Tuesday, 31 December 2019

'நிடி ஆயோக்' வளர்ச்சி பட்டியல் / NITI AYOG GROWTH RANK OF STATES IN INDIA 2019

TNPSCSHOUTERS
 • 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட, எஸ்.டி.ஜி., இன்டெக்ஸ் என்ற, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
 • வரும், 2030க்குள் சர்வதேச நாடுகள், வறுமை ஒழிப்பு, பட்டினி இன்மை, தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட, 17 இலக்குகளை எட்டுவது குறித்த வரையறைகளை, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது. 
 • பீஹார் பின்னடைவு இவற்றில், 16 இலக்குகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில், நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை எட்டியுள்ளன என்பது குறித்த பட்டியலை, மத்திய அரசுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை கூறும் நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. 
 • இந்த பட்டியலில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 
 • தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.இந்த பட்டியலில், பீஹார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்கள் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
 • யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 

30th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சேலம் தலைவாசலில் நவீன கால்நடைப் பூங்காவுக்கு ரூ. 564 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
 • சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு சாலைக்கு அருகில் கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 900 ஏக்கா் நிலம் உள்ளது. இங்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த பூங்கா அமையவுள்ளது.
 • முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பா்கூா் ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படுகிறது.
 • இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருள்களைப் பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருள்கள், மதிப்புக் கூட்டிய பொருள்களைத் தயாா் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில்
தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்
 • பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, 'ராணுவத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படை என, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார்' என, அறிவித்தார். 
 • இதையடுத்து, 'முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, அவற்றின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் வகையில், தலைமை தளபதியை நியமிக்கலாம்' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. 
 • சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளைப் போல், தலைமை தளபதியும், நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ அதிகாரியாக இருப்பார் என்றும், இவருக்கான சம்பளம், மற்ற தளபதிகளின் சம்பளத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 • மேலும், ராணுவ விவகாரம் என்ற தனித் துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராகவும், தலைமை தளபதி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 • ராணுவ தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம், இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, முப்படைகளின் தலைமை தளபதியாக, அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தளபதி ஓய்வு பெறும் வயது, 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' வளர்ச்சி பட்டியல் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்
 • 'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட, எஸ்.டி.ஜி., இன்டெக்ஸ் என்ற, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டிய மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
 • வரும், 2030க்குள் சர்வதேச நாடுகள், வறுமை ஒழிப்பு, பட்டினி இன்மை, தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட, 17 இலக்குகளை எட்டுவது குறித்த வரையறைகளை, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது. 
 • பீஹார் பின்னடைவு இவற்றில், 16 இலக்குகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டில், நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எந்த மாதிரியான வளர்ச்சியை எட்டியுள்ளன என்பது குறித்த பட்டியலை, மத்திய அரசுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை கூறும் நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. 
 • இந்த பட்டியலில், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 
 • தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.இந்த பட்டியலில், பீஹார், ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்கள் இந்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
 • யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 
பீஜிங் - சாங்ஜியாகவ் இடையே அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை தொடக்கம்
 • பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ரயில் விடப்பட்டுள்ளது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன் ஸ்மார்ட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • ஸ்மார்ட் ரயிலில் அமைக்கப்பட்டுள்ள இன்டெலிஜன் சிஸ்டம் அவசர காலங்களில் அபாயத்தை உணர்ந்து செயல்படும் என்றும், ரயிலில் ஏற்படும் சத்தம்,வெப்பநிலை மாறுபாடு குறித்தும் இன்டலிஜன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 • பீஜிங் - சாங்ஜியாகவ் இடையிலான 174 கி.மீ. தூரத்தை 47 நிமிடங்களிலேயே கடப்பதால் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Monday, 30 December 2019

29th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம் உத்திரமேரூர் அருகே கண்டுபிடிப்பு
 • காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பல்லவர் கால சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 • 8ம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சேர்ந்த, சப்த மாதர்கள் எனப்படும், ஏழு அன்னையர் சிலைகள், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களாக கண்டறிந்தோம். இது, 1.75 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் உள்ளது. 
 • ஏழு அன்னையரை வழிபடுவது பெண் தெய்வ வழிபாட்டில், முதல் வழிபாடாகவும், முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகவும் இருப்பதாகும்.
 • பெண் தெய்வ வழிபாடு என்பது வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோயின்றி வாழ, அரசர்கள் பிற நாட்டை வெற்றி பெற இன்னும் பிற நன்மைகளை வேண்டி மக்களும், மன்னர்களும் வழிபடுவதாகும்.இந்த சிற்பத் தொகுப்பு உடைபட்டும், சற்று சிதைவுற்றும் உள்ளது. 
 • இதில் பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.பத்ர குண்டலம்இதன் அருகிலேயே, விஷ்ணு துர்க்கை சிலை உடைந்த நிலையில் உள்ளது. 
 • இதுவும், எட்டாம் நுாற்றாண்டு, பல்லவர் காலத்தை சார்ந்தது.இதன் தலைப் பகுதியில், பல்லவர் காலத்திற்கே உரிய கரண்ட மகுடமும், காதில் பத்ர குண்டலமும், கழுத்தில் அணிகலனும், நான்கு கரங்களில் காப்பும், ஒரு கையில் சங்கு, மற்றொரு கையில் சக்கரம், அடுத்த கரத்தால் அருள்பாலித்தும், நான்காவது கரத்தை இடுப்பில் வைத்தப்படியும் காட்சியளிக்கிறாள்.
ஜார்க்கண்ட் முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்
 • 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையில் (Jharkhand Election Results 2019) காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. 
 • சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
 • இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.
 • இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திய பொருட்களையே வாங்குங்கள்; வாங்க ஊக்குவியுங்கள்' பிரதமர் மோடி
 • மன் கி பாத் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். உள்நாட்டு பொருட்களை வாங்குவதுடன் பிறரையும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். 
 • குறைந்த பட்சம் இந்தியா 75வது சுதந்தர தினத்தை கொண்டாடும் 2022ம் ஆண்டு வரையாவது இந்த அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
2022-ஆம் ஆண்டுக்குள் 400 ஜிகாவாட்பசுமை எரிசக்தி உற்பத்தி இலக்கு
 • பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் (சிஎஸ்ஐஆா்) ரூ.100 கோடியில் பசுமை எரிசக்தி ஆற்றல்களை சேமித்து வைப்பதற்கான கண்டுபிடிப்பு மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 • இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ்வா்தன் அடிக்கல் நாட்டி பேசியது: நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் அதேவேளையில் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. 
 • இவற்றுக்குத் தேவையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
 • அந்த வகையில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டது.
 • இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில், 2022-ஆம் ஆண்டுக்குள் 400 ஜிகாவாட் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 30 முதல் 35 சதவீத அளவுக்கு பசுமை எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 2022-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்துகள்கள் சிதறிகிடக்கும் செப்பு கால அரச கல்லறைகள் கண்டுபிடிப்பு
 • கிரேக்கத்தின் தெற்கில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு நினைவுச்சின்னங்களான செப்பு கால கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஒருகாலத்தில் சுவற்றில் பதிக்கப்பட்ட தங்க இழைகள் துகள்களாக அங்கு சிதறிக்கிடக்கின்றன.
 • கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பிராந்தியத்தில் உள்ள, ஹோமரின் ஒடிஸியில் இடம்பெற்ற மைசீனிய காலத்து பைலோஸின் அரண்மனைக்கு அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 • தோலோஸ் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இவை தேனீக்கள் போன்ற பெரிய குவிமாடம் கொண்ட நிலத்தடி கட்டுமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான கல்லறைகள் பொதுவாக மைசீனிய அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டன.
 • இரண்டு கல்லறைகளில் பெரியது தரை மட்டத்தில் 40 அடி (12 மீட்டர்) விட்டம் கொண்டது மற்றும் அதன் கல் சுவர்கள் 15 அடி (4.5 மீட்டர்) உயரத்திற்கு பிரம்மாண்டமாக உள்ளன. இது அதன் உண்மையான உயரத்தில் பாதிக்கும் குறைவானது.
 • மற்றொரு கல்லறை, முந்தையதன் அளவில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் அதன் சுவர்கள் 6.5 அடி (இரண்டு மீட்டர்) உயரத்தில் உள்ளன.
 • வானம், பெண்கள், கருவுறுதல் மற்றும் அன்பு ஆகியவற்றின் பெண்தெய்வமான ஹாத்தோர், பொதுவாக பசுவின் தலை, பசுவின் காதுகள் அல்லது வெறுமனே மாடு வடிவத்தில் உள்ள ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார்.
 • கிரேக்க புராணங்களின் மைய நபர்களில் ஒருவரான ஹதோர், வான கடவுள் ராவுடன் நெருக்கமாக தொடர்புடையவர்.
 • தானிய குவியலால் சூழப்பட்ட இரண்டு காளைகளை காட்டும் இந்த தங்க மோதிரம், இந்தத் திட்டத்தில் ஆலோசித்த ஒரு பேலியோபொட்டனிஸ்ட்டால் பார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்திய வீராங்கனையின் செஸ் சாதனை : உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி
 • ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துக் கொண்டனர். இந்தப் போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனா வீராங்கனை லீ டிங்ஜி உடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி போட்டி இட்டார்.
 • இந்த போட்டியின் 12 சுற்றுக்களில் இருவரும் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் வெற்றியைத் தீர்மானிக்க மற்றொரு ஆட்டம் நடந்தது. இதில் கோனேரு ஹம்பி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
 • இந்த இறுதி சுற்றுப் போட்டியின் போது முதல் ஆட்டத்தில் தோல் அடைந்த போதிலும் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கோனேரு ஹம்பி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது 32 வயதாகும் இவர் கடந்த 2002 ஆம் வருடம் கிரான்ட் மாஸ்டர் ஆனார். மேலும் கடந்த 2007 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
 • இது வரை இந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் இந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்னும் புகழை அடைந்தார். தற்போது இந்த போட்டியில் வென்ற இரண்டாம் இந்தியராகவும் மகளிர் பிரிவில் முதல் இந்தியராகவும் கோனேரு ஹம்பி பெருமை பெற்றுள்ளார்.உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 3-வது முறையாக வெற்றி பெற்ற மாக்னஸ் கார்ல்சென்
 • உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. ஆண்கள் பிரிவு போட்டி 15 சுற்றுகளை கொண்டதாக நடத்தப்பட்டது. 
 • 207 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) தோல்வி பக்கமே செல்லவில்லை. 8 வெற்றி, 7 டிரா என்று மொத்தம் 11.5 புள்ளிகளுடன் தனிநபராக முதலிடத்தை பிடித்து உலக ரேபிட் செஸ் மகுடத்தை 3-வது முறையாக சூடினார். ஈரான் வீரர் பிரோவ்ஜா அலிரெசா 10.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா்
 • மகாராஷ்டிர மாநிலம், நியூ பன்வேல் நகரில் நடைபெற்ற ஆா்.ஆா்.லக்ஷயா கோப்பை ஏா் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டா் சீனியா் பிரிவில் 18 வயது இளைஞா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் தங்கம் வென்றாா். 
 • மத்திப் பிரதேசத்தைச் சோந்த இவா், 50 மீட்டா் ஏா் ரைஃபிள் 3 பொசிஷனில் வென்றாா். 252.3 புள்ளிக் கணக்கில் இவா் தங்கம் வென்றாா்.
 • ராஜஸ்தானைச் சோந்த 16 வயது இளைஞரான யஷ்வா்தன் 250.7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தாா். அஸ்ஸாமைச் சோந்த ஹிரிடே ஹஸரிகா வெண்கலம் வென்றாா்.
 • தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் சண்டீகரைச் சோந்த விஜய்வீா் சித்து தங்கம் வென்றாா்.
தேசிய மகளிா் பளுதூக்கும் போட்டி: சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவிக்கு தங்கப் பதக்கம்
 • அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் பளுதூக்கும் போட்டி திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 
 • கா்நாடகம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 67 பல்கலைக்கழங்களைச் சோந்த 350 மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். 45 கிலோ, 49 கிலோ, 55 கிலோ, 59 கிலோ, 64 கிலோ, 71 கிலோ, 76 கிலோ, 81 கிலோ, 87 கிலோ, அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவு என வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
 • இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 64 கிலோ எடைப் பிரிவில் சாவித்திரிபாய் புணே பல்கலைக்கழக மாணவி ஹால்ஹா் பிரஜெக்தா தங்கப் பதக்கமும், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழக மாணவி கோமல்கான் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். 
 • 71 கிலோ எடைப் பிரிவில் பட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக மாமவி ஹா்ஜேந்தா் கௌா் தங்கப் பதக்கமும், கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவி எம்.எஸ்.ஸ்நேகா வெள்ளிப் பதக்கமும் வென்றனா். 
 • 76 கிலோ எடைப் பிரிவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவி ஆா்.ஆரோக்கிய அலீஸ் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். பஞ்சாப் பல்கலைக்கழக மாணவி ராக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

MDR (MERCHANT DISCOUNT RATE / எம்டிஆர்

TNPSCSHOUTERS
 • எம்டிஆர் எனப்படும் மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் என்பது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஆகும். 
 • யூபிஐ, கியூஆர் கோடு மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதுண்டு. 
 • அவ்வாறு செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும் தொகையே மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் எனப்படுகிறது. 
 • மொத்த பில் தொகையில் வர்த்தகரும், வங்கியும் ஒப்புக்கொண்ட சதவிகிதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 • சிறு வணிகர்களிடமிருந்து 0.4 சதவீதமும், 20 லட்சம் ரூபாய்க்கும்‌ மேல் வர்த்தகம் செய்யும் வணிகர்களிடமிருந்து 0.9 சதவீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Sunday, 29 December 2019

2019 பாதுகாப்பான ஆண்டு - ரயில்வே துறை / MOST SAFEST YEAR OF RAILWAY 2019

TNPSCSHOUTERS
 • 2019-ம் ஆண்டு, இன்னும் மூன்று நாள்களில் நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு, இந்திய ரயில்வே துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 • இந்திய ரயில்வே போக்குவரத்து வரலாற்றில் 2019-ம் ஆண்டு, அதிக பாதுகாப்பான ஆண்டாக இருந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
 • அதன்படி,`2019-ம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் எந்த ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. கடந்த 2018-19 ம் ஆண்டு, 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் ரயில்வே ஊழியர்கள். இதே எண்ணிக்கை 2017-18 ம் ஆண்டில் 28 ஆகவும் 2016-17- ம் ஆண்டில் 195 ஆகவும் இருந்தது.
 • 1990-95-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு ரயில் விபத்தினால் உயிரிழப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்துள்ளது. 
 • அது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகான புள்ளிவிவரத்தில், அதாவது 2013-18-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகவும் குறைந்துள்ளது.

இரவு 11 முதல் 1 மணி வரை 'நைட் வாக்' - பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவின் புதுத் திட்டம் / NIGHT WALK SCHEME FOR WOMEN SAFETY IN KERALA

TNPSCSHOUTERS
 • இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பெண்களைச் சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து, உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் 'நைட் வாக்' திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.
 • இந்தத் திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவிலிருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள். 
 • இந்தக் குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான 'குடும்பஸ்ரீ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். 
 • இரவில் நடமாடும் பெண்களிடம் யாராவது அத்துமீற முயன்றால், உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

27th & 28th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
ஹைபர்சானிக் ஏவுகணை ரஷ்ய சோதனை வெற்றி
 • ரஷ்யாவின் முதல் 'ஆவன்கார்ட் ஹைபர்சானிக்' அதிநவீன ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக, ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கை ஷொய்கு தெரிவித்தார்.
 • மணிக்கு, 33 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து தாக்க கூடிய உலகின் அதிபயங்கரமான ஏவுகணை சோதனையில், ரஷ்யா வெற்றி கண்டுள்ளதாக, அதிபர் புடின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஜன., 19ல் புதிய தேஜஸ் ரயில்
 • தனியார் மூலம் இயக்கப்படும், 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை, டில்லி - லக்னோ இடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு, 2020, ஜன., 17ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜன., 19ல் இருந்து ரயில் இயக்கப்பட உள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஊக்குவிக்க அரசு தீவிரம்
 • அரசு வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆய்வு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 
 • டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 1ம் தேதி முதல் சில பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய சாதனை
 • நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 45 கோடி டாலா் (ரூ.3,190 கோடி) அதிகரித்து 45,494 கோடி டாலரை (ரூ.31.84 லட்சம் கோடி) எட்டியது. இது, முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
 • இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பானது 107 கோடி டாலா் அதிகரித்து 45,449 கோடி டாலராக காணப்பட்டது.
 • ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக திகழும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 31 கோடி டாலா் உயா்ந்து 42,273 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 16 கோடி டாலா் அதிகரித்து 2,713 கோடி டாலராக காணப்பட்டது.
 • அதேசமயம், சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 10 லட்சம் டாலா் குறைந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.7 கோடி டாலா் சரிந்து 364 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரவு 11 முதல் 1 மணி வரை 'நைட் வாக்' - பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவின் புதுத் திட்டம்
 • இரவு நேரங்களில் நடந்துசெல்லும் பெண்களைச் சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து, உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் 'நைட் வாக்' திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.
 • இந்தத் திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரண்டு மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவிலிருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள். 
 • இந்தக் குழுவில் போலீஸ், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான 'குடும்பஸ்ரீ' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். 
 • இரவில் நடமாடும் பெண்களிடம் யாராவது அத்துமீற முயன்றால், உடனடியாக அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
3 விபத்து; 0 உயிரிழப்பு; 2019 பாதுகாப்பான ஆண்டு!' ரயில்வே துறை பெருமிதம்
 • 2019-ம் ஆண்டு, இன்னும் மூன்று நாள்களில் நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு, இந்திய ரயில்வே துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 • இந்திய ரயில்வே போக்குவரத்து வரலாற்றில் 2019-ம் ஆண்டு, அதிக பாதுகாப்பான ஆண்டாக இருந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
 • அதன்படி,`2019-ம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் எந்த ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. கடந்த 2018-19 ம் ஆண்டு, 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் ரயில்வே ஊழியர்கள். இதே எண்ணிக்கை 2017-18 ம் ஆண்டில் 28 ஆகவும் 2016-17- ம் ஆண்டில் 195 ஆகவும் இருந்தது.
 • 1990-95-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு ரயில் விபத்தினால் உயிரிழப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்துள்ளது. அது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகான புள்ளிவிவரத்தில், அதாவது 2013-18-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகவும் குறைந்துள்ளது.ரயில்போலி டாக்டர்களுக்கு ஏழு ஆண்டு சிறை? மருத்துவமனை பதிவு உரிமத்தில் திருத்தம்
 • தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், கிளினிக்குகள் பதிவு உரிமம் பெறுவது அவசியம். 
 • மேலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்கவும் வேண்டும். பதிவு உரிமம் கோரி, 40 ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பிக்காத, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க, மருத்துவ சேவை இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
 • இந்நிலையில், பதிவு உரிமம் சட்டத்தில் திருத்தம் செய்ய, சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. 
 • மருத்துவமனைகள் தாங்கள் விளம்பரம் செய்யும் தகவல் குறித்து, மருத்துவ சேவைகள் இயக்குனரகத்திடம் விண்ணப்பித்து, அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும். 
 • அதேபோல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், முதல்முறை கண்டறியப்பட்டால், மூன்றாண்டு சிறை; இரண்டாம் முறை கண்டறியப்பட்டால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. 
2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு
 • இந்தியவின் மேரி கோம் (36) குத்துச்சண்டை போட்டியில் இதுவரையில், உலக சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றவர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்காக தற்போது டெல்லியில் நடந்து வரும் போட்டியில் மேரிகோம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்,
 • முன்னதாக, மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக 48 கி.கி., எடைப் பிரிவில் இருந்து 51 கி.கி., எடைப் பிரிவுக்கு மாறினார். இந்த எடைப் பிரிவில் ஏற்கெனவே சாதித்து வரும் தெலுங்கானா வீராங்கனை நிகாத் ஜரீன் (23) இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 • ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் சீனாவில் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. டெல்லியில் நடக்கும் குத்துச் சண்டை தேர்வு முகாமில் நேற்று பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 
 • இதில் 51 கி.கி., எடைப் பிரிவில் மேரி கோம், சக வீராங்கனை ரிது கிரேவலை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். 51 கிலோ எடைப் பிரிவில் 23 வயதான நிஹாத் ஸரினை தோற்கடித்தார் மேரி கோம். 
 • டெல்லியில் நடைபெற்ற இறுதி போட்டியில், 9-1 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார். 2020ல் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் நேரடியாக தோவு செய்யப்பட்டார் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவா் அஜய் சிங் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.
மாநில நீச்சல் போட்டி: 3 புதிய சாதனை
 • தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், தென்மண்டல போட்டிக்கான (ஹைதராபாதில் ஜனவரி 3 முதல் 5 வரை நடைபெறுகிறது) தமிழக அணி வீரா், வீராங்கனைகள் தோவு செய்வதற்கான மாநில நீச்சல் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 650 வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
 • இந்த போட்டியில் முதல் நாளான வெள்ளிக்கிழமை 3 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. குரூப்-2 சிறுவா்களுக்கான 200மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சலில் திருநெல்வேலி வீரா் டி.ஜாசுவா தாமஸ்(பாலகிருஷ்ணா பள்ளி) போட்டி தூரத்தை 2 நிமிடம் 34.65 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக டி.எஸ்.பி.ஏ. அணி வீரா் தனுஷ் 2 நிமிடம் 37.42 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.
 • குரூப் 4 சிறுவா்களுக்கான 50மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் சென்னையிலுள்ள ஆா்கா அணி வீரா் சா்வபள்ளி சாய் ஆதித்யா போட்டி தூரத்தை 1 நிமிடம் 08.73 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக எஸ்.டி.ஏ.டி. மதுரை அணி வீரா் விகாஸ் 1 நிமிடம் 08.80 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது.
 • பெண்கள் பிரிவில் குரூப் 4 சிறுமியா் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்.டி.ஏ.டி. ஏ.எஸ்.பி. அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் போட்டி தூரத்தை 36.99 வினாடிகளில் நீந்தி கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். முன்னதாக நிவ்யா ராஜா (ஆா்கா) 37.70 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.வாழ்நாள் சாதனையாளர் விருது அஞ்சும் சோப்ரா, ஸ்ரீகாந்த் தேர்வு
 • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
 • இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதிற்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற சூரத் இளம்பெண்
 • குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண். 
 • ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக மூல பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு( World Raw Power lifting Federation ) போட்டியில் பங்கேற்றார்.
 • இந்நிலையில், ரோமா ஷா மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் உள்பட சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டும் அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் அந்த இளம்பெண் குவித்திருக்கிறார்.
சிறப்புத் தூதரான மரடோனா
 • ஆா்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருமான மரடோனா (59), நகா்ப்புற திறந்தவெளி இடங்களை மீட்டு விளையாட்டு மைதானங்களாக மாற்றுவதற்கான சிறப்புத் தூதராக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Friday, 27 December 2019

26th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்
 • தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. 
 • ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிா்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிா்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
 • பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 • குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.
 • சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை நிரூபணம் செய்வது, காவலா்கள் எண்ணிக்கை, மகளிா் காவலா்களின் விகிதம், நீதிமன்றம் மற்றும் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகளில் தீா்வு அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
 • கா்ப்ப காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களின் இருப்பும், மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கான சுகாதாரத் துறை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்துக்கு 0.78 புள்ளிகள் அளிக்கப்பட்டதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
 • ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வனஎல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாடுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளா்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
 • சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு 7-ஆவது இடமும், வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 9-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளுக்கும் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் சராசரி அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
 • மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன. மத்திய பணியாளர் நலத்துறை சார்பில், மிகச் சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை தயாரிக்கப்பட்டு உள்ளது. 
 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன. 
 • ஒட்டுமொத்தமாக, சிறந்த நிர்வாகம் அளிக்கும், மிகப்பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது; மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன; சத்தீஸ்கர், நான்காவது இடத்தில் உள்ளது. 
 • அதற்கடுத்த இடங்களில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா உள்ளன; மத்திய பிரதேசம், 10வது இடத்தில் உள்ளது.தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீஹார், கோவா, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட், அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
 • வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்களில், ஹிமாச்சல பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளன.மிகச் சிறந்த நிர்வாகம் அளிக்கும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சண்டிகர், டில்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.துறை வாரியாக செயல்பாடு: பல்வேறு துறைகளில், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளது.
 • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், மத்திய பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், அதற்கடுத்த இடங்களில் உள்ளன. 
 • வடகிழக்கு மாநிலங்களில், மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டாமன் மற்றும் டையூ, முதலிடத்தைப் பிடித்தன.வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், ஜார்க்கண்ட், முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், உத்தரகண்ட்; யூனியன் பிரேதசங்களில், டில்லி முதலிடத்தைபிடித்துள்ளன.
 • மனிதவள மேம்பாட்டில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம், யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
 • மருத்துவ வசதியில், கேரளா, முதலிடத்தில் உளளது. தமிழகம் மற்றும் கோவா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரியும், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும், இதில் முதலிடத்தில் உள்ளன.பொது கட்டமைப்பு வசதிகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
 • இதில், குஜராத், பஞ்சாப், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், சண்டிகர் முதலிடத்தில் உள்ளன.
 • நிதி நிர்வாகப் பிரிவில், கர்நாடகா, முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உத்தரண்ட்; யூனியன் பிரதேசங்களில், டில்லி, முதலிடத்தைப்பிடித்துள்ளன.
 • சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பிரிவில், சத்தீஸ்கர், முதலிடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவும், யூனியன் பிரதேசங்களில் டாமன் மற்றும் டயூவும், முதலிடத்தைப் பிடித்தன.
 • நீதி நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவில், தமிழகத்துக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அதற்கடுத்த நிலைகளில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மேற்கு வங்கம், முதலிடத்திலும், கேரளா, தமிழகம், அதற்கடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. வடகிழக்கு மற்றும் மலை பிரதேச மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர்; யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், முதலிடத்தைப் பிடித்தன.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்
 • நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. 
 • நடப்பாண்டு ஆய்வறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,742 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பட்டியலில் 985 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
 • அடுத்தப்படியாக மகாராஷ்டிராமாநிலத்தில் 436 வழக்குகள் பதிவாகின. ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களே குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்துக் கொண்டு இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்
 • உள்ளாட்சித் தேர்தலில் 4 வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. வெவ்வேறு பதவிகளுக்கான 4 வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது.
 • இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் பொதுத்தேர்தல்களைப் போல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் சோதனை முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இன்றைய முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின்தலைவராக பணீந்திர ரெட்டி தோவு
 • ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக கே.பணீந்திர ரெட்டி தோவு செய்யப்பட்டாா். இதேபோன்று, செயலாளராக எம்.எஸ்.சண்முகமும், உறுப்பினா் செயலாளராக ரகுநாத்தும் தோவு செய்யப்பட்டனா்.
 • தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக சோமநாதன் இருந்தாா். அவா் தில்லி பணிக்குச் சென்ற காரணத்தால் புதிய தலைவரைத் தோவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தோவு செய்யப்பட்டுள்ளாா்.
பிரபலமான டீனேஜ்ஜர் மலாலா': ஐ.நா., கவுரவம்
 • கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக(டீனேஜ்ஜர்) பாக்.,கை சேர்ந்த மலாலா யூசப்பை தேர்வு செய்து, ஐ.நா., கவுரவித்துள்ளது.
 • கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம்(2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள்(2012), எபோலா வைரஸ் தாக்குதல்(2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது(2015) ஆகியவற்றை ஐ.நா., குறிப்பிட்டுள்ளது.
 • மலாலா பற்றி குறிப்பிட்டுள்ள ஐ.நா., '2012ல் பெண்களின் கல்வியில் மும்முரம் காட்டிய மலாலா யூசப்பை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அவர் மீதான் தாக்குதல் உலகை உலுக்கியது. மலாலா நலம் பெற உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன. 
 • யுனெஸ்கோவின் பாரிஸ் தலைமையகத்திலும் அவருக்கு பிரார்த்தனை நடந்தது. அவர் உயிர்பிழைத்து மீண்டு வந்து, பெண் கல்வி மீதான தனது செயலில் வேகமெடுத்தார்.2014ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு ஐ.நா., அமைதிக்கான தூதரானார். 
 • அவரது அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான பதின்பருவ நபராக அவரை உருவாக்கி உள்ளது.
இளையராஜாவுக்கு கேரளத்தின் ஹரிவராசனம் விருது
 • சபரிமலையின் புகழைப் பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வருகின்ற ஜனவரி 15ம் தேதி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • விருதுடன் சேர்த்து ரூ.1 லட்சம் ரொக்கமும் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 • எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், பி.சுசிலா, ஜேசுதாஸ் மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் இந்த விருதை இதற்கு முன்னர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் 2019 - 2020 / LIST OF STATE RANK OF INDA 2019 - 2020

TNPSCSHOUTERS
 • தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. 
 • ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிா்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிா்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
 • பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 • குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.
 • சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை நிரூபணம் செய்வது, காவலா்கள் எண்ணிக்கை, மகளிா் காவலா்களின் விகிதம், நீதிமன்றம் மற்றும் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகளில் தீா்வு அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
 • கா்ப்ப காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களின் இருப்பும், மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கான சுகாதாரத் துறை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்துக்கு 0.78 புள்ளிகள் அளிக்கப்பட்டதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
 • ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வனஎல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாடுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளா்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
 • சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு 7-ஆவது இடமும், வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 9-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளுக்கும் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் சராசரி அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
 • மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன. மத்திய பணியாளர் நலத்துறை சார்பில், மிகச் சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை தயாரிக்கப்பட்டு உள்ளது. 
 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன. 
 • ஒட்டுமொத்தமாக, சிறந்த நிர்வாகம் அளிக்கும், மிகப்பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது; மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன; சத்தீஸ்கர், நான்காவது இடத்தில் உள்ளது. 
 • அதற்கடுத்த இடங்களில், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா உள்ளன; மத்திய பிரதேசம், 10வது இடத்தில் உள்ளது.தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீஹார், கோவா, உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட், அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
 • வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்களில், ஹிமாச்சல பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில், உத்தரகண்ட், திரிபுரா, மிசோரம், சிக்கிம், அசாம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளன.மிகச் சிறந்த நிர்வாகம் அளிக்கும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. சண்டிகர், டில்லி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, லட்சத்தீவுகள், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.துறை வாரியாக செயல்பாடு: பல்வேறு துறைகளில், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளது.
 • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில், மத்திய பிரதேசம், முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், அதற்கடுத்த இடங்களில் உள்ளன. 
 • வடகிழக்கு மாநிலங்களில், மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டாமன் மற்றும் டையூ, முதலிடத்தைப் பிடித்தன.வர்த்தகம் மற்றும் தொழில் துறையில், ஜார்க்கண்ட், முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், உத்தரகண்ட்; யூனியன் பிரேதசங்களில், டில்லி முதலிடத்தைபிடித்துள்ளன.
 • மனிதவள மேம்பாட்டில், கோவா முதலிடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம், யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
 • மருத்துவ வசதியில், கேரளா, முதலிடத்தில் உளளது. தமிழகம் மற்றும் கோவா, அதற்கடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரியும், வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும், இதில் முதலிடத்தில் உள்ளன.பொது கட்டமைப்பு வசதிகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
 • இதில், குஜராத், பஞ்சாப், அதற்கடுத்த இடங்களில் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், சண்டிகர் முதலிடத்தில் உள்ளன.
 • நிதி நிர்வாகப் பிரிவில், கர்நாடகா, முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், தமிழகம் அதற்கடுத்த இடங்களில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உத்தரண்ட்; யூனியன் பிரதேசங்களில், டில்லி, முதலிடத்தைப்பிடித்துள்ளன.
 • சமூக நலம் மற்றும் மேம்பாட்டு பிரிவில், சத்தீஸ்கர், முதலிடத்தைப் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவும், யூனியன் பிரதேசங்களில் டாமன் மற்றும் டயூவும், முதலிடத்தைப் பிடித்தன.
 • நீதி நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவில், தமிழகத்துக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அதற்கடுத்த நிலைகளில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், ஹிமாசலப் பிரதேசம்; யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி முதலிடத்தில் உள்ளன.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மேற்கு வங்கம், முதலிடத்திலும், கேரளா, தமிழகம், அதற்கடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. வடகிழக்கு மற்றும் மலை பிரதேச மாநிலங்களில், ஜம்மு - காஷ்மீர்; யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், முதலிடத்தைப் பிடித்தன..

Thursday, 26 December 2019

25th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா 
 • நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தை, டில்லியில் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 • முதல் கட்டமாக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். 
 • தற்போது துவக்கப்பட்ட திட்டங்கள் உ.பி.,யை மாற்றும். இந்த திட்டங்கள் வாஜ்பாயின் மனதுக்கு நெருக்கமானவை. வாஜ்பாயின் கொள்கைகள் இன்னும் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது. 
 • அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது அமல்படுத்தப்பட்ட திட்டம் மூலம் 7 மாநிலம், 78 ஜில்லாக்கள், 8300 கிராமங்கள் பயன்பெறும்.
 • அடல் ஜல் யோஜனா திட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும் முக்கிய பங்கு உள்ளது.தண்ணீர் பிரச்னையை நாம் எதிர்கொள்வதை மறுக்க முடியாது.குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவில் பங்களிப்பு தேவைப்படுகிறது. 
 • தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. குடிநீரை சார்ந்தே, விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அமைந்துள்ளது.
 • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன்.
 • தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், பெண்களை பங்கேற்க வைப்பது முக்கியமானதாகும். நீர் சேமிப்பு திட்டங்களில், ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்க வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
 • விவசாயத்திற்கு அதிகநீர் பயன்படுத்தும் திட்டத்திலிருந்து சொட்டு நீர் பாசன முறையை நோக்கி நாம் மாற வேண்டும். 3 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதி உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ரூ. 3 லட்சம் கோடி செலவு செய்யப்பட உள்ளது.தண்ணீரை சேமிக்க உழைப்பது நமது கடமை.
 • ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும் தண்ணீரை சேமிப்பதற்கு என சொந்தமாக திட்டத்தை உருவாக்க வேண்டும். 
 • தண்ணீர் சேமிப்பு குறித்து கிராம மக்களிடம் இருந்து நகர்ப்புற வாசிகள் கற்று கொள்ள வேண்டும். தண்ணீரை சேமிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களும், சுய சார்புடையதாக மாற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.உத்திரப்பிரதேசத்தில் திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பல்கலைக்கழகம்
 • உத்திரப்பிரதேச மாநிலம் குஷிங்கர் மாவட்டத்திலுள்ள பாசில் நகரில், திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் அமைகிறது. இந்தப் பல்கலையில், 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் இரண்டு குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படும் பின்னர் அடுத்தடுத்த மாதங்களான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பிற வகுப்புகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ: வாஜ்பாய் உருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 • உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தான் அதிக முறைகள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். மொத்தம் பாராளுமன்றத்துக்கு 9 தடவை தேர்வாகி எம்.பி.ஆக இருந்துள்ளார். இதை நினைவு கூறும் விதமாக லக்னோவில் வாஜ்பாய்க்கு சுமார் 25 அடி உயரத்துக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 • இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார். இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அவசர ஊர்தி சங்கத்தின் மாநில மைய தலைவர் நியமனம்
 • செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அசோசியேஷன் என்று அழைக்கப்படும், புனித ஜான் அவசர ஊர்தி சங்கத்தின், தேசிய தலைவராக, ஜனாதிபதி உள்ளார்.ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவோருக்கு, இந்த மையம் சார்பில், முதலுதவி சிகிச்சைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 • இங்கு பயிற்சி பெறுவோருக்கு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. இச்சங்கத்தின் தமிழக மைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசனை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
 • பணி நியமன ஆணையை, கவர்னர் மாளிகையில் நேற்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஜெகதீசனிடம் வழங்கினார். இந்தப் பதவியில், ஜெகதீசன் மூன்று ஆண்டுகள் இருப்பார். 
 • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, ஜெகதீசன் இருந்தபோது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இவர், எத்திராஜ் கல்லுாரி அறக்கட்டளை தலைவராகவும், அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.கார்கில் நாயகன்' மிக்-27 ஓய்வு
 • கார்கில் போரில் வெற்றி வாகை சூடிய, 'மிக்-27' ரக போர் விமானங்கள், டிச.,27 ஓய்வு பெறுகின்றன. மிக்-27 விமானங்கள் ஜோத்பூரில் இறுதியாக பறக்கும் போது, அவற்றுக்கு மரபு ரீதியான விடை அளிக்கப்பட உள்ளது.
 • கடந்த 1999ம் ஆண்டு, காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில், பாகிஸ்தான் படை ஊடுருவி ஆக்கிரமித்தது. இதனையடுத்து, மே 3ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரையில் இந்தியா - பாக்., இடையே கார்கில் போர் நடந்தது. 
 • இந்த போரில் முக்கிய பங்காற்றிய 'மிக்-27' ரக போர் விமானங்கள், இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருந்தது.ரஷ்ய தயாரிப்பான 'மிக்-27' ரக போர் விமானங்கள், இந்திய விமானப்படையில், கடந்த 1981ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 
 • ராணுவத்தின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விமான படை பிரிவில் இவைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், 38 ஆண்டுகள் பணியாற்றிய அவைகளுக்கு, ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
 • ஜோத்பூர் விமானத்தளத்தில் இயங்கி வந்த 'மிக்-27'ன் இரு ஸ்குவாட்ரான்களில் ஒன்றுக்கு, இந்த ஆண்டின் துவக்கத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கடைசி ஸ்குவாட்ரானுக்கும் நாளையுடன் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.'மிக்-27'ன் கடைசி ஸ்குவாட்ரானில் 7 விமானங்கள் உள்ளன. 
 • இவை அனைத்துக்கும் ஜோத்பூரில் பிரியாவிடை அளிக்கப்பட உள்ளது. அவை இறுதியாக பறக்கும் போது, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு மரபு ரீதியான விடை அளிக்கப்படும். 
 • உலகின் வேறு எந்த நாட்டிலும், 'மிக்-27' விமான சேவை இல்லாததால், இதுவே அதன் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி-குவைத் ஒப்பந்தம்
 • மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையே எல்லையோரம் உள்ள எண்ணெய் வளத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஐந்து ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இதில் தற்போது சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. 
 • இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அமைச்சர்கள் கையொப்பமிட்டனர். சர்ச்சைக்குரிய பகுதியில் 2015 வரை தினமும் 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது
 • இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது, சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். 
 • இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது. அதுபோல இலங்கையின் மொழியில் மட்டுமே பாடப்படும், என்றார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா / Atal Bhujal Yojana

TNPSCSHOUTERS
 • நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தை, டில்லியில் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 • முதல் கட்டமாக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
 • பின்னர் தற்போது துவக்கப்பட்ட திட்டங்கள் உ.பி.,யை மாற்றும். இந்த திட்டங்கள் வாஜ்பாயின் மனதுக்கு நெருக்கமானவை. வாஜ்பாயின் கொள்கைகள் இன்னும் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது. 
 • அனைத்து வீடுகளுக்கும், சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது அமல்படுத்தப்பட்ட திட்டம் மூலம் 7 மாநிலம், 78 ஜில்லாக்கள், 8300 கிராமங்கள் பயன்பெறும்.
 • அடல் ஜல் யோஜனா திட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும் முக்கிய பங்கு உள்ளது.தண்ணீர் பிரச்னையை நாம் எதிர்கொள்வதை மறுக்க முடியாது.
 • குடிநீர் பிரச்னையை சமாளிக்க, நாடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவில் பங்களிப்பு தேவைப்படுகிறது. தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. குடிநீரை சார்ந்தே, விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அமைந்துள்ளது.
 • கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன். • தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில், பெண்களை பங்கேற்க வைப்பது முக்கியமானதாகும். நீர் சேமிப்பு திட்டங்களில், ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்க வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
 • விவசாயத்திற்கு அதிகநீர் பயன்படுத்தும் திட்டத்திலிருந்து சொட்டு நீர் பாசன முறையை நோக்கி நாம் மாற வேண்டும். 3 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதி உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ரூ. 3 லட்சம் கோடி செலவு செய்யப்பட உள்ளது.தண்ணீரை சேமிக்க உழைப்பது நமது கடமை.
 • ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும் தண்ணீரை சேமிப்பதற்கு என சொந்தமாக திட்டத்தை உருவாக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறித்து கிராம மக்களிடம் இருந்து நகர்ப்புற வாசிகள் கற்று கொள்ள வேண்டும். 
 • தண்ணீரை சேமிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களும், சுய சார்புடையதாக மாற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, 25 December 2019

24th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சென்னை குப்பை கையாள ஸ்பெயின் நிறுவனத்திற்கு... ரூ. 3,896.26 கோடி வழங்கியது மாநகராட்சி
 • சென்னை மாநகராட்சியில், ஏழு மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, ஸ்பெயின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, எட்டு ஆண்டுகளுக்கு, ரூபாயை, மாநகராட்சி வழங்க உள்ளது.சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள் உள்ளன. 
 • இதில், தினமும், 5,400 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில், குப்பை யைாளும் பணி, ராம்கி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. 
 • இந்த நிறுவனத்திற்கு, எடைக்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் மீது, பல்வேறு முறைகேடு புகார்களை, அதன் ஊழியர்களே மாநகராட்சியிடம் அளித்துள்ளனர்.
 • இந்நிலையில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்கள், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 'உர்பேசர்' மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, 'சுமித் பெசிலிட்டிஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு, மாநகராட்சி பணி ஆணை வழங்கியுள்ளது. 
 • ஒப்பந்தப்படி, இந்நிறுவனங்கள், குப்பையை தரம் பிரித்து பெறுதல் உள்ளிட்டவைக்கு, 33 கட்டுப்பாடுகளின் அடிப்படையில், பணம் வழங்கப்பட உள்ளன.
 • அதன்படி, எட்டு ஆண்டுகள், அந்நிறுவனங்கள் குப்பையை கையாள்வதற்கு, 3,896.26 கோடி ரூபாயை மாநகராட்சி வழங்க உள்ளது.
வாகனக் கடன் சேவை: அசோக் லேலண்டு - யெஸ் வங்கி ஒப்பந்தம்
 • வாகனக் கடன் சேவை வழங்குவதற்காக ஹிந்துஜா குழுமத்தைச் சோந்த அசோக் லேலாண்டு நிறுவனமும், யெஸ் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
 • வாடிக்கையாளா்களுக்கு வாகனக் கடன் சேவையை 2 ஆண்டுகளுக்கு இணைந்து வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை யெஸ் வங்கியுடன் மேற்கொண்டுள்ளோம்.
 • வாகனத் துறையில் அசோக் லேண்டின் அனுபவமும், கடன் சேவையில் யேஸ் வங்கியின் அனுபவமும் இணைந்து, எங்களது வாடிக்கையாளா்களுக்கான வாகனக் கடன் சேவையை மேம்படுத்தும்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரின் அடையாளங்களையும் பதிவு செய்ய தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • இதற்கு அரசுக்கு 3,941 கோடி ரூபாய் செலவாகும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
 • தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொத்தம் ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தயாரிப்பதற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை மறுசீரமைக்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது ரயில்வே துறையை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • அதன்படி ரயில்வே துறையில் மொத்தம் 8 பேர் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் இருந்த நிலையில் அவற்றை குறைத்து 4 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும்.
 • ரயில்வே துறையில் உள்கட்டமைப்பு, நிதி, இயக்கம், சீரமைத்தல் வர்த்தக வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்கள் இருப்பர். ரயில்வே ஊழியர்களையும் ஒன்றாக இணைத்து இந்திய ரயில்வே நிர்வாக சேவை என அழைக்கப்படும். இதற்கான அறிவிப்புகளை பியூஷ் கோயல் வழங்கினார்.
 • அவர் கூறுகையில் குரூப் ஏ சேவையில் இருக்கும் மொத்தம் 8 குழுவினரும் ஒன்றிணைக்கப்படுவர். ரயில்வே துறையை நவீனமயமாக்குகிறோம். 
 • இது ஒரு பெரிய திருப்புமுனையாகும். துறைவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. முடிவெடுப்பதை விரைவுப்படுத்துவதையும் நிறுவனத்திற்கான ஒத்திசைவான பார்வையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.
 • அடுத்த ஆட்கள் தேர்வு முறையின் போது ஐஆர்எம்எஸ் அமல்படுத்தப்படும். பயணிகள் ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க தங்க நாற்கர திட்டத்தை இரு பகுதிகளாக பிரிக்க இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு மேம்படுத்துவது 2 முதல் 3 ஆண்டுகளாகும்.
 • திட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டால் டெல்லியிலிருந்து மும்பைக்கு 10 மணி நேரத்திலும், டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு 12 மணி நேரத்திலும் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.முப்படைகளுக்கும் தலைமை தளபதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முப்படைகளுக்கு ஒரே தளபதியாக, தலைமை தளபதி பொறுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
 • இதனுடன் ராணுவ விவகாரத் துறை (Department of Military affairs) எனும் புதிய துறையை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 • புதியதாக நியமிக்கப்படும் தலைமை தளபதி இந்த துறைக்கு தலைவராக இருப்பபார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தளபதி பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நாட்டின் முப்படைகளுக்கும் இணைந்த தலைமை தளபதிக்கு வருபவர்கள், 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள ஜெனரல்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
 • தனிப்பட்ட முறையில், முப்படை தளபதிகளின் ஆலோசகள் இன்றி அவர்கள் எந்வொரு ராணுவ முடிவும் எடுக்கக்கூடாது. புதியதாக தலைமை தளபதி பதவி ஏற்பவர்களுக்கு 5 ஸ்டார் அந்தஸ்து வழங்கப்படும்
 • அவர்கள் முப்படை தலைவர் பதவி பணி ஓய்வுபெற்ற பின்பு அடுத்த 5 ஆண்டுகள் எந்தவொரு அரசு துறையிலோ, தனியார் துறையிலோ பணியாற்றக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 • இந்த பரிந்துரைகள், ஏற்கனவே கார்க்கில் போருக்கு பிறகு, 20 ஆண்டுகளுக்கு முன்பே, கே.சுப்பிரமணியம் கமிட்டி, மத்தியஅரசு பரிந்துரை செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
 • கே.சுப்பிரமணியம் என்பவர், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம்
 • தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 25 மீட்டர் சீனியர், ஜூனியர் பிரிவில் போட்டியில் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்.  
கடந்த 10 ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அஸ்வின்
 • 2020ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் 2019 ஆண்டில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் கிரிக்கெட் துறையில் பெரும் சாதனை நிகழ்த்தியவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
 • இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வருட சாதனையை மட்டுமல்லாமல் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். 
 • சர்வதேச போட்டிகளில் 2011 முதல் இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் மொத்தம் 564. அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசிசி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
 • தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், ஸ்டூவர் ப்ராட் 525 விக்கட்டுகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Tuesday, 24 December 2019

மின்சார வாகனம் அசத்தும் தமிழகம் / TAMILNADU MANUFACTURING ELECTRIC VEHICLE

TNPSCSHOUTERS
 • சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் உற்பத்தி-பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் சீரிய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது
தொலைநோக்குப் பார்வை
 • 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித் துறையையும் உலக நாடுகளையும் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. 
 • இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு மின்சார வாகனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
2025-இல் மின்வாகனப் பயன்பாடு
 • நாட்டில் மின் வாகனங்களை "சார்ஜ்' செய்யும் வசதிகள், மின்சார வாகனங்களின் அதிகப்படியான விலை உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் பெரியளவில் எழவில்லை. 
 • இதுபோன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்த நீதி ஆயோக், மூன்று சக்கர வாகன போக்குவரத்தில் 2023-க்கு உள்ளாகவும், இருசக்கர வாகன போக்குவரத்தில் 2025-க்கு உள்ளாகவும் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 
 • 2030-ஆம் ஆண்டுக்குள் 50 ஜிகாவாட் பேட்டரிகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், நீதி ஆயோக் மத்திய அரசுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மின்வாகனம்
 • மஹிந்திரா நிறுவனம் 2,000 யூனிட்டுகளுக்கு நெருக்கமான எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா அண்மையில் சுட்டுரை பதிவு மூலமாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
 • அதே போன்று, தனியார் தபால் சேவை நிறுவனங்கள் மற்றும் செயலி மூலமாக இயங்கும் வாடகை கார் சேவை நிறுவனங்கள் மின்சார கார்கள், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களை தங்களது சேவைகளில் அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.மத்திய அரசின் சலுகைகள்
 • மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில், மின்னணு வாகன கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமானவரி கழிவுத் தொகையாக கணக்கிடப்படும்.
 • மின்னணு வாகனங்களுக்கான சில உதிரி பாகங்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்படும். அந்த வாகனங்களுக்கான சரக்கு-சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முன்னோடி
 • மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழகத்திலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
 • இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட் அறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்கவும், தமிழகத்தில் முதல்முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இதைச் செயல்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக ரூ.1,580 கோடி மதிப்பில் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. 
 • இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி இடையே திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்த மின்சாரப் பேருந்து, சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
தனிக் கொள்கை
 • தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 • பின்னர், தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 10 ஆண்டுகளுக்கான கொள்கைகளை வகுத்து அவர் வெளியிட்டார். இதன் மூலம், சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • மேலும், 2022-ஆம் ஆண்டின் இறுதிவரை 100 சதவீதம் மோட்டார் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும், 2030-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு மாநில ஜிஎஸ்டியை 100 சதவீதம் திரும்ப வழங்கவும் இந்த மின்கொள்கை வழிவகுக்கிறது. 
 • குறிப்பாக இந்தியாவின் முதல் எஸ்யுவி ரக மின்சார காரை ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகம் செய்தது. இதையடுத்து, தங்களது மின்சார கார்களை நிசான், மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன.மின்சார ஆட்டோக்கள்
 • முதல்வரின் துபை பயணத்தின் நிறைவாக இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபையின் கே.எம்.சி., மற்றும் எம் ஆட்டோ ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
 • நவம்பர் மாத இறுதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி செய்யவுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவம்பர் 29-ஆம் தேதி முதற்கட்டமாக 100 மின்சார ஆட்டோக்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் அடுத்த 6 மாதங்களில் 4000 மின்சார ஆட்டோக்களை தயாரிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீத இடஒதுக்கீடு
 • மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்கு தேவையான சார்ஜ் ஏற்றும் மையங்களையும் ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியமாகிறது. 
 • இதனை உணர்ந்த தமிழக அரசு, வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகள், மின்கலன் ஆலைகள் ஆகியவற்றை அமைக்க நிலம் வாங்கினால், 2022-ஆம் ஆண்டு வரை முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிப்பதோடு, தமிழகத்தில் உள்ள மால், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்களில் மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தனது கொள்கையில் அறிவுறுத்தியுள்ளது. 
 • இது போன்ற கொள்கையை முன்னிறுத்தியே மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற மின் நிறுவனங்கள் விரைவில் ஆற்றல் ஏற்று நிலையங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 மின்னூட்ட நிலையங்களை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலை குறைய வாய்ப்பு
 • தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. 
 • அதே சமயம், இதர வாகனங்களை ஒப்பிடும் போது, மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு, நான்கில் ஒரு பங்கு குறைவாக உள்ளது. அத்துடன், சுற்றுச்சூழல் மாசு பிரச்னை இல்லை என்பதும் சிறப்பம்சமாகும்.
 • மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 21.2 மில்லியன் இருசக்கர வாகனங்களும், சுமார் 3.4 மில்லியன் கார்களும் விற்பனையாகியுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 • அரசின் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, விரைவில் மின்வாகன விற்பனை மற்றும் பயன்பாட்டில் தமிழகம் முன்னோடியாகத் திகழும் என தெரிகிறது.

23rd DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
3000 ரயில் பெட்டிகள்: பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை சாதனை
 • இந்திய ரயில்வேயின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை இவ்வாண்டில் 3000 ரயில் பெட்டிகளை ஒன்பது மாதத்திற்குள் தயாரித்துள்ளது. அதன் அர்ப்பணிப்பும், ஆற்றலும் இதில் வெளிப்படுகிறது. அதிகரித்து வரும் பெட்டிகள் தேவையை சந்திப்பதற்கு இது பெரிதும் உதவும்.
 • மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு, சென்ற ஆண்டு 289 பணி நாட்கள் எடுத்திருந்த நிலையில், இவ்வாண்டு 215 நாட்களிலேயே 3000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • 2014 ஆம் ஆண்டு வரை இத்தனை நாட்களில் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபிக்கி தலைவராக சங்கீதா ரெட்டி பொறுப்பேற்பு
 • ஃபிக்கி அமைப்பின் புதிய தலைவராக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். 
 • டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் தலைவா் உதய் சங்கா், ஃபிக்கியின் மூத்த துணை தலைவராகப் பொறுப்பேற்றாா். ஹிந்துஸ்தான் யுனிலிவா் லிமிடெட் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் மேத்தா, ஃபிக்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க பல்கலையில் தமிழ் இருக்கை தமிழக அரசு ரூ.1 கோடி உதவி
 • அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க உதவும்படி, ஹூஸ்டன் தமிழ் அமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
 • அதை ஏற்று, தமிழ் இருக்கை அமைக்க, தமிழக அரசின் பங்குத் தொகையாக, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் வழங்கினார். 
 • வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைக்கப்படுவதால், அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் அந்நாட்டினர், தமிழ் மொழியை கற்கவும், தமிழ் பண்பாட்டை அறியவும், ஆய்வு செய்யவும் வழி ஏற்படும்.
தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றிய தமிழருக்கு, 'சிறந்த விவசாயி விருது'
 • தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றிய தமிழருக்கு, கர்நாடக அரசின், மாவட்ட அளவிலான, சிறந்த விவசாயிக்கான விருது கிடைத்துள்ளது. 
 • விழாவில், விவசாய நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.இதில், மாண்டியா, மத்துார், மலவள்ளி, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, கே.ஆர்., பேட் ஆகிய ஏழு தாலுகாவிலிருந்து, தலா இரண்டு விவசாயிகளை தேர்வு செய்து, மாவட்ட அளவிலான, சிறந்த விவசாயி என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
 • இதில், மத்துார் தாலுகா ஒலகரதொட்டி விவசாயி மகேந்திரன் என்பவருக்கு, வருவாய் துறை அமைச்சர் அசோக் விருது வழங்கினார். 
தேசிய அறிவியல் மைய தலைவராக சேதுராமன் பஞ்சநாதன் நியமனம்
 • அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசு அமைப்பாக தேசிய அறிவியல் மையம் உள்ளது.
 • இந்த மைய தலைவராக இருக்கும் பிரான்ஸ் கோடோவாவின் பதவிக் காலம் வரும் 2020-ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. அதையடுத்து அந்தப் பதவிக்கு சேதுராமன் பஞ்சநாதனை அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் நியமித்துள்ளார்.
 • ஆராய்ச்சி, புத்தாக்கம், நிர்வாக முகாமைத்துவம், கொள்கைகளை வகுத்தல் ஆகிய துறைகளில் சேதுராமன் பஞ்சநாதன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதனால், தேசிய அறிவியல் மையத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - ஜே.எம்.எம்.-காங் அணி 47 இடங்களில் வென்றது
 • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று புதிய அரசை அமைக்க உள்ளது. இக்கூட்டணியின் ஹேமசந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
 • ஜார்க்கண்ட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.எம்.எம். தலைமயிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது.
 • இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 41. தற்போது ஜே.எம்.எம். கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதிய அரசை இக்கூட்டணி எவ்வித தடையுமின்றி அமைக்க உள்ளது.
 • ஜே.எம்.எம்.-ன் ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார். கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 25 தொகுதிகளில்தான் வென்றுள்ளது.
 • ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பி) 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதியிலும் வென்றுள்ளன. 

Monday, 23 December 2019

22nd DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்
 • சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் தொடக்கி வைத்தார். தீவுத்திடலில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கியூபாவில் பிரதமர் நியமனம்
 • 43 ஆண்டுகளுக்கு பின்னர், கியூபாவில் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 1976 ல் கியூபா பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பதவி வகித்தார். அவர், அதிபராக பதவியேற்றதும், பிரதமர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. 
 • இந்நிலையில், கியூபாவின் புதிய அரசியலமைப்பு சட்டப்படி, அதிபரின் பணிச்சுமையை குறைக்க வகை செய்யப்பட்டது. இதன்படி, கியூபா பிரதமராக, அந்நாட்டு, சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை, அதிபர் மிக்கேல் டயாஸ் கனால் நியமித்துள்ளார். 
 • அவர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். பிரதமர் நியமனத்திற்கு அந்நாட்டு தேசிய சபை ஒப்புதல் அளித்துள்ளது.ஆப்கன் அதிபர் தேர்தல் அதிபர் அஷ்ரப் கானி வெற்றி
 • அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், செப்டம்பரில் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி, 70, மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 
 • தேர்தல் முடிவுகள், அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஏராளமான கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததாலும், தொழில்நுட்ப பிரச்னைகளாலும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 
 • முதல் கட்ட தகவலின்படி, அதிபர் அஷ்ரப் கானி, 50 சதவீத ஓட்டுகளை பெற்று, மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லாவுக்கு, 39 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. 
 • ஆனால், இந்த முடிவை ஏற்கப் போவது இல்லை என்றும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, அப்துல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பை வென்றது இந்தியா: ரோகித், கோஹ்லி அரை சதம்
 • இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நடந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வசப்படுத்தியது.
தேசிய காா்பந்தயம்: 5-ஆவதுமுறையாக கௌரவ் கில் சாம்பியன்
 • கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற எப்எம்எஸ்சிஐ தேசிய காா்பந்தய போட்டியில் முதல்நிலை வீரா் கௌரவ் கில் 5-ஆவது முறையாக பட்டம் வென்றாா்.
 • இறுதி சுற்றில் ஜே.கே.டயா் அணியைச் சோந்த கௌரவ் கில்-மூஸா ஷெரிப் இணை எஸ்எஸ்-9 சுற்றில் முதலிடத்தைப் பெற்றது. எஸ்எஸ் 10, எஸ்எஸ் 11 சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஒட்டுமொத்தமாக முதலிடத்துடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 • பிக்கு பாபு-மிலென் ஜாா்ஜ் இரண்டாம் இடத்தையும், டீன் மஸ்காரனெஸ்-ஷுருப்தா மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.பிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவா்பூல் சாம்பியன்
 • இங்கிலாந்து ப்ரீமியா் லீக் முன்னணி அணியான லிவா்பூலும், பிரேசில் சாம்பியனுமான பிளேமிங்கோவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
 • கடந்த 1981-இல் இன்டா்கான்டினென்டல் கோப்பை போட்டியில் லிவா்பூலை வென்றிருந்தது பிளேமிங்கோ. அதன் பின் 2012-இல் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிரேசிலின் காா்னித்தியன்ஸ் அணி லிவா்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
 • வழக்கமான 90 நிமிட நேரத்தில் இரு அணிகளாலும் கோல போடமுடியவில்லை. இறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லிவா்பூல் வீரா் ராபா்டோ பிா்மினோ அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக மாறியது.
 • சாம்பின்ய்ஸ் லீக் கோப்பை, யுஇஎப்ஏ சூப்பா் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவா்பூல் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, கிளப் அணிகள் பிரிவில் உலக சாம்பியனாக ஆகியுள்ளது லிவா்பூல் அணி.
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் முகமது ஷமியின் சாதனை
 • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
 • மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷமிக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தாலும், அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர், இந்தாண்டில் மொத்தம் 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 • இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் (38 விக்கெட்டுகள்) மற்றும் மூன்றாவது இடத்தை அதே அணியின் பெர்குசன் (35 விக்கெட்டுகள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.
முதல் நான்கு வீரர்கள் செஞ்சுரி- பாகிஸ்தானின் அரிய சாதனை
 • பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது. முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமாக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் இந்த சாதனையை செய்தது.
 • கராச்சியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத், ஆபித் அலி, அசார் அலி, மற்றும் பாபர் ஆசாம் ஆகிய வீரர்களே இத்தகைய சாதனையை செய்திருந்த இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி இணைய காரணமாயினர்.
 • இதற்கு முந்தைய இதுபோன்ற சாதனை 20007 இல் மிர்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், வாஸிம் ஜாஃபர், ராகுல் ட்ராவிட் மற்று
 • ம் சச்சின் டெண்டுல்கர் எடுத்த செஞ்சுரிகள் மூலம் நிகழ்த்தப்பட்டிருந்தது.பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அடித்த மொத்த ரன்கள் 527. இது அவர்களுக்கு நான்காவது அதிகபட்சமாகும். 1983 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் அதிகபட்சம் 535 ஆகும்.