Type Here to Get Search Results !

BHARATHIDASAN IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM பாவேந்தர் பாரதிதாசன் PDF



BHARATHIDASAN IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL MATERIALS TAMIL PDF. TNPSC  TAMIL  MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL MATERIALS , TNPSC GROUP 2A POTHU TAMIL STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL STUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL STUDY MATERIALS .TNTET POTHU TAMIL STUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL STUDY MATERIALS.


பாவேந்தர் பாரதிதாசன்BHARATHIDASAN



பாவேந்தர் பாரதிதாசன் புதுவை மாவட்டத்தில் கனகசபை – இலக்குமி அம்மையார் க்கு  பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனக சுப்பிரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார். அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார். பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியதுஎனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார். தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம். இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம். இவரின் கவித்திறன் கண்டு நாவலர் சோமசுந்தர பாரதியார்தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு புரட்சிக்கவிஎன்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார். வ.ரா.வின் அழைப்பின் பேரில் இராமனுஜர்என்னும் படத்திற்கு  திரைப்படப்பாடல் எழுதினார். 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது

சிறப்பு பெயர்
புரட்சி கவிஞர், இரசூல் கம்சதேவ்

படைப்புகள்
                அகத்தியன் விட்ட புதுக்கரடி, அமைதி, செந்தமிழ் நிலையம், அழகின் சிரிப்பு, இசையமுதம், பாரதசக்தி நிலையம்,, இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம், இருண்ட வீடு ( 33 தலைப்பு ), முத்தமிழ் நிலையம், இளைஞர் இலக்கியம், பாரி நிலையம், உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு, உரிமைக் கொண்டாட்டமா?, குயில், எதிர்பாராத முத்தம், வானம்பாடி, எது பழிப்பு, குயில், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, கடவுளைக் கண்டீர்!, கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம், கதர் இராட்டினப்பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத்), கலை மன்றம், கற்புக் காப்பியம், காதல் நினைவுகள், காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம், காதலா? - கடமையா?, குடியரசுப் பதிப்பகம், குடும்ப விளக்கு,முல்லைப் பதிப்பகம், குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம், குறிஞ்சித் திட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சேர தாண்டவம், தமிழ் இயக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர், தலைமலை கண்ட தேவர், பூம்புகார் பிரசுரம், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம், தேனருவி இசைப் பாடல்கள், நல்ல தீர்ப்ப, முல்லைப் பதிப்பகம், நீலவண்ணன் புறப்பாடு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி, பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் கடலூர் டி.எஸ்.குஞ்சிதம், பாரதிதாசன் பன்மணித் திரள், பிசிராந்தையார், புகழ் மலர்கள் நாள் மலர்கள், புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு,, பெண்கள் விடுதலை. பொங்கல் வாழ்த்துக் குவியல், மணிமேகலை வெண்பா, அன்புநூலகம், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத், விடுதலை வேட்கை, வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை, வேங்கையே எழுக.
இதழ் : குயில்

சிறந்த தொடர்கள்
திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் “
“ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே “
“ சொல்லாதனஇல்லை பொதுமறையான திருக்குறளில் “
“ இணையில்லை முப்பாலுக்கு இந்திலத்தே “
வள்ளுவனைப்ப பெற்றதால் பெற்றதே புகழ்வையகமே “
“ தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை “
“ புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் “
“ அயலான் வீட்டில் அறையில் நடப்பதை “
“ இருட்டறையில் உள்ளதடா உலகம் “
“ கிளையின்றி பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு “
“ நூலைப்படி – சங்கத்தமிழ்... தீமை வந்திடும் மறுபடி “
மழையே மழையே வா வா... “
“ தழையா வெப்பம் தழைக்கவும்... “
“ காட்டுமுயிற் காதிலையும் களியானைத்
  துதிக்கை அடிமரமும் வானில்....” ( கொய்யா பழம் )
“ நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?
“ எல்லார்க்கும் எல்லாம்  என்று இருப்பதான
இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம் “
“ கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் “
“ உயிரை உணர்வே வளர்ப்பது தமிழே “
“ தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “
“ தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே ‘
“ எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு “

“ நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் “

தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேறோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்! “  -  விழுதும் வேரும்

“ எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். “

பாவேந்தர் பற்றி
புதுமைபித்தன் = அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்.
கு.ப.இராசகோபாலன் = பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி.
சிதம்பரநாத செட்டியார் =அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்.
வி.ஆர்.எம்.செட்டியார் = புரட்சிக்கவி பாரதிதாசன், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க  முடியாத உண்மை.
திரு.வி.க = குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.
சுரதா = தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு



                                                                                       





இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel