Thursday, 28 March 2019

இந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகரிப்பு / 2019 INDIA RELEASES EXCESS CARBON DI OXIDE THAN PREVIOUR YEAR

  • காற்று மாசுபாடு உலகம் முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் உள்ள மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள காற்றானது சில நேரங்களில் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடுகிறது. 
  • அந்த அளவுக்கு மோசமான நிலையே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் கூட பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. 
  • இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency ) இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உமிழப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவு 33.1 ஜிகா டன்களாக இருந்திருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு என்பது 2,299 மில்லியன் டன்கள். இது அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது 4.8 சதவிகிதம் அதிகம். 
  • அதே நேரம் அமெரிக்கா 3.1 சதவிகிதமும் மற்றும் சீனா 2.5 சதவிகிதமும் CO2- வாயுவை அதிகமாக வெளியிட்டுள்ளன. நிலக்கரி பயன்பாடு அதிகரித்ததுதான் இதற்கு முக்கிய காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இப்படி ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவு புவி வெப்பமயமாதலின் வேகத்தை அதிகரிக்கும்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment