Sunday, 28 February 2021

TNPSC 27th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

எரிசக்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது

 • அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. 
 • இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த மாநாட்டின்போது சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும்.
 • கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எரிசக்தி மாநாடு (செராவீக் 2021) காணொலி வாயிலாக நாளை தொடங்குகிறது.
 • மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது வழங்கப்பட உள்ளது. "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்களை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறார். 50 கோடி இந்தியர்கள் பயன் அடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 
 • 35 கோடி ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
 • அமைப்புசாரா துறையை சேர்ந்த 42 கோடி பேர் பயன் அடையும் வகையில் ஓய்வூதிய திட்டம், இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், 18,000 குக்கிராமங்களுக்கு மின்சார வசதி, ஏழை குடும்பங்களுக்கு 1.25 கோடி வீடுகள், விவசாயிகளுக்கு நிதியுதவி, மின்னணு வேளாண் சந்தை, தூய்மை இந்தியா திட்டம், நீர்வழிப் போக்குவரத்து, உதான் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்.
 • சர்வதேச எரிசக்தி உற்பத்திக் கூடமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். 
 • பருவநிலை மாறுபாட்டை தடுக்க உறுதி பூண்டுள்ளார். அவரது முயற்சியால் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உதயமாகியுள்ளது" என்று செராவீக் 2021 எரிசக்தி மாநாடு அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது.
 • எரிசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்ற உள்ளார். அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர், அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்பு பிரதிநிதி ஜான் கெர்ரி, கொலம்பிய அதிபர் இவான் டுகே மார்கஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி
 • சீனாவின் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக்மாவிடமிருந்து கைப்பற்றிய ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்தார். இந்நிலை யில் கடந்த டிசம்பரில் அம் பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்தார் சீன தொழிலதிபர் சாங் ஷான் ஷன்.
 • கடந்த ஒரு வாரமாக சர்வதேச பங்குச் சந்தைகள் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டன. இதில் சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷனின் நோங்க்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது.
 • முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பாதிக்காமல் 80 பில்லியன் டாலராக இருந்தது. இதுவே ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை அம்பானி மீண்டும் பிடிக்க காரணமாக அமைந்தது.
ரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
 • அமெரிக்காவில் கரோனா நிவாரணத்துக்காக 1.9 லட்சம் டாலா் (சுமாா் ரூ.140 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், அதிபா் ஜோ பைடனின் இந்த நிவாரணத் திட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
 • கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நிறுவனங்கள், மாகாணங்களுக்கு இந்தத் தொகையை நிவாரணமாக அளிக்க வகை செய்யும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக 219 வாக்குகளும் எதிராக 212 வாக்குகளும் பதிவாகின. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஏறத்தாழ தங்களது கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப வாக்குகளை அளித்திருந்தனா்.

Saturday, 27 February 2021

TNPSC 26th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

 • அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதியப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது .
 • மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5%. ஆனால் இந்த மாற்றம் தற்காலிகமானது தான் என்றும், 6 மாதங்களுக்கு பிறகு மசோதா மாற்றியமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .

சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 • சுய உதவி குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
 • கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
 • இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 
 • இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறுதொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
 • விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், 
 • இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அதிமுக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கிறது.

பாம்பன் முதல் தூத்துக்குடி தேசிய கடல் பூங்காவாக அறிவிப்பு

 • ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை கடலில் 21 மன்னார் வளைகுடா தீவுகள்உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல்ஆமைகள் உள்ளிட்ட 450 வகை அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
 • மேலும் மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி வளரும் பவளப்பாறைகள் கடல் அரிப்பை தடுத்து தீவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இத்தீவுகளை தேசியகடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 • இதன் காரணமாக தீவுகளில் மீனவர்கள், வெளிநபர்கள்தங்கவோ, மீன்பிடிக்கவோவனத்துறை தடை விதித்தது.அதேசமயம் 21 தீவுகளில் கடல் வாழ் உயிரினங்கள் குருசடை தீவில் உள்ளதால், இத்தீவுக்குள் உயிரியியல் ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.
 • இங்கு வனத்துறை அனுமதியுடன் உயிரியியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அரியவகை உயிரினங்கள் பாதுகாப்பு கருதி அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்டது.

மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு

 • நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து இரு காலாண்டுகளாக, நாட்டின், 'ஜி.டி.பி.,' எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில், சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 • கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 • கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 24.4 சதவீதமாக சரிவைக் கண்டது. 
 • இதன் தொடர்ச்சியான பாதிப்பால், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 7.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கின. இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி துவங்கி உள்ளது.
 • மேலும் இவ்வலுவலகம், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என கணித்து, ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 • நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில், 0.1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரியில், உரம், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் மத்திய அரசு ஒப்புதல்

 • அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கு 250 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.
 • அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Friday, 26 February 2021

TNPSC 25th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ரூ.12,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார்

 • தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில்ரூ.42 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 8 வழிச்சாலை பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
 • தூத்துக்குடி வஉசி துறைமுகச் சாலையில் அனல்மின் நிலைய ரவுண்டானா அருகே இருந்த நான்குவழிச் சாலை பாலம் மற்றும் அதனையொட்டியுள்ள ரயில்வே மேம்பாலம் ரூ.42 கோடியில் 8 வழிச்சாலை பாலமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 • கோவையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பாலத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
 • துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தரைதள சூரிய மின்சக்தி ஆலை அமைக்கும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
 • நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் திட்டம் ரூ.7,800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் கூடுதலான மின்சாரம் தமிழகத்துக்கே கிடைக்கும்.
 • மதுரை அருகே ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 அடுக்குமாடி வீடுகளும் அடக்கம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ரூ.89.75 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.8.25 லட்சத்தில் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள 1088 வீடுகள் மதுரை மாநகரில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பங்குத்தொகை ரூ.19.03 கோடி ஆகும்.

ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை 

 • சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.
 • அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது.
 • ஈரானிய ஆதரவுடைய போராளி குழுக்களை அழிக்கும் பொருட்டு அமெரிக்கா நேற்று சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு

 • 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ் விழாவை இம்முறை பிவிஆர் உடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கியது.
 • இந்த திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் 'லேபர்', 'கல்தா', 'சூரரைப் போற்று', 'பொன்மகள் வந்தாள்', 'மழையில் நனைகிறேன்', 'மைநேம் இஸ் ஆனந்தன்', 'காட்ஃபாதர்', 'தி மஸ்கிட்டோ பிலாசபி','சீயான்கள்', 'என்றாவது ஒருநாள்'(சம் டே), 'காளிதாஸ்', 'க/பெ ரணசிங்கம்', 'கன்னி மாடம்' ஆகிய 13தமிழ் திரைப்படங்கள் பங்கேற்றன.
 • இதில் சிறந்த படமாக வெற்றிதுரைசாமி இயக்கி தயாரித்த 'என்றாவது ஒரு நாள்' (சம் டே) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்துக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தயாரிப்புக்கான ரூ.1லட்சத்துக்கான பரிசையும் இப்படம் வென்றது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், ரூ.1 லட்சம் பரிசும் பெற்றார்.
 • இரண்டாவது சிறந்த படமாக 'சீயான்கள்' திரைப்படம் தேர்வானது. இப்படத்தின் தயாரிப்பாளர் கரிகாலனும், இயக்குநர் வைகறைபாலனும் தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
 • இதைத் தவிர சிறந்த நடிப்பு பங்களிப்புக்காக 'க/பெ ரணசிங்கம்' படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விருது பெற்றார்.

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் சாத்தியமானது

 • எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ, 'ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விருப்பம். அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உருவாக்கப்பட்டது.
 • 'மரம் விவசாயிகளுக்கு சொந்தம்; சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம்' என்ற கோஷத்துடன், 2015ல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கியது. ஆறு கட்டமாக, 551 இடங்களில், 2,282 ஏக்கர் பரப்பில் பசுமை வனம் உருவாக்கப்பட்டுள்ளன. 
 • ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்து, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தனியார் அமைப்பு, நேர்த்தியான திட்டமிடல் மூலம், 87 சதவீத கன்றுகளை மரமாக வளர்த்தெடுத்துள்ளது.
 • திட்டப்பணிகள், கோவை, சித்தார்த் பவுண்டேஷன் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட செயல்வடிவம், ஆவணமாக்கப்பட்டுள்ளது.
 • 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது. 
 • 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது.

கூகுள், முகநூலைக் குறிவைக்கும் சட்டம்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றம்

 • பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
 • இதையடுத்து, பிற ஊடகங்களின் செய்திகளைப் பகிா்ந்து வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், முகநூல் ஆகியவை அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டெஸ்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை

 • இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாளான இன்று பேட்டிங் செய்த இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 • பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வருகின்றனர். இதில், 23வது ஓவர் மூன்றாவது பந்தை வீசிய அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆர்சரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டை பதிவு செய்தார்.
 • குறைந்த போட்டிகளில் 400 விக்கேட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு(72 போட்டிகள்) அடுத்தபடியாக அஸ்வின் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
 • இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, 25 February 2021

TNPSC 24th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

பிச்சாண்டார்கோயிலில் முதலாம் ராஜேந்திரசோழனின் கல்வெட்டு

 • உத்தமர்கோயில் என்றும் பிச்சாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் இந்திய தொல்லியல் துறையால் 1902-ம் ஆண்டில் படியெடுக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் மகனான முதலாம் ராஜாதிராஜனின் 30-வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இருந்தது. இந்த கல்வெட்டே இந்த கோயிலின் பழமையான கல்வெட்டு என கருதப்பட்டிருந்தது.
 • கோயிலும் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என ஒரு கருத்து இருந்தது. இந்த கல்வெட்டில் கூட இந்த ஊரின் பெயர் உத்தமர்கோயில் என்று இல்லை.
 • ஆனால், திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ''பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை'' எனப் பாடுகிறார்.
 • எனவே, இத்தலத்தின் பெயர் திருக்கரம்பனூர் எனவும் இங்குள்ள பெருமாள் பெயர் உத்தமர் எனவும் அறிய முடிகிறது. பின்னாளில் வைணவர்களால் இவ்வூரின் பெயர் ''உத்தமர் கோயில்'' என்றே அழைக்கப்பட்டு வந்து அப்பெயரே இன்றும் நிலைத்து விட்டதை அறியலாம்.
 • ஆனால், பிச்சாண்டார்கோயில் என்ற மற்றொரு பெயர் எப்போதிலிருந்து அழைக்கப்பட்டது என்ற சான்றுகள் இல்லாமல் இருந்தது. இந்த கோயிலில் குடமுழுக்கையொட்டி, திருப்பணி செய்யப்பட்டபோது அகற்றப்பட்ட பிற்கால கட்டுமானங்களுக்கு அடியில் கல்வெட்டுகள் மிகவும் அழுக்கடைந்து வீணாகும் நிலையில் இருந்ததை, உத்தமர்கோயில் செயல் அலுவலர் ஜெய்கிஷண், யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பிடம் தெரிவித்தார்.
 • அப்போது, இங்கு முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜேந்திரனின் 16-வது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். அதாவது 1028-ம் ஆண்டு. இந்த கல்வெட்டிலிருந்து இக்கோயில் இவராலேயே கட்டப்பட்டது என உறுதியாக கூறலாம்.
 • இந்த கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பு, ஈழம், வங்காளதேசம், கலிங்கம், பாண்டிய, சேர நாட்டு, சாளுக்கிய நாட்டு படையெடுப்பின் வெற்றிகளை கூறி, அதன்பின் இந்த ஊர் ராஜாஸ்ரிய வளநாட்டு, பாச்சில் கூற்றத்து, திருக்கரம்பனூர் என்றும், இக்கோயிலிலுள்ள சிவன்  மூலஸ்தானத்து ''பிச்சதேவர்'' என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கோயிலின் இறைவன் பெயர் ''பிச்சதேவர்'' என அறியலாம். பிச்சதேவர் என்றால் பிக் ஷாடனரை குறிக்கும். மேலும், இக்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள் குறித்தும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • எனவே, இந்த ஊரிலுள்ள சிவன்கோயிலை சைவர்கள் பிச்சாண்டார்கோயில் என்றும், வைணவர்கள் உத்தமர்கோயில் என்றும் அழைத்து வந்ததை அறியலாம். காலப்போக்கில் இவ்வூரின் ஆதிபெயரான திருக்கரம்பனூர் மறைந்து இன்று இப்பெயர்களில் அழைத்து வரப்படுகிறது என அறிய முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம்  பெயர் மாற்றம்
 • புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. 
 • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்று வருகிறது. இந்த ஸ்டேடியத்தை, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
 • 63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது. 
 • உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நிலையில், அந்த பெயரை இனி, சர்தார் படேல் மைதானம் பெற்று இருந்தது.
 • இந்த நிலையில், சர்தார் படேல் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

ஐ.நா. தூதராக லிண்டா தாமஸ் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

 • ஐ.நா. அமைப்புக்கான புதிய அமெரிக்கத் தூதராக லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 
 • இதுகுறித்து அந்தச் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், லிண்டா தாமஸ் நியமனத்துக்கு ஆதரவாக 78 பேரும், எதிராக 20 பேரும் வாக்களித்தனா்.
 • 68 வயதாகும் லிண்டா தாமஸ், வெளியுறவுப் பணிகளில் 35 ஆண்டு கால அனுபவம் மிக்கவா். ஆப்பிரிக்கா உள்பட 4 கண்டங்களில் அவா் அமெரிக்காவுக்காக வெளியுறவுச் சேவையாற்றியிருக்கிறாா்.
 • அவரது நியமனம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அரங்கில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை மேம்படுவதற்கான அதிபா் ஜோ பைடனின் நோக்கத்துக்கு உதவும் வகையில், ஐ.நா.தூதராக லிண்டா தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அரசு தொடர்பான பரிவர்தனையில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்

 • இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி அமைச்சர் நீக்கியுள்ளார். 
 • இந்திய பொருளாதார வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு வசதி, அரசின் சமூகத் துறை முயற்சிகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்துவது போன்றவற்றில் இனி தனியார் வங்கிகள் சம பங்களிப்பாளர்களாக இருப்பார்கள்.
 • வங்கித் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகள் முன்னணியில் இருக்கின்றன.
 • தற்போது அவை இந்திய பொருளாதார வளர்ச்சியில் சமபங்கு வகிக்கும். அரசு வணிகங்களை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இனி எந்த தடையும் இல்லை. அரசாங்கம் தனது முடிவை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது. 

100 ஆவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா

 • இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் தனது 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.
 • இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. 

Wednesday, 24 February 2021

TNPSC 23rd FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடு: அமைச்சரவை ஒப்புதல்

 • ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 'நவரத்தினங்கள்' எனும் 9 முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார். அதில், ஏழைகளுக்கு வீடு, இலவசமருத்துவம், கல்வி, விவசாயக் கடன், வேலை வாய்ப்பு, பூரண மது விலக்கு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
 • இதையடுத்து, தான் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதிகளில் உள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார். 
 • இதில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார் களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. 
 • விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால், ஏழைகள் அனைவரும் இலவச பட்டாக்களை பெற்று வருகின்றனர்.
 • இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம், தள்ளு வண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
 • அதில், நகர்புறத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச வீடுகளை கட்டித்தருவது என்றும், அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை மிக உய்யஅனல் மின் திட்டம் நிலை-3 அமைப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
 • மிக உய்ய அனல் மின்தொழில் நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 
 • இத்தகைய சிறப்புமிக்க வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம் நிலை-3 செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக, கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
 • தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் இயக்ககம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.2 ஆயிரத்து 181 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.931 கோடி மதிப்பில் புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
 • அப்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு'களை முதல்வர் பழனிசாமி வெளியிட, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். 
 • இந்த `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.
 • அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 48 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்தல், சேகரித்த கழிவுகளை அதற்குரிய பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
 • இதற்காக தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.152 கோடி வீதம், 8 ஆண்டுகளுக்கு ரூ.1,216 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு உணர்வு மையத்தையும் திறந்து வைத்தார். இவ்வாறு சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தம் ரூ.1,295 கோடியே 44 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் அர்ப்பணித்தார்.
 • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் 60 கி.மீ தூரத்துக்கு (30 கிமீ ஆறின் இரு கரைகள்) ஆற்றின் கரையோரங்களை பலப்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க ரூ.36 கோடியே 61 லட்சத்தில் 108 உள்ளூர் தாவர இனங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 53 ஆயிரம் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய செயல் இயக்குனர் நியமனம்

 • மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செயல் இயக்குனராக மருத்துவர் மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்துள்ளது. 
 • டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 
 • இதையடுத்து தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக் குழுவும் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
 • இதையடுத்து, இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 201.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,000 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. 
 • இந்நிலையில், இந்த மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோசை நியமித்து கடந்தாண்டு அக்டோபர் 28ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

'அர்ஜுன்' ரக பீரங்கி அமைச்சகம் ஒப்புதல்

 • அர்ஜுன் ரக பீரங்கிகளை வாங்குவதற்கான, மத்திய அரசின் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி, இந்திய ராணுவத்துக்கு, 6,000 கோடி ரூபாயில், 118 'அர்ஜுன் மார்க் - 1ஏ' வகை போர் பீரங்கிகளை வாங்குவதற்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 
 • இதுதவிர, 'நாக் டாங்க்' எதிர்ப்பு ஏவுகணை, அருத்ரா ரேடார் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கும், ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2வது இடம்,  முதல் இடத்தைப் பிடித்தது உதய்பூர்

 • இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கிறது.
 • அந்த அடிப்படையில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 • நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டாலும் அதில் 50 விமான நிலையங்களில் மட்டுமே இந்த சர்வேயை இந்திய விமானத்துறை ஆணையம் மேற்கொண்டது.
 • இதில், உதய்பூர் விமானநிலையம், 5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.
 • மதுரையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் சேவையில், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது, டெர்மினலில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வது, பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்ததெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள், தரையிரங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளை செய்வது, கார் பார்க்கிங் போன்றவை அதிக புள்ளிகள் பெறுவதற்கு சாதகமாக இருந்தன.

இந்தியா - மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம்

 • வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், இந்தியா - மொரீஷியஸ் ஒருங்கிணைந்த பொருளா தார கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமானது. 
 • இந்தியா, ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டுடன் இதுபோன்ற தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை. இதன் மூலம், இந்தியாவில் இருந்து மொரீஷியசுக்கு ஏற்றுமதியாகும், ஜவுளி, வேளாண் விளை பொருள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட, 300க்கும் அதிகமான பொருட்களுக்கு, சுங்க வரிச் சலுகை கிடைக்கும்.
 • அதுபோல, மொரீஷியசில் இருந்து, இறக்குமதியாகும் உறைநிலை மீன், உயர்தர சர்க்கரை, பிஸ்கட், பழங்கள், சோப்பு, மது வகைகள், மருத்துவ சாதனங்கள் போன்ற, 615 பொருட்கள் சுங்க வரிச் சலுகை பெறும்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர்
 • புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மை இழந்த ஆளும் கட்சியாக நாராயணசாமி தலைமையிலான அரசு மாறியது. 
 • இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 22ம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்.
 • இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
 • நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 • அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், வ.உ.சிதம்பரம், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்.

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERMEDIATE BUDGET 2021 - 2022

TNPSCSHOUTERS

 


 • தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தாக்கல் செய்தார். 
 • கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம், ரூ.1,580 கோடி யில் 2,700 புதிய பேருந்துகள் உள் ளிட்ட பலவேறு அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 
 • காப்பீடு திட்டத்தில் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் குடும்பத்தின் தலைவரது இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • கரோனா பொருந்தொற்று மீட்டெடுப்பு நட வடிக்கைககளுக்காக ரூ.13,352 கோடியே 85 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் தமிழகம் 2.02 சதவீதம் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • தமிழகத்தில் வறுமைக்கோட் டுக்குகீழ் வாழும் 55 லட்சத்து 67 ஆயிரம் தகுதியான குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால், 'புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்' மூலம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சமும், நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் காப்பீட்டுத் தொகை யாக வழங்கப்படும்.
 • கரோனா நிவாரணத்துக்காக மாநில பேரிடர் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.11,943 கோடியே 85 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்காக 15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை.
முக்கிய அம்சங்கள்
 • காவல்துறைக்கு இந்த ஆண்டு ரூ.9,567 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.12,110 கோடியே 74 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய இணை காப்பீட்டு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.1,738 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இந்த நிதியாண்டில் ஊரக வளர்ச்சித் துறைக்காக ரூ.22,218 கோடியே 58 லட்சம், நெடுஞ்சாலைத் துறைக்காக ரூ.16,316 கோடியே 47 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,580 கோடியில் 2,200 பிஎஸ்-6 வகை பேருந்துகளும், 800 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.
 • கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 44 கி.மீ. நீளமுள்ள முதல்கட்டத்தை ரூ.6,683 கோடியில் அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது.
 • அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.
 • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.19,420 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • சத்துணவு திட்டத்துக்காக ரூ.1,953 கோடியே 98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மாநிலத்தின் மொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில் 17.64 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசின் வருவாயில், மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவதற்கு, மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி வீதங்களுடன் இணைக்க மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
 • மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியே 5 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றால் வருவாய் கடுமையாக குறைந்துள்ளதால், அரசு கடன்கள் பெறுவதை தவிர்க்க இயலாது. இதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.
 • மாநில சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியே 78 லட்சமாக இருக்கும். மொத்த வருவாய் வரவினம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியே 96 லட்சமாக இருக்கும்.
 • தற்போதைய நிலவர அடிப்படையில் வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 26 லட்சமாக இருக்கும். இதன் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறை ரூ.41,417 கோடியே 30 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மூலதன செலவு ரூ.43,170 கோடியே 61 லட்சமாக இருக்கும்.
 • சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு மட்டும் 18,750 கோடியும், சுகாதாரத்துறைக்கு 19420 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6,448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • 16 தொகுப்புகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 4 தொகுப்புகளுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள தொகுப்புகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். 
 • ஆசிய வளர்ச்சி வங்கியுடனான கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும். இத்திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,274.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • 133.87 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச் சாலை திட்டம், 12,301 கோடியில் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் பகுதி-1யை செயல்படுத்துவதற்கு 2,673.42 கோடி ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. 
 • இத்திட்டத்தின் 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை செயல்படுத்துவதற்காக, ₹4,899 கோடியில், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றுடன் கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. 
 • இரண்டாம் பகுதியின் இரண்டு பொறியியல், கொள்முதல், கட்டுமான தொகுப்புகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ₹2,248.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1580 கோடியில் 2200 பிஎஸ்-VI பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.
 • பள்ளிகளில் மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், மடிக்கணினிகள், சீருடைகள், காலணிகள், பள்ளி புத்தகப்பைகள், கிரையான்கள், வண்ண பென்சில்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் நிலவரைபடப் புத்தகங்கள், இலவசப் பேருந்து அட்டை மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் தொடர்வதற்காக, 2020-21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மொத்தம் ₹3,703.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம், 2009ன் படி, இதுவரை 5,61,111 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மொத்தம் ₹1,324.28 கோடி அரசால் தனியார் பள்ளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
 • 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்திட்டத்தினை ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்ெகாண்டுள்ளது. மேலும், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைபள்ளிகளில் 530.13 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்
 • உயர்கல்வி படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண சலுகை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • ₹3,995 கோடியில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021-22ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக ₹2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கான ஒதுக்கீடு, 2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடியிலிருந்து 2020-21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021-22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 500லிருந்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள் பதிவு செய்வதற்கான வலைதளங்களையும் உருவாக்கியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு, சென்னை அருகிலுள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், தோராயமாக 260 ஏக்கரில் உருவாக்கி வருகின்றது. புதிய நிதி தொழில்நுட்ப கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலகளவில் ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும்.
 • தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட் தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், புத்துயிர் அளிப்பதற்கும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்ெகாண்டு கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், கூடுதலாக 1000 கோடியை அரசு வழங்கும்.
 • மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக 1,700 கோடியில் RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது.
 • அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 38.85 கோடி ஒதுக்கீட்டுடன், 2021-22 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
 • தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டு மொத்த காப்பீட்டு தொகையான ₹4 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை 7.5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு ₹20 லட்சம் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும்.
 • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து தமிழ்நாடு 1,08,913 கோடி மொத்த முதலீட்டு மதிப்பில் 2,55,633 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 166 திட்டங்களை ஈர்த்துள்ளது. கோவிட் தொற்றின் போது அனைத்திந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1,69496 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக 88,727 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல்வர் தலைமையின் கீழ் உயர்நிலைக்குழு 71,776 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக 39,941 கோடி மதிப்பில் 62 முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கியுள்ளது.
 • தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6,683 கோடியில், 44 கிலோமீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 • சென்னையில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில், 118.90 கி.மீட்டர் நீளத்தில் 3 வழித்தடங்கள் அடங்கிய, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கி.மீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 • போக்குவரத்துக் கழகத்துக்கு அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் அடங்கும். முதற்கட்டமாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1,580 கோடி செலவில் 2,200 பிஎஸ்-6 பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • கரோனா தொற்று காரணமாக, 2021 ஜனவரி மாதம் வரையில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.3,717.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டுவரும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, 2020-21ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் மின்கட்டண மானியமாக ரூ.8,413.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
 • மேலும், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில், மானியக் கட்டணங்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதய் திட்டத்தின் கீழ், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான 5-வது மற்றும் இறுதிக் கட்ட மானியமாக ரூ.4,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
 • அத்துடன், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடு செய்யும் விதமாக, உதய் திட்டத்தின் வழிமுறைகள் படி, ரூ.7,217.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக, பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து ரூ.37,130.30 கோடி மதிப்பில் கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கி உள்ளது.
துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள்:
 • வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி
 • சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி
 • நீதித் துறைக்கு ரூ.1,417 கோடி
 • உயர்க் கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி
 • மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி
 • காவல்துறைக்கு ரூ. 9,657 கோடி
 • தீயணைப்பு மீட்புத் துறைக்கு ரூ.4,436 கோடி
 • ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடி
 • இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.229.33 கோடி
 • கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி
 • மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி
 • உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி
 • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி
 • சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி
 • ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி
 • பள்ளி கல்விதுறைக்கு ரூ.34,181 கோடி
 • நீர்வளத் துறைக்கு ரூ.6,453 கோடி
 • காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி
திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
 • பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி
 • கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி
 • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி
 • சென்னை நகரை மேம்படுத்த ரூ.3,140 கோடி
 • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3,352 கோடி
 • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி
 • மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி
 • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2,470 கோடி
 • அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு
 • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி
 • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி
 • நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1,450 கோடி
 • ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
 • சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி
 • குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016 கோடி
 • சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.44.33 கோடி
 • மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி
 • சத்துணவு திட்டங்களுக்கு ரூ.1953.98 கோடி
 • அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி
 • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி
 • சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி
 • விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி
 • l ஒட்டுமொத்தக் கடனை பொறுத்தவரை 2021- மார்ச் 31-ம் தேதி ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சமாகவும், 2022 மார்ச் 31-ம் தேதி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியே 29 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களை தக்கவைக்க அதிக கடன் வாங்க வேண்டி வரும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதம் அதாவது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.

Tuesday, 23 February 2021

TNPSC 22nd FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மோரீஷஸ் நாட்டுக்கு இந்தியா ரூ.724.34 கோடி கடனுதவி

 • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்த இரு நாடுகளும் இந்தியாவின் அருகில் உள்ள முக்கிய நாடுகள் ஆகும்.
 • மேலும் இந்திய பிரதமரின் 'சாகா்' (மண்டலத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி) திட்டத்தில் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு மோரீஷஸ் சென்றாா்.
 • அங்கு அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜக்நாத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் எம்.ஆலன் கனூவுடன் இருநாட்டு உறவுகள், கூட்டாண்மை வளா்ச்சி ஆகியவை குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
 • இருநாடுகளின் மேம்பட்ட உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மோரீஷஸ் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் மறுமலா்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தர இந்தியா தயாராக உள்ளது.
 • உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியாவின் பங்கு எப்போதும் எல்லைகளைக் கடந்து நிற்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மோரீஷஸுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
 • சாகா் திட்டம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும், மோரீஷஸும் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு மோரீஷஸுக்கு ரூ.724.34 கோடி கடனுதவியை இந்தியா அளிக்கும். 
 • மேலும், கடல்சாா் பாதுகாப்பில் மோரீஷஸின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா சாா்பில் டாா்னியா் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் அந்நாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான கடிதமும் இருநாடுகள் சாா்பில் பரிமாற்றம் செய்துக் கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை 'ஐநாக்ஸ்' நிறுவனம்

 • குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான திரவ வாயுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 
 • இந்நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ வடிவிலான ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கன் வாயுக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. 
 • அத்துடன், இத் தொழிற்சாலைகளில், வாயு பிரிப்பு பிரிவுகளையும் அமைக்க உள்ளது.இது குறித்து, ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர், சித்தார்த் ஜெயின் கூறியதாவது:நிறுவனம், தற்போது தினமும், 2,300 டன் திரவ வாயுக்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
 • இது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அமையும் தொழிற்சாலைகள் மூலம், 4,800 டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம், இம்மாநிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.
 • அடுத்த இரு ஆண்டுகளில் உற்பத்தி துவங்கி விடும். இதன் மூலம், மின்னணு, மருந்து, உருக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான வாயுக்கள் தடையின்றி கிடைக்கும்.

தலைவாசலில் ரூ.1,022 கோடியில் சா்வதேச கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் திறப்பு

 • சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
 • தமிழகத்தில் உள்ள கலப்பினப் பசுக்கள் 15 லிட்டா் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளொன்றுக்கு சுமாா் 40 லிட்டா் வரை பால் கறக்கும் கலப்பினப் பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 • சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பினப் பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். 
 • கால்நடை வளா்ப்புக்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தாா். கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமாா் ரூ. 1,022 கோடி செலவில மிக பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1,102 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
 • தலைவாசலில் ரூ.125 கோடியில் 58 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்; ரூ.181 கோடியில் 58 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
 • காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க சத்தியமங்கலத்தில் ரூ. 2.50 கோடியிலும், சிவகங்கை, மதுரை, விருதுநகரில் உள்ள புலிகுளம் காளைகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. 
 • ஆலம்பாடி கால்நடைகளை பாதுகாக்க ரூ. 4 கோடியில் தருமபுரியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு ஆந்திரத்தின் அனந்தபுரமு மாவட்டம் தேர்வு 
 • ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்)தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் மொத்தம் 5,76,972 பேர் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் இணைந்துள்ளனர். 
 • அவர்களில் 5% பேரின் தகுதி மற்றும் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவர்களின் விவரங்களை நேரில் சரிபார்க்கும் பணி கள் நடைபெற்றது. 
 • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தப் பணியில், மொத்தமுள்ள 63 வட்டங்களில் 28,269 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டது
 • இந்தப் பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தம் சந்துருடுவிடம் இந்த விருது வழங்கப்படவுள்ளது
இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

 • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார். 
 • இரண்டாம் நாளான இன்று மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ கடன் வரம்பு ஒப்பந்தத்தில் (எல்ஓசி) இருவரும் கையெழுத்திட்டனர். 

Monday, 22 February 2021

TNPSC 21st FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ஆஸி. ஓபன் டென்னிஸ் 9வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

 • ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 
 • இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 
 • அந்த செட்டில் மெட்வதேவ் ஓரளவு ஈடுகொடுத்து விளையாடியதால், அடுத்தடுத்த செட்கள் கடும் போராட்டமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 
 • ஆனால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி மெட்வதேவை திணறடித்த ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி ஆஸி. ஓபனில் 9வது முறையாகவும், தொடர்ச்சியாக 3வது முறையாகவும் சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
 • 2019 யுஎஸ் ஓபன் பைனலில் நடாலிடம் தோற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை வீணடித்த அவர், தற்போது ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் தோற்று 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். 
 • ன்னிஸ் அரங்கில் ரோஜர் பெடரர் (39 வயது, சுவிஸ்.), ரபேல் நடால் (34 வயது, ஸ்பெயின்), ஜோகோவிச் (33 வயது) மூவரும் கடந்த 15 ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செலுத்தி வரும் ஆதிக்கம் தொய்வின்றி தொடர்கிறது. 
 • அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர், நடால் இருவரும் தலா 20 பட்டங்களுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், ஜோகோவிச் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
பெண் கணித மேதை கேப் கேத்தரின் ஜான்சன்க்கு கவுரவம்
 • அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. 
 • கேத்தரின் ஜான்சன் உருவாக்கிய கணக்குகளை அடிப்படையாக வைத்தே, முதல் முறையாக அமெரிக்கர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.'ஹிடன் பிகர்' என்ற, 2016ல் வெளியான சினிமாவில், கேத்தரின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. 
 • கடந்தாண்டில், தன், 101வது வயதில் அவர் உயிரிழந்தார்.கடந்த, 1962, பிப்., 20ல், அமெரிக்காவின் ஜான் கிளென், விண்வெளிக்கு பறந்தார். அதன், 59வது ஆண்டு தினத்தில், விண்வெளியில் ஆய்வு செய்யும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலத்துக்கு, கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் முதல்வர் எடப்பாடி அடிக்கல்

 • ரூ.14,400 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள காவிரி- தெற்கு வெள்ளாறு - வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடந்தது. 
 • துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 
 • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தால் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் விவசாயிகள் பயனடைவார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் விவசாயிகள்.

Sunday, 21 February 2021

TNPSC 20th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் துவக்கம்

 • கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாநில அரசால், ஐ.ஐ.ஐ.டி.எம்.கே., எனப்படும், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் கேரள மேலாண்மை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
 • இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி, 'கேரள டிஜிட்டல் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 • நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகமான இதை, கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.

2வது முறையாக ஒசாகா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்

 • ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 
 • இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் (25 வயது, 24வது ரேங்க்) நேற்று மோதிய ஒசாகா (23 வயது, 3வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். 
 • இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 2019ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த ஒசாகா, தற்போது 2வது முறையாக இங்கு பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது அவரது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். யுஎஸ் ஓபனில் 2018 மற்றும் 2020ல் ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்

 • செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய நாசா அனுப்பிய 'பெர்சவரன்ஸ்' ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. 
 • சிறிது நேரத்தில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் படங்களை அது அனுப்பியது. இவற்றை நாசா நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்டிருந்தது. 
 • இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் மீண்டும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனம் IKEA உத்திரபிரதேசத்தில் ₹5500 கோடி முதலீடு

 • உலகின் மிகப்பெரிய பர்னீச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனமான IKEA அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ரூ .5500 கோடியை முதலீடு செய்கிறது. 
 • நாய்டாவில் தொடங்கி, புர்வான்சால் மற்றும் மத்திய உத்திரபிரதேசத்தில் குறைந்தது மூன்று பெரிய விற்பனை நிலையங்களை திறக்க IKEA திட்டமிட்டுள்ளது. நொய்டா மையம் திறக்கப்பட்ட பின், மற்ற விற்பனை நிலையங்களுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்படும்.
 • உத்திரபிரதேசம் (Uttar Pradesh) நொய்டாவின் செக்டர் 51 இல் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர் அளவிலான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும்.

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு 17-வது தவணையாக ரூ.5,000 கோடி விடுவிப்பு

 • ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 • இதில், ரூ. 4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ. 269.59 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி , ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.
 • மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • மதிப்பிடப்பட்ட மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் 91 சதவீதம், மாநிலங்களுக்கும் , சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 • இதில் ரூ. 91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ. 8,539.66 கோடி சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த வாரத்திற்கான நிதி 5.5924 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. இது வரை, ரூ. 1,00,000 கோடி, 4.8307 சதவீதம் என்னும் சராசரி வட்டி விகிதத்தில் மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது.
 • மத்திய அரசு தெரிவித்த விருப்பத் திட்டங்களில் முதலாம் விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரும்பின. இதைத் தொடர்ந்து, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு ரூ. 1,06,830 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 • மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.6002.53 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.713.61 கோடியும் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் மஞ்சள் நிற பென்குயின்

 • உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகாவின் தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில்மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 • வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது. 

Saturday, 20 February 2021

TNPSC 19th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி

 • நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.
 • பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. 
 • இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
 • வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
 • பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். 
 • சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.

பீரங்கிகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனையில் வெற்றி

 • பீரங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஹெலினா என்ற நவீன ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றம் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. 
 • மிகவும் குறைவான எடை கொண்ட இது, விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இவை விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் என்ற இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து நேற்று வீசப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 
 • ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்த சோதனையில் 4 ஏவுகணைகள் துருவ் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. நான்கில் மூன்று ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்த ஏவுகணை 7 கிமீ தூரம் வரை பாய்ந்து எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

2019ம் ஆண்டிற்காக கலைமாமணி விருது / KALAIMAMANI AWARD 2019

TNPSCSHOUTERS

 • நடிகர்கள் ராமராஜன், சிவ கார்த்திகேயன், யோகிபாபு, நடிகையர் சவுகார் ஜானகி, சரோஜாதேவி, பின்னணி பாடகியர் பி.சுசீலா, சுஜாதா, பாடகர் சிக்கில் குரு சரண், கடம் வித்வான் திருப்பனந்தாள் மாரிமுத்து, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உட்பட, 130 பேர், மாநில அரசின் கலைமாமணி விருது பெறுகின்றனர். 
 • இதுதவிர, வறுமையில் வாழும், கலைமாமணி விருது பெற்ற மூத்த கலைஞர்கள், ஒன்பது பேருக்கு பொற்கிழி; இரண்டு சிறந்த கலை நிறுவனங்களுக்கு கேடயம்; 2020ம் ஆண்டிற்காக ஒரு சிறந்த நாடக குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசு அறிவித்துள்ள விருதாளர்கள் பட்டியல் - 2019ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோர்

 • முத்துக்கிருஷ்ணன், சென்னை - நுால் ஆசிரியர்
 • வைகைச் செல்வன், சென்னை - இலக்கியம்
 • ஆவடி குமார், திருவள்ளூர் - எழுத்தாளர்
 • சத்தியநாராயணன், காஞ்சிபுரம் - மருத்துவ நுாலாசிரியர்
 • அனில் ஸ்ரீனிவாசன், சென்னை - பியானோ
 • குரலிசை தம்பதி கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார், சென்னை - குரலிசை
 • சிக்கில் குருசரண், சென்னை - குரலிசை
 • அக்கரை சகோதரிகள் சுபலட்சுமி, சுவர்ணலதா, சென்னை - வயலின்
 • யுகராஜன், சென்னை - மிருதங்கம்
 • சின்னதம்பி, நாகப்பட்டினம் - நாதஸ்வரம்
 • செல்வரத்தினம், காஞ்சிபுரம் - நாதஸ்வரம்
 • சுப்பிரமணியன், தஞ்சாவூர் - தவில்
 • ஜாலீ ஆபிரகாம், சென்னை - மெல்லிசை
 • சாய் ஷரவனம், சென்னை - திரைப்பட இசை ஒலிப்பதிவாளர்
 • அபிஷேக் ரகுராம் - குரலிசை
 • முத்து, தஞ்சாவூர் - நாடக நடிகர்
 • ராஜேந்திரன், வேளச்சேரி - நாடக நடிகர்
 • அப்பா ரமேஷ், சென்னை - நாடக நடிகர்
 • சீனிவாசன், சென்னை - நாடக நடிகர்
 • முரளிதரன், சென்னை - பரதநாட்டிய ஆசிரியர்
 • மாயா சியாம் சுந்தர், சென்னை - பரதநாட்டிய ஆசிரியர்
 • பார்வதி பாலசுப்பிரமணியன், சென்னை - பரதநாட்டிய ஆசிரியர்
 • ஸ்ரீதேவி, சென்னை - பரதநாட்டிய கலைஞர்
 • ஆறுமுகம், திருவண்ணாமலை - தெருக்கூத்து
 • முத்துலெட்சுமி, திருநெல்வேலி - வில்லிசை
 • மஞ்சுநாதன், கிருஷ்ணகிரி - பம்பைக் கலைஞர்
 • முத்துகுமார், கன்னியாகுமரி - தோல்பாவைக் கூத்து
 • கணேசன், திருப்பூர் - நையாண்டி மேள நாதஸ்வரம்
 • லெட்சுமி அம்மாள், மதுரை - கிராமியப் பாடகி
 • பத்திரப்பன், கோவை - வள்ளி கும்மி ஒயிலாட்டம்
 • தங்கவேலு, திண்டுக்கல் - தெம்மாங்கு பாடகர்
 • சந்திரமோகன், சென்னை - விகடம்
 • மோகன், மதுரை - மரக்கால் ஆட்டம்
 • கிருஷ்ணப்பா, திருச்சி - இசை நாடக நடிகர்
 • முத்துக்கிருஷ்ணன், புதுக்கோட்டை - இசை நாடக நடிகர்
 • ஜோதி, மதுரை - இசை நாடக நடிகை
 • ராமராஜன் - திரைப்பட நடிகர்
 • லியாகத் அலிகான் - திரைப்பட இயக்குனர்
 • யோகிபாபு - நகைச்சுவை நடிகர்
 • தேவதர்ஷினி - நகைச்சுவை நடிகை
 • தினா - திரைப்பட இசையமைப்பாளர்
 • காமகோடியன் - திரைப்பட பாடலாசிரியர்
 • ரகுநாத ரெட்டி - திரைப்பட ஒளிப்பதிவாளர்
 • அனந்த் - பின்னணி பாடகர்சுஜாதா - பின்னணி பாடகி
 • பிரசாத் - தபேலா கலைஞர்
 • கோமகன் - மெல்லிசை கலைஞர்
 • கலைப்புலி தாணு - திரைப்பட தயாரிப்பாளர்
 • ஆண்டனி - திரைப்பட எடிட்டர்
 • ராஜேந்திரன் - திரைப்பட உடையலங்காரம்
 • தளபதி தினேஷ் - திரைப்பட சண்டை பயிற்சியாளர்
 • சிவசங்கர் - திரைப்பட நடன இயக்குனர்
 • சிங்காரவேலு - திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர்
 • மனோஜ்குமார் - இயக்குனர்
 • சண்முகம் - ஒப்பனைக் கலைஞர்
 • நந்தகுமார் - சின்னத்திரை நடிகர்
 • சாந்தி வில்லியம்ஸ் - சின்னத்திரை நடிகை
 • ராமசாமி, பாரதீய வித்யா பவன், சென்னை - பண்பாட்டு கலை பரப்புனர்
 • 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி - பண்பாட்டு கலை பரப்புனர்
2020ம் ஆண்டுக்கான விருதாளர்கள்
 • கல்யாணராமன், திருச்சி - சமய சொற்பொழிவாளர்
 • தாமரை செந்துார்பாண்டி, திருநெல்வேலி - கதையாசிரியர்
 • சுகுமார், ராணிப்பேட்டை - நுால் ஆசிரியர்
 • அரசு பரமேசுவரன், நாமக்கல் - பட்டிமன்றம்
 • பெருமாள், சென்னை - எழுத்தாளர்
 • ரத்னகுமாரி கல்யாணசுந்தரம், ஈரோடு - குரலிசை
 • கார்த்திக், சென்னை - கடம்
 • ஜான்மோகன், திண்டுக்கல் - ஆர்மோனியம்
 • முருகபூபதி, சென்னை - மிருதங்கம்
 • சாய்ராம் சுந்தரம், சென்னை - மிருதங்கம்
 • கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் - நாதஸ்வரம்
 • மாரிமுத்து, தஞ்சாவூர் - தவில்
 • மார்டின், சென்னை - கீ போர்ட்
 • சண்முகசுந்தர தேசிகர், திண்டுக்கல் - தேவாரம்
 • ரஞ்சனி மற்றும் காயத்ரி, சென்னை - குரலிசை
 • கோவிந்தராசு, தர்மபுரி - சாக்ஸபோன்
 • உஷா, சென்னை - குரலிசை
 • சுந்தரேசன், சென்னை - மிருதங்கம்
 • நிர்மலா ராஜசேகர், சென்னை - வீணை
 • ஜெயலட்சுமி சேகர், சென்னை - வீணை
 • மங்களம் நடராஜன், திருச்சி - நாடக நடிகை
 • பழனி, விழுப்புரம் - நாடக நடிகர்
 • பூவை மணி, சென்னை - நாடக நடிகர்
 • ஜனார்தனன், சென்னை - பரதநாட்டிய கலைஞர்
 • கவிதா சார்லஸ், செங்கல்பட்டு - பரதநாட்டிய கலைஞர்
 • ஸ்ரீலதா வினோத், சென்னை - பரதநாட்டிய ஆசிரியர்
 • விஜயலட்சுமி பூபதி, சென்னை - பரதநாட்டிய கலைஞர்
 • அபர்ணா ரமேஷ், சேலம் - பரதநாட்டிய கலைஞர்
 • கன்னியப்பன், மரக்கானத்தார் திருவண்ணாமலை - தெருக்கூத்து
 • முத்துப்பெருமாள், திருநெல்வேலி - கணியான் கூத்து
 • பழனியம்மாள், மதுரை - கரகாட்டம்
 • தங்கவேல், திண்டுக்கல் - தப்பாட்ட கலைஞர்
 • நாகூர் கனி, சேலம் - பொய்க்கால் குதிரை
 • ராசுக்குட்டி, திருநெல்வேலி - நையாண்டி மேள நாதஸ்வரம்
 • பழனியாபிள்ளை, கன்னியாகுமரி - கிராமிய பாடகர்
 • தர்மராஜ், கோவை - ஒயிலாட்டம்
 • அமலபுஷ்பம், துாத்துக்குடி - கிராமியப் பாடகி
 • கோவிந்தராஜ், மதுரை - மரக்கால் ஆட்டம்
 • தண்டபாணி, விழுப்புரம் - தெருக்கூத்து நாடகம்
 • துரை, திருவண்ணாமலை - தெருக்கூத்து
 • சேகர், திருவண்ணாமலை - தெருக்கூத்து
 • கோதண்டராமன், தர்மபுரி - நாதஸ்வர இசை
 • முருகப்பா, திண்டுக்கல் - இசை நாடக நடிகர்
 • இந்திரா, கரூர் - இசை நாடக நடிகை
 • தாரா காதர்கான், மதுரை - இசை நாடக நடிகை
 • பிரசாத் வி.சி.ராஜேந்திரன், மதுரை - இசை நாடக நடிகர்
 • சிவகார்த்திகேயன் - திரைப்பட நடிகர்
 • ஐஸ்வர்யா ராஜேஷ் - திரைப்பட நடிகை
 • மதுமிதா - நகைச்சுவை நடிகை
 • இமான் - திரைப்பட இசையமைப்பாளர்
 • காதல்மதி - திரைப்பட பாடலாசிரியர்
 • பாலேஷ் மற்றும் கிருஷ்ணா பாலேஷ் - ஷெனாய் கலைஞர்கள்
 • ஐசரி கணேஷ் - திரைப்பட தயாரிப்பாளர்
 • பிரபாகர் - திரைப்பட வசனகர்த்தா
 • ஜாகுவார் தங்கம் - திரைப்பட சண்டை பயிற்சியாளர்
 • ஸ்ரீதர் - திரைப்பட நடன இயக்குனர்
 • சங்கீதா - குணசித்திர நடிகை
 • சபீதா ஜோசப் - திரைப்பட பத்திரிகையாளர்
 • சிற்றரசு - திரைப்பட புகைப்படக் கலைஞர்
 • சபரி கிரிசன் - திரைப்பட ஒப்பனைக் கலைஞர்
 • கவுதம் வாசுதேவ் மேனன் - திரைப்பட இயக்குனர்
 • ரவி மரியா - திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்
 • நித்யா - சின்னத்திரை நடிகை
 • பிரபு, ஸ்ரீகிருஷ்ண கான சபா, சென்னை - பண்பாட்டு கலை பரப்புனர்
 • பாலசுப்பிரமணியன், ஜே.பி.கல்சுரல் பவுண்டேஷன், சென்னை - பண்பாட்டு கலை பரப்புனர்
2019 ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது
 • சரோஜாதேவி - திரைத்துறை
 • சுசிலா - இசைத்துறை
 • அம்பிகா காமேஷ்வர் - நாட்டியத்துறை
2020 ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது
 • சவுகார் ஜானகி - திரைத்துறை
 • ஜமுனா ராணி - இசைத்துறை
 • பார்வதி ரவி கண்டசாலா - நாட்டியத்துறை.

Friday, 19 February 2021

TNPSC 18th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

எய்ட்ஸை குணப்படுத்த மருந்து சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

 • எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துசென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
 • ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்உலகையே அச்சுறுத்தி வருகிறது.உலகின் பல்வேறு பகுதிகளிலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். 
 • இந்நிலையில் சென்னைஐஐடிஉயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதிதலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய்பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
 • இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் அண்மையில் வெளியானது.

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது

 • 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு, திரைப்பட விழாக் குழுவைச் சேர்ந்த தங்கராஜ், காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்டஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலாச்சார தூதர்கள் கலந்துகொண்டனர்.
 • இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்நடத்தும் இந்த திரைப்பட விழாவை பிவிஆர் இணைந்து வழங்குகிறது.

வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக `சன்டேஸ்' அறிமுகம் செய்தது மத்திய அரசு

 • வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து `சிக்னல்' மற்றும் `டெலிகிராம்' செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
 • இந்நிலையில் சன்டேஸ் செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைத்துள்ளது. இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 
 • இது இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதைப் பயன்படுத்த விரும்புவோர் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம். இணையதள வடிவிலும் இந்த செயலி உள்ளது. 'வாட்ஸ் அப்'பில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம், மேகாலயாவை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

 • அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக ரூ.3,231 கோடி மதிப்பில் மகாபாகு- பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை அவர் தொடங்கி வைத்தார்.
 • இதன்மூலம் அசாமின் நேமதி, மஜூலி ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 420 கி.மீ. தொலைவு, 12 கி.மீ. தொலைவாக குறையும். இந்த நீர்வழி போக்குவரத்து திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளும் இணைக்கப்படும். இத்திட்டத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி வர்த்தக போக்குவரத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
 • அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 19 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக அமையும்.
 • மேலும் அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான 8 கி.மீ.தொலைவு பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து

 • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 
 • தொடர்ந்து, மூன்று மட்டும் நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 • இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
 • அதன்படி, அணு உலை கட்டடம், அணு உலை துணைக் கட்டடம், டர்பைன் மற்று டீசல் ஜெனரேட்டருக்கான கட்டடம் போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி

 • உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் பவங்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். எம். ஏ. பட்டதாரியான இவர் அம்மாவட்டத்தின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 
 • 2008ஆம் ஆண்டில் ஷப்னம் வீட்டின் அருகே மரம் அறுக்கும் வேலை செய்து வந்த சலீமுக்கும், அவருக்கு காதல் மலர்ந்தது. ஆனால், அவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 • இதனால் காதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தைக் கொலை செய்ய முடிவு எடுத்த, ஷப்னம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
 • அதை அருந்தியப் பின் அவர்கள் மயக்கத்தில் இருந்த நிலையில், ஷப்னம் மற்றும் அவர் காதலன் சலீம் சேர்ந்து கோடாரி கொண்டு ஷப்னமின் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவி மற்றும் பத்து மாத கைக் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
 • இதுதொடர்பான வழக்கில் ஷப்னம் மற்றும் சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அம்ரோஹா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டை 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. சலீம் ஆக்ரா சிறைச் சாலையிலும் ஷப்னம் ராம்பூர் மாவட்ட சிறைச்சாலையில் உள்ளனர்.
 • மாநில ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இவர்கள் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஷப்னத்திற்கு தண்டனை நிறைவேற்றப்படுமானால், இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி ஷப்னமாகத்தான் இருப்பார்.

Thursday, 18 February 2021

TNPSC 17th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

தமிழக அரசின் நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2,978 கோடி கடன்

 • நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலா, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டா பகுதியில் பல்வேறு வகையான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும்நவீனமயமாக்கல் பணிகளுக்காக நபார்டு வங்கியின் ரூ.2,978 கோடிகடன் உதவிக்கான அனுமதிக்கடிதத்தை வழங்கினார்.
 • இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம், டெல்டா மாவட்டங்களின் 1 லட்சத்து 89 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பகுதி பயன்பெறும். இந்த நிதியும் சேர்த்து நடப்பு ஆண்டில் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளின் மூலமாக தமிழகத்துக்கு ரூ.9,200 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகம் நடத்த புதிய கட்டுப்பாடு இளஞ்சிறார் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்

 • இளஞ்சிறார் நீதி சட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முறையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அளிக்கப்பட உள்ளது. மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவும் இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். 
 • இதற்கு முன்பு, எவ்வித பின்புல ஆய்வு, சோதனை நடத்தப்படாமலேயே குழந்தைகள் நல கமிட்டியில் உறுப்பினராக இருப்பவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
 • ஆனால், இனிமேல், அவரது கல்வி தகுதி உள்ளிட்ட பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் நியமிக்கப்படுவார்கள். முன்னதாக, குழந்தைகள் காப்பகம் நடத்த விரும்புபவர்கள், அதற்கான காரணம் குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 
 • தற்போது, அதற்கான இட வசதி உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையில்தான் அதற்கு அனுமதி அளிக்கப்படும். 

காங்கோ, கினியாவுக்கு ஐ.நா. ரூ.109 கோடி நிதியுதவி

 • ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, கினியாவுக்கு எபோலா வைரஸ் தாக்குதலை எதிா்கொள்வதற்காக, 1.5 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.109.20 கோடி) நிதியை ஐ.நா. வழங்கியுள்ளது.

ஐ.நா. மேற்பாா்வையில் இராக் நாடாளுமன்றத் தோதல் இந்தியா ஆதரவு

 • இராக்கில் நாடாளுமன்றத் தோதலை ஐ.நா.வின் மேற்பாா்வையுடன் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு விடுத்த கோரிக்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளித்துள்ளது.
 • இராக்கின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, தோதல் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

காவிரி படுகை சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு தமிழக திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

 • ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே 4,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். 
 • மேலும், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை தொடங்கிவைத்த பிரதமர், நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலை அமைக்க அடிக்கல் நாட்டிவைத்தார்.

நாட்டின் முதல் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கிறது அமேசான்

 • அமேசான் தனது உற்பத்தி பிரிவினை இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளது. போக்ஸ்கான் நிறுவனத்தின் கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியின் மூலம், பயர் டிவி ஸ்டிக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள அமேசான் அதற்காக சென்னையை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா, மொரீசியஸ் இடையே ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • இந்தியா, மொரீசியஸ் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, மொரீசியஸ் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Wednesday, 17 February 2021

TNPSC 16th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டினார், ரூ.28 ஆயிரத்து 53 கோடி முதலீட்டில் 28 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

 • தொழில்துறை சார்பில் ரூ.28,053 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
 • தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா எலெக்ட்ரானிக்ஸின் ரூ.4,684 கோடியில் 18,250 பேருக்கு வேலை அளிக்கும் செல்போன்களுக்கான இயந்திர இணைப்புகள் தயாரிக்கும் ஆலை.
 • செய்யாறில் சன் எடிசன் நிறுவனம் ரூ.1,423 கோடியில் 1,907 பேருக்கு வேலையளிக்கும், சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி தயாரிப்பு ஆலை.
 • தைவானின் பெகட்ரான் நிறுவனம் செங்கல்பட்டில் ரூ.1,100 கோடியில் 14,079 பேருக்கு வேலை அளிக் கும் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை.
 • சென்னை மற்றும் திருவள்ளூரில் டியூப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ரூ.525 கோடியில் 1,813 பேருக்கு வேலை அளிக்கும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.
 • ஜெர்மனியின் பிஏஎஸ்எப் நிறுவனம் செங்கல்பட்டில், ரூ.345 கோடியில் 235 பேருக்கு வேலை அளிக்கும் வினையூக்கிகள் ஆலை.
 • எலெஸ்ட் நிறுவனம் ரூ.7,948 கோடியில் 8,081 பேருக்கு வேலையளிக்கும் மின் பேருந்துகள், டிரக்குகள் தயாரிப்பு தொழிற்சாலை.
 • சிங்கப்பூரின் ஏஜி அண்டு பி பிரதம் ரூ.2,430 கோடியில் 7 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் நகர எரிவாயு விநியோகத் திட்டம்.
 • நெட்மேஜிக் ரூ.1,377 கோடியில் 100 பேருக்கு வேலையளிக்கும் தகவல் தரவு மையம்.
 • ஜெர்மனியின் நார்டெக்ஸ் ரூ.1,200 கோடியில் 3 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் காற்றாலை ஜெனரேட்டர்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை.
 • டிவிஎஸ் சக்ரா ரூ.1,000 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் டயர் ஆலை.
 • பிரான்சின் வாலியோ நிறுவனம் ரூ.830 கோடியில் 2,400 பேருக்கு வேலையளிக்கும் ஆராய்ச்சி, மேம் பாடு, உற்பத்தி திட்டங்கள்.
 • கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ரூ.750 கோடியில், 300 பேருக்கு வேலை யளிக்கும் பெயின்ட் ஆலை.
 • ஆம்பியர் வெஹிகிள்ஸ் ரூ.700 கோடியில் 1,459 பேருக்கு வேலை யளிக்கும் இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை.
 • டெக்னோ எலெக்ட்ரிக் ரூ.650 கோடியில் 500 பேருக்கு வேலை யளிக்கும் தகவல் தரவு மையம்.
 • க்யூ மேக்ஸ் ரூ.525 கோடியில் 250 பேருக்கு வேலையளிக்கும் லித்தியம் அயன் ஆலை.
 • ஜெர்மனியின் ப்ளெண்டர் டிரைவ்ஸ் சார்பில் ரூ.500 கோடியில் 400 பேருக்கு வேலையளிக்கும் கியர் பெட்டி ஆலை.
 • மோத்தி குழுமம் சார்பில் ரூ.400 கோடியில் 900 பேருக்கு வேலை அளிக்கும் நூற்பு, நெசவாலை.
 • டிபி ஆட்டோ இந்தியா ரூ.337 கோடி யில் 500 பேருக்கு வேலையளிக்கும் மூன்று சக்கர மின் வாகன உற்பத்தி தொழில்.
 • தைவானின் காம்படிஷன் டீம் டெக் னாலஜி இந்தியா ரூ.232 கோடியில் 2,154 பேருக்கு வேலையளிக்கும் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையம்.
 • பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ரூ.220 கோடியில் 700 பேருக்கு வேலையளிக்கும், துணி ஆலை.
 • லிவியா பாலிமர் ரூ.200 கோடியில் 1,200 பேருக்கு வேலையளிக்கும் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி மையம்.
 • மலேசியாவின் அன்செல் நிறுவனம் சார்பில் ரூ.139 கோடியில் 832 பேருக்கு வேலையளிக்கும் கையுறை ஆலை.
 • ஆருஷ் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடியில் 500 பேருக்கு வேலையளிக்கும் உருக்காலை.
 • ஸ்வீடனின் ஆட்டோலிவ் சார்பில் ரூ.100 கோடியில் 400 பேருக்கு வேலையளிக்கும் மோட்டார் வாகன உதிரிபாக ஆலை.
 • ஜப்பானின் ப்ளைஜாக் லாஜிஸ்டிக்ஸ் சார்பில் ரூ.100 கோடியில் 350 பேருக்கு வேலையளிக்கும் தொழிற் பூங்கா.
 • டாடா காபி நிறுவனம் ரூ.100 கோடியில் 160 பேருக்கு வேலை யளிக்கும் காபி பதப்படுத்தும் மையம்.
 • ஜப்பானின் கோபெல்கோ ரூ.75 கோடியில் 55 பேருக்கு வேலை யளிக்கும் மூலதன பொருட்கள் உற்பத்தி.
 • ரெக்கிட் பென்கிசர் ரூ.63 கோடியில் 250 பேருக்கு வேலையளிக்கும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மையம்.
 • மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, ராமநாதபுரத்தில் ரூ.3,377 கோடி முதலீட்டில் 7,139 பேருக்கு வேலையளிக்கும் 8 தொழிற்சாலைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

 • புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக இருவரும் பரஸ்வரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
 • இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிரண் பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார். இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.
 • இந்நிலையில் கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டு மானியம் மும்மடங்கு உயர்வு, புதிய கொள்கை வெளியிட்டு முதல்வர் அறிவிப்பு

 • உலகத் தொழில்களை ஈர்க்க, இரண்டு புதிய தொழில் கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன. 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.
 • உற்பத்தி துறையில், ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி அடைவது தான், தொழில் கொள்கை யின் நோக்கம்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, 'குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை - 2021' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
 • தென் மாவட்டங்கள், தர்மபுரி, பெரம்பலுார், நாகப்பட்டினம் உள்ளிட்ட, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய, 22 மாவட்டங்களில், தொழில் துவங்குபவர்களுக்கு, 50 சதவீதம் சலுகை விலையில், நிலம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
 • மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் வழியாக, 38 துறைகளில், 190 அனுமதிகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • ரூ.1.50 கோடி புதிய தொழில் கொள்கை அடிப் படையில், மேம்படுத்தப்பட்ட, புதிய வானுார்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, புதிய ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை, விரைவில் வெளியிடப்படும்.
 • தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான, மூலதன நிதியம், 500 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, முதல் நான்கு ஆண்டுகள் வரை, முக்கிய அனுமதிகளுக்கு விலக்கு அளிக்கும், 'FastTN' திட்டம், வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்க புதிதாக உருவாக்கப்படும். 
 • மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, முதலீட்டு மானியம், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
 • இது, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.அரசு மானியம்குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில், ஆண்டுக்கு, ஒரு பணியாளருக்கு, அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அரசு மானியம் வழங்கும்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை, மேலும் வலுப்படுத்தும் விதமாக, 1,000 கோடி ரூபாய் நிதியை, அரசு வழங்கும். 
 • தொழில் கொள்கையின் பலன்களை, முழுமையாக பயன்படுத்தி, தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் துவங்கி, அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும்
 • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து - இந்தியா வணிக சபை இடையே, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • 'சிப்காட்' நிறுவனத்தின், பொன்விழா ஆண்டை ஒட்டி, தபால் தலை வெளியிடப்பட்டது. இந்நி றுவனம், 1971ல் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது; 
 • 15 மாவட்டங்களில், 34 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட, 23 தொழிற்பூங்காக்களை உருவாக்கி, சாதனை புரிந்துள்ளது.பொன் விழாவை ஒட்டி, சிட்கோ நிறுவனத்தின், 'லோகோ' மற்றும் பொன் விழா, 'லோகோ' வெளியிடப்பட்டது. 
 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம்மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புக்கான, லோகோ மற்றும் இணையதளம் துவக்கப்பட்டது. 

வளர்ச்சி 13.5 சதவீதம் 'நோமுரா' கணிப்பு

 • இந்தியாவில், கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு, பொருளாதார செயல்பாடுகள், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை அடுத்து, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 13.5 சதவீதம் அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
 • ஜப்பானை சேர்ந்த தரகு நிறுவனமான, 'நோமுரா' வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 7.7 சதவீத மாக இருக்கும் என்றும்; அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி, 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 • இந்நிலையில், 'நோமுரா' இவ்வாறு தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, மைனஸ், 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது, 'நோமுரா'.

கிழக்கு கடற்கரை சாலையில் தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு மத்தியமைச்சர் நிதின் கட்கரி-முதல்வர் பழனிசாமி இணைந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு

 • சென்னை எம்.ஆர்.சி. நகரில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா, தமிழ்நாடு அரசின் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறை விழிப்புணர்வு விழா நடைபெற்று வருகிறது.
 • இந்த விழாவில், உலக வங்கி உதவியுடன் ரூ.8.60 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் வரை தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர். 
 • இந்த தானியங்கி அமைப்பு சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் எண்ணை தானாக படம்பிடிக்கவும், விபத்துகளை கண்டறியவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 10% வளரும் எஸ் அண்ட் பி குளோபல் கணிப்பு
 • கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரிய அளவில் முடங்கின. எனினும், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளதால் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடான ஜிடிபி 11 சதவீதமாக இருக்கும் என் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.
 • இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. சரிவிலிருக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் அடுத்த நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி 10 சதவீதமாக இருக்கும் எனக் கூறியுள்ளது. 
 • இந்த வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் வேளாண் துறையின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருப்பதும், அரசு செலவீனம் அதிகமாக இருப்பதும், நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதும் அவசியம் எனவும் கூறியுள்ளது. 
 • மேலும் மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இருப்பதும் கவனிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான நாய் முதோல் இன நாய் விமானப் படையில் சேர்ப்பு
 • கர்நாடகாவின் முதோல் இன வேட்டை நாய், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு கேரவன் நாய் அல்லது மராத்தா இன வேட்டை நாய் என்ற பெயர்களும் உள்ளன
 • முதோல் இன வேட்டை நாய் களுக்கு தொலைத்தூரத்தில் உள்ளவற்றையும் கூர்மையாக உற்றுநோக்கி கண்டறியும் பார்வைத் திறன் உள்ளது. இதனால் ராணுவத்தில் எல்லையை கண்காணிப்பதற்கும் விமானப் படையில் ஓடுதளத்தை கண்காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும். இதன் தாடைகள் நீண்டு கடினப் பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சிறப்பாக வேட்டை யாடும் திறன் கொண்டது
 • கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த நாய்களை மராட்டிய மன்னர் சிவாஜியும், பாகல்கோட்டை மன் னர் கோர்படாவும் தங்களது முதல்கட்டமாக பாகல்கோட்டை படையில் போருக்காக பயன் படுத்தியுள்ளனர். 
 • 2017-ம் ஆண்டில் முதோல் இன வேட்டை நாய்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத் திலும் சேர்க்கப்பட்டன
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே
 • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மாநிலங்களவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவைத் தலைவர் வெங் கைய்யா நாயுடு இதனை அறிவித்துள்ளார் MY
சீனாவில் ஐ.நா. ஒருங்கிணைப்பாளராக இந்தியர் பொறுப்பேற்பு
 • சீனாவில் ஐ.நா ஒருங்கிணைப் பாளராக இந் தியாவின் சித்தார்த் சாட்டர்ஜி பொறுப்பேற்நார். அந்நாட்டில் ஐ.நா.வின் 27 அமைப்புகள், அதன் நிதி மற்றும் திட்டங்களை அவர் மேற்பார்வையிடுவார். கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித் துள்ள சித்தார்த் சாட்டர்ஜி,
 • இராக், சோமாலியா, டென்மார்க் சூடான், இந்தோனேசியா உள் ளர். கடந்த 2000-ஆம் ஆண்டு கெக்கு குடானில் உள்நாட்டுல் போர் உச்சத்தில் இருந்தபோது யுனிசெஃப்பில் பணிபுரிந்துவந்த சித்தார்த் சாட்டர்ஜி, அந்நாட்டு ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த 3,551 சிறார்களை தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் மீட்டார்.
 • இந்தியாவில் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் இளநிலை பட்டப் படிப்பை முடித்த அவர், அமெரிக் காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்க ழகத்தில் பொதுக்கொள்கைபடிப் பில் முதுநிலை பட்டம் பெற்றார்
 • இந்திய ராணுவத்தில் பணிபு ரிந்த அவருக்கு, கடந்த 1995-ஆம் ஆண்டு வீரதீர செயல்களுக்கான பதக்கத்தை அளித்து மத்திய அரசு கௌரவித்தது