Sunday, 8 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 8th JULY 2018
உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா கர்மாக்கர் தங்கம்
 • துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் அவர்.காயத்தில் இருந்து மீண்டு 2 ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற தீபா கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும்.
 • துருக்கியில் உள்ள மெர்சின் நகரில், எப்ஐஜி ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பைப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டு 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
 • தகுதிச்சுற்றில் 13.400 புள்ளிகள்பெற்று முதலிடம் பெற்றார் கர்மாகர்.கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கர்மாகர் 4-வது இடத்தைக் கைப்பற்றினார்.
 • திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 24வயதான தீபா கர்மாகர், உலகக் கோப்பைப் போட்டியில் பெறும் முதல் தங்கப்பதக்கமாகும். தீபா கர்மாகருடன் அவரின் பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி உடன் சென்றார்.
நொய்டாவில் உலகின் மிக பெரிய மொபைல் போன் தொழிற்சாலை : பிரதமர் மோடி பங்கேற்பு
 • சாமசங்க் நிறுவனத்தின் உலகின் மிகபெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் துவங்க உள்ளது. இன்று நடைபெற உள்ள இதற்கான விழாவில் பிரதமர் மோடி தென் கொரிய அதிபர் கலந்து கொள்கின்றனர்.
 • பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, தென் கொரியா அதிபர் மூன் ஜேய்-இன் முதன்முதலாக 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வரும் 11-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். 
பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர்
 • செம்மொழித் தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய மனித வள úம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ளது. 
 • சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவராக பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பை ஏற்கவுள்ள அவர் மூன்றாண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.தென்கொரியா அதிபர் மூன் இந்தியா வந்து சேர்ந்தார்
 • தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் தனது மனைவி, அதிகாரிகளுடன் இன்று மாலை டில்லி வந்து சேர்ந்தார். வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அவர்களை வரவேற்றார்.டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை மூன் ஜே இன் பார்வையிட்டார்
 • மூன் 11-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
 • அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். 10-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிறப்பான வரபேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது. டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
 • இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது.
அமெரிக்கா விருதுக்கு சென்னை மாணவி தேர்வு
 • அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ம் ஆண்டிற்கான தியேல் ஃபெல்லோஷிப் விருது சென்னையைச் சேர்ந்த மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு (வயது 21) கிடைத்துள்ளது. உலகளவிலான 20 பேர் கொண்ட பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
 • ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக உள்ள அபர்ணா, இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார்.
 • மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ஏற்படுத்தியுள்ளார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment