Monday, 3 December 2018

3rd DECEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF




மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை
  • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. 
  • இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.
  • இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அணை திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 
  • மேகதாது அணை பிரச்சினைக்கு பிறகு நடைபெற்ற இந்த முதல் கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார்.
  • இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
  • ஏற்கனவே கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி நீரை அளித்தும், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை குறைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் புதிய அணை உருவானால், இயல்பான ஆண்டுகளில் கூட தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை பெற இயலாத சூழ்நிலை ஏற்படும்.
  • காவரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதை இப்போது கூற முடியாது. ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேகதாது பற்றி நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் தமிழகம் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை வாரியம் கருத்தில் கொண்டுள்ளது.
  • மேகதாது அணை விவகாரத்தில், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. கர்நாடக அரசின் அந்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்ற பிறகே தாக்கல் செய்ய முடியும். இவ்வாறு இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் பெற வேண்டும்.
  • அந்த வகையில் மத்திய அரசு மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. வெறும் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்குதான் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பான அனைத்து விஷயங்களும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். 
'ட்ரெயின் 18' : டெல்லியில் இருந்து வாரணாசி செல்ல 8 மணிநேரம் : 25-ம் தேதி துவக்கம்
  • இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவே ரக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின் 18' என பெயரிப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இல்லை. இழுவை வேகத்திறன் கொண்ட பெட்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
  • தற்போதுள்ள அதிவேக ரயிலான சதாப்தி ரயிலை விடவும், இந்த ரயிலின் பயண நேரம், 15 சதவிகிதம் குறைவாக இருக்கும். சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.
  • இந்தியாவின் அதிவேக ரயிலை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி வைக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
  • புதுடெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் இந்த ரயில் ஆரம்பத்தில் 130 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இதன் வேகம் அதிகரிக்கும். அதன்படி காலை 6:00 மணிக்கு புதுடெல்லியில் புறப்படும் இந்த ரயில் 800 கிலோ மீட்டர் தொலைவை கடந்து பிற்பகல் 2:00 மணிக்கு வாரணாசியை வந்தடையும்.
விண்வெளியில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் காற்றுக் கசிவின் மர்மம் குறித்து ஆய்வு செய்வதற்காக மூன்று வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் நேற்று மாலை 5 மணியளவில் கஜகஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
  • இந்த விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காற்றுக் கசிவின் மர்மம் குறித்து வரும் 11-ம் தேதி அக்குழு ஆய்வு செய்கிறது.இந்த விண்கலத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் செய்கின்றனர். ஆறரை மாதங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புகின்றனர்.
ஓபக்கில் இருந்து கத்தார் வெளியேற்றம் 
  • தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் தூதரக உறவைத் துண்டித்து, கத்தாருடனான விமான சேவையை நிறுத்திக் கொண்டன.
  • இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை கத்தார் சந்தித்தது.அமெரிக்காவின் தலையீட்டால் கத்தாரின் பொருளாதாரப் பின்னடைவு சரிசெய்யப்பட்டு ஓரளவு நிலைமை சரியாகத் தொடங்கி இருந்தது.
  • இப்போது திடீரென எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான 'ஒபக்' எனும் அமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறப்போவதாக கத்தார் நேற்று திடீரென அறிவித்துள்ளது.
  • 'ஒபக் கில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவை அமலுக்குக் கொண்டுவருகிறோம். 'ஒபக்'. கூட்டத்தில் எங்கள் முடிவை தெரிவித்து விடுவோம்' என அறிவித்திக்கிறார்.
உலக அளவில் அடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 கோடி
  • உலக அளவில் அடிமை தொழிலில் 4 கோடி பேர் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்களில் 4ல் ஒரு பங்கினர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்து உள்ளது.
  • இந்த உலகளாவிய விவகாரத்தில் மனித கடத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர், கட்டாய திருமணம் மற்றும் ஆயுத போரில் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சேர்த்து பணியில் அமர்த்துதல் போன்றவை உள்ளன. இந்த அடிமை தொழில் சார்ந்த விசயங்களை ஒழிப்பதற்கான பிரசாரத்தில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
  • இதற்கு எதிராக குழந்தை தொழிலாளர் முறை இன்றளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று கடந்த 2000ம் ஆண்டு முதல் மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரின் மனித கடத்தலையும் ஐ.நா. பொது சபை தடை செய்துள்ளது.



பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சியில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு
  • பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இதில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. 
  • சி.பி.இ.சி. என்னும் இந்த சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
  • இந்த நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் 'ஷாகீன்-7' என்னும் பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
  • இது இரு நாட்டு விமானப்படைகளின் 7-வது கூட்டு போர் பயிற்சி ஆகும். 6-வது கூட்டு போர் பயிற்சி, சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
இந்தியா, ஸ்பெயின் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்
  • இந்தியாவில் குற்றம்புரிந்துவிட்டு வெளிநாடுகளில் சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். இந்தநிலையில் ஸ்பெயினுடன் இந்தியா மேற்கொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
  • அதன்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாது என ஸ்பெயினிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதேபோல் கைதிகளை பரிமாறிக்கொள்ளும்போது அவர்களது உடல்நிலை, வயது, மனநிலை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்தில் தொடங்கியது ஐ.நா பருவநிலை மாநாடு
  • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு போலந்தில் தொடங்கியது.
  • உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
  • இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பருவநிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



2018ன் சிறந்த கால்பந்து வீரர் லூக்கா மாட்ரிச்
  • சர்வதேச அளவில் கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது பலோன் டி'ஓர்.பாரிசில் நடைபெற்ற பெரும் விழாவில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்ட்டனர். 
  • பிரென்ச்கால்பந்து பத்திரிகை, 70 வருடங்களுக்கும்மேலாக இந்தவிருதைவழங்கி வருகிறது. விளையாட்டுத்துறையில் பணியாற்றும் நிருபர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில், ஒவ்வொரு ஆண்டின் சிறந்த கால்பந்துவீரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  • உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை மாட்ரிச் பெற்றார். அதேநேரம் க்ளப் கால்பந்தின் மிகப்பெரிய கோப்பையான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் வெல்ல மாட்ரிச்உறுதுணையாக இருந்தார்.
  • முன்னதாக ஃபிபாவழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும், ஐரோப்பிய கால்பந்து கழகம் வழங்கும் சிறந்த வீரருக்கான விருதையும் மாட்ரிச் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்தார் வைல்டர்
  • குத்துச்சண்டை விளையாட்டும் 1963ஆம் ஆண்டு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. இதற்கமைய இந்த விளையாட்டில் 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு உலக சம்பியன் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • அந்த வகையில் தற்போது உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சம்பியனாக திகழ்பவர் அமெரிக்காவின் டியோன்டே வைல்டர்.
  • லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற சம்பியன் பட்டத்துக்கான போட்டியில், பிரித்தானியாவின் டைசன் பியுரிக்கும், வைல்டருக்கும் பலப்பரீட்சை நடத்தினர்.
  • ஒரு நடுவர் வைல்டருக்கு 115-111 புள்ளிகள் எனவும், இரண்டாவது நடுவர் பியுரிக்கு 114-112 புள்ளிகள் சாதகமாகவும், மூன்றாவது நடுவர் 113-113 புள்ளிகள் எனவும் அறிவித்தனர்.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் தென் ஆப்ரிக்க அதிபர்
  • குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்க உள்ளார். ஜனவரி, 26ல் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு, வெளிநாட்டு தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவர்.
  • இந்நிலையில், அர்ஜென்டினாவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா வை சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதை தென்ஆப்ரிக்க அதிபரும் ஏற்று கொண்டார்.



'மெரினாவில் போராட அனுமதி கிடையாது' : உச்சநீதிமன்றம்
  • மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
  • 2003ஆம் ஆண்டு முதலே மெரினாவில் போராடுவதற்கு தடை இருப்பதாக தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதி என்பதால் மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அரசின் சார்பில் கூறப்பட்டது. 
குடிநீர் திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசுக்கு வட்டியில்லா கடன் வழங்கிய ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட் நிர்வாகம்
  • குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மஹாராஷ்டிரா மாநில அரசு, ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்டிடம் 500 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளது.
  • மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் ஷீரடி கோவிலுக்கு தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலத்தில் இந்த எண்ணிக்கை 3.5 லட்சத்தை தொடும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
  • இதனால், நீர்பாசன திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அந்த திட்டம் முடங்கியது. இதையடுத்து முதல்வர் பட்நாவீஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட்டிடம் ரூ.500 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்படடது.
  •  கடன் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. நீர்பாசன திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,200 கோடியாகும். டிரஸ்ட் ரூ.500 கோடி கடன் வழங்க உள்ளது. நீர்பாசன துறை இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்க உள்ளது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment