//
Type Here to Get Search Results !

1st NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

1st NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல்
  • தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப்புயலுக்கு இந்திய அரசு பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நவம்பர் 2-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நெல்லூர்- நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு, மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது.
2026 அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல்
  • இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • இறக்குமதி வருவாயில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வும், உள்நாட்டு வரி வசூலில் நிலையான வளர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. 
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு ரூ.2.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
  • வரி திருப்பித் தரப்பட்ட தொகையைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர ஜிஎஸ்டி வருவாய் 25.6 சதவீதம் உயர்ந்து ரூ.2.03 லட்சம் கோடியாக உள்ளது. 
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்தது. இந்த உயர்வுக்கு இறக்குமதி வருவாயே முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது. 
  • இறக்குமதி வாயிலான ஜிஎஸ்டி வசூல் 42.2 சதவீதம் அதிகரித்து ரூ.72,246 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 அக்டோபரில் இது ரூ.50,796 கோடியாக இருந்தது. 
  • உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வசூல் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாக இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel