'ட்ரோன்' பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள்
- 'ட்ரோன்' எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உளவு பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது என பல தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன.
- ட்ரோன்களுக்கு தனித்துவ மான அடையாள எண் வழங்கப் படும். அது விமானத்தில் ஒட்டப் பட்டிருக்கும். விமானத்தை இயக்கு பவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களின் எடை யைக் கொண்டு நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என 5 வகைகளாகப் பிரிக்கப்படும்.
- நேனோ ட்ரோன்களைத் தவிர மற்றவற்றைப் பறக்க வைக்க விமான போக்குவரத்துத் துறையின் முன்அனுமதி பெற வேண்டும். 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம். அரசுக்குச் சொந்தமான ட்ரோன்களை இயக்கு வதற்கு முன்பும் உள்ளூர் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- 18 வயதுக்கு மேற்பட்டவருக்குத் தான் ட்ரோனை இயக்க அனுமதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப் பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
- 5 ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லும். பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும். கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது. பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலை வுக்கும், மற்ற விமான நிலையங் களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது.
- சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது. நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது.
மேகதாது அணை பிரச்சினை குறித்து தனி தீர்மானம்- சட்டசபை சிறப்பு கூட்டம்
- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ப.தனபாலை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.
- "தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சட்டசபையில் 6-ந் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு அவை கூட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.
ரூ.1,034,00,00,000 கோடி கால்வாய்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு
- கால்வாய்கள் தூர்வார ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கழிவுகள் அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
- இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் ஏற்படும் காய்ச்சலை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளது.
- அதில், கால்வாய்கள் தூர்வார ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் நிலைகளில் இருந்து இதுவரை 10 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 1ம்தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10-ம் தேதி மியான்மர் பயணம்
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாள் அரசுமுறைப் பயணமாக, 10 ஆம் தேதி மியான்மர் செல்ல உள்ளார்.
- 14-ம் தேதி வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் மூலம் இந்தியா-மியான்மர் இடையேயான நல்லுறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
- மேலும், மியான்மர் பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11
- ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்துடன் தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைகோளான ஜியோ-காம்ப்சாட்-2A-ம் செலுத்தப்பட்டது.
- தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காகவும், கடல் சார் ஆய்வுகளுக்காகவும் பல்வேறு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அந்த வரிசையில் அதிவேக இணையதள சேவைகளை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைகோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.
- ஜிசாட்-11 செயற்கைகோள் 5,854 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுதான். இதன் மூலம் இந்தியாவிலும் அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும். இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். இதில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டன.
- ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட்-19, ஜிசாட்-29 ஆகிய இரண்டு செயற்கைகோள்கள், தற்போது செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-11 மற்றும் அடுத்தாண்டு ஏவப்படும் ஜிசாட்-20 செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் விநாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும் என்றும் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்லிக்ஸ் நிறுவனம் கைமாறியது
- உலக போரின் இறுதியில் ராணுவ வீரர்களுக்கு ஊட்டசத்து அளிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தால், ஹார்லிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.இது இந்தியாவில் 140 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்த நிலையில் சிறந்த ஊட்டச்சத்து பான சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்தநிலையில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விலை வாங்க யூனி லிவர் மற்றும் கோக கோலா மற்றும் கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்குள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில் யூனி லிவர் நிறுவனம் 31,700 கோடி ரூபாய் கொடுத்து ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளது.
- இந்த கைமாறலை பார்க்கும் போது ஹார்லிக்ஸ் மீண்டும் ஒரு இங்கிலாந்து நிறுவனத்திடமே கைமாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்திய ஊட்டச்சத்து சந்தையில் ஹார்லிக்ஸ் தனது விற்பனை சதவிதம் 43 சதவிகிதம் மேலும் கடந்த நிதியாண்டில் ஹார்லிக்ஸ் மட்டும் விற்பனை செய்ததன் மூலம் கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனம் சுமார் 4200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ20,00,00,00,00,00,00...பணமதிப்பிழப்புக்குப் பின் பணப்புழக்கம்..இந்திய ரிசர்வ் வங்கி தகவல்
- பணப்புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பணப்புழக்கம் 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.
- 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான பணப்புழக்கம் 20 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
- புதுடெல்லியில் நடந்த இந்திய தொழிற்சாலைகளுக்கான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா கூறும்பொழுது, இந்த வருடம் இதுவரை 6.08 கோடி அளவிற்கு வருமான வரி தாக்கல்களை நாம் பெற்றுள்ளோம். இந்த 2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவு என கூறினார்.
- இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் வரி செலுத்தும் கட்டமைப்பினை நல்ல முறையில் உயர செய்துள்ளது. கடந்த ஆண்டில் 7 லட்சம் என இருந்த கார்ப்பரேட் நிறுவன வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
- நடப்பு நிதியாண்டிற்கான 11.5 லட்சம் கோடி என்ற நேரடி வரி வருவாய் இலக்கை நாங்கள் அடைவோம் என்று அவர் கூறியுள்ளார்.
- நமது மொத்த நேரடி வரி வளர்ச்சி விகிதம் 16.5 சதவீதம் ஆக உள்ளது. இதேபோன்று நிகர நேரடி வரி வளர்ச்சி விகிதம் 14.5 சதவீதம் அளவில் உள்ளது. வரி கட்டமைப்பினை ஆழ, அகலப்படுத்தும் வகையில் உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது உதவியது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
ஏ.என்.ஜா புதிய நிதித்துறை செயலாளராக நியமனம்
- மத்திய நிதித்துறை செயலளராக ஏ.என்.ஜா-வை மத்திய அரசு நியமித்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நியமனங்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் ஏஎன்.ஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.
- ஏற்கனவே நிதித்துறை செயலாளராக இருந்து வந்த 1981-ன் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி யான ஹஸ்முக் ஆத்யா கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நிதித்துறை செயலாளராக ஏ.என்.ஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தற்போது 59 வயதாகும் அஜய் நாராயண ஜா (ஏ என் ஜா) 1982ம் ஆண்டை மணிப்பூர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் தனது கல்லூரி படிப்பை ஸடீபன்ஸ் கல்லூரியில் படித்து முதல்நிலையில் தேர்வான நிலையில், கனடாவிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து பொருளாதார கொள்கை முகாமைத்துவத்தில் முதுநிலை படிப்பு படித்தார். இதற்காக அவர் உலக வங்கி உதவித்தொகை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் இருந்த இடைத்தரகர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
- பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
- இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது.
- இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
- இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இன்றிரவு அவர் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக வங்கி ரூ. 14 லட்சம் கோடி முதலீடு
- உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றம் குறித்த அச்சத்தில் உள்ளன. புவிவெப்பமய மாதலும், காற்று, நீர், நில மாசுபா டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலை உண்டாகியுள்ளது. மனித குலத் துக்கும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது. எனவே பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முனைப்பில் உலக நாடுகள் உள்ளன.
- ஐநாவின் பருவநிலை மாற்ற மாநாடு போலந்தில் நடைபெற்றது. 200 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உலக வங்கி 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டு களில் பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ள ரூ. 14 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள் ளது. இதில் ரூ. 7 லட்சம் கோடி உலக வங்கியிலிருந்து நேரடியாக ஒதுக்கப்படும் எனக் கூறியுள் ளது.
16-வது தேசிய ஜூனியர் தடகளத்தில் 2-ம் இடம் பிடித்த தமிழகம்
- திருப்பதியில் உள்ள தாரக ராமா விளையாட்டு மைதானத் தில் கடந்த 1-ம் தேதி 16-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 28 மாநிங் களைச் சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 355 பேர் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர்.
- 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் மத்திய பிரதேச மாநிலம் பதக்க பட்டியலில் முதலிடம் பெற்றது.
- 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை பெற்ற தமிழகம் பதக்க பட்டியலில் 2ம் இடம் பெற்றது.
- போட்டிகளை நடத்திய ஆந்திரா, 2 தங்கம், 1 வெண்கலத் துடன் 8-ம் இடம் பிடித்தது. இந்தத் தொடரில் மொத்தம் 12 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளா, குண்டு எறிதல் போட்டியில் 13.75 மீட்டர் தூரம் வரை எறிந்து புதிய சாதனை யை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment