட் அல்லாத மிக்சர், சேவ் உள்ளிட்ட திண்பண்டங்களுக்கு 5% வரி.
  7. பேப்பர் கழிவுகளுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
  8. கைத்தறி நூலுக்கு 18%ல் இருந்து 12% ஆக வரி குறைப்பு.
  9. மார்பிள், கிரானைட் உள்ளிட்ட தரையில் பதிக்கும் கற்களுக்கு 28%லிருந்து 18% ஆக வரி குறைப்பு.
  10. ஸ்டேஷனரி பொருட்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக வரி குறைப்பு. 
  11. ஜாப் ஒர்க் பணிகளுக்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
  12. டீசல் இன்ஜின் உதிரி பாகங்களுக்கு 28%ல் இருந்து 18% ஆக வரி குறைப்பு.
  13. ஏசி உணவகங்களுக்கு 18%ல் இருந்து 12% ஆக வரி குறைக்க முடிவு.
  14. கைவினைப்பொருட்களுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு உள்ளிட்ட 26 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
  15. ஜரிகை வேலைகளுக்கான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைப்பு.
தப்பாட்டக் கலையில் டாக்டர் பட்டம்! அசத்திய மதுரைக்காரர்
  • அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ''மதுரையைச் சேர்ந்த பனையூர் ராஜாவுக்கு, தப்பாட்டக் கலைக்கான டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. கிராமத்துக் கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் சமயத்தில், தப்பாட்டக் கலைக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி-க்கு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் நீதித்துறையில் பணியாற்றுவோர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.இந்த சட்டத்தை மீறி மூன்று குழந்தைகளை பெற்றடுத்த காரணத்தால், குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார், மற்றும் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி ஆகியோர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்தியா — பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லை தாண்டி நடைபெறும் துப்பாக்கிச் சூட்டிற்கு பதிலடியாக இந்திய எல்லைக் காவல் படை ( BSF ) சார்பில் பாகிஸ்தான் படை அலுவலர் குடியிருப்புகள் மற்றும் முகாம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.இதற்கு *ஆபரேசன் அர்ஜூன்* என பெயரிடப்பட்டுள்ளது.
  • கேரளா முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று கேரளாவிற்கு சுற்றுப்பயணம் வந்த ஷார்ஜா மன்னர் முகமது பின் அல் காஸ்மி, சிறிய அளவில் குற்றம் புரிந்ததற்காக தங்கள் நாட்டில் சிறையில் வாடும் 149 இந்தியர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.
  • பெங்களூரு மாநகராட்சியின் 51வது மேயராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர். சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன் மூன்று தமிழர்கள் பெங்களூரு மேயராக பணியாற்றியுள்ளனர்.01) 1950 – N. கேசவ அய்யங்கார்,02)1962 – V. S. கிருஷ்ண ஐயர்,03)1994- 95 – G. குப்புசாமி.
  • தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அக்டோபர் 02ல் மூன்று ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தூய்மையை வலியுறுத்தும் *Toilet: Ek Prem Katha* என்னும் ஹிந்தி திரைப்படத்தை அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் திரையிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக, *பசுக்களுக்கான சரணாலயம்,* மத்திய பிரதேசத்தின் *ஆகர் – மால்வா* மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது.
  • இந்திய சுற்றுலாத்துறையின் சார்பில் Incredible India பிரச்சாரம் எகிப்து நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
  • FIFA U17 உலக கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ பந்து அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் – *Krasava.* இது ஒரு *ரஷ்ய மொழி சொல்.* விளையாட்டு போட்டிகளில் ஒரு அழகான நிகழ்வுகள் நடைபெறும் போது ரஷ்யர்களால் உச்சரிக்கப்படும் சொல் இதுவாகும்.
இந்திய - சர்வதேச அறிவியல் விழா சென்னையில் 13ம் தேதி துவக்கம்
  • இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், 13ல் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.
  • பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ., பிரித்தெடுக்கும் முயற்சியில், 1௦௦௦ மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்,
  • டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, மக்களை அச்சுறுத்தும் நோய்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், நல்ல முடிவு கிடைக்கும்,'' என்றார்.
100 ஆண்டுகள் பழமையான அரசு நிறுவனம் மூடப்படுகிறது
  • மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல் செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசுக்கு, பொருட்கள் கொள்முதல், வினியோகம் ஆகியவற்றை கவனிப்பதற்காக, டி.ஜி.எஸ்., அண்ட் டி., எனப்படும், சப்ளை, வினியோகங்கள் பொது இயக்ககம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலிய வீரர் சாதனை
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் உலக சாதனை செய்துள்ளார். அவர் ஒரே போட்டியில் எட்டு விக்கெட்டுக்களை ஸ்டெப்பிங் மற்றும் கேட்ச் மூலம் அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மிக் 21 ரக போர் விமானங்களை இயக்க போகும் பெண் பைலட்கள்
  • இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்களை, முதல் முறையாக பெண் பைலட்டுகள் அடுத்த மாதம் இயக்க உள்ளனர். பயிற்சி இந்திய விமானப் படையில், ஜூன், 2016ல், அதிகாரிகளாக பணியில் சேர்ந்த, பவானா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய, மூன்று பெண்கள், மேற்கு வங்கத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில், விமானிகளாக பயிற்சி பெற்று வருகின்றனர். 
2017 ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR ECONOMICS 2017)
  • பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை, அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், 72, பெறுகிறார்.அமெரிக்காவின், சிகாகோ பல்கலையை சேர்ந்த பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், மனிதப் பண்புகள், எவ்வாறு, தனி நபரின் முடிவுகளை பாதிக்கின்றன. அதன் விளைவால், சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பான விளக்கம் அளித்தவர். 
  • தாலெர், 'நடத்தை பொருளாதாரம்' என்ற துறையில், முன்னோடியாக திகழ்கிறார்.இதில், உளவியல் ஆய்வின் அடிப்படையில் அறியப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு, பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
  • இதன் அடிப்படையில், அவர், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நோபல் கமிட்டி கூறியுள்ளது. தாலெருக்கு, நோபல் பரிசுடன், ஏழு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்தியா முதல் கோல் - வரலாறு படைத்தார் ஜீக்சன் - உலக கோப்பையில் முத்திரை
  • உலக கோப்பை கால்பந்து அரங்கில் இந்தியாவின் முதல் கோல் அடித்து, வரலாறு படைத்தார் ஜீக்சன். இவரது துடிப்பான ஆட்டம் கைகொடுக்க, கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா போராடி தோற்றது.
  • இந்தியாவில் 'பிபா' உலக கோப்பை (17 வயதுக்குட்பட்ட) கால்பந்து தொடர் நடக்கிறது. 

உலக 'யூத்' வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று இந்திய ஜோடி அசத்தல்.
  • உலக 'யூத்' வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் நடைபெற்ற உலக 'யூத்' வில்வித்தைப் போட்டி நடைப்பெற்றது
  • இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை பங்கேற்றது.போட்டியின் இறுதியில் ஜெம்சன் நிங்தோஜம் - அங்கிதா பகத் இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. 
  • யூத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபிகா குமாரிக்குப் பிறகு தங்கம் வென்ற பெருமை ஜெம்சன் - அங்கிதா இணைக்கு கிடைத்துள்ளது.முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தப் போட்டியில் இதுதவிர இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக அனுபம் கேர் நியமனம்
  • இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக புகழ்பெற்ற நடிகர் அனுபம் கேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கஜேந்திர சவுகானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து திரைப்பட நடிகர் அனுபம்கெரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இதையடுத்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நான் முடிந்த வரை என்னுடைய கடமைகளை சிறப்பான முறையில் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணமான 18 வயதுக்குட்பட்டசிறுமியுடன் கணவர் கட்டாய உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.
  • 18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்வதும், பாலியல் உறவு கொள்வதும் சட்டப்படி குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
  • குழந்தைத் திருமணத்தை தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
  • இது தொடர்பாக இன்று பிறப்பித்த உத்தரவில், 18 வயதுக்குட்பட்ட சிறுமியை மணந்து உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே என்றும், இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்கலாம் எனவும், இதனை பாலியல் வன்கொடுமையாக கருதி வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
  • மேலும், திருமணமாகி ஒரு வருடத்துக்குள் சிறுமி தரப்பில் புகார் அளித்தால் பாலியல் வன்கொடுமையாக எடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது. 
  • 2019-ம் துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
  • பெங்களூருவில் நடந்த தகுதி சுற்று போட்டியில் மக்காவ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா
  • வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் உள்ளது.இந்த பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து வடகொரியா, வங்கதேசம், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. 
  • கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97 வது இடத்தில் இருந்தது. சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 
  • இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. 
  • இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல்
  • ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறியுள்ளன.
  • இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி அமெரிக்கா தமது முடிவை அறிவித்தது. அதையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று வருணித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு.
  • ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்ததும் தங்களுக்கு சுமையாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாரதியார் பெயரில் மூத்த தமிழறிஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • பாரதியார் பெயரில் மூத்த தமிழறிஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ. கணபதி தெரிவித்துள்ளார்.
  • மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு "மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கென குழு அமைக்கப்பட்டு அவர்கள் பாரதி குறித்தும், தமிழ் மொழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட விருதுக்குரிய தமிழறிஞரைத் தேர்வு செய்வார்கள். 
  • உத்திரப்பிரதேச அரசு வெளியிட்ட முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • உலக வங்கி மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டங்களுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம் புதுடெல்லியில் சர்வதேச வனவிலங்கு திட்ட மாநாட்டை நடத்தியுள்ளது.இதன் கருப்பொருள் — People’s Participation in Wildlife Conservation ஆகும்.
  • ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • *நமாமி கங்கை* திட்டத்தின் கீழ் அலகாபத்தில் திரிவேணி சங்கமம் ( கங்கை, யமுனை , சரஸ்வதி சங்கமிக்கும் இடம் ) பகுதியில் *ஆமைகள் சரணாலயம்* அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தாற்காலிக துணை வேந்தராக நீரஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துணை வேந்தராக பணியில் இருந்த கிரிஷ் சந்திர திரிபாதி விடுமுறையில் சென்றுள்ளதால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் 1.8 மீட்டர் உயரமுள்ள, காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் Be the Change You Wish to See என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • கனடா நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக ஜக்மீத் சிங் என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தாஷ்கண்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 5 வயது குழந்தைக்கு தாயான உக்ரைன் வீராங்கனை Kateryna Bondarenko பட்டம் வென்றுள்ளார்.இதற்கு முன் 2011 ஆஸ்திரேலியா ஓபனில் ஒரு குழந்தைக்கு தாயான கிம் கிலிஸ்டர்ஸ் வென்றுள்ளார்.
செல்லாத நோட்டு திட்டத்தை விமர்சிக்கும் பார்லி குழு அறிக்கை
  • மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை விமர்சிக்கும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஆய்வறிக்கை, குளிர் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
  • செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், கடந்தாண்டு, நவ., 8ல், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், 'கறுப்புப் பணத்தை ஒழிக்க, இந்த திட்டம் அவசியம்' என, மத்திய அரசு கூறியது.
  • இந்த திட்டம் குறித்து, நிதி தொடர்பான, பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்தது. காங்., - எம்.பி., வீரப்ப மொய்லி, இந்த குழுவின் தலைவராகவும், காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளனர்.ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம், பார்லிமென்ட் குழு கருத்துக்களை கேட்டுப் பெற்றது. இந்த குழுவின் ஆய்வறிக்கை, பார்லிமென்ட்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 
உணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்
  • 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களும் உள்ளனர். அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • 'இடம்பெயர்வோரின் எதிர் காலத்தை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். 
  • அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. மக்களின் தற்போதைய வாழ்க்கை முறையினால், உணவுப் பழக்க வழக்கமும் மாறியுள்ளது. 
  • நம் முன்னோர்கள் பயிரிட்ட பல உணவுப் பொருட்கள், இன்றைய தலைமுறையினர் சாப்பிட விரும்புவதில்லை. விரும்பினாலும் அந்த உணவுப்பொருட்கள் தற்போது கிடைப்பது இல்லை.இதற்கு காரணம் மக்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் குறைகிறது. முன்பெல்லாம் உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகளின் மீது மரியாதை இருந்தது.
  • தற்போதைய கால மாற்றத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. எதிர்காலத்தில் கையில் பணம் இருந்தாலும் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
  • 79.5உலகின் மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 10.9 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அடுத்த இடத்தில் ஆசியா (12 சதவீதம்) உள்ளது.40 உலகளவில் இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015ன் படி, 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2000ம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். உலகில் இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் 15 - 34 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பாதி பேர் பெண்கள்.
கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்திரா காந்தி விருது
  • தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. 
  • இதற்கான முறையான அறிவிப்பை விருது ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா, டெல்லியில் வெளியிட்டார்.
ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • ஓடும் ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மூச்சு திணறலால் அவதிப்படும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து ரயில்களிலும் உயிர்க் காக்கும் பிராண வாயு சிலிண்டர் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 
  • பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓடும் ரயில்களில் என்ன மாதிரியான மருத்துவ வசதிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளும்படியும் ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, ஏஎம் கான்மில்கார் மற்றும் டிஒய் சந்திரகுட் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு இல்லை;புகை இல்லை: டெல்லி நகரில் ஆரவாரமில்லாத தீபாவளி
  • இந்த வருடம் டெல்லி நகரில் தீபாவளி பண்டிகை முற்றிலும் புது மாதிரியாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புகையில்லாத, வெடி சத்தம் இல்லாமல் ஆரவாரமில்லாத தீபாவளியாக அது அமைந்திருந்தது.
  • உலக அளவில் மாசடைந்து வரும் நகரங்களின் பட்டியலில் டெல்லி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவை சார்ந்த ஷாங்காய் நகரம் உள்ளது. இந்த இடத்தை பிடிப்பதில் இருநகரங்களுக்கும் இடையில் மாறிமாறி போட்டிகள் நடந்து வருகின்றன. 
  • இந்த மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு டெல்லி நகரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுக்களை வெடிக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 
ராணுவ வீரர்களுடன் தீபாவளிக் கொண்டாடும் பிரதமர் மோடி
  • வடமாநிலங்களில் தீபாவளிக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளார்.
பின்தங்கல்... இந்தியா பின்தங்கல்... ஐ.நா. ஆய்வறிக்கையில் "குட்டு"
  • குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுப்பது மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறப்பதை தடுப்பதில், இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஐ.நா., கூறியுள்ளது.
  • குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறக்கும் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 174 ஆக உள்ளது. இதில், உலக சராசரி விகிதம் 216 ஆக உள்ளது. வளர்ந்த நாடுகளில், இந்த விகிதம் 12 ஆக உள்ளது.
  • இந்தியாவில், 27 சதவீத குழந்தைகள் 18 வயது பூர்த்தி ஆகும் முன், திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
  • வங்கதேசத்தில், 18 வயதாகும் முன் 59 சதவீத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. நேபாளத்தில் இது, 37 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது: நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார்
  • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது; அப்படி இடஒதுக்கீடு வழங்கினால் பல தடைகள் ஏற்படும்.
  • இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பும் குறையும்.

  • சுவிட்சர்லாந்து நாட்டின் Esther Staubli , கொல்கத்தாவில் நடைபெற்ற ஜப்பான் - நியூ கேலடோனியா அணிக்கு எதிரான FIFA U17 ஆண்கள் கால்பந்து போட்டியில் நடுவராக பணிபுரிந்துள்ளார்.ஆண்கள் கால்பந்து போட்டியில் நடுவராக பணிபுரிந்த முதல் பெண் என்ற பெருமையை Esther Staubli பெற்றுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக முகாபே நியமனம்
  • தொற்று நோய்கள் அல்லாத இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்றவற்றை சமாளிப்பதற்கு உதவுவுவதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ணத் துதராக நியமித்திருக்கிறது.
  • பொது சுகாதார பராமரிப்புக்கு ஜிம்பாப்வே காட்டிவரும் அர்ப்பணிப்பை உலக சுகாதார நிறுவனத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் டெட்ரோஸ் அத்கானாம் கபிரியோனியுஸ் புகழ்ந்துள்ளார்.
  • ஆனால், 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வேயை ஆண்டு வருகின்ற முகாபேயின் சுகாதார சேவைகள், ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படாதது, மருந்துகள் விநியோகத்தில் பற்றாக்குறை போன்றவற்றால் சீர்குலைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
'பாரத் நெட்' திட்டம்; ரூ.1,230 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
  • தமிழகத்தில், 'பாரத் நெட்' என்ற, கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 1,230 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது. 
  • அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, 'பாரத் நெட்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளும், 'ஆப்டிக்கல் பைபரால்' இணைக்கப்படுகின்றன. 
  • அதனால், மக்கள் இணைய தளம் வழியாக, அரசின் சேவைகளை பெற முடியும். புரிந்துணர்வு ஒப்பந்தம்: இத்திட்டம், மத்திய அரசின் பங்களிப்புடன், 3,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 'தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்' என்ற, தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 
  • மாநில அரசின் பங்கு முதலீடாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் தொலைதொடர்புத் துறை, 'பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட்' நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே, ஏப்ரல், 25ல், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான திட்ட அறிக்கை, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஆக., 31ல், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
புற்றுநோய் மருத்துவ மேம்பாட்டிற்கு டாடா ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
  • ஐந்து மாநிலங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை வழங்க முன்வந்துள்ளது. ராஜஸ்தான், ஜார்கண்ட், உ.பி., ஆந்திரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை புதுப்பிக்கவும், கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விஸ்தரிப்பு செய்யவும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • மும்பை அருகே பரேலில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் நாடு முழுவதும் இருந்து நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இங்கு 60 சதவீததிற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை இலவசமாகவோ அல்லது அதிக மானியத்துடன் வழங்கி வருகிறது.
பயன்பாட்டுக்கு வருகிறது உலகின் முதல் '3-டி பிரின்டட்' பாலம்!
  • பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 3-டி பிரின்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் பாலம் இதுவே ஆகும். இந்தப் பாலத்தை சைக்கிள் ஓட்டுபவர்களும், நடந்து செல்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • நேற்று நெதர்லாந்தின் ஜமார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 95 சதவிகிதம் 3-டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 5 சதவிகிதம் கான்கிரீட் மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் இது மிகவும் வலுவானது எனக் கூறப்படுகிறது.
  • இந்தப் பாலம் 40 டிரக்குகளை ஒரே நேரத்தில் தாங்கக் கூடிய அளவிற்கு வலிமை பொருந்தியது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வாழ்நாள் கான்கிரீட்டில் கட்டப்பட்ட பாலங்களைப் போலவே அதிகம் எனவும் கூறுகிறார்கள். இந்தப் பாலம் 800 அடுக்குகளான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பாலத்தை உருவாக்க மொத்தமாக 3 மாதம்தான் ஆனது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் ஆனது. 
  • 1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் செங்கோட்டையன்

ராமநாதபுரத்தில் சேதுபதி கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மேலஅரும்பூர் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில், சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுள்ள சூலக்கல் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த இரு சூலக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • மன்னர்கள், கோயில்களில் தினசரி வழிபாடு நடைபெறுவதற்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி, கோயில்களுக்கு அவற்றைத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல்மூலம், கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். 
  • அவ்வாறு வழங்கிய நிலத்தின் நான்கு மூலைகளிலும் எல்லைக்கல் நட்டுவைப்பார்கள். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தில், திரிசூலம் பொறித்த கல்லும் திருமால் கோயிலுக்கு சங்கு சக்கரம் பொறித்த கல்லும் நடுவர். 
  • "மேலஅரும்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல், புல்லுகுடி சிவன்கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்தது. 2.5 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள கல்லின் நடுவில் திரிசூலமும், அதன் இடது வலது புறங்களில் சூரியனும், பிறையும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. 
  • இக்கல்லின் நான்கு பக்கமும் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டில், கி.பி 1711 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்தூர் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாசநாதசுவாமி கோயிலுக்கு அரும்பூரில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். 
  • இதை ,செப்புப்பட்டயமாக சாமபிறான் (மந்திரி) கொடுத்துள்ளார் என்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக, தகவல்களும் பெயர்களும் சுருக்கமாக வெட்டப்பட்டுள்ளன. மன்னர் பெயர் விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர் என உள்ளது. 
  • கல்வெட்டில் தானம் வழங்கப்பட்ட நிலம் எங்குள்ளது என்ற தகவல் இல்லை. தானம் கொடுத்த நிலத்தில் எல்லைக்கற்கள் நடுவது வழக்கம் என்பதால், மேலஅரும்பூரில் சூலக்கல் உள்ள நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டதாகக்கொள்ளலாம்.
  • கி.பி 1201-ம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டில், புலிகுடி என இருந்த ஊர், சேதுபதிகள் காலத்தில் புல்லுகுடி என மாறியுள்ளது. புல்லுகுடி, மேலஅரும்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. தமிழ் ஆண்டு விகாரி, தை மாதம் 26-ம் நாள் தானம் வழங்கப்பட்டுள்ளது. 
  • இதன் ஆங்கில ஆண்டு கி.பி 1720 ஆகும். ஸ்ரீமது எனத் தொடங்கும் இக்கல்வெட்டு, சந்திராதித்தவர்க்கு என முடிகிறது. இக்கல்வெட்டில், 32 வரிகள் உள்ளன. இரண்டு மூன்று எழுத்துகள் ஒரு வரியாக உள்ளது. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த முதல் சூலக்கல் கல்வெட்டு இது, என்பது குறிப்பிடத்தக்கது. 
  • இதேபோல, மேல அரும்பூர் உத்தமபாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும், கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக மேலும் இரண்டு சூலக்கற்கள் இங்கு உள்ளன. இவை, சோழர்கால கலை அமைப்பில் உள்ளன. இவ்வூர் அல்லது புல்லுகுடி சிவன் கோயிலுக்கு பிற்காலச் சோழர் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்டு, இந்த சூலக்கற்கள் நடப்பட்டிருக்கலாம். இவற்றில், கல்வெட்டுகள் எதுவும் இல்லை,"
  • சோழர் கால வணிக நகரமாகத் திகழ்ந்த அழகன்குளத்தின் பெருமைகள், அங்கு நடந்த அகழாய்வுப் பணிகளின்போது, வெளி உலகுக்குத் தெரியவந்தது. இந்நிலையில், திருவாடானை பகுதியில் சேதுபதி மற்றும் சோழர்கால சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டம் தொல்லியலில் சுரங்கமாகத் திகழ்ந்துவருகிறது. 
வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமே: ஆர்பிஐ
  • வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. 
  • இந்நிலையில், பணப்பறிமாற்றத்தை தடுக்கும் விதமாக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமே என ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது
அருணாச்சல பிரதேசத்துக்கு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல்!! சட்டமன்றத்தில் தீர்மானம்
  • அருணாச்சல பிரதேசத்திற்கு என்று தனி மாநில ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் பணி நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் சட்டமன்றத்தில் கடந்த 18ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தனி மாநில பணி நிலை என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கு உண்மையான, உணர்வுப்பூர்வமான வளர்ச்சி கிடைக்க வழிவகை செய்யும். மாநிலத்திற்கு என்று தனி பணி நிலை அதிகாரிகள் இல்லாததால் மத்திய அரசின் திட்டங்களை முறையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • வெளிமாநிலங்களில் இருந்து இங்கு குறுகிய காலத்திற்கு வரும் அதிகாரிகளால் மலைவாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மாநிலத்தின் நலன் கருதி அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்வது தற்போதைய அவசர தேவையாக உள்ளது.
  • அருணாச்சல பிரதேச மாநிலம் தற்போது அகில இந்திய சேவை குழுமத்தில் அருணாச்சல், கோவா, மிசோராம், இதர யூனியன் பிரதேச பட்டியலில் உள்ளது. 
  • அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் முதன்முதலாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்த குழுமத்தில் உள்ள கோவா, மிசோராம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 
  • இதில் கடைசியாக அருணாச்சல பிரதேசமும் இணைந்துள்ளது. மிசோராம், கோவா ஆகிய மாநிலங்கள் 1987ம் ஆண்டில் உருவானவை. மிசோராம் 2வது முறையும், கோவா 3வது முறையாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல தடை: கர்நாடக அரசு முடிவு
  • கர்நாடகாவில், இரு சக்கர வாகனங்களில், இருவர் செல்ல தடை விதிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.சமீபகாலமாக, மாநிலத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன. 
  • பெரும்பாலான விபத்துகளில், இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். மாநிலத்தில், மோட்டார் வாகன சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். அப்போது, 100 'சிசி'க்கு குறைவான திறன் உடைய இரு சக்கர வாகனங்களில், இருவர் செல்ல தடை விதிக்கப்படும். 
  • புதிதாக தயாரிக்கப்படும், இரு சக்கர வாகனங்களில், ஒருவர் மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கும்படி, வாகன தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்படும். ஆனால், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு இது பொருந்தாது.
  • புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பைக், ஸ்கூட்டர் போன்றவற்றில், இருவர் செல்ல தடை விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசுப்பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணையை தயாரித்து சாதனை
  • மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாதிரி ஏவுகணை தயாரித்து பறக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.
  • மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தொழில்நுட்ப மன்றப் பொறுப்பாளரும், பள்ளியின் ஆசிரியருமான சூர்ய குமார் தலைமையில் எட்டாம் வகுப்பு மாணவிகள் பத்து பேர் கொண்ட குழு, ஒரு அடி உயரத்தில் ஏவுகணை மாதிரியை உருவாக்கியுள்ளனர். 
  • சிட்ரிக் அமிலம், சமையல் சோடா மற்றும் தண்ணீரை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஏவுகணையை தயார் செய்து, பள்ளி வளாகத்தில் பறக்க வைத்தனர். எதிர்காலத்தில் இதுபோன்று குறைந்த செலவில் அதிக கண்டுபிடிப்புகளை தயார் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.
இனி, டிஜிட்டல் பரிமாற்றம் கட்டாயம்.அனைத்து பல்கலைக்கும் மத்திய அரசு உத்தரவு
  • அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் டிசம்பர் மாதம் முதல் டிஜிட்டல் பரிமாற்றத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
  • பல்கலை வளாகத்துக்குள் ரொக்கப்பணத்தை யாரும் கையாளக்கூடாது, டிஜிட்டல் பரிமாற்றம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இதற்காக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.), அனைத்து இந்திய தொழிற்கல்வி குழு(ஏ.ஐ.சி.டி.இ.) ஆகியோரிடமும் ஒத்துழைப்பை கேட்டுள்ளோம்” என்றார்.
  • இந்த நடவடிக்கை மூலம், தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆகியவற்றில் முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டுவரப்படும். மாணவர் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கை கட்டணம், மதிப்பீடு, தேர்வு முடிவுகள்வெளியீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையாக்கப்படும்.
  • மேலும், பல்கலைக்கழகங்களில் செயல்படும் கேண்டீகளில் கூட ரொக்கப்பணத்தை கையாளாமல் “பிம்” செயலி மூலம் பரிமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்
  • காஷ்மீர் பிரச்னை குறித்து அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக, உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தினேஷ்வர் சர்மா கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016 வரை ஐ.பி. உளவுத்துறையின் இயக்குநராக பணியாற்றிவர் ஆவார். கடந்த 2002ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் காஷ்மீர் பிரச்னை குறித்து நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவில், 4வது சிறப்புப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். 
  • இந்நிலையில் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'பிபா' விருது: 2017ம் ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு
  • 2017ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ‛பிபா' விருதினை, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு 'பிபா' சார்பில் ஆண்டுதோறும் தலைசிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. 
  • இந்நிலையில் நடப்பு ஆண்டின் சிறந்த வீரராக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை(அர்ஜென்டினா) முந்தி, சிறந்த வீரர் விருதினை ரொனால்டோ கைபற்றினார்.
  • கடந்த 5 ஆண்டுகளில் 4வது முறையாக பிபா விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஹாலந்து வீராங்கனை லிக்கி மார்டன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கோல்கீப்பராக கெயின்லுகி பபனும், பயிற்சியாளராக ஜிடேனும் தேர்வு செய்யப்பட்டனர்.
சரித்திரம் படைக்கும் சமாதான சின்னம் - இன்று ஐ.நா., சபை தினம்
  • உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பது ஆகியவை ஐ.நா., சபையின் பணிகளாக உள்ளன. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்., 24ல் உருவாக்கப்பட்டது.
  • உலகின் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நா., சபையின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் அக்., 24ல், ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே இதன் நோக்கம். உறுப்பினர்கள். ஐ.நா., சபை உருவாக்கப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இன்று 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
  • இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது. தற்போதைய தலைவராக அன்டோனியா கட்டார்ஸ் உள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. 
  • கிளை அமைப்புகள் : ஐ.நா.,சபையின் கீழ் சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை பராமரிக்கும் 'யுனிசெப்' நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம், கலாசாரத்தை பாதுகாக்கும் 'யுனெஸ்கோ', பாதுகாப்பை நிலைநாட்டும் அமைதிப்படை, நீதி வழங்கும் சர்வதேச நீதிமன்றம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் போன்றவை முக்கியமானவை.
  • ஐ.நா., உறுப்பு நாடுகளில் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐ.நா.,வில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை, இதில் ஒரு நாடு எதிர்த்தாலும் அத்தீர்மானம் ஐ.நா.வால் நிறைவேற்ற முடியாது. 
  • ஐ.நா., சபையில் அரபி, ஆங்கிலம், பிரஞ்சு, சைனீஸ், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. 2001 உலகில் அமைதி நில பாடுபட்டதற்காக, 2001ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருது ஐ.நா., சபைக்கு வழங்கப்பட்டது.
  • வருமானம் ஐ.நா., வுக்கான வருமானம் உறுப்பு நாடுகளின் மூலமே கிடைக்கிறது. 2016 கணக்கின் படி, முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. மொத்த வருமானத்தில் 22 சதவீதம் அமெரிக்காவால் கிடைக்கிறது. ஜப்பான் 9.6%.
  • சீனா 7.9%, ஜெர்மனி 6.3%, பிரான்ஸ் 4.8%, பிரிட்டன் 4.4% ஆகியவை அடுத்த 5 இடங்களில் உள்ளன. இந்தியாவின் பங்கு 0.7%.
பாட்மின்டன் போட்டிகளில் இந்த ஆண்டு, இந்தியாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. 
  • உலக பாட்மின்டன் கூட்டமைப்பு ஆண்டுதோறும், 13 சூப்பர் சீரியஸ் போட்டிகளை நடத்துகிறது. ஆல் இங்கிலாந்து, இந்தியா சூப்பர் சீரியஸ் என துவங்கி, தற்போது டென்மார்க் ஓபன் போட்டி முடிந்துள்ளது.
  • 9 சூப்பர் சீரியஸில் 6 பட்டங்கள் - இந்தியாவுக்கு 6 பட்டம்
  • ஸ்ரீகாந்துக்கு 3, சிந்துவுக்கு 2 
  • இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து, சிங்கப்பூர் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் பி. சாய் பிரனீத், இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளனர்.
  • அதிக பட்டங்கள் வென்ற நாடுகளில் சீனா (11 பட்டங்கள்), இந்தோனேசியா (7 பட்டங்கள்), ஜப்பானுக்கு (7 பட்டங்கள்) அடுத்ததாக நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
டென்மார்க் ஓபன் கிளைமாக்ஸ்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் வென்று அசத்தல்.
  • டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வாகை சூடினார்.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடைப்பெற்றது.
  • இதன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த மற்றும் தென் கொரியாவின் லீ ஹியூன் மோதினர். இதில், 21-10, 21-5 என்ற செட் கணக்கில் லீ ஹியூனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.
  • நடப்பாண்டில் ஸ்ரீகாந்த் வெல்லும் 3-வது சூப்பர் சீரிஸ் பட்டம் இது, ஒட்டுமொத்தமாக 5-வது பட்டமாகும்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பையை வென்றது இந்தியா ஹாக்கி அணி.
  • பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அனி வாகைச் சூடி அசத்தியது.இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
  • இந்த வெற்றியின்மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ள இந்தியா 3-வது முறையாக ஆசிய சாம்பியன் ஆகியுள்ளது. முன்னதாக, கடந்த 2007 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தைகள் புதிய வரலாறு படைத்தன
  • இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று(அக்., 25) புதிய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. முதன்முறையாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 10,300 புள்ளிகளையும் கடந்துள்ளன.வாராக் கடன்களால் திணறிவரும் வங்கிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. 
  • இதுதவிர உள்கட்டமைப்பிற்கும் ரூ.6.92 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.99 புள்ளிகள் உயர்ந்து 33,117.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 10,340.55-ஆகவும் வர்த்தகமாகின.
  • முன்னதாக சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 10 மணியளவில் அந்த சாதனை சரிந்து, சென்செக்ஸ் 32,855 புள்ளிகளிலும், நிப்டி 10,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
  • சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் வானூர்தி உதிரி பாகங்கள், ராணுவ தளவாட உற்பத்தி பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 
  • ரூ.198 கோடியில் 245 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழக அரசின் சிப்காட், டிட்கோ நிறுவனங்களால் செயல்படுத்தப்பட உள்ளது. 
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய இணை தங்கம் வென்று அசத்தல்.
  • ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை இறுதிச்சுற்றின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
  • ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
  • இதன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜிது ராய் - ஹீனா சித்து இணை 483.4 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
அமைச்சரவை ஒப்புதல் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி நிதி: அருண்ஜெட்லி அறிவிப்பு
  • பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2.11 லட்சம் கோடி மூலதன நிதி வழங்க உளள்தாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதற்கு மத்திய அரசு மூலதன நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவை கோரி வந்தன. 
  • இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மூலதன நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இந்த மூலதன நிதி 2 ஆண்டுகளில் வழங்கப்படும். 
  • இதில் ரூ.76,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவும், வங்கிகளின் மறு மூலதன பத்திரங்கள் மூலம் ரூ.1.35 கோடி நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வங்கிகளின் நிதி நிலையை போக்க வங்கி சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கடனை திருப்பி செலுத்தும் தகுதி பற்றி வங்கிகள் ஆராயாமல் கடன் கொடுத்ததே தற்போதைய வராக்கடன் பிரச்னைக்கு காரணம். 
  • சமீபத்திய புள்ளி விவரத்தின்படி வங்கிகளின் வராக்கடன் 8.35 லட்சம் கோடியாக உள்ளது. இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்படும். வங்கிகள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கடன் வழங்குவதற்கு இந்த மூலதன நிதி உதவும்.
  • தன்மூலம் இந்த தொழில் துறைகளில் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை தக்க வைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். 
  • பொருளாதார விவகார செயலாளர் எஸ்.சி.கார்க் கூறுகையில், நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 2 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 40,000 கோடி டாலரை தாண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை இலக்கு ரூ.72,500 கோடி எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கும் வரி! அரசு அதிரடி!
  • பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் விலங்குகளை வளர்ப்பதற்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இதன்படி, நாய் பூனை, பன்றி, செம்மறி, மான் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் ரூ.250 செலுத்த வேண்டும எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எருது, குதிரை, மாடு, யானை போன்றவைகளுக்கு ரூ.500 வரியாக செலுத்த வேண்டும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
  • வரி செலுத்தப்பட்டு வளர்க்கப்படும் விளங்குகளை அடையாளம் காணும் வகையில் முத்திரை மற்றும் அடையாள எண் அளிக்கப்படுவதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
  • வீட்டு விலங்குகளுக்கு அளிக்கப்படும் முத்திரைகளில் இயந்திர சிப்புகள் பொருத்தப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

டாலரை குவிக்கிறதா இந்தியா? அமெரிக்கா கண்காணிக்கிறது!
  • இந்­திய ரிசர்வ் வங்கி, குறிப்­பி­டத்­தக்க வகை­யில், அமெ­ரிக்க கரன்­சி­யான, டாலரை வாங்கி வரு­வதால், அதன் நடவடிக்­கை­கள் உன்­னிப்பாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக, அமெ­ரிக்க கரு­வூல துறை தெரி­வித்­து உள்­ளது.
  • இந்­நி­லை­யில், ‘ரூபாய் மதிப்பு உயர்­வுக்கு, எந்த இலக்­கை­யும் நிர்­ண­யிக்­க­வில்லை’ என, தெரிவித்­துள்ள ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்­பில் அதிக ஏற்ற, இறக்­கம் உண்டாகும் போது மட்­டுமே, சந்­தை­யில் தலை­யி­டு­வ­தாக கூறியுள்­ளது. 
  • இந்­தாண்டு, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 4.3 சத­வீ­தம் உயர்ந்­துள்ளது. 2010க்கு பின், இந்த அளவு அதி­க­ரித்­துள்ளது. நேற்றைய நில­வரப்­படி, ஒரு டாலர் 64.89 ரூபாய் ஆக உள்­ளது.ஒரு நாடு, கரன்சி சந்தை­யில் தொடர்ந்து தலை­யிட்­டாலோ, அமெ­ரிக்கா உட­னான வர்த்­த­கம் மற்­றும் நடப்பு கணக்கு உப­ரி­யாக இருந்­தாலோ, கண்­கா­ணிப்பு வளை­யத்­திற்­குள் கொண்டு வரப்­படும். 
  • இதன்­படி, அமெ­ரிக்க கரு­வூ­லத்­தின் கண்­கா­ணிப்பு வளை­யத்­தில், சீனா, ஜப்­பான், தென் கொரியா, ஜெர்­மனி, சுவிட்­சர்­லாந்து ஆகிய, ஐந்து நாடு­கள் உள்ளன.இந்த பட்­டி­ய­லில், இந்­தி­யாவை, அமெ­ரிக்கா சேர்க்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
வீட்டு வசதித் துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் நியமனம்
  • எஸ்.கிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் (திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர்).
  • தர்மேந்திர பிரதாப் யாதவ் - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்).
  • மங்கத் ராம் ஷர்மா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்).
30 நாடுகளில் 28வது இடம் இந்தியாவில் 7.4% பேருக்குதான் ஓய்வூதியம் கிடைக்கிறது : ஆய்வில் தகவல்
  • உலக அளவில் பல நாடுகள் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக மெல்பர்ன் மெர்சர் நிறுவனம் 2017ம் ஆண்டுக்கான உலக அளவிலான ஓய்வூதிய குறியீட்டின்படி இந்தியாவில் 2017ம் ஆண்டுக்கான குறியீடு 44.9 சதவீதமாக உள்ளது எனவும், இதற்கு முந்தைய ஆண்டு இது 43.4 சதவீதம் எனவும் தெரிவித்துள்ளது. இதன்படி ஓய்வூதிய பலன் பெறுவது அதிகரித்துள்ளதாக கொள்ளப்பட்டாலும், பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. 
  • அதாவது, பணி புரிவோர் எண்ணிக்கையில் 7.4 சதவீதம் பேர் மட்டுமே ஓய்வூதியம் பெறுபவர்களாக உள்ளனர். இந்தியாவில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் பின்தங்கி இருந்தாலும், போலந்து , ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரே,லியா, பிரேசில், சீனா, அர்ஜன்டினா ஆகியவற்றை விட நிலைத்தன்மை உடையதாக இந்திய ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. 
  • மற்ற நாடுகளை பொறுத்தவரை ஜெர்மனியில் 65 சதவீதம் பேர், பிரேசில் (31%), பேருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்தியாவில் குறைவான பேருக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கு முக்கிய காரணம், இங்கு முறைசாரா தொழிலாளர் எண்ணிக்கை அதிகம் என்பதும், அதற்கேற்ப போதுமான ஓய்வூதிய திட்டங்கள் இல்லை என்பதும்தான். 30 நாடுகளில் எடுக்கப்பட்டஇந்த ஆய்வில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா கடைசி இடத்தில் உள்ளது என உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு காலாண்டுக்கான பொது சேமநல நிதி வட்டி 7.8%ஆக நீடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
  • அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான பொது சேமநல நிதி திட்டத்துக்கான வட்டி 7.8 சதவீதமாக நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு சேமநல நிதி திட்ட வட்டியை மத்திய அரசு நேற்று அறிவித்தது. 
  • இதன்படி பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்), பொது சேமநல நிதி (பிபிஎப்) மற்றும் இவை சார்ந்த திட்டங்களுக்கான வட்டி கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.8 சதவீதமாக இருந்தது. இதே வட்டி விகிதம் நடப்பு காலாண்டுக்கும் வழங்கப்படும். 
உலகின் பவர்ஃபுல்லான பாஸ்போர்ட் எந்த நாட்டுடையது தெரியுமா?
  • உலகின் பவர்ஃபுல்லான பாஸ்போர்ட் கொண்ட நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
  • நிதி ஆலோசனை நிறுவனமான ஆர்டன் கேப்பிடல் உலக அளவில் 'பாஸ்போர்ட் பவர் ரேங்க்' என்ற பெயரில் பாஸ்போர்ட்டுகள் குறித்த தர மதிப்பீட்டுப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 
  • அதில், 159 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
  • ஐரோப்பிய நாடான ஜெர்மனி இந்தப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. பொதுவாக ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பட்டியலில் முதல்முறையாக ஆசிய நாடான சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 
  • சிங்கப்பூர் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை பாராகுவே தளர்த்தியதை அடுத்து அந்த நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆர்டன் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் கடந்தாண்டு 78-ம் இடம்பிடித்திருந்த இந்தியா, தற்போது 51 புள்ளிகளுடன் 75 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் 22 புள்ளிகளுடன் கடைசி இடமான 94 வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. அதேபோல், 26 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் 93 வது இடத்தையும், சிரியா 92வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் அப்பா, அண்ணா தமிழ் சொற்கள்
  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில் அப்பா, அண்ணா தமிழ் சொற்களும் ஹிந்தி சொல்லான 'அச்சா'வும் இடம் பிடித்துள்ளன.
  • ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் பயன்படுத்துவது ஆக்ஸ்போர்ட் அகராதி. அதன் புதிய பதிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ஆயிரம் புதிய சொற்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் 70 சொற்கள் ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன. 
  • சகோதரனை குறிக்கும் 'அண்ணா' என்ற வார்த்தை புதியதாக ஆங்கில அகராதியில் எடுத்தாளப்பட்டுள்ளது. ஏற்கனவே நாணயத்தை குறிக்கும் 'அணா' சொல் இடம் பெற்றிருந்தது. 
  • அதேபோல் தமிழ் சொல்லான 'அப்பா' ஆங்கிலத்தில் அதே அர்த்தத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தை சந்தேகம், கேள்வி, வியப்பு, ஆச்சர்யம், சம்மதம், மகிழ்ச்சி என பன்முக சொல்லாக ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
சென்னை அருகே கட்டப்பட்ட ரோந்துக்கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
  • சென்னை அருகே காட்டுப்பள்ளியில் கட்டப்பட்ட ரோந்துக்கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடலோர ரோந்துக்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரை சுத்திகரிக்க நாவல்பழ விதைகள் : ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடிப்பு!
  • குடிநீரில் உள்ள ஃப்ளோரைடை நாவல் பழ விதைகள் மூலம் நீக்க முடியும் என ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடித்துள்ளது.
  •  உலக சுகாதார அமைப்பின்படி குடிநீரில் ஃப்ளோரைட் இருக்க வேண்டிய அளவானது லிட்டருக்கு 1.5மிகி ஆகும். எனவே சுத்தமான குடிநீர் தேவைக்கு ஃப்ளோரடை அகற்றுவது அவசியமான ஒன்றாகும். தற்போது செயற்கையாக தயாரிக்கப்படும் கார்பன் மூலம் இந்த ஃப்ளோரடை நீக்க பல வழிமுறைகள் செயல் பட்டு வருகின்றன.
  • தற்போது ஐதராபாத் ஐ ஐ டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஃப்ளோரடை நீக்க புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நாவல் பழ விதைகளை பொடி செய்து அதன் மூலம் கிடைக்கும் கார்பனைக் கொண்டு ஃப்ளோரைடை நீக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 
  • நாவல் பழம் என்பது நமது நாட்டில் பரவலாக கிடைக்கும் பழமாகும். அந்த பழத்தின் விதைகள் ஏற்கனவே நாட்டு மருந்துகளில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.
  • இந்த பரிசோதனை முதலில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஃப்ளோரைட் கலவையில் நடத்தப் பட்டுள்ளது. அது வெற்றி அடைந்ததால் நாடெங்கும் உள்ள பல நிலத்தடி நீரின் மாதிரிகள் கொண்டுவரப்பட்டு அந்த மாதிரிகளில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 
  • பரிசோதனையில் நாவல் விதைகள் மூலமாக ஃப்ளோரைட் நீக்கப்பட்டு உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை விடவே குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி பழங்குடியினரின் பாரம்பரிய கதிர் அறுவடை திருவிழா!
  • நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாழும் பழங்குடி மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "புத்தரி" எனப்படும் "கதிர் அறுவடை திருவிழாவை" விமரிசையாக கொண்டாடினர்.
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பணியர், காட்டு நாயக்கர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பாரம்பரிய விழாவான புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா கூடலூர் அருகேயுள்ள புத்தூர்வயல் பகுதியில் நடைபெற்றது. 
  • விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், கடந்த பத்து நாட்களாக விரதம் இருந்த பணியர் இளைஞர்கள், வயலில் பூஜைகளை செய்து, நெற்கதிர்களை அறுவடை செய்தனர். அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்களுக்கு பூஜை செய்து அவற்றை கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபட்டனர்.
புது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வருகிறது : பிரதமர் மோடி
  • புது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • டில்லியில் நுகர்வோர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. இந்த கருத்தரங்கை இந்தியப் பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். மோடியுடன் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பங்கேற்றார்.
  • நாட்டின் பொருளாதாரம் சீராகி வருவதுடன் வளர்ச்சியும் பாதிப்படையாமல் உள்ளது. பொருளாதார கட்டமைப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. மேலும் ஜி எஸ் டி மூலமாக மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. 
  • இதனால் வரிச்சுமை குறைந்தது, நுகர்வோர் மற்றும் நடுத்தரக் குடும்பத்துக்கு மிகவும் உதவி உள்ளது. ஜி எஸ் டி அமுலாக்கம் தொழில் வளர்ச்சியை அதிகரித்து விலையைக் குறைக்கும் என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் பலன் பெறுவார்கள்.
  • நுகர்வோர் பாதுகாப்புக்காக புதிய சட்டம் ஒன்று அமுல் படுத்த உள்ளது. தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரை காக்க இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. 
  • இந்த சட்டத்தின் மூலம் தவறான விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோரின் பாதுகாப்பு என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது. இந்த நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
உலகின், 'நம்பர் - 1' பணக்காரர் பில்கேட்சை விஞ்சினார் ஜெப் பிசோஸ்
  • உலகின், 'நம்பர் - 1' பணக்காரர் என்ற பெருமையை, 'அமேசான்' நிறுவனர், ஜெப் பிசோஸ் பெற்றுள்ளார்.மைக்ரோசாப்ட், அமேசான்' ஆகிய நிறுவனங்களின், மூன்றாவது காலாண்டு அறிக்கை, 26ம் தேதி வெளியானது. இரு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையும், சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தன.
  • இதன் எதிரொலியாக, 27ம் தேதி, அமெரிக்க பங்குச் சந்தைகளில், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.பங்கு வர்த்தகம் துவங்கிய இரண்டு மணி நேரத்தில், அமேசான் பங்கின் விலை, 11.9 சதவீதம் உயர்ந்தது. மைக்ரோசாப்ட் நிறுவன பங்கின் விலை, 7 சதவீதம் அதிகரித்தது.பங்குகளின் சந்தை மதிப்பு உயர்வால், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.
  • எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்சை விட, அமேசான் நிறுவனர், ஜெப் பிசோஸ் சொத்து மதிப்பு, 50 கோடி டாலர் அதிகரித்து, 9,060 கோடி டாலராக உயர்ந்தது. பில்கேட்ஸ் சொத்து மதிப்பு, 9,010 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இந்திய ரூபாயில், ஜெப் பிசோஸ் மற்றும் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு, முறையே, ௫.௮௯ லட்சம் கோடி ரூபாய் மற்றும் 5.85 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், உலக பணக்காரர்களில், ஜெப் பிசோஸ், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். பில்கேட்ஸ், இரண்டாவது இடத்தில் உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2ல் இருந்து 1 ஜூலை, 27ல், 'அமேசான்' பங்குகள் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததால், அமேசான் நிறுவனர், ஜெப் பிசோஸ், உலகின், 'நம்பர் - 1' பணக்காரராக முன்னேறினார்.
U-17 உலகக் கால்பந்து போட்டி சாம்பியன் ஆனது இங்கிலாந்து
  • கொல்கத்தாவில் பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான U-17 உலகக் கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
வெண்கலம் வென்றது பிரேசில்
  • உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடரில் பிரேசில் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. நேற்று நடந்த போட்டியில் மாலியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
திண்டுக்கல்லில் 2,500 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிப்பு
  • திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் என்ற ஊரின் நடுவே உள்ள கோட்டைமேடு என்ற இடத்தை தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். 
  • இதில் 3 ஏக்கர் பரப்பளவில் பாறாங்கற்களால் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. முதுமக்கள் தாழிகள், கரும்சிவப்பு பானை ஓடுகள், பெண்களின் காதணிகள், மண்பாண்டங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புரோ கபடி: 3வது முறையாக சாம்பியன் ஆனது பாட்னா அணி
  • இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற குஜராத் மற்றும் பாட்னா அணிகள் இந்த போட்டியில் மோதின. இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் பாட்னா அணியின் வெற்றி உறுதியானது.
  • இறுதியில் பாட்னா அணி 55-38 என்ற புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே இருமுறை பாட்னா அணி புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
சவுதியில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை
  • சவுதியில் தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு குடியுரிமை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஆம்.. போபியா என்ற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இச்செயல் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. எதிர்கால முதலீடுகளுக்கான இந்த ஆரம்பம் ரியாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் ''எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடு பெருமையாக உள்ளது. வரலாற்றிலேயே ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி அங்கிகாரம் வழங்கியிருப்பது இது தான் முதன்முறையாகும்'' என்று சோபியா கூறியது.
  • சோபியா ஒரு நவீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. மனிதர்களை போன்ற தோற்றம் கொண்ட இந்த எந்திரம் மனித பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்ளோடு எளிமையாக உரையாடியது.  
  • சோபியா மக்களோடு தொடர்பு கொள்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. சவுதி அரேபியா குடிமகள் என்ற முறையில் சாதாரண ஆடைகளை சோபியா அணிய வேண்டும். குறைந்தபட்சம் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை தெரியுமா?
  • உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,174 அளவுக்குக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பதவியேற்றபோது, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 57,774 ஆக இருந்தது. 
  • இரண்டு மாத இடைவெளியில் அக்டோபர் 27 வரையிலான காலகட்டம் வரை அந்த எண்ணிக்கை 2,174 என்ற எண்ணிக்கை அளவுக்குக் குறைந்துள்ளது. 
  • ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அக்டோபர் 27-ம் தேதி வரையிலான இரண்டு மாதத்தில் புதிதாக 7,021 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், 9,195 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 55,600 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
சென்னை- வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்!
  • சென்னை - வங்கதேசம் இடையே இன்று முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணெலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக் லைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை 'ரோரோ' கடலோர கப்பல்கள் மூலம் இன்று முதல் முறையாக அனுப்ப உள்ளது.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைக்கு தங்கம்.
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று தொடங்கியது.
  • இந்தப் போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹீனா சித்து, மொத்தமாக 626.2 புள்ளிகளை வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார்.
  • இது, சர்வதேச போட்டிகளில் ஹீனா வெல்லும் 2-வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டூடுல் வெளியிட்டு இந்திய எழுத்தாளரை கவுரவித்த கூகுள்!
  • இந்திய எழுத்தாளருக்கு கவுரவிக்கும் வகையில் இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது பிரபல வலைதள நிறுவனமான கூகுள்
  • இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ படத்தை டூடுலாக வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவப்படுத்தி உள்ளது.
சிக்கிம் மாநில முதல் விமான நிலையம் நவம்பர் 30ல் துவங்குகிறது
  • சிக்கிம் மாநில முதல் விமான நிலையம் தனது சேவையை நவம்பர் 30ல் துவங்குகிறது.இமாசலப் பிரதேச பகுதியில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் அவைகளை சென்றடைய சாலைப் போக்குவரத்து மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. 
  • அதையொட்டி 2008ஆம் வருடம் சிக்கிம் மாநிலத்தில் ஒரு விமான நிலையம் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. விமான நிலையத்தை 2012ஆம் வருடம் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது.
  • சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கிம் மாநில சுற்றுலா மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது. 
  • இது இமயமலையில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் எனவும், ரெயில் வசதி இந்த மாநிலத்தில் இல்லாததாலும், கூர்க்காலாந்து கிளர்ச்சியால் சாலை வசதி பாதிக்கப்பட்டதாலும், இந்த விமான நிலையத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் தெரிய வந்துள்ளது.
2019 முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்! மத்திய அரசு அதிரடி உத்தரவு
  • சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஓடும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • 2019ம் ஆண்டு ஜுலை முதல் அனைத்து வகையான கார்களிலும் ஏர்பேக் வசதி, வேகமாக செல்லும் போது ஒலி எழுப்பும் ஏர்ஹார்ன் வசதி இருக்க வேண்டும் என அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 
  • சாலை விபத்து காரணமாக ஒரு நாளைக்கு 9 பேர் மரணம் அடைவதாகவும், நாடு முழுவதும் ஆண்டு தோறும் 74000 சாலை விபத்துக்களால் 1.51 லட்சம் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.
  • அதன்படி காரில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியும் வகையில் நினைவூட்டல் அலாரம், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தானாக சப்தம் செய்யும் ஒலிப்பான், ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை ஒலி, ஏர்பேக், ஏபிஎஸ் சிஸ்டம், விபத்து மற்றும் அவசரகாலத்தில் காரை விட்டு வெளியேறும் வகையில் இருக்கும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டமும் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் காரில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
தொலைத் தொடர்புத் துறை முதுநிலை கூடுதல் தலைமை இயக்குநராக பூங்குழலி நியமனம்
  • தொலைத் தொடர்புத் துறையின் தமிழ்நாடு பிரிவு முதுநிலை கூடுதல் தலைமை இயக்குநராக என்.பூங்குழலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி இவர் ஆவார்.
ஏசுதாஸுக்கு கர்நாடக ராஜ்யோத்சவா விருது.. நாளை வழங்குகிறார் சித்தராமையா
  • கர்நாடகாவில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னட மொழி பேசும் மாநிலமாக கர்நாடகா உருவான தினத்தை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது.
  • அந்த தினத்தில் கர்நாடகாவைப் பெருமைப்படுத்தும் விதமாக செயல்படும் பல்துறை அறிஞர்களுக்கும் விருது வழங்குவது வழக்கம். அப்படி இந்த ஆண்டிற்கான விருதை நேற்று கர்நாடக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சரான உமாஸ்ரீ அறிவித்தார்.
  • வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, பாடகர் யேசுதாஸ், ஹாக்கி விளையாட்டு வீரர் ரகுநாத், நடிகை காஞ்சனா, எழுத்தாளர் வைதேகி என மொத்தம் 62 பேருக்கு இந்தவிருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை நாளை நடைபெற உள்ள விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்க இருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் பணம், 20 கிராம் எடையுள்ள கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் இதில் அடங்கும்.
'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளேட்டில் முதல்பக்கம் இடம் பிடித்த 'கேரள மாநிலம்'!
  • அமெரிக்காவில் வெளிவந்து கொண்டு இருக்கும் புகழ்பெற்ற ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளேட்டின் முதல் பக்கத்தில் “கேரள மாநிலத்தை” புகழ்ந்து கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  • “கம்யூனிசத்தின் வெற்றி” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் விளைந்த நன்மைகள், மக்களுக்கு கிடைத்த திட்டங்கள், குறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ‘கம்யூனிச வெற்றி: என்ற தலைப்பில் கிரேக் ஜெபே, விதி ஜோஷி ஆகியோர் எழுதியுள்ளனர்.
தேசிய குத்துச் சண்டை: தங்கம் வென்றார் மனோஜ் குமார்; வெள்ளி வென்றார் சிவா தாபா.
  • தேசிய குத்துச் சண்டை போட்டியில் மனோஜ் குமார் தங்கமும், சிவா தாபா வெள்ளியும் வென்றனர்.தேசிய குத்துச் சண்டை போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
சவுதி விளையாட்டு அரங்கத்தில் பெண்களுக்கு அடுத்தாண்டு அனுமதி
  • சவுதி அரேபியாவில், முதன்முறையாக, 2018 முதல், விளையாட்டு அரங்கத்தில், பெண்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேற்காசிய நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 
  • சமீபகாலமாக, பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையில், பல்வேறு துறைகளில், கட்டுப்பாடுகள் விலக்கப்படுகின்றன. சமீபத்தில், பெண்கள்கார் ஓட்ட, சவுதி அரேபியாவில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், '2018 முதல், விளையாட்டு அரங்குகளில், பெண்கள் அனுமதிக்கப்படுவர்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • சவுதி அரேபியா இளவரசர், முகமது பின் சல்மான், பெண்களுக்கு விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடு களை தளர்த்துவதில், ஆர்வம் காட்டி வருகிறார். விளையாட்டு அரங்குகளில், பெண்களை அனுமதிக்கும்படி, இளவரசர் உத்தரவிட்டு உள்ளார். 
  • அடுத்தாண்டு முதல், இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 2018ல், பெண்கள் உட்பட குடும்பத்தினர், விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் வகையில், ரியாத், ஜெட்டா, தமாம் நகரங்களில், விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில், வீடியோ திரைகள், உணவகங்கள் இடம் பெற்றிருக்கும்.
உலக கேடட் டிடி : 2 பதக்கம் வென்றார் தியா
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் பிஜியில் நடந்த உலக கேடட் சேலஞ் தொடரில், இந்திய வீராங்கனை தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். 
  • குழு பிரிவில் ஆசிய அணிக்காக களமிறங்கி தங்கப் பதக்கம் வென்றவர், மகளிர் இரட்டையர் பிரிவில் தென் கொரியாவின் ஹன்னா ரியூவுடன் இணைந்து பைனலுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஹுவாங் (சீனா) - சோமா (ஜப்பான்) ஜோடியிடம் 7-11, 11-13, 7-11 என்ற நேர் செட்களில் தோற்ற தியா - ஹன்னா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றது.
அதிகரிக்கும் கார்பன் அளவு: ஐ.நா., எச்சரிக்கை
  • 'உலகளவில் வெளியிடப்படும் கார்பன் வாயு அளவு, 2016ல் அதிகமாக இருந்தது' என ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.'கடந்த 2016ல் இதுவரை இல்லாத அளவாக கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் 400 பி.பி.எம்.,ஆக இருந்த இதன் அளவு, 2016ல் 403.3 பி.பி.எம்., ஆக அதிகரித்துள்ளது. 
  • கடந்த 30 லட்சம் ஆண்டுகளில் 2016ல் பதிவான அளவே மிக அதிகம். பி.பி.எம் என்பது வளிமண்டலத்திலுள்ள மொத்த வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம் பங்குகளாகப் பிரித்தால் வரும் அளவு. அதில் 403.3 பங்கு கார்பன் உள்ளது. 
  • உலகளவில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்காமல் இருந்தால், இந்த நுாற்றாண்டுக்குள் மிக அபாயகரமான வெப்பநிலையை பூமி எட்டும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. 
35 பந்தில் 'டுவென்டி-20' சதம் * மில்லர் உலக சாதனை
  • சர்வதேச 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் 35 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் தென் ஆப்ரிக்காவின் மில்லர்.
  • சிக்சர் மழை பொழிந்த மில்லர், 35வது பந்தில் சதம் அடித்து, புதிய சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்தது. மில்லர் 101 (9 சிக்சர், 7 பவுண்டரி), பெகர்டியன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
சர்வதேச 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 'டாப்-5' வீரர்கள் விவரம்:
  1. மில்லர்/தெ.ஆப்., 35 வங்கதேசம் 101 (36 பந்து)
  2. லீவி/தெ.ஆப்., 45 நியூசி., 117 (51)
  3. டுபிளசி/தெ.ஆப்., 46 வெ.இண்டீஸ் 119(56)
  4. லோகேஷ் ராகுல்/இந்தியா 46 வெ.இண்டீஸ் 110(51)
  5. கெய்ல்/வெ.இண்டீஸ் 47 இங்கிலாந்து 100(48)
இந்தியா- இத்தாலி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
  • இந்தியா, இத்தாலி நாடுகள் இடையே ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  • இத்தாலி பிரதமர் பலோலா ஜென்டிலோனி இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி அவருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
  • அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் இத்தாலியும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உறுதி கொண்டுள்ளதாகக் கூறினார். இணைய வழி குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஒன்றாக இணைந்து முறியடிக்கவும் இருநாடுகளும் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக மோடி கூறியுள்ளார். 
  • இருநாடுகள் இடையே வர்த்தக உறவு உள்ளிட்ட விரிவான ஆலோசனை நடந்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, இத்தாலி பிரதமர்கள் முன்னிலையில், இருநாடுகள் இடையே ரயில்வே பாதுகாப்பு இருதரப்பு வர்த்தகம் முதலீடுகள் உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
இந்திய பாட்மிண்டன் உலகின் 'கிடாரி'.. ஸ்ரீகாந்த் கிடாம்பி!
  • பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதன் மூலம், சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டிகளில் ஒரே ஆண்டில் நான்கு பட்டங்கள் வென்று, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
  • பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார். இந்த ஆண்டில் அவர் வெல்லும் நான்காவது சூப்பர் சீரியஸ் பட்டம் இதுவாகும். இதன் மூலம் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.ஜப்பானை வீழ்த்தி 
  • இதன் மூலம், ஒரு ஆண்டில், நான்கு சூப்பர் சீரியர்ஸ் பட்டம் வென்ற புதிய சாதனை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், பாட்மின்டன் சூப்பர் ஸ்டார்களான டின் டான், லீசாங்க் வீல, சென் லாங்க் ஆகியோர் மட்டுமே ஒரே ஆண்டில் நான்கு பட்டங்கள் வென்றுள்ளனர். அந்த வரிசையில் நான்காவது வீரராக, 24 வயதாகும் ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார்.
  • இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 10 சூப்பர் சீரியஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு 7 பட்டங்கள் கிடைத்துள்ளன. இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து, சிங்கப்பூர் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் பி. சாய் பிரனீத், இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபனில் மற்றும் தற்போது பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளனர்.
  • அதிக பட்டங்கள் வென்ற நாடுகளில் சீனா (11 பட்டங்கள்), இந்தோனேசியா (9 பட்டங்கள்), முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா, 7 பட்டங்களுடன், மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel