Friday, 31 August 2018

DOWNLOAD TNPSCSHOUTERS CURRENT AFFAIRS AUGUST 2018 TAMIL PDF

Tnpsc ShoutersTNPSC SHOUTERS  - AUGUST 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st AUGUST 2018
2.
2nd AUGUST 2018
3.
3rd AUGUST 2018
4.
4th AUGUST 2018
5.
5th AUGUST 2018
6.
6th AUGUST 2018
7.
7th AUGUST 2018
8.
8th AUGUST 2018
9.
9th AUGUST 2018
10.
10th AUGUST 2018
11.
11th AUGUST 2018
12.
12th AUGUST 2018
13.
13th AUGUST 2018
14.
14th AUGUST 2018
15.
15th AUGUST 2018
16.
16th AUGUST 2018
17.
17th AUGUST 2018
18.
18th AUGUST 2018
19.
19th AUGUST 2018
20.
20th AUGUST 2018
21.
21st AUGUST 2018
22.
22nd AUGUST 2018
23.
23rd AUGUST 2018
24.
24th AUGUST 2018
25.
25th AUGUST 2018
26.
26th AUGUST 2018
27.
27th AUGUST 2018
28.
28th AUGUST 2018
29.
29th AUGUST 2018
30.
30th AUGUST 2018
31.
31th AUGUST 2018


DOWNLOAD 

சிறந்த எம்.பி.க்களுக்கு விருது ஜனாதிபதி வழங்கினார்
 • நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய எம்.பி.,க்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்த வுழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
 • 2013ம் ஆண்டுக்கு - நஜ்மா ஹெப்துல்லா, 2014க்கு - நரேன் யாதவ், 2015க்கு - குலாம் நபி ஆசாத், 2016க்கு - திர்னேஷ் திரிவேதி, 2017க்கு பார்த்ருஹரி மஹ்தாப் ஆகியோர் விருது பெற்றனர்.
ராஜஸ்தானில் பசு சரணாலயம்
 • நாட்டிலேயே முதன் முதலாக ராஜஸ்தானில் பசு சரணாலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை சுற்றுலா தளமாகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 • இதற்காக பிக்காநர் மாவட்டம் நாபசார் பகுதியில் மோகன்லால் புலதேவி ஒஜா கவுசாலா என்ற தனியார் அறக்கட்டளைக்கு 320.42 ஏக்கர் நிலத்தை ராஜஸ்தான் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
 • பிக்காநர் வந்த முதல்வர் வசுந்தரராஜே இது தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜூலை 27ம் தேதி கையெழுத்திட்டார். சரணாலயத்தை சுற்றுலா தளமாக்கும் திட்டமும், நந்திசாலா வளர்ச்சி திட்டமும் இதில் அடங்கும்.
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
 • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறுகிய கால கடன் மீதான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வாங்கி 0.25 % உயர்த்தியுள்ளது. அதுபோல ஜிடிபி 7.4 சதவிகித மாக உயர்ந்துள்ளது.
 • இதன் காரணமாக வீட்டுக் கடன் மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.கருப்பின மக்களுக்கு நில விநியோகம் அரசமைப்பு சட்டத்தை திருத்துகிறது தென்னாப்பிரிக்கா
 • தென்னாப்பிரிக்காவில் நிலவுடமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா.
 • 30 சதவீத நிலங்கள் கருப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், இனப் பாகுபாடு ஒழிக்கப்பட்ட காலத்தில் இருந்து 10 சதவீத நிலங்களே வெள்ளையின உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை
 • பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு புதிய வாடிக்கையாளரை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனே அமல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது. கேஒய்சி விதிகளை கடைபிடிப்பதில் பேஎம் வங்கியின் செயல்பாடு அதிருப்தி காரணமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது மன்னிப்பு 3 மாதம் நடைமுறையில் இருக்கும்
 • அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயல்படுத்த உள்ளது.
 • ஐக்கிய அரபு எமிரெட்ஸ் முன்னெடுக்கும் இந்த மூன்று மாத விசா பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.
 • அவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 2.8 மில்லியன் பேர் உள்ளனர். எத்தனை பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என்பது தெரிவிக்கப்பட்டவில்லை.
 • ஆனால், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பொதுமன்னிப்பு திட்டத்தால் பயனடைவார்கள், அவர்கள் சொந்த நாட்டிற்கு பிரச்னையின்றி திரும்பவும் வழி ஏற்பட்டுள்ளது.
 • 2018 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்னதாக விசா மீறல்களில் ஈடுபட்டவர்கள் விசா பொதுமன்னிப்பு வழங்கப்படும் இந்த மூன்று மாத காலகட்டங்களில், சட்டப்பூர்வமாக தங்கள் நிலையை திருத்திக்கொள்ளலாம். அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை பொதுமன்னிப்பு காலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்
 • சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
 • பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை ஜூலை 31 முதல் அணைத்துப் பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 • அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக செயல்படும் என்று அறிவித்துள்ளது. 
 • இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்து பெண்கள் ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.

31st AUGUST 2018 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

Tnpsc Shoutersபேமென்ட் வங்கி"பிரதமர் மோடி  தொடங்கி வைக்கிறார்
 • கிராமப்புற மக்களும் பயன்படும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையை இன்று நாடு முழுவதும் பிரதமா நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா.
 • தற்போது நாட்டின் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக நாட்டின் பெரிய வங்கியாக போஸ்ட் பேமென்ட் வங்கியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
 • ஏற்கனவே சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதிக்குள் 1.55 லட்ச தபால் நிலையங்கள் மற்றும் தற்போது இருக்கும் 3 லட்ச ஊழியர்களுடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று இந்திய தபால் துறை சார்பில், பேமெண்ட் வங்கிகள் சேவை இன்று தொடங்கப்படுகிறது.
 • இந்திய கிராமப்புறங்களில் தற்போது 50 ஆயிரம் வங்கி கிளைகள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் அஞ்சல் துறைக்கு நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் சேவை மையங்களை அமைத்துள்ளன.
 • இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.. வழக்கமான சேமிப்பு கணக்கு, மின்னணு சேமிப்பு கணக்கு, அடிப்படையான சேமிப்பு கணக்கு என்று மூன்று விதமான வசதிகள் கிடைக்கும். இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 • தபால் துறை சார்பில் இன்று தொடங்கப்படும் 'இந்தியன் போஸ்டல் பேமென்ட் வங்கியில் வங்கிகளைப் போலவே, ஏ.டி.எம்., கார்டு, காசோலை வசதிகளும் செய்யப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய மகளிர் அணி
 • ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் ஜப்பானுடன் மோதிய இந்திய பெண்கள் அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 
 • இறுதிப்போட்டியில் இந்தியா ஜப்பான் அணியுடன் மோதியது. பெணால்டி கார்னர் முறையில் 12-வது நிமிடத்தில் ஜப்பான் கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கோல் அடித்தார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. பின் 44-வது நிமிடத்தில் ஜப்பான் மீண்டும் பெணால்டி கார்னர் முறையில் கோல் அடித்தது.
 • ஆனால் எவ்வளவு போராடியும் இந்திய வீராங்கனைகளால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில், ஜப்பானிடம் தோல்வியை தழுவி தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டது. இறுதியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
சிந்து நதி உடன்படிக்கை - இந்தியா, பாக்கிஸ்தான் முக்கிய ஆலோசனை
 • சிந்து நதி உடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது தொடர்பாக இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஆலோசனை நடத்தின. பாக்கிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதை அடுத்து, நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்படாத சிந்து நதியின் உடபடிக்கை குறித்து தற்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
 • இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ம் ஆண்டு சிந்து நதி உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ரவி, பீஸ், சட்லஜ் ஆகிய சிந்து படுகையின் கிழக்குப் பகுதி நதிகள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குப் பகுதி நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.
 • இந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு அதிகாரிகளும் ஆண்டு தோறும் சந்தித்துப் பேச வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. ஆனால் இருநாடுகளுக்கும் அடிக்கடி இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக பல ஆண்டுகளாக உடன்படிக்கை மீதான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.
 • இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளதை அடுத்து, இந்த ஆண்டு சிந்து நதி உடன்படிக்கைக்கான பேச்சு வார்த்தை நடந்தது. இது பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய குழுவிற்கு பிரதீப்குமார் சக்சேனாவும் பாகிஸ்தான் குழுவிற்கு சையது முகமது மெஹர் அலி ஷாவும் தலைமை வகித்தனர்.
 • இந்த கூட்டத்தில் காஷ்மீரின் செனாப் நதியில் 1,000 மெகாவாட், 48 மெகாவாட் நீர் மின் நிலைய திட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், சிந்து நதி உடன்படிக்கைக்கு உட்பட்டே நீர்மின் நிலைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று இந்தியக் குழு கூறியது.
 • உடன்படிக்கையை முறையாக அமல்படுத்துவது குறித்து இரு தரப்பும் முக்கிய ஆலோசனை நடத்தின. இதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களை பாகிஸ்தான் நிபுணர் குழு பார்வையிட இந்திய தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல பாகிஸ்தான் பகுதி சிந்து படுகையில் இந்தியக்குழு ஆய்வு செய்ய அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது.
ஆண்களின் திருமண வயதை 21ஆக குறைக்க சட்ட கமிஷன் பரிந்துரை
 • நமது நாட்டில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் சட்டமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது நாடுகளில் வளர்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
 • நாட்டில் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒருசேர நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ள மத்திய சட்ட கமிஷன், குடும்பநல சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களையும் தெரிவித்துள்ளது.
 • அதில், ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளது.
பயங்கரவாதத்தை வேரறுக்க'பிம்ஸ்டெக்' நாடுகள் பிரகடனம்: ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க முடிவு
 • 'உலக அமைதிக்கு சவாலாக உள்ள பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்; பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்,நிதியுதவி செய்யும் அமைப்புகளை கண்டறிய வேண்டும்' என, 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக, ஒருங்கிணைந்த செயல் திட்டம் தயாரிக்க, மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்காள விரிகுடா ஒட்டிய நாடுகளின் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நான்காவது மாநாடு, அண்டை நாடான நேபாள தலைநகர், காத்மாண்டில், துவங்கியது.இந்த அமைப்பில், இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மியான்மர், பூடான், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் காத்மாண்டு சென்றார். 
 • மாநாட்டை, நேபாள பிரதமர், சர்மா ஒலி துவக்கி வைத்தார்.மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது. 'மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தான பயங்கர வாதத்தை, நாம் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல், போதைப் பொருள் கடத்தலையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
 • இந்நிலையில், மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாளான நேற்று நிறைவேற்றப் பட்ட, 18 அம்சங்கள் உடைய பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகள், பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன.ஐ.நா-வுக்கு எதிராகச் சீறும் மியான்மர் அரசு
 • மியான்மர் நாட்டில் வாழ்ந்து வரும் பல சிறுபான்மை இனங்களுள் ரோஹிங்கியா மக்களும் அடங்குவர். மியான்மர் நாட்டின் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் ரோஹிங்கியா மக்கள்தான் பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர். 
 • அந்நாட்டின் ரக்கைன் மாநிலத்தின் வட பகுதியில் அதிகளவில் இவர்கள் வாழ்த்து வருகின்றனர். ஆனாலும், இவர்கள் 'வங்கதேசத்திலிருந்து அத்துமீறிக் குடியேறியவர்கள்' என அரசால் முத்திரை குத்தப்பட்டு குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள். 
 • உலகிலேயே அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர். 1982-ம் ஆண்டு முதல் மியான்மர் அரசாங்கத்தால் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
 • ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்காக மியான்மர் அரசுக்கு எதிராக உருவான அர்சா இயக்கம், ஆகஸ்ட் 2017-ம் ஆண்டில் நிகழ்த்திய தாக்குதலில் 24 காவல்துறையினர் உட்பட 71 பேர் பலியானார்கள். இதையடுத்து மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கிய மக்கள் மீது நடத்திய உடனடித் தாக்குதலில் 730 குழந்தைகள் உட்பட 6,700 ரோஹிங்கியா மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 
 • இதுகுறித்து வெளியான குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்கும் வகையில் மியான்மர் ராணுவம் ஓர் உள்விசாரணை அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பு ஜோடித்ததை வைத்து நவம்பர் 2017-ம் ஆண்டிலேயே மறுப்பும் தெரிவித்தது. அக்காலகட்டத்தில் எந்தவொரு பத்திரிகைகளையும் அவர்கள் செய்தி சேகரிக்கவும், வெளியிடவும் அனுமதிக்கவில்லை. இவ்வளவு ஏன்... ஐ.நா.,வின் உண்மைக் கண்டறியும் குழுவையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
 • 'அம்னெஸ்டி இன்டர்நெஷனல்' போன்ற அமைப்புகள் அப்போதிலிருந்தே ரோஹிங்கியா மக்கள் மீது தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு மியான்மர் அரசு உயரதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தின. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய மியான்மர் மீது கடுமையானக் கண்டனங்களை வைத்துள்ளது. 
 • கடந்த 12 மாதங்களில் ரோஹிங்கிய மக்கள் மீது ராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரோஹிங்கிய மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்கிறது ஐ.நா அறிக்கை. மேலும், ஆறு மூத்த ராணுவ அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. 'அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமின்றி 'ரோஹிங்கியா மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கச் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்' என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி : இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம்
 • ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ்ப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடவர் அணியினர் தோல்வியுற்றனர். 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வு
 • நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, 15 காலாண்டுகளுக்கு பின், காணப்படும் சிறப்பான வளர்ச்சியாகும். இதற்கு முன், 2014- - 15ம் நிதியாண்டின், ஜூலை - செப்., காலாண்டில் தான், அதிகபட்சமாக, 8.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது.
 • டப்பு, 2018 -- 19ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 8.2 சதவீதம் உயர்ந்து, 33.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி : பாய்மரப் படகுப்போட்டியில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் வெண்கலம்
 • ஆசிய விளையாட்டு தொடரின் பாய்மரப் படகுப்போட்டியின் Open Laser 4.7 பிரிவில் இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.ஆசிய விளையாட்டு போட்டி : காயம் காரணமாக இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் வெண்கலப்பதக்கத்துடன் வெளியேறினார்
 • ஆசிய விளையாட்டு போட்டியின் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவின் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன், கண்ணில் காயமடைந்ததால் போட்டியிடும் தகுதியை இழந்து வெண்கலப்பதக்கத்துடன் வெளியேறினார். கடந்த 2014ம் ஆண்டுக்கான ஆசிய போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்த விகாஸ், இம்முறை தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் வெண்கலத்துடன் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
ஆசிய விளையாட்டுப் போட்டி : பாய்மர படகு போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்
 • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. பாய்மர படகு போட்டியில் வர்ஷா கெளதம், ஸ்வேதா ஷெர்வேகர் ஆகியோர் வெள்ளி வென்றனர். 
தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கம்
 • ராசிபுரம் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
 • அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ரூ.16. லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.