Sunday, 2 December 2018

2nd DECEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF




ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு
  • அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் 'ட்ரெயின் 18' -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை
  • இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவே ரக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. 'ட்ரெயின் 18' என பெயரிப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இல்லை. இழுவை வேகத்திறன் கொண்ட பெட்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரயிலின் முதல் ஓட்டம் கோட்டா - சவாய் மாதோபூர் இடையே இன்று இயக்கப்பட்டது. அப்போது 180 கிலோ மீட்டர் தொலைவு வேகத்தில் அதிவேகமாக இந்த ரயில் பயணம் செய்தது. 
இந்திய - அமெரிக்க விமானப்படைகள் 12 நாட்கள் கூட்டு பயிற்சி
  • எக்ஸ் கோப் என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்கா விமானப்படைகள்கூட்டு பயிற்சி முகாம்களில் ஈடுபட்டு வருகின்றன. 4வது முறையாகநடைபெறும் இந்த பயிற்சி முகாம், நாளை துவங்குகிறது. 12 நாட்களுக்கு இந்த கூட்டுபயிற்சிமுகாம் நடைபெறுகிறது.
  • மேற்கு வங்கத்தின் கலைகுண்டா மற்றும்பனகர் பகுதிகளால் அமைந்துள்ள விமானப்படைதளங்களில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இரு நாட்டு விமானப்படை பயன்படுத்தும் சிறந்தயுக்திகளை பரிமாறிக்கொண்டு, அதன் மூலம், இரு நாடுகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த இந்த பயிற்சி உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
  • பன்னிரண்டுஎஃப்-15 போர்விமானங்கள் மற்றும் மூன்றுசி-130 ராணுவ விமானத்துடன் அமெரிக்கா இந்த பயிற்சியில் கலந்து கொள்கிறது. Su-30 MKI, ஜாகுவார், மிராஜ் 2000, C-130J மற்றும்AWACS விமானங்களுடன் இந்தியா இதில் கலந்து கொள்கிறது.
இந்தியாவுக்கு 112 -அவசரகால உதவி செயலி அறிமுகம்
  • நாடு முழுவதும் அவசரகாலங்களில் தொடர்பு கொள்வதற்குப் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனித்தனியாகப் பல அவசரகால கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் பலத்துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101 ஆகிய எண்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. 
  • ஆனால் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்து உதவிகளுக்கும் ஒரே பொதுவான எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது போன்ற வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் விதமாக 112 என்ற எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • இந்த புதிய நடைமுறை இரண்டு தினங்களுக்கு முன்னால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 112 இந்தியா என்ற புதிய செயலியையும் அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது 'இந்த செயலிலியில் ஷவுட் (shout) என்ற வசதி இடம்பெற்றுள்ளது. 
  • இதன் மூலம் பிரச்சனையில் சிக்கும் பெண்கள் அருகில் உள்ள அவசர உதவி மையத்தை அணுகி உதவி பெறலாம்.' இந்த செயலியின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி 20 உச்சி மாநாட்டை 2022 ஆம் ஆண்டு இந்தியா நடத்துகிறது
  • வரும் 2022 ஆம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்த விரும்பிய மோடியின் கோரிக்கைக்கு உலக நாடுகள் ஒப்புதல் அளித்துளது
  • கடந்த 1990 ஆம் ஆண்டு ஜி 20 நடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. உலகில் நடைபெறும் வர்த்தகங்களில் 80% இந்த 20 நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
  • கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைகிறது. ஆகவே 2022 ஆம் வருடம் ஜி 20 உச்சி மாநாட்டை நடத்த மோடி விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.



இந்திய நிறுவனங்களின் கருப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புதல்
  • இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்திய நாட்டைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் சேமித்து வைத்துள்ள கருப்புபணம் குறித்த விபரங்களைசுவிட்சர்லாந்து தர ஒப்புக்கொண்டுள்ளது.
  • இந்திய நாட்டைச் சேர்ந்த பலர் ஸ்விஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை சேமித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதை பற்றிய தகவல்களை பெறுவதற்காக, அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
  • இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஜியோடெசிக் லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்கள் மற்றும் ஜியோடெசிக் லிமிடெட் நிர்வாகிகள் பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரது வங்கி முதலீடுகள் பற்றிய தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து நாட்டின் வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவை, இந்தியாவில் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய அரசின் இலக்கான ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது
  • 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் அரசின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்து வருவதால் நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.
  • அரசின் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் நிதிப் பற்றாக்குறை. வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான 3.3 சதவிகிதம் என்ற இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று கடந்த மாதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
  • 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது. முன்பு இது 3.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 2018-19ஆம் நிதியாண்டு இலக்கான 3.3 சதவிகித ஜிடிபி என்பது 6.24 லட்சம் கோடி ரூபாய்.
  • அது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதமே 85 சதவிகித இலக்கை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குள் ரூ.6.48 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த அளவானது பட்ஜெட் மதிப்பீட்டில் 103.9 சதவிகிதமாகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததே இந்த நிதி பற்றாக்குறை அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
  • அக்டோபர் மாத இறுதியில் பற்றாக்குறையானது பட்ஜெட் மதிப்பீட்டில் 96.1 சதவிகிதமாக இருந்தது. அரசின் வருவாயைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - அக்டோபரில் ரூ.7.88 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது பட்ஜெட் இலக்கில் வெறும் 45.7 சதவிகிதம் மட்டுமே. சென்ற ஆண்டின் இதே காலத்தில் பட்ஜெட் இலக்கில் 48.1 சதவிகித அளவு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.
  • இந்த நிதியாண்டில் அரசு மொத்தம் ரூ.17.25 லட்சம் கோடியை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகப் பொதுக் கணக்காய்வாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment