Wednesday, 31 October 2018

DOWNLOAD OCTOBER CURRENT AFFAIRS 2018 TNPSCSHOUTERS TAMIL PDF

Tnpsc Shouters


TNPSCSHOUTERS  - OCTOBER 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st OCTOBER 2018
2.
2nd OCTOBER 2018
3.
3rd OCTOBER 2018
4.
4th OCTOBER 2018
5.
5th OCTOBER 2018
6.
6th OCTOBER 2018
7.
7th OCTOBER 2018
8.
8th OCTOBER 2018
9.
9th OCTOBER 2018
10.
10th OCTOBER 2018
11.
11th OCTOBER 2018
12.
12th OCTOBER 2018
13.
13th OCTOBER 2018
14.
14th OCTOBER 2018
15.
15th OCTOBER 2018
16.
16th OCTOBER 2018
17.
17th OCTOBER 2018
18.
18th OCTOBER 2018
19.
19th OCTOBER 2018
20.
20th OCTOBER 2018
21.
21st OCTOBER 2018
22.
22nd OCTOBER 2018
23.
23rd OCTOBER 2018
24.
24th OCTOBER 2018
25.
25th OCTOBER 2018
26.
26th OCTOBER 2018
27.
27th OCTOBER 2018
28.
28th OCTOBER 2018
29.
29th OCTOBER 2018
30.
30th OCTOBER 2018
31.
31st OCTOBER 2018


மருத்துவத்துக்கான நோபல்
  • புற்று நோய் சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் டசகு ஹான்ஜோ ஆகியோர் கூட்டாக பெறுகிறார்கள்.
  • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் பரிசாக மருத்துவ நோபல் பரிசு பெறும் பெயர்கள் வெளியிடப்பட்டன. ஆலிசனும், ஹான்ஜோவும் இணைந்து புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 
  • அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காகவே இவர்களுக்கு பல் பரிசு கிடைத்துள்ளது.
  • ஆலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். டசகு ஜப்பானைச் சேர்ந்த மருத்து விஞ்ஞானி ஆவார். 
பயோமெட்ரிக் முறையில் ரோஹிங்ய மக்களை கணக்கெடுக்க உத்தரவு
  • இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா மக்களை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காண வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • இந்த அடையாளம் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதன் அறிக்கையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்பின்னர் மியான்மார் அரசாங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவாரத்தை நடத்தும் எனக் கூறினார்.
  • ஏற்கனவே நமது நாட்டில் ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கியா மக்கள் தங்கியுள்ளனர். அவர்களை குறித்து தகவல்களை சேகரித்து அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ரூ.1,240 கோடியை விவசாயத்தில் முதலீடு செய்த பில்கேட்ஸ்
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவருமான பில்கேட்ஸின் பார்வை தற்போது அறிவியல் தொழில்வளர்ச்சியில் இருந்து விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 
  • காரணம் உலகில் உள்ள அனைவரும் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனை விவசாயம் அழிந்து வருவதாகவும். அழிவில் இருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்கும் பொருட்டு பில்கேட்ஸின் நடவடிக்கை உள்ளது.
  • அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளா பண்ணை நிலம், தரிசு நிலம் என சுமார் 14,500 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு ரூ.1.240 கோடி என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டின் மிகப் பெரும் நில விற்பனை இதுதான். தனது தொண்டு நிறுவனம் மூலம், சுகாதாரத் திட்டங்களுக்குப் பெரும் தொகையை வழங்கிவரும் பில் கேட்ஸ், விவசாய நிலத்தில் முதலீடு செய்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி
  • நாட்டிலுள்ள 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றும் ஆய்வு செய்ய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுமதி அளித்துள்ளார். மொத்தம் 6 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், கடற்பகுதி, நிலப்பரப்பு என 41 இடங்களில் வேதந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 41 இடங்களில் இரண்டு காவிரி கடல் பகுதியில் வருபவை. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு இரண்டு இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் மட்டும் நிலப்பகுதியில் வருகிறது. .



டிஜிட்டல் இந்தியாவுக்காக ஏடிஎம்களில் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு
  • டிஜிட்டல் இந்தியாவு திட்டத்தை முற்றிலும் மத்திய அரசு செயல்படுத்த விரும்புகின்றது. இதற்காவும் மேலும் பல்வேறு வழிகளில் பணம் கொள்ளையடிக்க படுவதை தடுக்கும் விதமாகவும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதை மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது.
சர்வதேச நாணய முறை நிதிய பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்
  • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை கீதா கோபினாத் சர்வதேச நாணயமுறை நிதியத்தில் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார்.
  • ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியையான கீதா கோபினாத் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவர் வாஷிங்டன் மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர் ஆவார். அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இவர் பி எச்டி பட்டம் பெற்றுள்ளார்.
  • தற்போது சர்வதேச நாணயமுறை நிதியத்தின் (INTERNATIONAL MONETARY FUND) இவர் பொருளாதார நிபுணராக நியமிக்கபட்டுள்ளார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கபடும் இரண்டாமிந்தியர் என்னும் பெருமையை கீதா அடைந்துள்ளார். இதற்கு முன்பு இந்த பதவியில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்துள்ளார்.
ஐ எல் எஃப் எஸ் நிறுவனம் அரசுடமை ஆக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல்
  • திவாலாகும் நிலையில் உள்ள ஐ எல் எஃப் எஸ் நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இன்ஃப்ராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக ஐ எஸ் எஃப் எல் என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் சாலைகள், ரெயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் எண்ணெய் கிணறுகள் என பல உள்கட்டமைப்பை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு ரூ.6950.19 கோடி ஆகும்.
  • இந்த நிறுவனம் வழங்கிய கடன்களை திரும்ப பெறாததால் இந்த நிறுவனம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே நிறுவனம் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு தற்போது உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இந்த நிறுவனத்தை அரசுடமை ஆக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அனுமதி கோரியது. .
  • அதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. தீர்ப்பாயம் தெரிவித்த படி இயக்குனர்களை மாற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 
உலகிலேயே முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக் குட்டிகள்
  • உலகின் முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் தென் ஆப்ரிக்காவில் இரண்டு சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.
  • தென் ஆப்ரிக்காவின் தலைநகரான் பிரிடோரியாவில் உள்ள விஞ்ஞானிகள் பெண் சிங்கம் ஒன்றை செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.

31st OCTOBER CURRENT AFFAIRS 2018 TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shouters



தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்
  • தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது. உலக வங்கி வெளியிட்டு வரும் இந்த பட்டியலில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
  • இந்த ஆண்டுக்கான பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பெற்றுளது. இந்த முன்னேற்றம் உலக நாடுகள் மத்தியில் அபரிமிதமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
  • 2016-ம் ஆண்டில் 130 வது இடத்தை, 2017-ம் ஆண்டில் 100-வது இடத்திலும் இந்தியா இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மருதுவ உபயோகத்துக்கு கஞ்சா பயிரிட உ.பி. அரசு அனுமதி
  • உத்திரப் பிரதேச பாஜக அரசு மருத்துவ உபயோகத்துக்காக கஞ்சா பயிரிட விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
  • உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் அந்த அளவுக்கு கரும்பு வர்த்தகம் நடைபெறுவதில்லை. அதனால் பல வருடங்களாக கரும்பு விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
  • இந்நிலையில் சணல் பயிருக்கு ஊடுபயிராக விவசாயிகள் மருத்துவ உபயோகத்துக்காக கஞ்சா பயிரிடலாம் என அனுமதி அளித்துள்ளது. இதற்காக குறைந்த அளவில் போதை தன்மை நிறைந்த கஞ்சாவை விவசாயிகள் பயிரிடலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் எனவும் அரசு கூறி உள்ளது.
ஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பதிவு செய்யப்படாத பல கடைகள் மூலம் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
  • மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு காலாவதியான,போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.
  • ஆன்லைலில் மருந்துகள் வாங்குவது, மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது, சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டிருந்தது.
  • இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்வதற்கு வரும் நவ.9-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார். வழக்கு விசாரணையையும் 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி
  • இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை தமிழ்ச்செல்வி பெற்றிருக்கிறார்.
  • வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கை தமிழ்ச்செல்வி. இவர் இரண்டு வருட போராட்டத்திற்குப்பிறகு, செவிலியர் படிப்பில் இடம் பெற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார்.
டில்லியில் ஒற்றுமை ஓட்டம்
  • சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு டில்லி இந்தியா கேட் பகுதியில் ஒற்றுமை ஓட்டம் துவங்கியது. இதை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் சிங் ரதோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
  • இதேபோல் சென்னை தீவுத்திடலில் துவங்கிய ஒற்றுமை ஓட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



குவைத் பிரதமரை சந்தித்தார் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். கத்தார் பயணத்தை நிறைவுசெய்த சுஷ்மா ஸ்வராஜ், நேற்று குவைத் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-ஜாபெர் அல்-சபா மற்றும் பிரதமர் ஷேக் ஜபார் அல் முபாரல் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
  • குவைத்தில் வாழும் சுமார் 8 லட்சம் இந்தியர்களின் நலன் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை கூட்டுறவு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
குடியரசு துணைத் தலைவர் மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம்
  • குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அக்டோபர் 31-முதல் நவம்பர் 6-வரை அரசு பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லவுள்ளார். இதனையடுத்து நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த ஒருவாரகால பயணத்தின்போது, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளுக்கு செல்வதுடன், அந்தந்த நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசவுள்ளார்.
  • குடியரசு துணைத் தலைவருடன் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அடங்கிய உயர்மட்ட நாடாளுமன்ற தூதுக்குழுவும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம் மலேசியாவுடன் கையெழுத்து
  • நேபாள நாட்டு தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் கையெழுத்தான இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நேபாள தொழிலாளர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை
  • விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அத்தனைக்கும் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் மலேசிய நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும். கூடுதலாக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறங்கும் தொழிலாளிகளை 6 மணிநேரத்துக்குள் தங்கள் இடத்துக்கு குறிப்பிட்ட நிறுவனம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறைக்கு தனி சேனல்
  • பள்ளிக்கல்வித்துறைக்கென உருவாக்கப்படும் இந்த தொலைக்காட்சி சேனலில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும், தனி ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
  • தற்போது தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் TN SCERT என்னும் Youtube சேனல் செயல்பட்டு வருகிறது. இந்த சேனலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாடதிட்டத்தில் உள்ள பாடப்புத்தக தகவல்கள் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 



அக்னி -1 ஏவுகணையை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது
  • கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஒடிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள அப்துல்கலாம் ஏவுதளத்திலிருந்து நேற்று காலை 8.30 மணியளவில் இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து துல்லியமாக தாக்கியது.
  • இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது என ரானுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 15 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய விண்கலம்
  • நாசா விஞ்ஞானிகள், முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை. திங்களன்று பார்கர் சூரியனில் இருந்து 26.6 மில்லியன் மைல்கள் (4.3 கோடி கிலோமீட்டர்) தொலைவு பயணம் செய்து 1976 ல் ஹீலியோஸ்-2 விண்கலத்தின் சாதனையை முறியடித்தது. அடுத்த ஏழு வருடங்களில் சூரியனுக்கு நெருக்கமாக 24 மணி நேரமும் சூரியனை தீவிரமாக கண்காணிக்கும்.
இந்தியாவின் அதிவேக ரயில் `ட்ரெய்ன் 18' ரெடி
  • சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்`ட்ரெய்ன் 18' அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இந்த ரயில் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தனது சேவையை தொடங்குகிறது என இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வைஃபை வசதி, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

TAMILNADU FOREST GUARD & FOREST GUARD WITH DRIVING LICENCE FULL MATERIAL / NOTES IN TAMIL PDF 2018

Tnpsc Shouters

TNPSCSHOUTERS.com Provides Free Samacheer Kalvi Notes & Questions for TNPSC / TET /TRB Inspirants for Tamil & Geography.

Any Problem on Download : Call 9698694597 or Mail @ tnpscshouters@gmail.com


அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் SAMACHEER KALVI  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.

OFF LINE MODE PAID THROUGH BANK 

NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR

SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com

அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 96986945979698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

ONLINE PAYMENT MODE
AVAILABLE CREDIT/DEBIT CARD / NETBANKING 
விலைப்பட்டியல்

MATERIALS
PRICE
BUY
PAGES
TAMILNADU FOREST GUARD
FULL MATERIAL
Rs.700
900
TNPSC SCIENCE
Rs.250
200
TNPSC GEOGRAPHY
Rs.100
90
TNPSC HISTORY AND
CULTURE OF INDIA
Rs.100
150
TNPSC INDIAN NATIONAL MOVEMENT
Rs.100
40
TNPSC POLITICAL SCIENCE
Rs.100
60
TNPSC ECONOMIC
Rs.100
60
TNPSC APTITUDE
Rs.100
42

SYLLABUS




DETAILS & SCREENSHOT


INDIAN POLITICS / POLITICAL SCIENCE

INDIAN NATIONAL MOVEMENT


TNPSC ECONOMICS


HISTORY AND CULTURE OF INDIA


 GEOGRAPHY

APTITUDE & MENTAL ABILITY TESTS

GENERAL SCIENCE