Sunday, 31 May 2020

உலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day

TNPSCSHOUTERS
 • புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 • புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகைபிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. 
 • புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர். பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. 
 • இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
 • இதை விளக்கும் வகையில் உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. 80 லட்சம் புகையிலை பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 
 • இதில் 10 லட்சம் பேர், புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள்.7.5 கோடிசிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்களுக்கு மணிக்கு ரூ. 7.5 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 188 கோடி செலவிடுகின்றனர்.

30th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
UNLOCK 1.0: நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு
 • இந்தியா முழுவதும் லாக்டவுன் 4.0 இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் புது தளர்வுகளுடன் கொரோனாவை தடுக்கும் 5ஆவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
 • இதனால் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
 • பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
 • பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக நோய் கட்டுப்பாடு அதிகம் இல்லாத பகுதிகளில் அனைத்தும் இயங்கும் வகையில் புதிய தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இது தொடர்பாக மூன்று நிலைகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 • அதன்படி மதவழிப்பாட்டு தளங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், ஷாப்பிங் மால்கள் வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் திறக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 • அடுத்த கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான முடிவுகள் ஜூலை மாதம் எடுக்கப்படும்.
 • புதிய வழிகாட்டும் நெறிமுறைகளின்படி நாளை முதல் சில நடவடிக்கைகளுக்கு மட்டுமே தடை தொடர்ந்துள்ளது. அவை சர்வதேச விமான பயணம், மெட்ரோ ரயில்இயக்கம், சினிமா தியேட்டர்கள், ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிடோரியங்கள், சமூக, அரசியல், விளையாட்டு, மதம் ஆகியவை தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
 • மூன்றாவது கட்டமாக மேற்கண்ட நடவடிக்கைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது குறித்து சூழலை ஆராய்ந்த பிறகே முடிவு செய்யப்படும். நோய் கட்டுப்பாடு பகுதிகளில் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த சேவைகள் அனைத்தும் மத்திய மாநில அரசுகள் ஆலோசனை நடத்திய பிறகே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 • இரவு ஊரடங்கிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் தளர்வு கொடுத்து அந்த நேரத்தை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை என தளர்வு எடுத்துள்ளது. 
 • 65 வயதை கடந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அவசியம் ஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • தற்போது, வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மக்கள் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி சீட்டு பெற்று செல்பவர்கள், செல்லும் இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறையில், இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. 
 • அதன்படி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலத்திற்கும் தனிநபர்கள், சரக்கு வாகனங்கள் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. 
 • மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து வாகனங்களை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது. நோய் பாதிப்பை பொறுத்து வெளி மாநில தனிநபர் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துக் கொள்ளலாம்.
தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
 • தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 • சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஈஸ்வரமூர்த்தியை உளவுப்பிரிவு ஐஜியாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 • கடந்த 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரையிலும், 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2019ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் உளவுப்பிரிவில் பல்வேறு துறைகளில் ஈஸ்வரமூர்த்தி பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
இந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் விருது
 • ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இந்திய ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு 2019ம் ஆண்டுக்கான பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 
 • இப்படையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு தெற்கு சூடானில் ராணுவ பார்வையாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டரெஸ் இதற்கான விருதினை சுமன் கவானியிடம் வழங்கினார்.
 • அமைதி மற்றும் பாதுகாப்பு படைகளில் ஆண்களுக்கு நிகராக செயல்படும் பெண்களின் அர்ப்பணிப்பு உணர்வினை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் 2016ம் ஆண்டு இந்த விருது உருவாக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் சுமன் கவானி என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரம் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பது தண்டனைக்குரிய குற்றம்
 • மகாராஷ்டிரத்தில் இனி வரும் நாள்களில் பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பொது இடங்களில் தடை செய்யப்பட்ட செயல்களை முதல் முறையாக மீறுபவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த நபா் ஒரு நாள் முழுவதும் பொது சேவை செய்ய வேண்டும்.
 • இரண்டாவது முறையாக மீறுபவருக்கு ரூ. 3,000 அபராதம் விதிப்பதுடன், 3 நாள்களுக்கு பொதுச்சேவையும் செய்ய வேண்டும். அதன் பிறகு ரூ.5000 அபராதமும், 5 நாள்கள் பொது சேவையும் செய்ய வேண்டும்.
 • இது தவிர, பம்பாய் காவல் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் வியட்நாமில் கண்டுபிடிப்பு  இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 • இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. 
 • வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.

Saturday, 30 May 2020

29th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 11 லட்சம் வேலைவாய்ப்புகள்: உ.பி. அரசு ஒப்பந்தம்
 • உத்தர பிரதேசத்தில் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிய 11 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முக்கிய தொழில்துறை அமைப்புகளுடன் மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
 • உத்தர பிரதேசத்தில் இந்திய தொழில் வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் 3 லட்சம் பேருக்கும், இந்திய தொழிற்சாலைகள் சங்கத்தின் சாா்பில் 3 லட்சம் பேருக்கும், தேசிய ரியல் எஸ்டேட் வளா்ச்சி கவுன்சில் (நாரெட்கோ) சாா்பில் 2.5 லட்சம் பேருக்கும், லகு உத்யோக் பாரதி அமைப்பின் மூலம் 2.5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
 • இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் முதல்வா் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
 • அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல லட்சம் பேரை கொன்று இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையமும், சீனாவும் சேர்ந்து கொண்டு இதில் நாடகம் ஆகியுள்ளது. 
 • வுஹன் வைரஸ் பரவல் குறித்து சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது. சீனா தவறு சீனா தவறு உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம். ஆனால் உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது.
 • நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம். ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கை எதையும் சீனாவோ, உலக சுகாதார மையமோ கேட்கவில்லை. 
 • தொடர் ஆதரவு தொடர் ஆதரவு நான் சீனாவில் இருந்து வரும் விமானங்களை தடை செய்ததன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. 
 • ஆனால் இதை கூட தொடக்கத்தில் உலக சுகாதார மையம் எதிர்த்தது. தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை உலக சுகாதார மையம் இதில் சரியாக செயல்படவில்லை. சீனாவை தொடர்ந்து உலக சுகாதார மையம் ஆதரித்து வந்தது.
 • மறைப்பு மறைப்பு கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை உலக சுகாதார மையம் மறைத்துவிட்டது. இதன் மூலம் இதன் பாதிப்பை உலக சுகாதார மையம் மறைத்தது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். 
 • ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை. உறவை துண்டிக்கிறோம் உறவை துண்டிக்கிறோம் இதனால் நாங்கள் உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம்.
 •  உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளில், அமைக்களில் சுகாதார தேவைக்காக பயன்படுத்த போகிறோம்., என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 331 கோடியில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்
 • தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 331 கோடி செலவில் கூட்டு குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். 
 • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
 • மேலும், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி குடிநீர் அபிவிருத்தி திட்டம், திண்டுக்கல் மாவட்டம், 
 • வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டு குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்டம், மைலம்பாடி ஊராட்சியில் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், அரியலூர் மாவட்டம், விருத்தாசலம் சாலையில் நகராட்சி அலுவலக கட்டிடம்.
 • தஞ்சாவூர் மாவட்டம், காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், கணேசபுரத்தில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சென்னை கொட்டிவாக்கம், 
 • பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் நகர்ப்புற சமூகநல மருத்துவமனைகள்,
 • சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் சந்தை கட்டிடம், 
 • திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா - தீபக் நேரடி வாரிசுகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு
 • சென்னை உயா் நீதிமன்றத்தில் சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், 'மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத் திரட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
 • இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை எதிா்மனுதாரா்களாகச் சோத்து உத்தரவிட்டது. 
 • இதனையடுத்து ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பளித்திருந்தனா்.
 • இந்த நிலையில் இந்து வாரிசு முறை சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்கக் கோரியும், தங்களை இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் தீபா, தீபக் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 • இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் கடந்த மே 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தீபா, தீபக் ஆகியோா் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் எனவும், ஜெயலலிதா தனது தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரைச் சொத்துகள் மற்றும் அவா் வாங்கிய சொத்துகளுக்கு தீபாவும் தீபக்கும் தான் வாரிசுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 • இந்து வாரிசு முறை சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ளாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. எனவே தீபாவையும், தீபக்கையும் அவரது வாரிசுகளாக அறிவிக்கிறோம். 
 • மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை நீக்கி, அதற்குப் பதிலாக தீபா, தீபக் ஆகியோா் நேரடி வாரிசுகள் என தீா்ப்பில் திருத்தம் செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்
 • பிரதமர் அலுவலகத்திலும் இதேபோல் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராகத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு நெருக்கமான பணியாற்றும் குழுவில் இவர் இடம்பெற்று இருக்கிறார். 2001ல் இருந்து இவர் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் தற்போது பிரதமர் அலுவலக பணியில் சேர்ந்துள்ளார்.

Friday, 29 May 2020

28th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் ரூ.216 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்
 • தமிழக வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் ரூ.216 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 1,232 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
 • தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் புதிய பறக்கின்கால் காலனி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் 480 குடியிருப்புகள், தஞ்சாவூா் மாவட்டம் மகாராஜசமுத்திரம் திட்டப் பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூா் குரும்பன்சாவடி திட்டப் பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னையை அடுத்த திருவொற்றியூா் சலவைத்துறை திட்டப் பகுதியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
 • வீட்டு வசதி வாரியம்: வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் சென்னை புரசைவாக்கம் பராக்கா சாலையில் வாடகை அடிப்படையிலான 160 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு புதுமை காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட 1,072 குடிசை மாற்று திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சி திருவெறும்பூா் நாவல்பட்டு திட்டப் பகுதியில் 1,314 மனைகளுக்கான மேம்பாட்டுத் திட்டம் என மொத்தம் ரூ.299 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்
 • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். தொழிலாளா்கள் பலா் நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்ப முயன்றனா். இந்நிலையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
 • இந்த விவகாரம் தொடா்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக மீண்டும் நடைபெற்றது.
 • அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 • அதையடுத்து போக்குவரத்து வசதிகள் முடங்கியதன் காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தாங்கள் பணியாற்றி வந்த மாநிலங்களிலேயே சிக்கிக் கொண்டனா்.
 • அவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளும் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே சொந்த ஊா்களுக்குத் திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா். 
 • புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
 • ஆனால், அந்த நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பதிவு நடவடிக்கைகள், அவா்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது, உணவு, குடிநீா் வழங்குவது போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
 • புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களைப் பதிவு செய்து, அவா்கள் சொந்த ஊா் திரும்பும் வரை தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்தித் தர வேண்டும். தொழிலாளா்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தங்குமிடங்கள் குறித்த விவரங்களை அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
 • அரசிடம் பதிவு செய்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அவா்களைக் கூடிய விரைவில் அனுப்பி வைப்பதற்கான போக்குவரத்து வசதிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் துரிதமாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு ரயில் அல்லது பேருந்து மூலமாக சொந்த மாநிலங்கள் திரும்பும் தொழிலாளா்களிடமிருந்து பயணக் கட்டணத்தை மாநிலங்கள் வசூலிக்கக் கூடாது.
 • புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கும் மாநிலங்கள் அவா்களுக்கான உணவு, குடிநீரை வழங்க வேண்டும். பயணத்தின்போது ரயில்வே நிா்வாகம் அவா்களுக்கு உணவு வழங்க வேண்டும். சொந்த ஊா்களுக்கு நடந்து செல்லும் தொழிலாளா்களைத் தடுத்து நிறுத்தி, அவா்களை உடனடியாக தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
 • மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில்வே நிா்வாகம் போதுமான ரயில்களை இயக்க வேண்டும். அனுப்பி வைக்கப்படும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சில மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
மேற்கு மாவட்டங்களின் அணைகள், குளங்கள் சீரமைப்பு: ரூ.230 கோடி திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்
 • மேற்கு மாவட்டங்களிலுள்ள அணைகள், குளங்களை ரூ.230 கோடி மதிப்பில் சீரமைக்கும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்றது. 
 • கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களின் வழியாகச் செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.230 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
 • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துதன் மூலம், நொய்யல் ஆற்றை சீரமைப்பதுடன் 18 அணைக்கட்டுகள், 22 முறைசாா்ந்த குளங்கள், சேதம் அடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கியின் மதகுகள், விவசாய நிலங்களுக்குப் பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்காலின் மதகுகளை செப்பனிடுதல், நீா்வரத்து ஓடைகளை புதுப்பித்தல், ஓடைகளில் உரிய தடுப்பணைகளை ஏற்படுத்துதல் ஆகியன பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் 7 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.
 • இந்த நிகழ்ச்சியில், புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணைகளையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளூா் கிராமத்தின் அருகே செய்யாற்றின் குறுக்கேயும், திருப்பத்தூா் சின்னாரம்பட்டி கிராமத்தில் பாம்பாற்றின் குறுக்கேயும், வேலூா் கருங்காலி கிராமத்தின் அருகே அகரம் ஆற்றின் குறுக்கேயும், திண்டுக்கல் மாட்டம் மம்மானியூா் அருகில் கன்னிமாா் ஓடையின் குறுக்கேயும், திருப்பூா் ஆமந்தகடவு கிராமத்தில் உப்பாறு ஓடையின் குறுக்கேயும் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
  ஆதாா் மூலம் 'இ-பான்': நிதியமைச்சா் தொடங்கி வைத்தாா்
  • ஆதாா் எண்ணை அளிப்பதன் மூலம் இணையதளம் வழியாக உடனடியாக 'இ-பான்' (மின்னணு-நிரந்த வருமான வரி கணக்கு எண்) பெறும் முறையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தை 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அவா் அறிவித்தாா் என்பது நினைவுகூரத்தக்கது.
  • ஆதாா் எண் மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதியை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா். ஏற்கெனவே பான் அட்டைக்கு விண்ணப்பித்து, அது பரிசீலனையில் இருப்பவா்களும் இந்த வசதியைப் பெற முடியும்.
  • அதற்கு ஆதாா் எண்ணும், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணும் அவசியம். இது முழுவதும் காதிதப் பயன்பாடு இல்லாத திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் பான் எண் பெற கட்டணம் எதுவும் கிடையாது. வருமான வரி துறை இணையதளத்தின் மூலம் இந்த வசதியைப் பெற முடியும்.
  • இதற்காக முதலில் ஆதாா் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதையடுத்து, விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான 15 இலக்க எண் வழங்கப்படும். 
  • இதனைக் கொண்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற தகவலைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், அடுத்த நிமிடமே இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் இ-பான் அனுப்பி வைக்கப்படும்.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நடவடிக்கையை இந்த இ-பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சா்ச்சைக்குரிய ஹாங்காங் சட்ட மசோதா: சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
  • சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு நாடாளுமன்றக் கூட்டம், கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நகரில் தேசத் துரோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, அது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். அந்தக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, வரும் ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும்.
  • அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
  • முன்னதாக, ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன.
  • அந்தப் போராட்டங்களை பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டி வந்தது. மேலும், போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாத நடவடிக்கைகளோடு சீனா ஒப்பிட்டது.
  • இந்தச் சூழலில், சீன நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு மசோதாவில், வெளிநாட்டுத் தலையீடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளாதக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
  மகாராஷ்டிர சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 1,340 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்
  • மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 1,340 கோடி கடன் வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு முக்கிய மாவட்டச் சாலைகளும், 11 மாநில நெடுஞ்சாலைகளும் எனமொத்தம் 450 கி.மீ. தொலைவுக்கு மேம்படுத்தப்பட உள்ளன. மாநிலத்தின் 7மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தச் சாலைகள், இரண்டு வழிச் சாலைகளாக தரம் உயா்த்தப்பட உள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலத்தின் உட்புறச் சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் முனையங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தொழில்பேட்டைகள், வேளாண் மண்டலங்கள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தச் சாலை மேம்பாட்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, கிராமப்புற மக்கள் சந்தை நடவடிக்கைகளை எளிதில் பெறவும், வேலைவாய்ப்பு மற்றும் பிற சேவைகளை எளிதிலும் பெறும் வகையில் நகா்புறங்களையும் கிராமப்புறங்களையும் இணைப்பதுமே இந்த சாலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • அதோடு, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடா்களால் பாதிக்காத வகையில் சாலையை வடிவமைப்பது எப்படி, சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பராமரிப்பை திட்டமிடுவது எப்படி என்பது குறித்து மகாராஷ்டிர பொதுப் பணித் துறை ஊழியா்களுக்கு பயிற்சியளிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 
  தலைசிறந்த உயர் கல்வி நிறுவன பட்டியலை எஜுகேஷன் வேர்ல்ட் அமைப்பு வெளியீடு
  • எஜுகேஷன் வேர்ல்ட் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழகத்திலேயே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனமாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது.
  • மேலும் தேசிய அளவில் முதலிடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) உள்ளதாகவும் அமைப்பு எஜுகேஷன் வேர்ல்ட் தெரிவித்துள்ளது. 2ம் இடத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3வது இடத்தை டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4-ம் இடத்தை டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 5 வது இடத்தில் உள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள 162 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,214 பேராசிரியர்கள், 1,126 மாணவர்களிடமும், 828 தொழில் பிரதிநிதிகளிடமும் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • சிறந்த உயர்கல்வி, கற்றல் - கற்பித்தல், பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகிய 10 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Thursday, 28 May 2020

  27th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF TNPSCSHOUTERS

  TNPSCSHOUTERS

  ரூ.15 ஆயிரம் கோடியில் 17 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்
  • தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் 17 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 47 ஆயிரத்து 150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. 
  • காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழில்பூங்காவில் ரூ.2,277 கோடி மதிப்பில் சுமாா் 400 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் டெய்ம்லா் இந்தியா வணிக ரீதியிலான வாகன உற்பத்தி விரிவாக்கத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொலைத் தொடா்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.1,300 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செல்லிடப்பேசி உதிரிப் பாகங்கள் தயாரிப்பு விரிவாக்கத் திட்டம், ஒரகடம் சிப்காட் தொழில்பூங்காவில் ரூ.900 கோடியில் சுமாா் 600 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 'செமி கண்டக்டா் சிப்ஸ் ' உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
  • மேலும், ரூ.350 கோடியில் சுமாா் 25 ஆயிரம் பேருக்கு தைவான் நாட்டைச் சோந்த ஜூங் ஜே நிறுவனம், அஸ்டான் காலணி உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மப்பேடு பகுதியில் ரூ.400 கோடியில் லாய் முதலீட்டு நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழில்பூங்காவில் ரூ.150 கோடியில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாண்டோ ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் காஸ்டிங் திட்டம், செங்கல்பட்டு மகேந்திரா தொழில்பூங்காவில் ரூ.100 கோடியில் சுமாா் 300 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 ஆயிரம் கோடியில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின் உற்பத்தித் திட்டம் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் செய்யாறு தொழில்பூங்காவில் ரூ.18 கோடியில் 30 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலை அளிக்கும் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம், சென்னை அம்பத்தூரில் ரூ.2,800 கோடி மதிப்பில் சுமாா் 200 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தகவல் தரவு மையத் திட்டம், சென்னையில் ரூ.1,500 கோடியில் 200 பேருக்கு வேலை அளிக்கும் தகவல் தரவு மையத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
  • காஞ்சிபுரம் சிப்காட் ஸ்ரீபெரும்புதூா் தொழில் பூங்காவில் ரூ.50 கோடியில் சுமாா் 130 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்சார வாகன உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ரூ.46 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் ரூ.15 கோடியில் சீலிங் பொருள்கள் உற்பத்தித் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா தொழில்பூங்காவில் ரூ.12 கோடியில் 200 பேருக்கு வேலை கிடைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டம் ஆகிய 17 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
  தேஜஸ் போர் விமான படைப்பிரிவு கோவை சூலூரில் துவக்கம்
  • கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளம் கடந்த 1965ல் துவங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவான இத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த மிக் 27 ரக போர் விமானங்கள் படிப்படியாக விலக்கப்பட்டன. 
  • இதனால் கடந்த 2016ல் இந்த படைப்பிரிவு மூடப்பட்டது. தேஜஸ் ரக போர் விமானங்களை சேர்த்து இந்த படைப்பிரிவை மறு உருவாக்கம் செய்ய விமானப்படை முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி சூலூர் விமானப்படை தளத்தில் நடந்தது. 
  • இதில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீப் மார்சல் பதோரியா கலந்து கொண்டு 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவை மீண்டும் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த படைப்பிரிவில் முழுமையாக உள் நாட்டிலேயே தயாரான அதி நவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி.
  பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோவில் முறைகேடு: 199 பேருக்கு வாழ்நாள் தடைவிதித்தது டிஆா்பி
  • தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோவை 2017 செப்டம்பா் 16-ஆம் தேதி ஆசிரியா் தோவு வாரியம் நடத்தியது. இந்தத் தோவை ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ எழுதினா். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி தோவு முடிவுகள் வெளியாகின.
  • இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும், இந்தத் தோவில் வெளிமாநிலங்களைச் சோந்த பலா் வெற்றி பெற்றிருந்தனா்.
  • இது குறித்து ஆசிரியா் தோவு வாரிய அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியா் தோவு வாரியம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 போ வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோவு வாரிய தோவுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியா் தோவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என அதன் தலைவா் தெரிவித்துள்ளாா்.
  புதிய, தேசிய வரைபடத்துக்கு நேபாள பார்லி., மறுப்பு
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையே, சர்ச்சைக்குரிய லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்களுடைய எல்லைக்குட்பட்டதாக காட்டும் புதிய, தேசிய வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், பார்லி., இந்த வரைபடம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையே அமைந்துள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்துக்குட்பட்டதாக காட்டும், புதிய அரசியல் தேசிய வரைபடத்தை, இந்திய அரசு கடந்தாண்டு, அக்டோபரில் வெளியிட்டது.
  • இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, லிபுலெக் பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
  • இதன் மூலம், 90 கி.மீ., துாரம் சுற்றி செல்வது தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் இந்த சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் துவங்கியது. 
  • இந்த, 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தநிலையில், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. 
  • இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது.
  • இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்த நேபாள அரசு, வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களை பார்லி.,யில் தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் வழங்க பார்லி., தற்போது மறுப்பு தெரிவித்திருக்கிறது.
  • இதற்கிடையே, புதிய வரைபடம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் பாடப் புத்தகங்களிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் அச்சிடப்பட்டு, அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  காரீஃப் பயிா் சேதம்: ராஜஸ்தான், மணிப்பூா், மேகாலயத்துக்கு மத்திய அரசு ரூ.111.70 கோடி நிதி ஒதுக்கீடு
  • இயற்கை பேரழிவுகள் காரணமாக காரீஃப் பயிா் சேதத்திற்கு ஆளான ராஜஸ்தான், மணிப்பூா் மற்றும் மேகாலயம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரூ. 111.70 கோடி வழங்க மத்திய அரசின் உயா்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதில், பாலைவன வெட்டுக்கிளி பூச்சி தாக்குதலால் கோடைகால பயிா் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு ரூ. 68.65 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • வறட்சியின் காரணமாக பயிா் சேதத்துக்கு ஆளான மணிப்பூருக்கு ரூ. 56.53 கோடியும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பயிா் பாதிப்புக்கு ஆளான மேகாலயத்துக்கு ரூ. 16.52 கோடி உதவித்தொகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகரிக்கப்பட்ட தொகையை அந்தந்த மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சகம், நிதியமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் - சென்னை உயர் நீதிமன்றம்
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
  • அதேபோல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி, தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
  • மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  • அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. 
  • இதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  Wednesday, 27 May 2020

  26th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

  TNPSCSHOUTERS
  'ஜியோ பிளாட்பார்ம்' இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு
  • அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஜியோ பிளாட்பார்மில்' மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் முக்கிய செய்தியாகி வருகின்றன.
  • பெரும் தொகைபேஸ்புக் சில்வர் லேக், ஜெனரல் அட்லான்டிக், கே.கே.ஆர்., என, பல நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் தொகையை ஜியோவில் முதலீடு செய்துவருகின்றன.இதற்கு நடுவே, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
  • மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஆனந்த் இந்த பதவியை ஏற்றுக்கொண்டுஇருக்கிறார்.
  • சமூகப் பணிஆனந்த் அம்பானியின் உடன்பிறப்புகளான ஆகாஷ், இஷா ஆகியோர், கடந்த, 2014ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் சில்லரை வணிகத்தில் இயக்குனர்களாக பொறுப்பேற்றனர்.
  • இதற்கிடையில், ஆனந்த், அவரது தாய் நிடா அம்பானியுடன் இணைந்து, ஐ.பி.எல்., விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.
  போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள்: ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி தொடக்கம்
  • தமிழகம் முழுவதும் தலைக்கவசம் அணியாமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதிப்பாா்கள். இந்த அபராதத் தொகையை, போக்குவரத்து போலீஸாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களிலோ செலுத்தலாம். 
  • தற்போது, இந்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் 'விா்சுவல் கோா்ட்ஸ்' வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முதன்முதலாக தில்லியில் தொடங்கப்பட்டது.
  • அதனைத் தொடா்ந்து, சென்னையில் இந்த வசதியை, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா்.
  • இதன் தொடக்க விழா, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன்னிலையில் நடைபெறுகிறது.
  • இதன்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு போலீஸாரிடம் இ-சலான் பெறும் நபா்கள், இணையதளத்தில் 'விா்சுவல் கோா்ட்ஸ்' பக்கத்தில் தங்களது செல்லிடப்பேசி எண், வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
  • இந்த 'விா்சுவல் கோா்ட்ஸ்' முறையில் அபராதம் செலுத்தும் வசதியை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான உயா்நீதிமன்ற கணினி குழு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை : உச்சநீதிமன்றம்
  • புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. 
  • இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என அதிருப்தி தெரிவித்தது. 
  • இன்னமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவதாக கூறிய நீதிபதிகள், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்க, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.
  • மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் இந்த நிலையை மாற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டனர். 
  • அதுமட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

  பிரதான் மந்திரி வாய வந்தன யோஜன Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)

  TNPSCSHOUTERS
  • மூத்த குடிமக்களுக்கான பிரதமர் வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி) ஓய்வூதிய திட்டத்தை நிதி அமைச்சகம் அண்மையில் மாற்றியது. அதன் தொடர்ச்சியாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) மத்திய அரசின் மானியத்துடன் இணைக்கப்படாத, மத்தியஅரசு பங்கேற்காத நிலையில் பிரதமர் வயா வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நிதியமைச்சகம் சமீபத்தில் இந்த ஓய்வூதிய திட்டத்தை 2023 மார்ச் 31 வரை நீட்டித்தது. 2020-21 நிதியாண்டிற்கு. 7.40% வட்டி விகிதத்துடன் உறுதி செய்திருந்தது.
  • இந்த திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நிதியாண்டுகள் வரை விற்பனைக்கு கிடைக்கும். அதாவது மார்ச் 2023 வரை கிடைக்குமென எல்.ஐ.சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த திட்டத்தை ஆப்லைனிலும் (முகவல்கள் வழியாக) எல்.ஐ.சி யின் இணையதளத்திலும் வாங்கலாம். அதிகபட்சமாக 15 லட்சம் வரை இத்திட்டத்தின் படி செலுத்த முடியும்.
  • இந்த பாலிசி 10 ஆண்டு காலம் கொண்டது. மார்ச் 2021 உடன் முடிவடையும் முதல் நிதி ஆண்டிற்குள் வாங்கப்படும் பாலிசிகளுக்கு ஆண்டுக்கு 7.40% வருமானம் உறுதியாக கிடைக்கும். 
  • ஆனால் 10 ஆண்டுகள் ஒவ்வொரு மாதத்திற்கும் மாதந்தோறும் ஓய்வூதியமாக தொகை செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1,000 ஓய்வூதியம் பெறலாம். அதிகபட்ச ஓய்வூதிய தொகை மாதத்திற்கு ரூ. 10,000 ஆக பெறலாம்.
  • இந்த திட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், 1,56,658 ரூபாய் செலுத்த வேண்டும்.. அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டும் என்று மூத்த குடிமக்கள் விரும்பினால் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
  • வெற்றிகரமாக 10 வருடங்கள் பென்ஷன் பெற்று முடித்துவிட்டால், கடைசி மாதம் பென்ஷன் பெறும்போது அவர்கள் முதலீடு செய்த தொகையும் திரும்ப அளிக்கப்படும். பென்ஷன் காலம் முடியும் முன்பு பாலிசிதாரர் இறந்துவிட்டால் முதலீடு செய்த தொகை பாலிசிதாரரின் வாரிசிடம் அளிக்கப்படும்.

  Tuesday, 26 May 2020

  24th & 25th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

  TNPSCSHOUTERS
  மொஹாலி ஆக்கி ஸ்டேடியத்திற்கு பல்பீர் சிங் பெயர் : பஞ்சாப் மாநில விளையாட்டு அமைச்சர் அறிவிப்பு
  • இந்திய ஆக்கி அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் 3 முறை அங்கம் வகித்தவருமான பல்பீர் சிங் சீனியர் மரணமடைந்தார்.
  • கடந்த 2 வருடங்களாக நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போதே அவருக்கு 3 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசமானது.
  • தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். 95 வயதான பல்பீர்சிங்குக்கு ஒரு மகள், 3 மகன்கள் இருக்கின்றனர்.
  • மரணமடைந்த பல்பீர் சிங் அவர்களுக்கு விளையாட்டு உலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, மாலையில் சண்டிகாரில் உள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 
  • தொடர்ந்து மொகாலி ஸ்டேடியத்துக்கு பல்பீர் சிங் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் மாநில விளையாட்டு மந்திரி ரானா குர்மித் சிங் சோதி அறிவித்துள்ளார்.
  ரயில்வே சுகாதார சேவை தலைமை இயக்குநராக பிஷ்ணு பிரசாத் நந்தா நியமனம்
  • இந்திய ரயில்வே சுகாதார சேவையில் தலைமை இயக்குநராக பிஷ்ணு பிரசாத் நந்தாநியமிக்கப்பட்டுள்ளார். இது ரயில்வே வாரியத்தின் சுகாதாரத்துறையின் உச்சபதவியாகும்.
  • இதற்கு முன்பு, இவர் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி வந்தார். புதிய பதவிக்கு குடியரசு தலைவர் அனுமதியுடன் ரயில்வே அமைச்சகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  திருப்பதி கோவில் சொத்துக்களை விற்க கூடாது ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு
  • உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் நிதி உதவி அளிப்பதும், காணிக்கை அளிப்பதும், நகை, பொருட்கள், நிலங்களை வழங்குவதும் வழக்கம். இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி கோவில் இருக்கிறது.
  • இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நிலங்களை விற்பனை செய்ய அந்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
  • நிதி நிர்வாகத்தை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிறு சிறு நிலங்களை விற்க முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 50 அசையா சொத்துக்கள், 17 வேறு சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமாக இருக்கும் சில நிலங்களையும் விற்க முடிவு செய்யப்பட்டது .
  • அதே சமயம் இது தொடர்பாக பக்தர்கள், இந்து தலைவர்களிடம் கருத்து கேட்கும்படி தேவஸ்தானம் போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. 
  • இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க கூடாது என்று தேவஸ்தான போர்டுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும். அதனால் மறு உத்தரவு வரும் வரை சொத்துக்களை விற்க கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  ஜப்பானில் அவசர நிலை முழுவதுமாக நீக்கம்: பிரதமர் சின்சோஅபே
  • உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக தொற்றுப் பாவலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக, பிரதமர் சின்சோ அபே இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.
  • பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன.
  • ஆனாலும் டோக்யோ, சிபா, கனகவா மற்றும் சிடமா, வடக்கு ஹொக்கைடோ மாகாணங்களில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் நீடித்து வந்தது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.
  சத்தீஸ்கரில் போத்காட் பாசன திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
  • சத்தீஸ்கரில் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் போத்காட் பாசன திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 'தெற்கு பஸ்தா் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள போத்காட் பாசன திட்டம் ரூ.22,653 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ளது. 
  • இந்தத் திட்டத்தின் மூலம் தண்டேவாடா, சுக்மா, பிஜாபூா் மாவட்டங்களில் 3.66 லட்சம் ஹெக்டோ விளைநிலங்கள் பாசன வசதி பெறும். 
  • இது தவிர 300 மெகாவாட் நீா்மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தந்தேவாடா மாவட்டத்தின் பா்சுா் கிராமத்தில் உள்ள இந்திராவதி நதியில் அணை கட்டப்படவுள்ளது.
  • போத்காட் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இதையடுத்து இந்தத் திட்டத்துக்கான நில அளவை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்தத் திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது' என்றாா்.
  • மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் காணொலி மூலம் சமீபத்தில் பேசிய சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், போத்காட் பாசன திட்டம் குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தாா். இந்நிலையில் அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்
  • ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருட்கள் விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கி உள்ளது. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஜியோமார்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் தன் விற்பனையை துவங்கி உள்ளது. 
  • இதற்கு முன்னோட்டமாக மும்பையின் சில பகுதிகளில் கடந்த மாதம் முதலே பொருட்கள் வழங்கும் சேவையை துவங்கியது. முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.
  • ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா , ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Monday, 25 May 2020

  TNPSC SHOUTERS - TNPSC ONLINE EDUCATIONAL WEBSITE IN TAMIL NADU

  TNPSCSHOUTERS


  Hey, TNPSC Shouters!

  TNPSC Shouters is the premier online site for anyone who are Preparing Government Exams.TNPSC Shouters was Started in April 2015 as a Free Educatiuonal Blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government Exams. We develop, assess and deploy contents to all groups of  TNPSC / Government  exams. We value the service and hence, we issue necessary assistance at free of cost. Starting from Model Question Papers, Study Materials with the Current Affairs, we keep you updated!

  Navigate across our user friendly website and download materials from archives. If you lack time to navigate frequently, simply subscribe to our service at no cost!

  Why waste time and money at coaching center’s when we offer the best just for you? Support our service to benefit more aspirants while we support, in lieu, through our accurate collections that assure results!


  UPDATED ON 25/05/2020
  HI TNPSC SHOUTERS WE COMPLETED 5 YEARS IN ONLINE TNPSC STUDY MATERIALS.
  GOOGLE PAGE :3,050,048 
  FACEBOOK FOLLOWERS:42.3K
  EARNING :RS 3,72,051(2020)
  THANKS FOR YOUR SUPPORTING...

  அனைவருக்கும் வணக்கம்,  எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் TNPSC பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA வரலாறு ,INDIAN NATIONAL MOVEMENT, புவியியல் GEOGRAPHY,POLITICAL,INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்


  OFF LINE MODE 
  PAID THROUGH BANK 

  NAME :  MR. SATHAM HUSSAIN M
  A/C NO. :  
  00000033476794994
  STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
  IFSC CODE :  
  SBIN0015633
  MICR CODE : 
  625002071ம
  BRANCH : NAGAL NAGAR

                                        CONTACT NO : 9698271399


  SEND YOUR DETAILS TO 9698271399 OR TNPSCSHOUTERS@GMAIL.COM

  1.NAME :: 


  2.MAIL ID :: 

  அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி! 

  ONLINE PAYMENT MODE:


  அவ்வாறு ONLINE மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி!                    

  • TNPSC GENERAL TAMIL BOOK PRICE   :     DETAILS 
  • TNPSC GENERAL SCIENCE BOOK PRICE   :     DETAILS 
  TNPSC SHOUTERS STUDY MATERIALS 2020 (UPDATE):

  PHYSICS  CHEMISTRY  BOTANY  ZOOLOGY  GEOGRAPHY  HISTORY AND CULTURE OF INDIA  INDIAN NATIONAL MOVEMENT  INDIAN ECONOMY APTITUDE & MENTAL ABILITY  INDIAN POLITY  CURRENT EVENTS


  TNPSC TOPICS (DIRECT LINK) :


  NEW குரூப் 2 தேர்விற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா விடைகள்... [ 4000 வினா - விடைகள் ] FREE


  1. தமிழ் - 2000 வினா விடைகள்..
  2. வரலாறு - 500 வினா விடைகள்..
  3. அரசியல் அறிவியல் - 500 வினா விடைகள்..
  4. அறிவியல் - 500 வினா விடைகள்..
  5. புவியியல் - 500 வினா விடைகள்.

  FREE TNPSC குரூப் 2 தேர்விற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினாவிடைகள் CLICK HERE  

  TNPSC KEYWORD :


  TNPSC GROUP 2 INTERVIEW POST

  ·         TNPSC GROUP 2 NOTIFICATION 
  ·         TNPSC GROUP 2 ANSWER KEY
  ·         TNPSC GROUP 2 RESULT
  ·         TNPSC GROUP 2 CUT OFF MARK

  TNPSC GROUP 2A NON INTERVIEW POST

  ·         TNPSC GROUP 2A ANSWER KEY 
  ·         TNPSC GROUP 2A RESULT 
  ·         TNPSC GROUP 2A CUT OFF MARK

  TNPSC GROUP 4

  ·         TNPSC GROUP 4 NOTIFICATION  
  ·         TNPSC GROUP 4 ANSWER KEY 
  ·         TNPSC GROUP 4 RESULT 
  ·         TNPSC GROUP 4 CUT OFF MARK

  TNPSC VAO

  ·         TNPSC VAO NOTIFICATION  
  ·         TNPSC VAO ANSWER KEY 
  ·         TNPSC VAO RESULT 
  ·         TNPSC VAO CUT OFF MARK  REVISED & UPDATED SYLLABUS  POST DETAILS STUDY MATERIALS :
   NEW UPDATED