Friday, 30 November 2018

மின்னணுப் பெட்டகம்

Tnpsc Shouters
 • ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மின்னணு சேமிப்பு இடத்தை இந்தப் பெட்டகம் வழங்குகிறது. குடிமக்களின் ஆதார் எண்ணுடன் இந்தப் பெட்டகம் இணைக்கப்படும். இந்தப் பெட்டகத்தில் மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும். 
 • வெவ்வேறு துறைகள் வழங்கும் மின்னணு ஆவணங்களையும் இதில் வைத்துக் கொண்டு URI (Uniform Resource Identifier) link மூலம் அணுக முடியும். இந்தத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மின்னணு கையொப்ப வசதியைப் பயன்படுத்தி மின்னணு ஆவணங்களில் கையெழுத்திடவும் முடியும்.
 • இந்தப் மின்னணுப் பெட்டகத்தை இணையதளம் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் அணுகமுடியும்.

இ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை

Tnpsc Shouters
 • மக்கள் தற்சமயம் தாங்கள் சமர்ப்பிக்கின்ற பல விண்ணப்பங்களிலும் படிவங்களிலும் கையொப்பம் இட வேண்டியுள்ளது. இதற்குப்பதிலாக டிஜிட்டல் கையொப்பம் என்பது வழக்கமான தாள் – பேனா எதுவும் இன்றி, மின்னனு மூலமான தனது அடையாளத்தை – அதாவது மின்னணு ‘விரல்ரேகையை’ பதிப்பதாகும். 
 • உண்மையில் இது விரல் ரேகை அல்ல. ஆனால் அது பிரத்யேகமான ஒரு சங்கேத மொழி. ஓர் ஆவணத்திற்கும், அதில் கையொப்பம் இடுபவருக்கும் இருதரப்பையும் கட்டுப்படுத்தும் பிரத்யே அடையாளக் குறியீடு. நேரிடையாகக் கையெப்பம் இடுவதற்குப் பதிலாகத் தற்போது இந்த மின்னணு கையொப்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 
 • இந்த மின்னனு கையொப்பத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எனது கையொப்பம் இதுவல்ல என்று மறுக்கமுடியாது என்பதுடன அது அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000த்தின்படி, மின்னனு கையொப்பங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இ - கையொப்ப சேவை
 • இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கை எண் D.L.33004/99, நாள் 28-01-2015 ன்படி, ஆதார் அடையாளம் உள்ள இந்தியக்குரமக்களுக்கு இ.கையொப்ப வசதியை வழங்குவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாக ஏற்கக்கூடிய வடிவத்திலும் ஆவணங்களில் உடனடியாகக் கையொப்பம் இடுவதற்கான ஆன்லைன் சேவையைக் குடிமக்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
 • இதில் உள்ள இரண்டு முக்கிய சவால்கள் (1) கையொப்பம் இடுகின்ற நபரை அடையாளப்படுத்துவது (2) நம்பகமான கையொப்பம் இடும்முறை ஆதார் அடிப்படையிலான அடையாளப்படுத்துதல் மூலம் முதல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. பொதுச்சாவிக் கூட்டமைப்பு (public Key Infrasture) மூலம் பாதுகாப்பாகக் கையொப்பம் இடவும், நம்பகத் தன்மையை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.சிறப்பு ஆம்சங்கள்
 • செலவும் நேரமும் மிச்சமாகிறது
 • ஆதார்; மூலமாக அடையாளப்படுத்துதல்
 • பயன்படுத்துபவரின் வசதியை எளிதாக்குகிறது.
 • மின்னனு கையொப்பம் பெற விண்ணப்பிப்பது எளிது
 • பயோமெட்ரிக் அல்லது ஒருமுறை கடவுச் சொல் (DTP) மூலம் கையொப்பமிடுதல்
 • கையொப்பத்தையும், கையொப்பம் இட்டவரையும் இன்னாரென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
 • விண்ணபத்துடன் துரிதமாக ஒருங்கிணைக்கும் வகையில் நெகிவுத்தண்மை கொண்டது.
 • சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது
 • தனிநபர்கள் வணிக நிறுவனங்கள், அரசுத்துறைகளுக்கு ஏற்றது
 • உரிமம் அளிக்கப்பட்ட முகவர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது

தமிழகம் - இ-சேவை மையம்

Tnpsc Shouters
 • தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொது சேவை மையம் செயல்படுகிறது.சான்றிதழ்கள்
 • வருமானச் சான்றிதழ்,
 • சாதிச் சான்றிதழ்,
 • இருப்பிடச் சான்றிதழ்,
 • குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்,
 • கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்
 • சமூக நலத்திட்டங்கள்
 • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,
 • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்,
 • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்,
 • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,
 • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்,
 • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்
இதர சேவைகள்
 • மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 • இச்சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்படும்.

பீம் - ஆதார் ஆப் செயல்பாடு

Tnpsc Shouters
 • ஆதார் எண்ணுடன் தொடர்புடைய, கைரேகை பதிவு செய்து பணம் செலுத்தும் 'பீம் - ஆதார் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
 • இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி, நாட்டின் பண பரிமாற்ற நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • இந்த வசதி, பயோமெட்ரிக் முறையில் செயல்படுவது. அதாவது, கைரேகையை பதிவு செய்து பண பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
 • இந்த ஆப் வசதியில், தமிழ், பெங்காலி, குஜராத்தி மலையாளம், ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் இடம் பெற்றுள்ளன. தேவையில்லாத முன்பின்தெரியாத பணபரிமாற்ற கோரிக்கைகளை இதன் மூலம் நிறுத்தவும் முடியும்.
 • வணிகர்கள், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐடியூன்கள் வசதிகளில் இருந்து, இந்த ஆப் வசதியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 • இதன் பிறகு வணிகர்கள், தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து, கைரேகை ஸ்கேனர் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
 • இதன் பிறகு ஆப் வசதி செயல்பட துவங்கி விடும். அதன் மூலம் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
 • மக்கள் இனிமேல், பொருட்கள் வாங்க செல்லும் போது, டெபிட், கிரெடிட் கார்டு எடுத்து செல்ல தேவையில்லை. தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, கைரேகையை பதிவு செய்தால் போதுமானது.
 • அதற்கு முன், மக்கள் தங்களின் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும்.
 • இந்த ஆப் வசதிக்கு, மக்களிடம் இணைய தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் போது வணிகர்கள், எம்.டி.ஆர்., எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை வங்கிகளுக்கு செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆப் வசதியில் எம்.டி.ஆர்., கட்டணம் செலுத்த தேவையில்லை.
 • இந்த புதிய ஆப் வசதியை உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு பரிந்துரை செய்யும் போது, உங்களுக்கு ஒவ்வொரு முறையும், 10 ரூபாய் கிடைக்கும்.30th NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shoutersமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு
 • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சத்து 96 ஆயிரம் பேர், 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் அளவுக்கு பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 • அதன்படி முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெறலாம். காப்பீடு தொகை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
 • சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் இன்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், புதிய சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் விசாரிக்கும் வகையில், சிலை கடத்தல் தடுப்பு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 • இவர் கரூரில் உள்ள தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டராக பதவி வகித்து வந்த நிலையில், அங்கிருந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
 • நவம்பர் 30-ந்தேதி ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஒரு ஆண்டுக்கு நியமிக்கிறோம். 
 • அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்.
 • சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை பதிவான வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் என்பது அல்ல. எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் புதிய வழக்குகளையும் அவர்தான் விசாரிக்கவேண்டும்.
 • மேலும் பொன்.மாணிக்கவேலுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிபிஐயும், மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பொன் மாணிக்கவேல் யாருக்கும் சிலை கடத்தல் தொடர்பான விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்றும் விவரங்களை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதுமானது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
 • விலங்கு வதைத் தடுப்பு சட்டம் 1960-ன் பிரிவு 4-ன் படி இந்திய விலங்குகள் நலவரியத்தின் வழி காட்டுதலின் அடிப்படையில் மாநில விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இருப்பார். துணைத் தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இருப்பார்.
 • மேலும், தலைமைச் செயலாளர், பல துறை செயலாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் நிர்வாக குழு தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை யின் முதன்மைச் செயலாளர் இருப்பார். காவல்துறை கூடுதல் இயக்குனர், மாநகராட்சி ஆணையர், வனத்துறை அதிகாரிகளும் இந்த விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
"பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
 • உலக நாடுகளை பெரிதும் அச்சுறு‌த்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஜி-20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
 • இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்‌த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்று வருகிறது.
 • மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புதிய தொழிற்புரட்சியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் தயாராக இருப்பதாக கூற‌னார். தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பது உலக நாடுகளின் முன்பு பெரிய சவாலாக உள்ளது என்ற பிரதமர், பயங்கரவாதமும், பயங்கரவாதிகளுக்கு அளிப்பவர்களும் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ‌உள்ளது என்றார். பய‌ங்கரவாதத்தை ஒழிக்க‌ அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து
 • தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை தடை செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் .!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
 • புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1526 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உலகளவில் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டதில் 33% இந்திய குழந்தைகள்
 • ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஊட்டச்சத்து அறிக்கைய வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலக அளவில் 5வயதிற்குட்பட்ட சுமார் 15.08 கோடி குழதைகள் வளர்ச்சி குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்தியாவில் மட்டும் 4.66கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • உலகளவில் பார்க்க போனால் வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்தியாவை சார்ந்தவையாக உள்ளன. இந்தியாவை தவிர்த்து நைஜிரியாவில் 1.39 கோடி குழந்தைகளுக்கும், பாகிஸ்தானில் 10.7 கோடி குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த மூன்று நாடுகளில் மட்டுமே 47 சதவிகிதம் வளர்ச்சி குறைப்பாடு உள்ள குழந்தைகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 • தசைச்சிதைவு நோய்க்கு ஆளான குழந்தைகள் உலகளவில் 5.05 கோடி எனவும், இந்தியாவில் மட்டும் இந்த நோயினால் 2.55 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது. இதுமட்டுமின்றி சீனா, இந்தோனேஷியா, இந்தியா, எகிப்து, அமெரிக்கா, பிரேசில் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்கள் உபயோகத்துக்கு தடை: மத்திய அரசு உத்தரவு
 • தலைநகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள நிர்மாண் பவனில், புகையிலை பொருட்கள் எடுத்து வருவதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புகையிலை பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
 • புகையிலை பயன்பாடு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பவர்களி டமிருந்து தடையற்ற புகைப்பிடிப்பதால் புற்றுநோய், கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVD), நீரிழிவு, நீண்டகால நுரையீரல் நோய், ஸ்ட்ரோக், கருவுறாமை, குருட்டுத்தன்மை, காசநோய் (TB) மற்றும் வாய்வழி குழி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அனைத்து பொது அலுவலகங்கள், பணியிடங்கள், உணவுப்பொருட்களை உள்ளடக்கிய பொது இடம், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை (வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, விநியோக மற்றும் விநியோகம்) சட்டம் (COTPA), 2003ன் படி தடை செய்யப்படுகிறது.
 • எனவே, அலுவலகங்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்க, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படு கிறது. இந்த உடடினயாக அமல்படுத்த வேண்டும் என்றும், தடையை மீறினால், 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.இந்தியாவில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு எச்ஐவி; உலகளவில் நாளொன்றுக்கு இறப்பு 80 ஆக அதிகரிக்கும்: யுனிசெப் எச்சரிக்கை
 • அதேசமயம் இந்த அளவைத் தடுக்காவிட்டால், 2030-ம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயால் நாள் ஒன்றுக்கு உலக அளவில் 80 பேர் உயிரிழப்பார்கள் என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.
 • 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 0-19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பதின்வயதினர் எச்ஐவி வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு 1.20 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இது தெற்கு ஆசியாவில் இந்தியாவில்தான் இது அதிகமாகும்.
 • இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானில் 5,800 பேரும், நேபாளத்தில் 1,600 பேரும், வங்கதேசத்தில் ஆயிரத்துக்கும் குறைவாகவும் வாழ்கின்றனர்.
 • 2017-ம் ஆண்டில் எச்ஐவி வைரஸ் பாதிப்பு உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட அளவு கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைந்து இருக்கிறது. உலக அளவில் 35 சதவீதம் குறைந்திருக்கிறது.
 • 0-14வயதுக்குட்பட்ட குழந்தைகளை எச்ஐவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு வாழ்பவர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
 • எச்ஐவி பரவுவதை தடுக்கும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்தாவிட்டால், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு உலக அளவில் 80 பேர் உயிரிழப்பார்கள். இப்போதுள்ள அறிக்கையின்படி, எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள், புதிய தொற்றுகள் பரவுவது குறைந்துள்ளது. ஆனால், தாக்கத்தின் குறைவு எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை.
 • 5 வயதை அடையாமலேயே பெரும்பாலான குழந்தைகளை எய்ட்ஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். கருவுற்ற தாய்கள் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுவது, அதைத்தடுக்கும் வழிமுறைகள் இன்னும் வேகப்படுத்தப்படவில்லை. அதேசமயம், கடந்த 8 ஆண்டுகளாக இதைத்தடுக்கும்முறைகளால் நோய்பரவும் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது.
 • வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை 14 லட்சமாகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது, தற்போது 19 லட்சமாக இருக்கிறது.
அபிநவ் பிந்த்ராவுக்கு சர்வதேச விருது
 • ஆண்டுதோறும் 'ப்ளூ க்ராஸ்' சார்பில், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பைத் தரும் வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவப் பட்டம் வழங்கி வருகிறது. 
 • அந்த வகையில், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 'ப்ளூ க்ராஸ்' சார்பில் உயரிய விருதான கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 • ஜெர்மனியின் முனிச் நகரில் அபினவ் பிந்த்ராவுக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது. 
 • அபினவ் பிந்த்ரா, 2008 ஒலிம்பிக்கில் தங்கம், 2006 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும், காமென்வெல்த் போட்டிகளில் 7 பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 3 பதக்கமும் வென்றுள்ளார். 2008 பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். 
 • இவரின் சாதனைகளைப் பாராட்டி, அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில், அபினவ் பிந்த்ரா தனது 33வது வயதில் ஓய்வை அறிவித்தார்.

Thursday, 29 November 2018

TNPSC GROUP 4 & VAO EXAM ORIGINAL CERTIFICATE VERIFICATION & COUNSELLING 2018

Tnpsc Shouters
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES
EXAMINATIONS - IV & VAO
(GROUP 4 & VAO SERVICES) (2017‐2018)
COUNSELLING DATE: 03.12.2018
ORIGINAL CERTIFICATE VERIFICATION / COUNSELLING SCHEDULE FOR PROVISIONALLY ADMITTED CANDIDATES
 • குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோரில்  ORIGINAL CERTIFICATE VERIFICATION / COUNSELLING அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது. 
 • குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு 2017 நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோரில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.
 • இந்த விண்ணப்பதாரர்கள் வரும் 03-ஆம்  முதல்தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
 • The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Original Certificate Verification and Counselling to the POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP 4 & VAO SERVICES) FOR THE YEARS 2017 - 2018 based on the results of the written examination conducted by the Commission on 06.08.2017 FN and Marks and Rank published on 07.03.2018. 
 • The original Certificate Verification/ Counselling will be held from 03.12.2018 onwards at the office of the TNPSC, Frazer Bridge Road, Chennai-3. Individual intimation regarding the place, mode, date and time of Certificate Verification/ Counselling will be informed through Commission’s website, SMS and e-mail only. Individual intimation will not be sent to the candidates by post.
DOWNLOAD LIST OF CANDIDATES FOR ORIGINAL CERTIFICATE VERIFICATION & COUNSELLING OF GROUP 4 EXAM

Certificate Verification and Counselling Schedule

Posts included in COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP-IV     SERVICES , 2015-2018)
(Date of Written Examination: 11.02.2018 FN)

CERTIFICATE VERIFICATION AND COUNSELLING (I PHASE)

SL.No.
PARTICULARS
JA/FS/DRAFTSMAN/VAO
1.Certificate Verification and Counselling Schedule03.12.2018 TO 11.01.2019
2Notice of CV and CounsellingVIEW
* JA - Junior Assistant, DM - Draftsman, FS- Field Surveyor, VAO-Village Administrative Officer
Important Note:-

The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.

Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.

இலவச கட்டாய கல்வி சட்டம்

Tnpsc Shouters
கட்டாயக் கல்வி
 • 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. 
 • இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.
 • அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது. மனரீதியாக துன்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
முக்கியத்துவம்
 • குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். 
 • குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகிலுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால்
 • இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப் பட்டுள்ளது. 
 • ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority - REPA) அமைந்துள்ளது. 
 • குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம். குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். 
 • அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13
 • எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம்  வசூலிலிப்பதோ அல்லது முன்தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது. உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிலிக்கப்பட்ட கட்டணத்தைவிட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். 
 • குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப் படும்.

மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்

Tnpsc Shouters
 • மத்திய அரசு 2007-08ஆம் ஆண்டு முதல் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு “மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டத்தின்” (Central Sector Scholrahsip Sheme of Top-Class Education for Adi-Dravidars /Tribes) கீழ் தமிழ்நாட்டில் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் விமான ஓட்டுனர் பயிற்சி போன்ற படிப்புகளை நடத்தும் 6 உயர்தர கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் +2 படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவது ஆகும்.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணம், திரும்பப் பெறமுடியாத கட்டணங்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவுத் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அளித்து வருகிறது.

அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்

Tnpsc Shouters
உதான்
 • பெண் குழந்தைக் கல்வியை மேம்படுத்த உதான் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளிடையே கற்பித்தல் இடைவெளியை போக்குவது உதான் திட்டத்தின் நோக்கமாகும்.
 • ஷலா தர்பான் என்ற திட்டம் கைப்பேசி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெற்றோர் பள்ளிகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க இது உதவிகரமாக உள்ளது.
உன்னாத் பாரத் அபியான்
 • உயர் கல்வி நிறுவனங்கள் கிராமப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது உன்னாட் பாரத் அபியான் இயக்கத்தின் முக்கிய பணியாகும். இந்திய கிராமங்களின் மேம்பாட்டுக்கு அரசு மற்றும் பொது, தனியார் நிறுவனங்கள் உதவுவதற்கான இயக்கமாகவும் இது விளங்கும்.
இஸ்ஸான் விகாஸ்
 • வடகிழக்கு மாநில பள்ளிக் குழந்தைகளும், பொறியியல் கல்லூரி மாணவர்களும் தங்கள் விடுமுறையின் போது இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள இத்திட்டம் வழி வகுக்கிறது. இதில் பள்ளிக் குழந்தைகள் 10 நாட்கள் ஒரு கல்வி நிறுவனத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்படுகிறது. 
திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி சட்டம், 2014
 • திட்டம் மற்றும் கட்டடக் கலையின் 3 பள்ளிகளையும் திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி சட்ட முன்வரைவு, 2014ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 29.10.2014 அன்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 •  இந்த சட்ட முன்வரைவு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அது 22.01.2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 • இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 2012 முதல் பட்டத்துக்காக காத்திருந்த போபால் மற்றும் விஜயவாடா திட்ட மற்றும் கட்டடக்கலை பள்ளி பட்டதாரிகள் 400 பேர் பட்டம் பெற வழி ஏற்பட்டது. நகர மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் சூழ்நிலை அதிகரித்துவரும் நிலையில் தேசிய மற்றும் பன்னாட்டு திட்ட தரத்திற்கு இணையாக திட்டம் வகுக்க இந்தச் சட்டம் உதவிகரமாக உள்ளது.
சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம்
 • மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்பக் கல்வி பெற அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் சக்ஷம் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்து கிறது. இதன் மூலம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

பிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்

Tnpsc Shouters
 • மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் செயல்படுத்த ஏதுவாக பள்ளித் தோட்டத்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தொடக்கி வைத்தார். 
 •  இந்தியாவில், இத்திட்டம் முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ஆயிரம் பள்ளிகளிலும் மூன்றாம் ஆண்டு முடிவில் நாடெங்கிலும் உள்ள மற்ற அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
நோக்கம்
 • உலகின் மாசுபடும்விகிதம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தடுப்பதற்கான முதல்வழி காடுவளர்ப்பதுதான். எனவே, மாணவர்களை இயற்கைக்கு நெருக்கமானவர்களாக உணரச்செய்வது முக்கியமென உணர்ந்து மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 • இத்திட்டத்தின்கீழ், பள்ளியானது தனது வளாகத்துக்குள் தோட்டத்தை ஏற்படுத்தும். அத்தோட்டத்தில் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்க்கவேண்டும். சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் நாட்டை வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

28th & 29th NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shoutersதாமிரபரணி தண்ணீர் எடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை! பசுமை தீர்ப்பாயம் அதிரடி
 • தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான தண்ணீரை தாமிரபரணி நதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து எடுக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
 • அந்த மனுமீதான விசாரணையை தொடர்ந்து, ஸ்டெர்லைட் உள்பட எந்தவொரு ஆலையும், தாமிரபரணி நதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீர் எடுக்கக்கூடாது என அதிரடி உத்தரவிட்டது.
 • இந்த அணையில் இருந்து குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதுதவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் நீர் எடுக்கக்கூடாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
லோக் ஆயுக்தாவிற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு
 • தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது,.எனவே இதற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அர.சு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா துவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • அரசாணையில் ,லோக் ஆயுக்தாவின் செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.26 பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தாவின் தலைவர் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுபணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக அரவிந்த் சக்சேனா நியமனம்
 • யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுபணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக யு.பி.எஸ்.சி. தலைவராக இருந்த வினய் மித்தல் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.
 • இதையடுத்து அரவிந்த் சக்சேனா தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர் 2020 ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.
இந்தியாவின் HysIS செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
 • இந்தியாவின் HysIS உள்பட 31 செயற்கைக் கோள்களுடன் PSLC C43 ராக்கெட், காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 • வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (Hyperspectral Imaging) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
 • PSLV C43 ராக்கெட்டில் அமெரிக்காவின் 23 செயற்கைக் கோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் 7 செயற்கைக் கோள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பூமியில் இருந்து 504 கிலோ மீட்டர் உயரத்திலும், HysIS செயற்கைக் கோள், பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
பிரிட்டன் நாட்டு பவுண்ட் நோட்டில் இடம் பெற இந்திய விஞ்ஞானி பெயரும் பரிந்துரை
 • ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிதாக வெளியிடப்பட உள்ள, 50 பவுண்டு மதிப்புள்ள நோட்டுகளில், பிரபல விஞ்ஞானியின் பெயர், படம் இடம்பெற உள்ளது. இதற்காக, இந்திய இயற்பியல் விஞ்ஞானி, சர் ஜகதீஷ் சந்திர போஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 • ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 5 மற்றும் 10 பவுண்டுகள் மதிப்பு உடைய புதிய நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக, 20 பவுண்டு நோட்டு, வரும், 2020ல் வெளியிடப்பட உள்ளது. அதன் பின், 2020ல், புதிய வடிவில், 50 பவுண்டு நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது.
 • புதிய, 50 பவுண்டு நோட்டில், பிரிட்டனின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிய விஞ்ஞானியின் பெயர் மற்றும் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி, அரசு கோரியிருந்தது.
 • அதன்படி இதுவரை, 1.74 லட்சம் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மறைந்த பிரபல விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், வேதியியல் விஞ்ஞானியான முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியாவைச் சேர்ந்த, பிரபல இயற்பியல் விஞ்ஞானியான, சர் ஜகதீஷ் சந்திர போஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
 • பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியாவில் பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். தாவரங்கள் தொடர்பான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்த அவர், கோல்கட்டாவில் கல்வி நிறுவனத்தையும் நடத்தினார்.உலக செஸ் போட்டியில் அமெரிக்க வீரர் காருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார் கார்ல்சென்
 • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்த்து, 8 வீரர்கள் இடையிலான 'கேன்டிடேட்' போட்டியில் வெற்றி பெறுபவர் மோதுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான மாக்னஸ் கார்ல்சென்னை (நார்வே), 'கேன்டிடேட்' போட்டியில் வெற்றி கண்ட அமெரிக்காவின் பாபியானோ காருனா எதிர்கொண்டார்.
 • 12 சுற்றுகள் அடங்கிய இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றும் டிரா ஆனது. 132 ஆண்டு கால உலக செஸ் போட்டி வரலாற்றில், 12 சுற்று ஆட்டங்களில் ஒன்றில் கூட முடிவு கிடைக்காதது இதுவே முதல் நிகழ்வாகும். கடைசி சுற்றில் கார்ல்சென் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் டிராவுக்கு ஒப்புக் கொண்டார். 
 • 'ரேபிட்' முறையில் முதல் ரவுண்டில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 55-வது நகர்த்தலில் 'செக்' வைத்து எதிராளியை சாய்த்தார். தொடர்ந்து 2-வது சுற்றில் 28-வது நகர்த்தலிலும், 3-வது சுற்றில் 51-வது நகர்த்தலிலும் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 27 வயதான கார்ல்சென் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது முறையாக பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கிறார்.
 • கார்ல் செனுக்கு ரூ.4 கோடியே 37 லட்சமும், காருனாவுக்கு ரூ.3 கோடியே 57 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைத்தது.
மராத்தா சமுதாயத்தினருக்கு 16% ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
 • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு மசோதா மகாராஷ்டிர சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
 • மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடியில் மூன்றில் ஒரு பங்கு மராத்தா சமுதாயத்தினர் உள்ளனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த ஒய் பி சவான், சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரி முதல்வர் பதவி வகித்துள்ளனர். அப்படி இருந்தும் அந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் பின் தங்கி உள்ளனர். அதனால் அவர்கள் இட ஒதுக்கீடு கோரி பல முரை போராட்டம் நடத்தி உள்ளனர்.
 • ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மராத்த சமுகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டது ஆனால் அந்த அவசர சட்டத்துக்கு மும்பை நீதிமன்றம்தடை விதித்தது.
 • அந்த மசோதா ஏகமனதாக நிறைவேறியதால் மேல் சபை அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
 • மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஒதுக்கீட்டையும் சேர்த்தால் தற்போது இட ஒதுக்கீடு 68% ஆக உயர உள்ளது. ஏற்கனவே தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கிடு உள்ளதால் அதிக இட ஒதுக்கிடு அளிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தை பிடிக்க உள்ளது25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : உச்சநீதிமன்றம்
 • பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு எழுத வயது வரம்பை தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது. இந்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவைச் சேர்ந்த 25-வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மானியம்
 • பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளாக வீடுகள் கட்ட உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
மியான்மருக்கு ரூ.35 கோடி நிதி வழங்கிய இந்தியா
 • இந்தியாவும் மியான்மரும் 2012-ம் ஆண்டு எல்லையோர பகுதிகளுக்கான வளர்ச்சி தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, இந்தியா - மியான்மர் எல்லையில் சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.25 மில்லியன் டாலர் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் டாலர் என பிரித்து மியான்மருக்கு இந்தியா நிதி அளிக்கும். 
 • இந்த ஒப்பந்தத்தின்படி, மியான்மருக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த திங்கள்கிழமை வழங்கி உள்ளது.
 • ஏற்கெனவே இந்தியாவின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி மூலம் எல்லைப் பகுதியில் 21 பள்ளிகள், 17 சுகாதார மையங்கள், 8 பாலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக மியான் மர் தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)

Tnpsc Shouters
 • மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமான ராஷ்ட்ரீய உச்சதர் சிக்க்ஷா அபியான் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 
 • மாநிலங்களின் வகைக்கு ஏற்ப பொதுப்பிரிவு மாநிலங்களுக்கு 60 சதவீதமும், சிறப்புப்பிரிவு மாநிலங்களுக்கு 90 சதவீதமும் மத்திய அரசின் நிதி உயர் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது. 
 • மாநிலங்களின் உயர் கல்விக் கவுன்சில்களின் மூலமாக மத்திய அரசின் அமைச்சகங்கள் வழங்கும் நிதிவுதவி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உயர்க்கல்வித் துறையில் சிறப்பான சாதனைகளை எட்டுவது, பலருக்கும் கல்வி வாய்ப்புகள் அளிப்பது, சமத்துவ நெறியை வளர்த்தெடுப்பது போன்ற மாநிலங்களின் வளர்ச்சி உத்திகளைப் பிரதிபலிக்கின்ற அவற்றின் உயர்கல்விக் கவுன்சில்களின் திட்டங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிதிவுதவி அளிக்கப்படும்.ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியானின் நோக்கம்
 • கல்லூரிகளுக்கு இணைவுதருதல், பாடத்திட்டம் வரையறுத்தல், தேர்வு முறைகள் ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொணர்தல்.
 • எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும், தரமான பேராசிரியர் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்தல்
 • கல்லூரி – பல்கலைக்கழகப் பேராசியர்கள் புதுமை முயற்சிகளிலும் உயர் ஆய்வுகளிலும் ஈடுபடுவதற்கான உகந்த சூழலை உருவாக்குதல்
 • உயர்க்கல்வித் துறையில் நிலவும் வட்டார சமச்சீரற்ற சேர்க்கை களைதல். அதாவது இதுவரை உயர்க்கல்வி நிலையங்கள் இல்லாத பகுதிகளிலும், உயர்க்கல்வி நிலையங்கள் போதிய அளவில் இல்லாத பகுதிகளிலும் புதிய கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துதல்
 • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், மாற்றித்திறனாளர்கள் உள்ளிட்டோருக்கு போதிய உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் சமத்துவ நெறிமேம்பட உதவுதல்.

மதிய உணவுத் திட்டம்

Tnpsc Shouters

 • அரசுப் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்புப்பயிற்சி மையங்கள் மற்றும் சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்) கீழ் உதவிபெறும் மதராஸாக்கள் (Madarasas), மக்தாப்புகள் (Maktabs) ஆகியவற்றில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தவும், அம்மாணவர்களைத் தொடர்ந்து பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிக்கவும், பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வரலாறு
 • இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் வெகுகாலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 1925 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் மதிய உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
 • 1980 களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த அரசுகள் தமது நிதியைக் கொண்டே செயல்படுத்தி வந்தன. 
 • 1990-91 ஆம் ஆண்டு வாக்கில், மாநிலங்களின் நிதி ஆதாரத்தைக் கொண்டே மதிய உணவு வழங்கும் திட்டம் 12 மாநிலங்களில் அமலில் இருந்தது.
 • தொடக்கக்கல்வி ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் தேசிய திட்டம் (NP-NSPE) 1995 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டமாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த 2408 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் எல்லா ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 
 • அரசுப்பள்ளிகள் அரசின் நிதிஉதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள் ஆகியவற்றில் மட்டும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் 2002 ஆம் ஆண்டில் கல்வி உறுதிப்பாடு திட்டம் (EGS) மாற்று மற்றும் புத்தாக்கக்கல்வி திட்டம் (AIE) ஆகியவற்றின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. 
 • மத்திய அரசின் இந்தத்திட்டப்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தினந்தோறும் நூறுகிராம் தானியம் என்ற கணக்கில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லுவதற்கும் குவிண்டால் ஒன்றுக்கு ஐம்பது ருபாய் உதவிப் பணமும் வழங்கப்பட்டது.
 • 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தானியமாக வழங்குவதற்கு பதிலாக 300 கலோரிகள் சத்துள்ள உணவாக வழங்கும் படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் எட்டு முதல் பன்னிரண்டு கிராம் புரதச்சத்தும் கிடைக்க வகை செய்யப்பட்டது.
 • 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திட்டம் நடுநிலைப் பள்ளி மாணவரக்ளுக்கும், அதாவது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் கல்விரீதியாகப் பின்தங்கிய 3479 ஒன்றியங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் பயின்ற சுமார் ஒருகோடியே எழுபது லட்சம் நடுநிலைப்பள்ளி மாணவரகளுக்குப் பயன்கிட்டியது. 
 • 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுகின்ற மதராஸாக்கள், மக்தாபுகள், கல்வி உறுதிப்பாடுத் திட்ட மாணவர்கள் (EGS), மாற்று மற்றும் புத்தாக்கக் கல்வித் திட்ட மாணவர்கள் என அனைத்து பிரிவிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் 700 கலோரிகளும், 20 கிராம் புரதச் சத்தும் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு 150 கிராம் உணவு தானியம் வழங்கப்பட்டது.
 • பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உறுதிப்பாட்டிற்கான இந்த மதிய உணவுத்திட்டம் 2009 ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் மேலும் செம்மையாக்கப்பட்டது.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் பருப்பு வகை 30 கிராம், காய்கறிகள் 65-75 கிராம், எண்ணெய்/கொழுப்பு 7.5 கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)

Tnpsc Shouters
 • மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டமானது இந்தியக் கல்வி முறையில் திட்டமிடல் மற்றும் பல்வேறு தேசிய திட்டங்கள், மாவட்ட அளவிலான நிகழ்வுகள், வெளியிலிருந்து பெறப்பட்ட நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலின்போது பெற்ற அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கருத்தாழமிக்க செயல்பாட்டு நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 • இது 1994 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உலகின் கல்வித் திட்டங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இத்திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற இலக்கை அடைவதாகும்.
 • DPEP (நிலை 1) திட்டமானது ஒரு மைய அரசு திட்டம் ஆகும். இத்திட்டம் முதலில் உலக வங்கி உதவியுடன் 5 மாநிலங்களில் தொடங்கப்பட்டு பின்னர் பிற மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் 5 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மாவட்டத் தொடக்கக் கல்வி திட்டத்தின் நோக்கங்கள்
 • முறை மற்றும் முறைசாரா கல்வி மூலம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கல்வியைப் பெறுதல். 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தல்.
 • தரமான கல்வியின் மூலம் குழந்தைகள் குறைந்தபட்ச கற்றல் இலக்கை அடைதல். பள்ளிகளில் தேக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் இடைநிற்றலை குறைத்தல்.
 • ஆசிரியர்களுக்கும், சமூகத்தினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், அதிகபட்ச பரவலாக்குதல், சமுதாய பங்கேற்பு, சமூகத்தின் ஒவ்வொரு அலகிலிருந்தும் பள்ளி வயது மாணவர்களை பள்ளியில் சேர்த்து சேர்க்கையை அதிகரித்தல்.

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

Tnpsc Shouters

 • உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.
 • மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 
 • 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 • மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுந்த (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
 • தமிழ் இலக்கியக்களின் சரித்திரம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. 
 • தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.

Tuesday, 27 November 2018

27th NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDFCURRENT AFFAIRS

Tnpsc Shoutersமேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
 • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம். கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. 
 • இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. 
நான்காவது முறையாக, தமிழகத்திற்கு மத்திய அரசு விருது
 • உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு இந்த விருதை தொடர்ந்து 4வது முறையாக பெறுகிறது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
 • அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கிளம்புகிறார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
 • பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜென்டினா தலைநகர் பாரிசில் பூவெனோஸ் எய்ர்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்படுகிறார். சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், நிதி மற்றும் வரி திட்டங்கள் குறித்தும், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பலவற்றை பற்றியும் இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
லாஜிக்ஸ் இந்தியா மாநாட்டின் லோகோ மற்றும் தகவல் கையேட்டை வெளியீடு
 • லாஜிக்ஸ் இந்தியா மாநாட்டின் லோகோ மற்றும் தகவல் கையேட்டை வெளியிட்டார் மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு. மேலும் ஜனவரியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகள் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 • இந்த மாநாடு புது டெல்லியில் ஜனவரி 31, 2019 முதல் பிப்ரவரி 2, 2019 வரை நடைபெறும். இந்த மாநாட்டை இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
 • உலக வங்கியின் சரக்கு போக்குவரத்து செயல்பாட்டு அட்டவணை 2018-ல் இந்தியா 44 வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார ஆய்வு 2017-18 தரவின்படி இந்திய சரக்குபோக்குவரத்து துறையின் மதிப்பு 160 பில்லியன் டாலராகும், மேலும் இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 215 அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறை 22 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10.5 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய நேரடி வரிச்சட்டத்தை உருவாக்க உள்ள குழுவில் மாற்றம் 
 • நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. காலமாற்றத்துக்கு ஏற்ப அதனை மறு ஆய்வு செய்து நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு உகந்தவாறு புதிய நேரடி வரிச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது.
 • இது தொடர்பான முந்தைய உத்தரவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, பணிக்குழுவின் அமைப்பாளராக மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் (சட்ட மசோதா) அகிலேஷ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணிக்குழுவின் மற்ற உறுப்பினர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் 2019 பிப்ரவரி 28-க்குள் பணிக்குழு புதிய நேரடி வரிச் சட்டத்துக்கான வழிமுறைகள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரிதர் மால்வியா நியமனம்
 • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நீதிபதி கிரிதர் மால்வியா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக நீதிமன்ற கூட்டத்தில் மால்வியா தேர்வு செய்யப்பட்டார்.
 • கிரிதர் மால்வியா, 1988-1998 க்கு இடையில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
 • 2016 ஆம் ஆண்டில், நீதிபதி மல்வியா தலைமையிலான நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு, கங்கை சட்டத்தை இயற்ற மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட வரைவில், மால்வியாவின் ஆலோசனைகளும் சேர்க்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கோலாலகமாக தொடங்கியது உலகக்கோப்பை ஹாக்கி தொடர்
 • 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கோலாகலமாக நடைபெற்றது. நாளை தொடங்கும் போட்டி அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 4 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி சி பிடிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிகா உள்ளிட்ட அணிகளுடன் இணைந்துள்ளது.
 • ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் முதல் 2 அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரிடையாக தகுதி பெறும், பிற அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளின் இடத்தை பிடிக்கும். இதுவரை நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் 13 முறை பங்கேற்ற இந்திய அணி 1975ல் சாம்பியன் பட்டம் வெற்றது. அதிலிருந்து இன்றுவரை அரையிறுதிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் : 2வது முறையாக வாகை சூடியது குரேஷியா
 • ஆண்கள் டென்னிஸ் விளையாட்டில், ஓர் முதன்மையான, பன்னாட்டு அணி விளையாட்டுப் போட்டியாக விளையாடப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடர், கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நடைபெறும்.
 • இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான டேவிஸ் கிண்ண தொடர், இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும், குரேஷியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
 • பிரான்ஸின் லில்லி நகரில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகள் சார்ப்பிலும் ஐந்து வீரர்கள் போட்டியிட்டனர்.
 • இதற்கமைய, குரோஷியா அணி 3-1 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு குரேஷியா அணி முதல் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
 • கடந்த 1900ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடர் வரலாற்றில், 32 முறை சம்பியன் பட்டங்கள் வென்று அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
 • அவுஸ்ரேலியா 28 முறை சம்பியன் பட்டங்கள் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா 10 முறை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாணவி
 • ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது
 • தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நூலகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியதையடுத்து, அந்நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர் புரவலர் மு.அன்புக்கரசன் பணிகளைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் நூலக ஆர்வலர் விருது வழங்கி சிறப்பு செய்தது.

Monday, 26 November 2018

24th,25th & 26th NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shoutersபோக்சோ சட்டத்தில் திருத்தம்: சிறுவர் சிறுமியர் ஆபாச தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை
 • சிறுவர் சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் தகவல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.
 • தற்போது போக்சோ சட்டத்தின் 15வது பிரிவின்படி, பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என உள்ளது. இதை திருத்தி, சிறை தண்டனை 7ஆண்டுகள் வரை உயர்த்தியும், கடும் அபராதமும் விதிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • மேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் தகவல்கள் வெளி யிட்டால், ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
சுனில் அரோரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்
 • புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்! 
 • தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அன்றைய தினமே சுனில் அரோரா பதவியேற்றுக் கொள்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் 65 வயது வரை பதவி வகிக்கலாம் என்பதால், இன்னும் இரண்டரை ஆண்டுகள் சுனில் அரோரா பதவியில் நீடிப்பார்.
நாசாவின் 'இன்சைட் ரோபோ' செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது
 • அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது.
 • தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
 • 26.11.2018 மாலை 19:53 (ஜிஎம்டி) நேரப்படி இந்த ரோபோ செவ்வாயில் தரையிறங்கியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • ரையிறங்கும் முன்பு உள்ள முக்கியமான 7 நிமிட பரபரப்புக்கு பிறகு இந்த ரோபோ வெற்றிகமாக தரையிறங்கியது.
 • இந்த ரோபோ இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது.
ஸ்டெர்லைட் : தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி
 • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.
 • ஆலை நிர்வாகம் இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளித்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்[பாயம் அனுமதி அளித்தது. 
 • அத்துடன் இந்த விவகாரத்தில் மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைத்து அந்தக் குழுவி அறிக்கையை குறித்து முடிவு எடுக்கபடும் என உச்சநீதிமன்றம் திர்ப்பளித்தது.
 • கடந்த செப்டம்பர் மாதம் இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது அறிக்க்கையை இன்று பசுமை தீர்ப்பாயத்திடம் அளித்தது. 
 • அதை ஒட்டி தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரச்சாரத்திற்கு வேட்பாளர்கள் ரூ.10,000 மட்டுமே பரிமாற்றம் செய்ய வேண்டும்
 • தேர்தல் பிரச்சாரத்தின் போது தினமும் பத்தாயிரம் ரூபாய் தான் ரொக்க பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமென வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
 • தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தினமும் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மட்டும் தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று 2011ம் ஆண்டு ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 
 • தற்போது வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணபரிமாற்றம் அதிகளவில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
 • இதனை தடுக்கும் விதமாக வேட்பாளர்களுக்கு புதிய கடிவாளத்தை தேர்தல் ஆணையம் போட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரத்தை பணமரிமாற்றத்தை மட்டுமே வேட்பாளர்கள் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனை வருமான வரி சட்டப்பிரிவு 40 ஏ(3)- ல் திர்த்தம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 • இந்த சட்டம் கடந்த 12ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது எனவும், இந்த சட்டத்தை செயல்படுத்தவும் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. முதற்கட்டமாக இந்த சட்டம் சதீஷ்கர், மிசோரம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அமுல் படுத்தப்பட உள்ளது.
ஒரே மேடையில் 1418 பேர் நடனம்... கின்னஸில் இடம் பிடித்தது தமிழர்களின் ஒயிலாட்டம்
 • தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தை, சினிமா பின்னணி பாடர் வேல்முருகன் முன்னெடுத்து செல்கிறார். அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் ஒயிலாட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
 • ஒரே மேடையில் 1418 பேர் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.இதற்கான சான்றிதழை கின்னஸ் அதிகாரிகள் வழங்கினர்.
கர்த்தார்ப்பூர் வழித்தடம் அடிக்கல் நாட்டு விழா
 • சீக்கிய குருவான குருநானக் தேவ் தனது கடைசி காலத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் வசித்தார். முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12 ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அருகிலேயே குருத்வாரா தாலி சாஹிப் என்ற இடமும் இருக்கிறது. 
 • தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கர்தார்பூர் இருக்கிறது. குருநானக் தேவின் 549-ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கர்தார்பூரில் சிறப்பு வழிபாடுகள் நடக்க இருக்கிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து செல்லும் 3700 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது. குருநானக் தேவ் பிறந்தநாள் விழாவுக்காக
 • பாகிஸ்தான் வரும் 28 ஆம் தேதி எல்லையை திறக்க உள்ளது.இந்நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் - பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் கர்த்தார்ப்பூர் இடையே சீக்கியர்கள் வழிபாட்டுக்குச் சென்றுவர வசதியாக வழித்தடம் திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. குருதாஸ்பூரில் இதற்காக நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கல் நாட்டுகிறார்.பிரெக்ஸிட்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 27 உறுப்பு நாடுகள் ஒப்புதல்
 • பிரெக்ஸிட் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக, ஐரோப்பிய கவன்சிலின் தலைவர் டொனல்டு டஸ்க் கூறியுள்ளார்.
 • ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில் அந்த 27 நாடுகளின் தலைவர்களும், இன்று, ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 • இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றமும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே பல பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிட் இறுதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவாக 2016இல் நடந்த பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பிரிட்டன் மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 • 2019 மார்ச் 29 அன்று பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
221 மீட்டர் உயர ராமர் சிலை அமைக்க உபி அமைச்சரவை அனுமதி
 • உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்தார்.அதற்கான வரைவு திட்டங்கள் அளிக்க பல புகழ் பெற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இத் குறித்து நேற்று உத்திரப் பிரதேச மாநில அமைச்சரவை விவாதித்தது.
 • இந்த சிலையின் மொத்த உயரம் 221 மீட்டராக இருக்கும். இதில் கீழே உள்ள பீடத்தின் உயரம் 50 மீட்டராகவும், சிலை 151 மீட்டராகவும் இருக்கும். சிலையின் மேலுள்ள குடை 20 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.
மேரி கோம் சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆறாவது முறை தங்கம் வென்று உலக சாதனை
 • டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 • உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு முறை தங்கப் பதக்கம் வெல்லும் முதல் பெண் மேரி கோம் ஆவார்.
 • இதற்கு முன்னதாக கோம் மற்றும் அயர்லாந்தின் கேட்டி டெய்லர் ஐந்து பட்டங்களை வென்றதே உலக சாதனையாக இருந்தது.
 • கடைசியாக 2010இல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற கோம், அதற்கு முன்னர் 2002, 2005, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார்.
 • 48 கிலோ லைட் வெயிட் பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடாவை, சனிக்கிழமை மாலை நடந்த போட்டியில் கோம் வென்றார். 22 வயதாகும் ஹன்னா, 35 வயதாகும் மேரி கோமைவிட 13 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • லண்டனில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 2014இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக தங்கம் வென்றார் கோம்.25 கோடி 2 ஜி மொபைல் இணைப்புக்கள் துண்டிப்பு : தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு
 • இந்தியா முழுவதும் உள்ள 25 கோடி 2 ஜி இணைப்புக்கள் விரைவில் துண்டிக்கப்பட உள்ளதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 • நாடெங்கும் சுமார் 25 கோடி 2 ஜி மொபைல் இணைப்புக்கள் உள்ளன. அவற்றில் 10 கோடி இணைப்புக்கள் ஏர்டெல் நிறுவனத்திலும் 15 கோடி இணைப்புக்கள் ஐடியா மற்றும் வோட போன் நிறுவனங்களிலும் உள்ளன.
 • இந்த 2 ஜி இணைப்புக்களை வைத்திருப்போர் இவைகளுக்கு ரீ சார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த இணைப்புக்களால் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் உள்ளன. 
 • அதை ஒட்டி மாதம்தோறும் குறைந்த பட்சம் ரூ.35க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும் என தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. அதற்கு வாடிக்கையாளர்கள் யாரும் வரவேற்பளிக்கவில்லை.
 • அதை ஒட்டி இந்த இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனங்கள் கூட்டாக அறிவித்த்ள்ளன. அதன்படி அவுட் கோயிங் சேவைக்காக ரூ.35 ரிசார்ஜ் செய்யாத இணைப்புக்கள் இன்னும் 30 நாட்களில் துண்டிக்கப்படுவதாகவும், 45 நாட்களில் இன்கமிங் நிறுத்தப்பட்டு முழுமையாக துண்டிக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.
அபுதாபி கிராண்ட் பிரி கார்பந்தயம் : லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன்
 • அபுதாபி கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில், பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 21 பார்முலா ஒன் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு கடைசிப் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 
 • 306 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இலக்கை மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் ஒரு மணி 39 நிமிடம் 40 வினாடிகளில் கடந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
 • ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்தையும், பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பன் 3வது இடத்தையும் பிடித்தனர். நடப்பு சீசனில் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஹாமில்டன், 5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
புரோ வாலிபால் லீக் அறிமுகம் - 2019 பிப்ரவரியில் கோலாகாலத் தொடக்கம்
 • இந்திய கைப்பந்து சம்மேளம், பேஸ்லைன் வென்ச்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் புரோ கைப்பந்து லீக் ஆகியவற்றின் விடா முயற்சியின் பலனாக, கைப்பந்து ரசிகர்களுக்காக, இந்தியாவில் முதன்முறையாக 'புரோ வாலிபால் லீக்' 2019 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது
 • இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. 
 • இந்த அணிகளுக்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பார் மாதம் 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு அணியின் 12 வீரர்களில், 2 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நட்சத்திர வீரரும், 21 வயதுக்குட்பட்ட 2 இளம் வீரர்களும் இதில் அடங்குவர்.
ஆசிய-பிசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா
 • ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகரில் 2வது ஆசிய-பசிபிக் ஃபிஸ்ட்பால் போட்டி கடந்த 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவும், சமோவாவும் மோதின. இதில் 4-1 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
 • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 4-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோல்வியைக் கண்ட ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றயது.காமன்வெல்த் வாள் சண்டை போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்
 • காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் சீனியர் 'சேபர்' பிரிவில் சென்னையை சேர்ந்த சிஏ பவானி தேவி பங்கேற்றார். 
 • இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதினார். உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எமியை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். 
 • இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.
 • பவானிதேவி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருந்தார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
சர்வதேச பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் சமீர் வர்மா - சாய்னாவிற்கு வெள்ளிப்பதக்கம்
 • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரார் சமீர் வர்மா சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
 • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில்ந் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா சீனா வீரர் ஹூ லு குவாங்ஜூவை எதிர்த்து மோதினார்.
 • இறுதியில் இந்த போட்டியில் 16-21, 21-19, 21-14 என்ற செட் கணக்கில் சமீர் வர்மா வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
 • பெண்களுக்கான பிரிவில் பங்கேற்ற சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூ விடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
 • இதுவரை சமீர் வர்மா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பு சுவிஸ் ஓபன் மற்றும் ஹைதராபாத் ஓபன் தொடரில் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
4-வது முறையாக சாம்பியன்: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 மகளிர் உலகக்கோப்பையை வென்றது ஆஸி.
 • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
 • ஆன்டிகுவா நகரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.
 • இதற்குமுன் ஆஸ்திரேலிய அணி 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 3 -வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை வந்து பட்டத்தை தவறவிட்டுள்ளது.இந்த மூன்று முறையும் ஆஸ்திரேலியாவிடம்தான் இங்கிலாந்து அணி கோப்பையை தவறவிட்டுள்ளது.
 • அதேசமயம், இறுதிப்போட்டிவரை வந்த ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது.
 • ஆட்டநாயகி விருது ஆஸ்திரலிய வீராங்கனை கார்ட்னருக்கும், தொடர் நாயகி விருது அலிசா ஹீலேவுக்கும் வழங்கப்பட்டது.பள்ளி மாணவர்களின் புத்தகப்பையின் எடை குறித்து HRD சுற்றறிக்கை!
 • மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பையின் எடை ஒன்றரைக் கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், பள்ளி மாணவர்கள் பலர், தங்களது உடல் எடையில், 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 • 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை, 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
 • 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகப்பையின் எடை, 2 முதல் 3 கிலோ வரை இருக்கலாம். 
 • 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் புத்தகப்பை எடை 4 கிலோவிற்கு மிகாமலும், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 4.5 கிலோவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 
 • 10 ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல், கணிதம் ஆகியவற்றை மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்களை, பாடப்புத்தகங்களை தவிர வேறு எதையும் கொண்டு வர சொல்லக்கூடாது எனவும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 
ரூ 1,190,00,00,000 கடன்.ஆசிய வளர்ச்சி வங்கியிடம் தமிழகம் ஒப்பந்தம்
 • தமிழகத்தில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 1,190 கோடி ரூபாயை கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-க்கு தங்களது ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று தெரிவித்துள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழக நகரங்களை உலக தரத்தில் உயர்த்த கடனுதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
 • இந்த கடனுதவி மூலம் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், ராஜபாளையம் உள்ளிட்ட 10 நகரங்கள் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமானங்களால் இயற்கை பேரிடர் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு, நகர்ப்புறங்கள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கஜா புயல்: மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி
 • தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துடன், தாங்கள்வளர்த்த பயிர்கள், மரங்களையும் இழந்து அவர்களின்வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 • கஜா' புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் அரசு தரப்பில் இருந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 • இந்நிலையில் கஜா புயல் பாதிபிறகு நிவாரண உதவியாக ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேரடியாக பிரதமரிடம் சென்று கோரிக்கை வைத்தார். அதில், முதற்கட்டமாக ரூ.1,5000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
 • இந்த சூழ்நிலையில், மின்சார சீரமைப்புக்காக முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Friday, 23 November 2018

23rd NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shoutersசென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பு
 • சென்னை உயர்நீதி மன்றத்துக்கு புதிய நீதிபதியாக கர்நாடகாவை சேர்ந்த வினீத் கோத்தாரி இன்று பதவி ஏற்றார். இதன் காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.
 • கடந்த 11ந்தேதி மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி : முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடம்
 • 2019 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சீனா 6.5 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டது.
 • நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (FY19) சீனாவை விட இந்திய பொருளாதாரம் வேகத்தை அதிகரித்து உள்ளது என சில மதிப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.
 • இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் மற்றும் 7.9 சதவீதத்திற்கு இடையே மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவிகிதம் ஆகும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரத்தை உருவாக்கும்.
 • இருப்பினும் இந்தியாவின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் சாதனை படைத்ததை விட குறைவாக உள்ளது. மேலும் வளர்ச்சி FY19 இரண்டாம் பாதியில் மேலும் குறைவாக இருக்கும் என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. முதல் காலாண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பது காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம்
 • உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.92 கோடியாகும். இந்நிலையில், 'Lancet Diabetes & Endocrinology' என்ற மருத்துவப் பத்திரிக்கையில், ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
 • அதன்படி, வயதேறுவது, நகரமயமாக்கல், உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம், உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் அடுத்த 12 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டில் டைப்2 வகை நீரிழிவினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 40.6 கோடி என்றும், இது, 2030ஆம் ஆண்டில் 51.1 கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 • 2030ஆம் ஆண்டில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் மட்டும் இருப்பார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பு ரத்து
 • நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டசென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 • நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் அதிகமான அளவில் பிழைகள் இருந்ததாகவும், இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பமடைந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீட் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களில் எழுத்துப்பிழைகள் இருந்ததாகவும், வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 • இந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்களை சேர்த்து 2 வாரத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 • அதன்படி,நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 • அப்படி ஒருவேளை கேள்வித்தாளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் இருக்கும்பட்சத்தில் ஆங்கிலத்தில் உள்ள கேள்வித்தாளில் உள்ள கேள்விகளையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தான் 196 கருணை மதிப்பெண்களை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 • பிளஸ்-2 மாணவர்கள் முழுக்க தமிழில் படித்து இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு அவசியம்.
 • இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கேள்விகளையும் சரிபார்த்து விடைகளை எழுதி இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் தலைமை செயலராக ஐ.பி.எஸ் அதிகாரி விஜய் குமார் தேவ்
 • டெல்லி மாநிலத்தின் அரசு தலைமை பொதுச் செயலாராகஐ.பி.எஸ் அதிகாரி விஜய்குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஐ.பி.எஸ்.-ன் 1987ம் ஆண்டுபிரிவைச் சேர்ந்த விஜய்குமார் தேவ், டெல்லியின் தலைமைதேர்தல் ஆணையராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர்டெல்லி மாநில தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 • டெல்லி மாநிலத்தில் தலைமை செயலராக இருந்த அன்ஷு பிரகாஷ், மத்திய தொலைத்தொடர்பு துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பதவிக்குஐ.பி.எஸ் அதிகாரி விஜய்குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த பத்திரங்கள் மூலம் பத்தாயிரம் கோடி நிதி திரட்ட திட்டம்
 • ஒப்பந்தப் பத்திரங்கள் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
 • அந்த வகையில், பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்பிடம், விண்ணப்பித்திருக்கிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்திற்கும் இதர செலவுகளுக்கும் இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
 • பாரத்மாலா திட்டத்தின் மூலம், 50 தேசிய வழித்தடங்களை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கவுள்ளது. நிதிக்காக பெறப்படும் பத்திரங்களின் காலம் நிறைவடைந்த பின்னர், பெற்ற தொகை நெடுஞ்சாலை ஆணைய முதலீட்டாளர்களிடம் திரும்ப வழங்கப்படும்.
 • உணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்  உணவில் கலப்படம் செய்வோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்வதோடு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
 • முன்னதாக, மகாராஷ்டிராவில் உணவுக் கலப்படம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ-அமெரிக்கா எல்லையை மூடப்போவதாக அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
 • மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 • மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.
 • இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடுகள் நடை பெறுகிறது.
 • எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருங்கை விவசாயிகளுக்கு கருத்தரங்கம்
 • முருங்கைக்காக அகில இந்திய அளவில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் இதுதான். இதற்காக முன்பதிவு செய்வது அவசியம். இதற்கான முன்பதிவுக்கு ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன வலைதளத்தைத் தொடர்புகொள்ளலாம். கருத்தரங்கம், டிசம்பர் 20, 21,22 - ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருக்கும் சிங்கார் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. 
 • முருங்கை கண்காட்சி டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை, கன்னியாகுமரி ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன (stella maris institute of development studies) வளாகத்தில் நடைபெற உள்ளது.