Wednesday, 24 April 2019

TNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்

TNPSCSHOUTERS
நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்

 • சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். 
 • தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 • பிறப்பு - 09 பிப்ரவரி 1873
 • பம்மல், தமிழ்நாடு, இந்தியாஇறப்புசெப்டம்பர் 24, 1964கல்விபச்சையப்பா கல்லூரிபணிநாடகாசிரியர், நடிகர் முத்தமிழில் ஒன்றான நாடகக் கலைக்கு உயிரூட்டியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அதை நன்கு பேணி வளர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார். படித்தவர்கள் மத்தியில் அக்கலையைக் கொண்டு சேர்த்தவர் அப்பெருந்தகை. 19ம் நூற்றாண்டில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அக்கலையை உயர்த்தியவர் பம்மல் சம்பந்த முதலியார்.
 • பம்மல் விஜயரங்க முதலியார் சென்னையில் ஆச்சாரப்பன் தெருவில் வசித்து வந்தார். அவர் தன் முதல் மனைவி இறந்து பிறக மாணிக்கவேலு அம்மையாரை 1860ம் ஆண்டு இரண்டாம் தாரமாக மணந்தார். அவர்களின் நான்காவது மகனாக 1873ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை திருஞானசம்பந்தம் பிறந்தார்.
 • விஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவர் 1872ம் ஆண்டு அம்மடத்தில் அவர் சிவதீட்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு இவர் பிறந்ததால் 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை. பிறகு எல்லோரும் பம்மல் சம்பந்த முதலியார் என்று மரியாதையுடனும் அன்புடனும் அழைத்தனர்.
 • சம்பந்த முதலியார் க்கால வழ்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர்' என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் படித்தார். கல்லூரி படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் முடித்த பிறகு சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
 • வழக்கறிஞராக இருந்த தன் தமையனார் ஐயாசாமி முதலியாரிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்தார். பிறகு தனியாகத் தொழில் நடத்திப் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆனார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் நீதிபதி ஆனார். நீதிபதி பதவிக்கே பெருமை தேடித்தரும் விதத்தில் பணியாற்றினார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
 • சம்பந்தர் நீதிபதியாக இருந்தபோது நோய்வாயப்பட்டிருந்த அவர் மனைவி காலமானார். மறுநாள் காலை தன் மனைவியின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்தவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துப் பூஜை செய்து உணவருந்திவிட்டு மதியம் நீதிமன்றத்துக்குச் சென்றார்.
 • தன்னால் வழக்கறிஞர்களும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக முதலியார் கூறினார்.
 • சிறுவயது முதலே முதலியாருக்கு நாடகக்கலை மீது விருப்பம் உண்டு. ஆங்கில நாடகங்களைப் படித்தத் தாமும் அதுபோல எழுதவேண்டும் என்று விரும்பினார்.
 • பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் என்பவரிடம் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாயிற்று.
 • வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை 'மானியர் வில்லியம்ஸ்' என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் சம்பந்தர்.
 • கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' என்ற நாடகமே முதலியார் பார்த்த முதல் நாடகம். அந்த நாடகத்தையே 'புஷ்பவல்லி' என்ற பெயரில் சிறிது மாற்றி எழுதினார். அதுவே சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்.
 • சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1.7.1891ல் நண்பர்களுடன் சேர்ந்து சுகுண விலாச சபா என்ற சபையை நிறுவி அதன் மூலம் தான் எழுதிய நாடகங்களை நடத்தினார். அதில் நடிக்கவும் செய்தார். டாக்டர்கள், வக்கீல்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர்கள் போன்றவர்கள் சுகுண விலாச சபா நாடகங்களில் நடித்தனர்.
 • துருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' கதையை எழுதி அதை நாடகமாக்கினார். மனோகரா மிகவும் புகழ்பெற்ற நாடகம். அந்நாடகக் கதாநாயகிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தந்தையுடன் புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கே புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட ஒர நாணயத்தைக் கண்டார். அதில் விஜயா என்று எழுதியிருந்தது. அப்பெயரையே மனோகரா நாடகக் கதாநாயகிக்கு வைத்தார்.
 • இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நடந்து அவருக்கு புகழைத் தேடித்தந்தன.
 • பேசும் படங்கள் வந்ததும் அதிலும் அவர் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. குறிப்பாக பெரும் வெற்றிபெற்ற சபாபதி திரைப்படம் இவரத நாடகமே.
 • தமிழ்மீது கொண்டிருந்த பற்றால் பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார் சம்பந்தர்.
 • சிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946ம் ஆண்டு அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். மற்றும் காலக் குறிப்புகள், சாதாரண உணவுப் பொருளின் குணங்கள், நாடகத் தமிழ் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.
 • மேலும் அவரது பல நாடகங்கள் நூல் வடிவம் பெற்றன. சம்பந்தர் எழுதிய நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் உ.வே.சா., பூசை. கலியாண சுந்தர முதலியார் போன்ற அறிஞர் பெருமக்கள் சாற்றுக் கவிகள் எழுதிக் கொடுத்தனர்.
 • சம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். கடைசி வரை இப்பழக்கம் அவரிடம் இருந்தது.
 • சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.
 • அப்போது ஓர் ஆங்கிலேய கவர்னர் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் கொடிமரத்தைத் தாண்டி உள்ளே போகக் கூடாது என்று சம்பந்த மதலியார் கண்டிப்பாக் கூறிவிட்டார்.
 • சென்னைப் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் பல ஆண்டுகள் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார்.
 • சம்பந்தரின் 81ம் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1959ம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் பெற்றார். பல கல்லூரிகளும் பல சபாக்களும் இவருக்கு விழா எடுத்தன. நாடகத் திரைப்படத்துறையினரும் அவர் பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
 • தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பம்மல் சம்பந்த முதலியார் 24.9.1967 அன்று இறையடி சேர்ந்தார். சம்பந்த முதலியார் தன் இறுதிநாள் வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

DOWNLOAD APRIL 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS


TNPSCSHOUTERS  - APRIL 2019
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st APRIL 2019
2.
2nd APRIL 2019
3.
3rd APRIL 2019
4.
4th APRIL 2019
5.
5th APRIL 2019
6.
6th APRIL 2019
7.
7th APRIL 2019
8.
8th APRIL 2019
9.
9th APRIL 2019
10.
10th APRIL 2019
11.
11th APRIL 2019
12.
12th APRIL 2019
13.
13th APRIL 2019
14.
14th APRIL 2019
15.
15th APRIL 2019
16.
16th APRIL 2019
17.
17th APRIL 2019
18.
18th APRIL 2019
19.
19th APRIL 2019
20.
20th APRIL 2019
21.
21st APRIL 2019
22.
22nd APRIL 2019
23.
23rd APRIL 2019
24.
24th APRIL 2019
25.
25th APRIL 2019
DOWNLOAD HERE
26.
26th APRIL 2019
DOWNLOAD HERE
27.
27th APRIL 2019
DOWNLOAD HERE
28.
28th APRIL 2019
DOWNLOAD HERE
29.
29th APRIL 2019
DOWNLOAD HERE
30.
30th APRIL 2019
DOWNLOAD HERE


மார்ச் மாத ஜி.எஸ்.டி:ரூ.1 லட்சம் கோடி வசூல்
 • ஜி.எஸ்.டி. வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். 
 • அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்
 • நாட்டின் பாதுகாப்பிற்கு பயன்படும் 'எமிசாட்' உட்பட 29 செயற்கைக் கோள்களை 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவிற்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. 
 • அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவை நாட்டின் தகவல் தொடர்பு, பாதுகாப்பு, கடல் வழி போக்குவரத்து உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படுகிறது.
 • இதன்படி 'பி.எஸ்.எல்.வி. - சி 45' என்ற ராக்கெட் இந்தியாவின் எமிசாட்; அமெரிக்காவின் 24; லித்துவேனியாவின் இரண்டு; ஸ்பெயின், சுவிட்சர்லாந்தின் தலா ஒன்று என மொத்தம் 29 செயற்கைக் கோள்களை சுமந்தபடி சதீஷ் தவான் மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9:27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
 • தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடங்கள் 18 வினாடிகளில் 749 கி.மீ.ல் உள்ள புவி வட்ட பாதையில் எமிசாட் செயற்கைக்கோள் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த செயற்கைக்கோள் உள்நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான ஆய்வுகளுக்கு பயன்படும்.பின் ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு ஒரு மணி நேரம் 50வது நிமிடத்தில் 504 கி.மீ.ல் உள்ள வேறு புவி வட்ட பாதையில் வெளிநாடுகளின் வணிக ரீதியிலான 28 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. 
 • தொடர்ந்து ராக்கெட்டின் இறுதி நிலை வேறு பாதையில் இயங்கி வருகிறது. ஒரே ராக்கெட் தனித்தனி புவி வட்ட பாதையில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தி இயங்கி வருவது உலகிலேயே இது முதல் முறை. 
இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 39,000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை
 • இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 39,028 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை புரிந்துள்ளது. 
 • வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸானது 38,672 புள்ளிகளாக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீட்டெண் 330 புள்ளிகள் என 0.90 சதவீதம் அதிகரித்து 39,028 ஆக உயர்ந்தது. 
 • வரலாற்றில் 39 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் தொடுவது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிப்டியானது 88.80 புள்ளிகள் உயர்ந்து 11,700 புள்ளிகளை தாண்டியது. 
கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
 • திருப்பத்தூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டுமுறை என்பது இயற்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. பஞ்ச பூதங்கள், மரங்கள் வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. 
 • அவ்வரிசையில் இடம்பெற்றதே கொற்றவை வழிபாடாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமான கொற்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகாரக் காப்பியமாகும். கொற்றவை வழிபாட்டு முறையை விளக்கும் வகையில் தனியாக ஒரு காதையையே இளங்கோவடிகள் வடித்துள்ளார்.
 • மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 • இச்சிற்பத்தில் பல்லவர் காலக் கலைக்கூறுகள் காணப்படுகின்றன என உறுதிப்படுத்தினார். இச்சிற்பமானது கால ஓட்டத்தில் உராய்ந்து பொலிவிழந்து காணப்படுகிறது. 
'யுனெஸ்கோ' பட்டியலில் துர்கா பூஜை
 • மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும், துர்கா பூஜையை, அடுத்த ஆண்டுக்கான, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையமான, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தவுக்கு உறுப்பினர்கள் நியமனம்
 • தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
 • சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் ஊழல் தடுப்பு நடுவராகவும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே. ஜெயபாலன், ஆர். கிருஷ்ணமூர்த்தி நீதித்துறை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்குரைஞர் கே. ஆறுமுகம் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியாவுக்கான பாக்., தூதர் மாற்றம்
 • இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ‌ஷா மக்மூத் குரே‌ஷி தெரிவித்துள்ளார்.
சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு
 • இந்திய ரயில்வேக்கு, சென்னையில், ஐ.சி.எப்., உத்தர பிரதேசம், ரேபரேலியில், எம்.சி.எப்., பஞ்சாப், கபுர்தலாவில், ஆர்.சி.எப்., என, ரயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.அவற்றில், 2018 -- 19ம் நிதியாண்டில், 6,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • சமீபத்தில், முதன் முறையாக, இன்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் அதிவேக ரயிலை தயாரித்து, சாதனை படைத்தது.
`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!
 • கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெற்ற இந்திய அணி
 • டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பெற்ற இந்திய அணி ஐ.சி.சி., விருதை தக்கவைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் தரவரிசையில் ஏப். 1ம் தேதி 'நம்பர்-1' இடத்தில் இருக்கும் அணிக்கு 'மேஸ்' (கதாயுதம்) விருது வழங்கப்படும். 
 • கடந்த இரு ஆண்டுகள் இந்த விருதை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. சமீபத்தில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 116 புள்ளிகளுடன் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 'மேஸ்' விருதை தட்டிச் சென்றது. 
 • தவிர, ரூ. 6.9 கோடி பரிசும் கிடைத்தது. இரண்டாவது இடத்தை பெற்ற நியூசிலாந்து அணிக்கு (108), ரூ. 3.47 கோடி தட்டிச் சென்றது. கடந்த இரு ஆண்டுகளாக இரண்டாவது இடம் பெற்ற தென் ஆப்ரிக்கா (105) இம்முறை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
 • ரூ. 1. 39 கோடி பெற்றது. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (104) பின் தள்ளி நான்காவது இடத்தை உறுதி செய்த ஆஸ்திரேலியா (104), ரூ.69 லட்சம் பெற்றது. 

24th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு
 • ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.  இந்தாண்டில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இரு முறை கூடியது. இரு முறையும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி, தலா, 0.25 சதவீதம் என, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது.
 • தனி நபர் கடன், வாகனம், வீட்டு வசதி கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டால், சாதாரண மக்களுக்கு பயன் கிடைக்கும்.
 • ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில். 358 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 25ஆயிரம் கோடியாகும். 
 • முதற்கட்டமாக, வரும் மே, 2ல், 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் பத்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள், எஞ்சிய தொகைக்கான கடன் பத்திரங்கள் வாங்கப்படும். 
டிக் டாக் ஆப் தடை நீங்கியது
 • ஆபாசமான வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.
 • தவறான நோக்கத்திலோ (அ) ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும் - டிக்-டாக் செயலி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உறுதி.
 • நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்
 • சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 • சென்னை பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி கல்லூரி பேராசிரியர்கள் 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
 • இந்த வழக்கு நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக பச்சையப்பன் அறக்கட்டளை தேர்வுக்குழு தரப்பில் வாதிடப்பட்டது.
 • அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்லூரி முதல்வர் சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முதல்வரை மீண்டும் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினார். 
 • அதேவேளையில் மனுதாரர்கள் கூறியுள்ள முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மிதக்கும் அணுமின்நிலையத்தில் சோதனை வெற்றி
 • ரஷிய நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின்உற்பத்தி செய்து பரிசோதனை செய்யப்பட்டது. ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது.
 • பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
 • மிதக்கும் அணுமின் நிலையத்தில் சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, ரொஸாட்டம் குழுவினரின் மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் கூறி உள்ளது.ராமாயண காட்சி சிறப்பு தபால் தலை இந்தோனேஷியா வெளியிட்டது
 • இந்தியா - இந்தோனேஷியா தூதரக நட்புறவு ஏற்பட்டதன் 70-வது ஆண்டையொட்டி இந்தோனேஷியா அரசு ராமாயண காட்சியை விளக்கும் சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளது.
 • இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டது. இதன் 70-ம் ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா சென்றிருந்த போது இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
 • இந்த தபால் தலையை இந்தோனேஷியாவின் பாபக் நெயோமன் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.
இலங்கையில் அவசரகால சட்டம் நிறைவேற்றம்
 • இலங்கையில் அவசரகால சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. 
 • இதில் 360 பேர் பலியாயினர். இதனைடுத்து இலங்கை அரசு அவசர கால சட்டம் கொண்டு வந்தது.மேலும் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 • இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை 10 மணி அளவில் அனைத்துகட்சி கூட்டம் அதிபர் தலைமையில் நடைபெறும் எனவும், மாலை 4 மணி அளவில் மத சம்பந்தப்பட்ட ஆலோசனை குழு கூட்டம்நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் தன்கருக்கு வெள்ளிப் பதக்கம்
 • சீனாவின் ஸியான் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அமித் தன்கர், கஜகஸ்தானின் டேனியர் காய்சனோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த அமித் தன்கர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 
 • 61 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ராகுல் அவாரே 9-2 என்ற கணக்கில் கொரியாவின் ஜின்சோல் கிம்மை வீழ்த்தினார். இந்தத் தொடரில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 
 • நேற்று முன்தினம் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கமும், 79 கிலோ எடைப் பிரிவில் பிரவீன் ராணா வெள்ளிப் பதக்கமும், 97 கிலோ எடைப் பிரிவில் சத்யவர்த் கதியான் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.ஆசிய தடகள போட்டி - ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்யராஜீவ் உள்பட இந்திய அணி
 • 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.
 • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
 • 4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்
 • 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. 
 • பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
 • கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் அமித் குமார்
 • சீனாவின் ஸியான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தாங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராகுல் அவாரே வெண்கலம் வென்றார். 74 கிலோ எடைப் பிரிவில் ப்ரீ ஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் டானியர் கெய்சனோவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார் அமித் தாங்கர்.
 • முன்னதாக அரையிறுதியில் கிர்கிஸ்தான் வீரர் லிஜிஸ் ஜகிப்பெகோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் அமித். 61 கிலோ எடைப்பிரிவில் மோதிய ராகுல் அவாரே கொரிய வீரர் ஜின்சியோல் கிம்மிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இ
 • ந்த போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது. 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தங்கம் வென்றார்.
 • விக்கி (92 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா (86 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2 தினங்களில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.