Tuesday, 30 June 2020

தேசிய புள்ளியியல் தினம் / WORLD STATISTICS DAY

TNPSCSHOUTERS
 • தேசியப் புள்ளியியல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் திட்டம் இயற்றுதலில் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • 2018-ன் கருத்துரு - “பணித்துறையின் புள்ளியல் தரத்திற்கான உத்திரவாதம்“ (Quality Assurance in official Statistics). 
 • புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடுதல் ஆகியத் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்த்ரா மகல்நோபிஸ் அவர்களின் பங்களிப்பினை பறைசாற்றுவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • 1933-ல் இவர் இந்தியாவின் முதல் புள்ளியியல் பத்திரிக்கையான சங்க்யாவைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி மகல்நோபிஸ் தொலைவு (Mahalnobis Distance) என்ற புள்ளியியல் அளவையினைக் கண்டறிந்ததற்காகவும் இவர் நினைவு கூறப்படுகிறார். 
 • இவர் இந்தியப் புள்ளியில் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை வடிவமைக்க இவர் பெரும் பங்காற்றினார். 
 • மத்திய அரசாங்கமானது புள்ளியியல் துறையில் முன்னாள் பேராசிரியர் PC மகலநோபிஸீ-ன் குறிப்பிடத்தக்க பங்குகளை நினைவுகூறும் பொருட்டு ஜூன் 29-ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கிறது. 
 • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மகலநோபிஸின் கணித விளக்கங்களை நம்பியிருந்தது. 
 • இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. பின்னர் இது நேரு மகலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழிற்சாலை யுக்தி என்று அழைக்கப்படுகிறது.

29th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

டிக்டாக், ஹலோ உட்பட 59 சீன ஆப்களுக்கு தடை
 • கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 
 • இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த சீனா மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர்.
 • வெளிநாட்டை சேர்ந்த சில மொபைல் ஆப்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற தகவல் திருட்டுகள் தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திடும். 
 • எனவே நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கருத்தில் கொண்டு 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
 • தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009ன் பிரிவு 69ஏவின் கீழ், அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்திய நடுவர் நிதின் மேனன் 
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் நடுவர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள். 
 • போட்டிகளில் அவர்களது செயல்பாடு நன்றாக இருந்தால் அந்த பொறுப்பில் தொடர முடியும். அந்த வகையில், வரும் சீசனுக்கான (2020-21) ஐ.சி.சி. சிறந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார். 
 • அவரை ஐ.சி.சி. நடுவர் தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜெல் லாங் ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிதின் மேனனுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.
 • இதன் மூலம் ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள். 
 • தற்போது இந்த நடுவர் குழுவில் அலீம் தார் (பாகிஸ்தான்), குமார் தர்மசேனா (இலங்கை) உள்பட 12 பேர் இடம் வகிக்கின்றனர். இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
நீா் மின் நிலைய திட்டம் இந்தியா பூடான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
 • இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் அமைக்கப்படவுள்ள 5-ஆவது நீா் மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.
 • கிழக்கு பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் நீா் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவும் பூடானும் ஒப்புக்கொண்டன. அதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் திங்கள்கிழமை கையெழுத்திட்டன. 
 • இதற்காக, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பூடான் வெளியுறவு அமைச்சா் தண்டி டோா்ஜி ஆகியோா் பங்கேற்றனா்.
 • 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் கோலோங்சு நதியில் அமைக்கப்படவுள்ளது. இது அணையுடன் இணைந்த நீா் மின் நிலையமாக அல்லாமல் நதிநீா் பாய்வதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மின் உற்பத்திக்காக 150 மெகா வாட் திறன் கொண்ட 4 டா்பைன்கள் நிறுவப்படவுள்ளன.
 • இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கோலோங்சு நீா் மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சோந்த சட்லஜ் நீா் மின் உற்பத்தி நிறுவனமும் பூடானைச் சோந்த திரக் பசுமைவழி மின் உற்பத்தி நிறுவனமும் கூட்டாக இணைந்து முதலீடு செய்யவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
பொதுமுடக்க தளர்வு 2.0  வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு
 • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது ஜூலை 31 வரையில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 • கொரோனா உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூலை 31 வரையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு.
 • இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் பொதுமக்கள் வெளியேவர தடை.
 • நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
 • அனுமதிக்கப்பட்ட விமானங்களை தவிர மற்ற விமான சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை.
 • சினிமா தியேட்டர், மால், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களை திறக்க ஜூலை 31 வரையில் தடை.
 • அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள், மத கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 31 வரையில் தடை தொடரும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி
 • தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 • நாடு முழுவதும் தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
 • இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும். ஆண்ட்ரியா தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. 
 • மேலும், கரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 • மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளியியல் தினம் - ஜூன் 29: 
 • தேசியப் புள்ளியியல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் திட்டம் இயற்றுதலில் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • 2018-ன் கருத்துரு - “பணித்துறையின் புள்ளியல் தரத்திற்கான உத்திரவாதம்“ (Quality Assurance in official Statistics). 
 • புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடுதல் ஆகியத் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்த்ரா மகல்நோபிஸ் அவர்களின் பங்களிப்பினை பறைசாற்றுவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
 • 1933-ல் இவர் இந்தியாவின் முதல் புள்ளியியல் பத்திரிக்கையான சங்க்யாவைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி மகல்நோபிஸ் தொலைவு (Mahalnobis Distance) என்ற புள்ளியியல் அளவையினைக் கண்டறிந்ததற்காகவும் இவர் நினைவு கூறப்படுகிறார். 
 • இவர் இந்தியப் புள்ளியில் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை வடிவமைக்க இவர் பெரும் பங்காற்றினார். 
 • மத்திய அரசாங்கமானது புள்ளியியல் துறையில் முன்னாள் பேராசிரியர் PC மகலநோபிஸீ-ன் குறிப்பிடத்தக்க பங்குகளை நினைவுகூறும் பொருட்டு ஜூன் 29-ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கிறது. 
 • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மகலநோபிஸின் கணித விளக்கங்களை நம்பியிருந்தது. 
 • இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. பின்னர் இது நேரு மகலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழிற்சாலை யுக்தி என்று அழைக்கப்படுகிறது.

Monday, 29 June 2020

TNPSC CURRENT AFFAIRS JUNE 2020 IMPORTANT POINTS :

TNPSCSHOUTERS


செய்திகள் ஒரு வரிகளில்

·         மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது தேசியத் தொழில் சேவைத் திட்டத்தின் கீழ் தொழில்சார் திறன் பயிற்சியை வழங்க இருக்கின்றது.

·         இந்தியாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கான பயிற்சியை ரஷ்யாவில் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

·         இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவின் காகரின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி சோதனைப் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.

·         அமெரிக்காவானது உலக சுகாதார அமைப்புடனான (WHO - World Health Organisation) தனது உறவை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொண்டது.

·         WHOவிற்கு வழங்கப்படும் நிதியை இதர உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் நிதியை எதிர்பார்க்கும் உலகளாவியப் பொதுச் சுகாதாரத் தேவைகளுக்கும் அவசரமாக நிதி தேவைப்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

·         கேரளா கண்ணாடியிழை வலையமைப்புத் திட்டம் (K-FON/Kerala Fibre Optic Network) எனப்படும் கேரள மாநிலத்தின் முதன்மைத் திட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

·         K-Fon திட்டத்தின் கீழ் கேரள மாநில அரசானது மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் அலுவலகங்களையும் கண்ணாடியிழை அமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

·         மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இந்தியத் தேசிய சிறப்பு மாதிரியைத் தொடங்கியுள்ளது.

·         இந்த மாதிரியானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவலைக் கண்காணிப்பதற்காக உதவுகின்றது.

·         சர்வதேச எவரெஸ்ட் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று அனுசரிக்கப் படுகின்றது.

·         நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஆகியோர் 1953 ஆம் ஆண்டு மே 29 அன்று முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது. இந்த மலை உச்சியை அடைந்த முதலாவது நபர்கள் இவர்களே ஆவர். ஐக்கிய நாடுகள் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாகப் பறை சாற்றியுள்ளது.

·         ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டு முதல் ஜுன் 01 ஆம் தேதியை உலகப் பெற்றோர்கள் தினமாக அறிவித்துள்ளது. “என் வாழ்க்கை என் யோகாபோட்டி என்பது ஒரு காணொளி வலைப் பதிவகப் போட்டியாகும். இது மத்திய ஆயுஷ்துறை அமைச்சகம் மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகள் ஆணையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.

·         கோவிட் – 19 ஆனது நாட்டின் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களால் கையாளப்பட்ட முதலாவது தேசிய அளவிலான இந்திய உயிரியல் பேரிடராகும்.

·         பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மத்திய உள்துறை அமைச்சத்தினால் வழங்கப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தங்களுக்குத் தகுந்த விதிகளை அதற்காக வேண்டி வகுத்துக் கொள்ளலாம்.

·         மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT - Information Tecchnology) அமைச்சகம் & IT தொழிற்துறை அமைப்பானநாஸ்காம்ஆகியவை இணைந்து இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியுள்ளது.

·         இந்தத் தளமானது செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளின் வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

·         “PM CARES” நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின்  கீழ்ஒரு பொதுத் துறை ஆணையம் அல்லஎன்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

·         எனவே RTI சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் இந்த நிதி குறித்து எந்தவொரு  தகவலையும் வழங்க மறுக்கலாம்.

·         இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துத் தர நிர்ணயக் கட்டுப்பாட்டு ஆணையமானது 

·         ஜிலெட் அறிவியல் என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர்என்பதின்  மீதான சந்தைப்படுத்துதல் அங்கீகாரத்திற்காக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

·         ரெம்டெசிவிர் மருந்தானது எபோலா நோய்ப் பாதிப்பின் போது பயன்படுத்தப் பட்டது.

·         வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கோவாவில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்த 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளானது தற்பொழுது கோவிட் தொற்றுநோய் வெடிப்பின் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

·         இந்தப் போட்டியின் 35வது பதிப்பானது 2015 ஆம் ஆண்டில் கேரளாவில் நடத்தப் பட்டது.

·         சீன நாடானது பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதைக் கட்டமைப்பின் கீழ் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாயும் ஜீலம் நதியின் மீது 1124 மெகா வாட் திறன் கொண்ட ஒரு ஆற்றல் திட்டத்தை அமைக்க இருக்கின்றது.

·         இந்த மிகப்பெரிய ஆற்றல் திட்டமானது கொஹாலா நீர்மின் திட்டம் என்று அழைக்கப் படுகின்றது.

·         மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜூ இந்திய சமூகப் பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

·         இந்தத் திட்டமானது பள்ளிகளில் விளையாட்டுக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.

·         சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 02 அன்று அனுசரிக்கப் படுகின்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது ஆனது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் காலால் இயக்கப்படும் ஒரு மின் தூக்கியைச் செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளது.

·         இது இந்தியாவிலேயே இம்மாதிரியில் முதல் முறையிலான மின் உயர்த்திப் பொறிநுட்பமாகும். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி டெல்லியில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் இந்திய மையத்தைத் திறந்து வைத்துள்ளார்.

·         இது காகிதமற்ற முறையில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தித் தருகின்றது.

·         ஆர்.ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் தலைமைக் காவல்துறை இயக்குனராகப் பொறுப்பேற்க உள்ளார்.

·         இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜெனீவாவுக்கு வருகை தந்ததை நினைவில் கொண்டு சுவிட்சர்லாந்து அரசானது மே 26 ஆம் தினத்தை அறிவியல் தினமாக அறிவித்துள்ளது.

·         அமெரிக்காவின் கார்மென் ரெய்ன்ஹார்ட் என்பவர் இரண்டு வருடக் காலத்திற்கு உலக வங்கியின் துணைத் தலைவராகவும் அதன் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.

·         இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில்  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

·         அறிவியலாளர் சர் ஜேம்ஸ் டைசன் முதல் முறையாக சண்டே டைம்ஸ் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

·         பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.

·         இது மகப்பேறு உரிமைகளுக்கான பெண்களின் உலகளாவிய வலையமைப்பு என்ற அமைப்பால் (WGNRR - Women’s Global Network for Reproductive Rights) ஒருங்கிணைக்கப் படுகிறது.

·         அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மின்சார விமானமான செஸ்னா கேரவன் அதன் முதல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது.

·         இந்த மின்சார விமானத்தின் பொறி இயந்திரம் (என்ஜின்)  மேக்னிக்ஸ் என்ற நிறுவனத்தால்  தயாரிக்கப்பட்டுள்ளது.

·         ஃபோர்ப்ஸின் பத்திரிக்கையின் வருடாந்திர பட்டியலின் படி சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக உலகின் அதிக சம்பளம் பெறும் ஒரு தடகள விளையாட்டு வீரரராக குறிப்பிடப் பட்டுள்ளார்.

·         ஜப்பானின் நவோமி ஒசாகா என்பவர் அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரராக உருவெடுத்துள்ளார். தனது சக டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை முந்திய முதல் பெண் விளையாட்டு வீரர் இவர் ஆவர்.

·         ரஷ்யா அணுசக்தியால் இயங்கும் தனது ஸ்கிஃப் என்ற ஏவுகணையைச் சோதனை செய்து வருகிறது. இது 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

·         இது உலகின் மிகப்பெரிய அழுக்கு சர்வநாசகார குண்டு” (டூம்ஸ்டே  - உலகத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நாள்) என்று அழைக்கப் படுகிறது.

·         உலக செரிமான சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

·         2020 ஆம் ஆண்டுப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ஆனது "குடல் நுண்ணுயிர்க் கட்டு (Gut Microbiome): ஓர் உலகளாவியப் பார்வை" என்பதாகும்.

·         ஏடிஐபி திட்டம்: திவ்யாங்ஜனுக்கு உதவி எய்ட்ஸ் முதல் விநியோகம்

·         ஜூன் 16: சர்வதேச குடும்ப பணம் அனுப்பும் நாள்

·         செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டுடன் இந்தியா இணைகிறது

·         சிப்ரி ஆண்டு புத்தகம்: இந்தியா மற்றும் சீனாவின் அணு ஆயுதங்கள் அதிகரிக்கின்றன

·         கெயில், பெட்ரோனெட் இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு ஆன்லைன் வர்த்தக தளத்தில் சேர்கின்றன

·         கேத்தி லூடர்ஸ் நாசாவின் மனித விண்வெளி விமான திட்டத்தின் முதல் பெண் தலைவரானார்

·         பெருநிறுவன நொடித்து தீர்க்கும் செயல்முறை குறித்த ஆலோசனைக் குழுவை ஐபிபிஐ மறுசீரமைக்கிறது

·         ஜே & கே: ஆர் சி ஸ்வைன் புதிய சிஐடி தலைவராக நியமிக்கப்பட்டார்

·         .சி..சி.ஐ வங்கி சம்பளக் கணக்குகளுக்காகஇன்ஸ்டா ஃப்ளெக்ஸிகாஷ்காகிதமற்ற ஓவர் டிராஃப்ட் வசதியை அறிமுகப்படுத்துகிறது

·         அமைச்சர் கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் ஜெர்மிபானை தொடங்கினார்

·         பெல்ஜியம் இராச்சியத்தின் இந்தியாவின் அடுத்த தூதராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டார்

·         மாயா நாயர் கிரிசில் லிமிடெட் இயக்குநர் மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

·         சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்= ஜூன் 12

·         இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற இடம்= கொல்கத்தா.

·         இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்= கேரளா

·         வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தரவுத்தளம்=ஸ்வதேஷ்

·         உலக தடுப்பூசி கூடுகை காணொளி மூலமாக நடைபெற்ற நாடு =இங்கிலாந்து.

·         இந்தி உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்= பி.ஆர். ஜெய்சங்கர்.

·         மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிருமிநாசினித் தெளிப்பானை உருவாக்கியுள்ளது.இந்தத் தெளிப்பான் “ANANYA” என்று பெயரிடப் பட்டுள்ளது.இது நீரினால் செயல்படும் ஒரு தெளிப்பான் ஆகும்.

·         கேரளா மாநில வரலாற்றில் முதல் பெண் பழங்குடியின துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா சுரேஷ் கோழிக்கோடு மாவட்டத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். 

·         திருச்சி ரயில் நிலையம் பசுமை தங்கம் சான்றிதழ் பெற்றது.

·         இந்திய இசைக் கலைஞரான ஷோபா சேகர் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் உயர் விருது வழங்கப்பட்டது.

·         குஜராத் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு.தற்போது 674 என்று எண்ணிக்கையில் சிங்கங்கள் உள்ளன.

·         மெர்கர் என்ற நிறுவனம் வெளியிட்ட 26 வது உலக பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை நகரம் 60 வது இடத்தில் உள்ளது.

·         தமிழகத்தின் சமத்துவபுரம் திட்டம் போல் கேரளாவில் தொடங்க பட்டுள்ள திட்டம் =மக்கள் கிராமம்.

·         இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மண் வள விஞ்ஞானி ரத்தன் லால் அவர்களுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.

·         மும்பையில் தொடங்கப்பட்ட அதிநவீன வெள்ள எச்சரிக்கை அமைப்பு

·         வைஸ் அட்மிரல் பிஸ்வாஜித் தாஸ்குப்தா ENC இன் தலைமை பணியாளராக பொறுப்பேற்கிறார்.

·         மூத்த கவிஞர் குல்சார் டெஹ்ல்வி கோவிட் -19 ல் இருந்து மீண்டு காலமானார்.

·         ஷாஹகர் மித்ரா திட்டம் தொடங்கப்பட்டது.

·         ஃபிஃபா தரவரிசை: இந்தியா 108 வது இடத்தைப் பிடித்துள்ளது

·         சர்வதேச அல்பினிச விழிப்புணர்வு நாள் ஜூன் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது

·         என்..ஆர்.எஃப் தரவரிசை 2020 வெளியிடப்பட்ட சமீபத்திய புதுப்பிப்புகள்: ..டி மெட்ராஸ், ..எஸ்.சி பெங்களூர், ..டி டெல்லி முதல் 3 நிறுவனங்கள்.

·         ஷோபா சேகர் "ஆஸ்திரேலியாவின் பதக்கத்தின் பதக்கம்" வழங்கினார்

·         ஐரோப்பிய கோப்பை வென்ற டோனி டன்னே காலமானார்

·         கியூஎஸ் உலக தரவரிசை 2021: முதல் 200 இடங்களில் மூன்று இந்திய பல்கலைக்கழகங்கள்

·         தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் 7.87 கிலோ மீட்டர் நீளமுடைய ஈரடுக்கு கொண்ட ஒரு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். இது இம்மாநிலத்தின் மிக நீண்ட மேம்பாலமாக விளங்குகின்றது.

·         இந்த மேம்பாலம்புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா ஈரடுக்கு மேம்பாலம்என அழைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

·         தமிழ்நாடு மாநில அரசானது தமிழ்நாடு முழுவதும் உள்ள 1018 சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களின் பெயரை, அவற்றின் தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிப் பெயரிட்டுள்ளது. 

·         இது தமிழ்நாடு அரசின் மாநிலத் தமிழ் அலுவல் மொழி, தமிழகக் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

·         மத்திய உள்துறை அமைச்சகமானது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலன்களை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றினைத் திரும்பவும் மாற்றியமைத்துள்ளது.

·         இது மத்திய உள்துறை இணையமைச்சரான G. கிஷன் ரெட்டி என்பவரைத் தலைவராகக் கொண்டும், நாடு முழுவதிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களை அதன் உறுப்பினர்களாகக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

·         கழிவு மேலாண்மையில் தலைசிறந்து விளங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமானரெசிக்கல்என்ற நிறுவனமானது நீடித்த நெகிழிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் இந்துஸ்தான் கோகோ-கோலா குளிர்பான நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

·         இது இந்திய அளவிலான பங்களிப்பாகபிரித்திவி திட்டம் என்று அழைக்கப் படுகின்றது.

·         கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விண்வெளி வல்லுநரான ரஞ்சித் குமார் என்பவருக்கு நாசாவின் புகழ்பெற்ற சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

·         இது நாசாவின் சேவை விருதைப் போன்றே ஆனால் அரசு சாராத வல்லுநர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும். 

·         மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் தேசியக் கூட்டுறவு வளர்ச்சி ஒத்துழைப்பினால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பானசஹாக்கர் பித்ரா : உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

·         இந்தத் திட்டமானது இளம் தொழில் நிபுணர்களின் புத்தாக்கக் கருத்துகளை அணுக வேண்டி கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.

·         இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையமானது மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் தொலைதூர முறையிலான மருத்துவத்தைச் சேர்ப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

·         இந்தியாவின் 800 மீ ஓட்டப்பந்தய வீரரான கோமதி மாரிமுத்து என்பவருக்கு, ஊக்க மருந்து உட்கொண்டதற்காக 4 ஆண்டுக் காலத்திற்கு தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

·         கடந்த ஆண்டில் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் வென்ற தங்கப் பதக்கம் இவரிடமிருந்துப் பறிக்கப்பட இருக்கின்றது.

·         இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதலாவது உள்கட்டமைப்புத் துறை அமைப்பாக உருவெடுத்து உள்ளது.

·         இது தரவு தளம் (Data Lake) மற்றும் திட்ட மேலாண்மை என்ற மென்பொருளின் மூலம் முழுமையாக நிகழ்நேரத் தளத்திற்கு மாறியுள்ளது.

·         சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வரான ஜெய் ராம் தாக்கூர் அம்மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள மூத்தக் குடிமக்களுக்காக வேண்டி பஞ்சவதி யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

·         இந்தத் திட்டமானது மூத்தக் குடிமக்கள், அவர்களது ஓய்வு நேரங்களில் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் செலவிட உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

·         சமீபத்தில் ஆந்திரப்பிரதேச மாநில முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டிஜெகனன்னா செடோடூஎன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

·         இந்தத் திட்டமானது முடி திருத்துபவர்கள், தையல்காரர்கள், சலவை செய்பவர்கள் ஆகியோருக்கு ரூ.1000 நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

·         மின்னணு வணிக நிறுவனமான அமேசான் நிறுவனமானது காவல் துறையினால் பயன்படுத்தப்படும் “Rekognition” என்ற தனது மென்பொருள் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது.

·         இந்த மென்பொருளானது காவல்துறையின் தரவு தளங்களில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை விரைவாக ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப் படுகின்றது.

·         முதலாவது இந்தியக் காட்டெருமைக் கணக்கெடுப்பானது (Indian Bison) பிப்ரவரி மாதத்தில் நீலகிரி வனப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டது.

·         இந்தக் கணக்கெடுப்பில் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 2000 இந்தியக் காட்டெருமைகள் வசிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

·         தேசிய வேலைவாய்ப்பு கொள்கை. 116 மாவட்டங்களில் குடியேறுபவர்களுக்காக ₹ 50,000 கோடி கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் தொடங்க பிரதமர்: எஃப்.எம்.

·         யு.என்.எஸ்.சி.யின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

·         2019 ஆம் ஆண்டில் இந்தியா அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் 9 வது இடத்தில் உள்ளது, தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும்: .நா.

·         வோல்கன் போஸ்கிர் 75 வது .நா பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

·         எச்.டி.எஃப்.சி எர்கோ நாட்டின் முதல் ட்ரோன் அட்டையை அறிமுகப்படுத்துகிறது

·         கெலோ இந்தியா சிறப்பான மையங்களை நிறுவ விளையாட்டு அமைச்சகம்.

·         ஜூன் 18 அன்று சர்வதேச சுற்றுலா தினம் அனுசரிக்கப்பட்டது

·         சர்வதேச வெளிறல் தன்மை தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 13 அன்று அனுசரிக்கப் படுகின்றது.

·         இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பிரகாசித்தலை ஏற்படுத்துதல்என்பதாகும்.

·         சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை குழந்தைத் தொழிலாளர் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

·         இந்த அறிக்கையானதுகோவிட் – 19 மற்றும் குழந்தைத் தொழிலாளர் : நெருக்கடிக் காலம், செயல்படுவதற்கான நேரம்என்ற தலைப்பின் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.

·         பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது “Germiklean” என்ற ஒரு கிருமிநாசினி  அறையை உருவாக்கியுள்ளது.

·         இது பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சீருடைகள் மேல் கிருமிநாசினி பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு கிருமிநாசினி அறையாகும்.

·         கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2019 ஆம் ஆண்டில் மிக அதிகமாக அமேசான் பகுதியில் காடுகளின் அழிப்பானது நடைபெற்றுள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

·         2019 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அதிபராக ஜெய்ர் போல்சனரோ பதவியேற்ற பிறகு இந்தப் பகுதியில் காடுகளின் அழிப்பானது அதிகரித்துள்ளது.

·         நியூசிலாந்து, பிஜி, மோன்டிங்க்ரோ, தான்சானியா, வாடிகன், செசல்ஸ், பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற நாடுகள் தங்களை கோவிட் – 19 நோய்த் தொற்றற்ற நாடுகளாக அறிவித்துள்ளன.

·         பஞ்சாப் மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றை ஒழிப்பதற்கு வேண்டி வீடுகளுக்கேச் சென்று ஆய்வை மேற்கொள்வதற்காககர் கர் நிகரானிஎன்ற ஒரு கைபேசிச் செயலியைத் தொடங்கியுள்ளது.

·         ஐஐடிகரக்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பொது இடங்களில் சமூக விலகலைக் கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இணைய வழியிலான ஒரு நேரடிக் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

·         சமீபத்தில் மிகவும் புகழ்பெற்ற முதுபெரும் உருதுக் கவிஞரான ஆனந்த் மோகன் சூட்சிகுல்சர்தெஹல்வி என்பவர் காலமானார்.

·         இந்திய அரசினால் உருது மொழியில் வெளியிடப்படும் ஒரே அறிவியல் பத்திரிக்கையானசயின்ஸ் கீ துனியாஎன்பதின் ஆசிரியர் குல்சர் ஆவார்.

·         சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் அரசானது வளர்ப்புப் பறவைகள் (கோழி) கொள்கை, 2020 என்ற கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

·         சிலி மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டகோனியப் பகுதியில்மகலன்டோன் பைகாஷ்கென்க்என்று அழைக்கப்படும் ஒரு உயிரினத்தின் பற்களைக் கண்டறிந்துள்ளனர். இது 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். 

·         இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியானபரோடா வங்கியானதுதனது கடன் வழங்கும் நடவடிக்கைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.

 • உத்தரப் பிரதேச மாநில அரசானது, அம்மாநிலத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்குக் கல்வி அளிப்பதற்காகபால் சிராமிக் வித்யா யோஜனாஎன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 • பெப்சிகோ என்ற அமைப்பானதுவாட்டர் எய்டுஎன்ற நிறுவனத்துடன் இணைந்து மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக அளவு நீர்ப் பற்றாக்குறை  அபாயமுள்ள பகுதிகளில் பெண்களுக்கு உதவுவதற்காகவும் வேளாண் சமூகத்தினருக்குப் பாதுகாப்பான குடிநீர் அணுகலை உறுதி செய்வதற்காகவும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
 • கர்நாடக மாநில அரசானது சிராவதி உப்பங்கழிப் பகுதியில் உள்ள ஒரு மனிதர்கள் வாழாத தீவில் குரங்குப் பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
 • யக்சகானாநாடகக் கலையின் ஒரு வகையானதாலமாடல்என்ற ஒரு பாரம்பரியக் கலை என்பது கர்நாடகா மற்றும் கேரளாவின் காரவலி மற்றும் மலநாடு பகுதியில் நடைபெறும் உரையாடல் கலை மற்றும் விவாதக் கலை போன்றவற்றில் ஒரு பாரம்பரிய வடிவமாகும். 
 • ராஜ பிரபா திருவிழாவானது ஒடிசாவில் கொண்டாடப்பட்டது. இது பூமித் தாய் (பூமி தேவி) மற்றும் தாய்மார்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது
 • தெலுங்கானாவில், ஹைதராபாத் நகர காவல்துறையினர், ஹைதராபாத் நகர பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து, உள்நாட்டு வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் STREE (She Triumphs through Respect, Equality, and Empowerment) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 • 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்க பால ஷ்ராமிக் வித்யா யோஜனா என்ற திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
 • விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவரான கேத்ரின் சல்லிவன்.தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
 • நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூதர்ஸ் என்ற பெண் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்குஆர்ட்டிமிஸ்எனப் பெயரிடப்பட்டுள்ளது.2024–ம் ஆண்டில்ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனமானது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நிமோனியா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய இருக்கின்றது.
 • இது தடுப்பு மருந்துகள் மற்றும் ஏமவுயிரியல் மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
 • தில்லி மாநில அரசானது ராதா சுவாமி ஆன்மீக மையத்தை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஒரு சிறப்பு மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
 • இந்த மையமானது உலகில் உள்ள மிகப்பெரிய கோவிட்-19 சிறப்பு மையமாக விளங்க இருக்கின்றது.
 • மத்திய ஆயுஷ் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்காகவீட்டிலேயே யோகா, குடும்பத்துடன் யோகாஎன்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
 • சமீபத்தில் கேரள மாநில அரசானதுமுதல் மணி” (First Bell) என்ற ஒரு மெய்நிகர் பள்ளி வகுப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
 • ஒடிசா மாநில அமைச்சரவையானதுபந்தே உத்கல் ஜனனிஎன்ற பாடலுக்கு மாநிலப் பாடல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
 • இது கண்டகபி லட்சுமிகாந்த் மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட ஒரு தேசப் பற்று மிக்கக் கவிதையாகும்.
 • மேற்கு வங்காள மாநிலமானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக அம்மாநிலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களுக்காக வேண்டிகர்மபூமிஎன்ற ஒரு வேலைவாய்ப்புத் தளத்தைத் தொடங்கி உள்ளது.
 • தெலுங்கானாவில் ஹைதராபாத் நகரக் காவல் துறையானதுஇவள் மரியாதை, சமத்துவம் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் வெல்வாள்” (STREE - She Triumphs through Respect, Equality, and Empowerment) என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 • இது குடும்ப வன்முறை மற்றும் கொடுமைப்படுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உதவி செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
 • சர்வதேச சுற்றுலா தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 18 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
 • வரலாற்று அறிஞரான தின்யார் படேல்நௌரோஜி : இந்திய தேசியவாதத்தின் முன்னோடிஎன்ற ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
 • கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் அணுக (வாங்க) இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இந்த முன்னுரிமை அடிப்படையிலான உள்ளூர்ச் சந்தையானதுதடுப்பு மருந்து மீதான தேசிய வாதம்என்று அழைக்கப்படுகின்றது.
 • சீனா கடைசியாக பீடோ சேட்டிலைட் சிஸ்டத்தை ஏவியது.
 • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் புது தில்லியில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான யுக்டி 2.0 தளத்தை தொடங்கினார்.
 • ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் (ஏடிடி) சேர சீனா முடிவு செய்துள்ளது.
 • ராஜஸ்தான் அரசு இந்திரா ரசோய் யோஜ்னாதொடங்க உள்ளது.
 • வாங்கும் திறன் சமநிலையில் இந்தியா 3 வது பெரிய பொருளாதாரமாக உள்ளது;  சீனா, யு.எஸ்.
 • செர்பியா தேர்தல்: நிலச்சரிவு வெற்றியை ஜனாதிபதி வுசிக் அறிவித்தார்.
 • ரூ.  அரசு நடத்தும் COVID மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை வழங்க PM PARES நிதியத்தால் 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை UNRWA க்கு உறுதியளிக்கிறது.
 • சமீபத்தில் புதிய கொரானா வைரஸ் சார்ஸ் Cov-2 நோய்த் தொற்றானது நெதர்லாந்தில் மென் பயிர்த் தோல் கொண்ட ஒரு சிறிய விலங்கில் பரவத் தொடங்கியுள்ளது.
 • ஒரு நுண்ணுயிரி மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவினால், அது தலைகீழ் நிலையிலான விலங்கு வழிப் பரவும் நோய் என்று அழைக்கப் படுகின்றது.
 • திரிபுரா மாநில அரசானது பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
 • இந்தத் திட்டமானது ஏக்து கேலோ, ஏக்து பதோ” – “கொஞ்சமாக விளையாடு, கொஞ்சமாக படிஎன்ற பெயர் கொண்ட ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கின்றது.
 • அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள காமக்கியா ஆலயத்தில் 1565 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் அம்புபாச்சி மேளா என்ற திருவிழாவானது தற்பொழுது முதன்முறையாக நடத்தப் படாது.
 • காமக்கியா ஆனது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
 • கொரானா வைரஸின் சிகிச்சை முறைக்காக வேண்டி மருந்து நிறுவனங்களால் இந்தியாவில் 3 மருந்துகள் (பேபி ப்ளு, சிப்ரெமி, கோவிபோர்) அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
 • கிளென்மார்க் மருந்து நிறுவனமானது சாதாரணது முதல் கடுமையான கொரானா வைரஸ் சிகிச்சைக்காக பேபிப்ளு என்று பெயரிடப்பட்ட ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
 • நொய்டா மெட்ரோ இரயில் நிலையத்தின் 50வது பகுதியானது நொய்டா மெட்ரோ இரயில் கழகத்தினால் திருநர் சமூகத்திற்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 • லாரன்ட் பொக்கிலெட் என்பவர் உலகளாவிய வளர்ச்சியின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளதாக உலகத் தடகள அமைப்பு அறிவித்துள்ளது.
 • ஆர்ஐசி/RIC (ரஷ்யா இந்தியா சீனா / Russia – India - China) நாடுகளின் சந்திப்பானது இரண்டாம் உலகப் போரின் 75வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப் பட்டது. 
 • பதஞ்சலி நிறுவனமானது கொரொனில்” “சவசரி வாத்திமற்றும் அனு தைலம் என்ற தனது ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 • இந்த மருந்தின் மூலம் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் உரிமை கோருகின்றது. 
 • கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் புனித யாத்திரையானது குறைந்த அளவிலான நபர்களைக் கொண்டே நடத்தப்படும்என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 
 • மெக்கா புனித நகரில் நடத்தப்படும் ஹஜ் புனித யாத்திரையானது முஸ்லீம்கள் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றது. 
 • அமெரிக்க அரசானது அந்த நாட்டுப் பணிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை பச்சை அட்டைமற்றும் புலம்பெயர்ந்த பணி நுழைவு இசைவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
 • அண்டர்டேக்கர்என்று வெகுவாக அறியப்படும் மார்க் வில்லியம் காலவே என்பவர் ஒரு அமெரிக்கத் தொழில்சார் மல்யுத்த வீரராவார். 
 • இவர் உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
 • அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்பவரை தேசிய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்துள்ளார். 
 • சுப்ரா சுரேஷ் என்பவருக்குப் பிறகு இந்தப் புகழ்பெற்ற அறிவியல் பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கர் இவராவார். 
 • கோவிட் – 19 பிரச்சினைக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஐரோப்பாவில் தேசிய அளவிலான தேர்தலை நடத்திய முதலாவது நாடு செர்பியா ஆகும். 
 • இந்தியாவானது அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தூரக் கிழக்கில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உறுதி அளித்துள்ளது. 
 • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கலில் ஒரு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலையைத் திறந்து வைத்தார். 
 • இந்த ஆலையானது 25 கோடி செலவில் இந்திய எண்ணெய்க் கழகத்தினால் அமைக்கப் பட்டுள்ளது. 
 • நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் 2020 ஆம் ஆண்டிற்கான ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் புகழ்பெற்ற அமைதிப் பரிசை வென்றுள்ளார்.

Tnpscshouters

அனைவருக்கும் வணக்கம்எங்கள் தளத்தில் உள்ள  TNPSC  பொது அறிவியல் மற்றும் பொது தமிழ், HISTORY AND CULTURE OF INDIA வரலாறு , INDIAN NATIONAL MOVEMENT, புவியியல் GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம். 

NAME:  MR. SATHAM HUSSAIN M
A/C NO:  00000033476794994

BANK: STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE: 
SBIN0015633
MICR CODE:
625002071

BRANCH: NAGAL NAGAR

CONTACT NO:  9698271399 {NIZAM} / 9698694597 {SATHAM}

MAIL ME: TNPSCSHOUTERS@GMAIL.COM

WEB: WWW.TNPSCSHOUTERS.COM