Monday, 9 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 9th JULY 2018




லோக் ஆயுக்த மசோதா நிறைவேறியது
  • முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அதிகாரம் கொண்ட லோக்-ஆயுக்த அமைப்பு உருவாக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது.
  • 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீது புகார்களை அளிக்கலாம். இந்தப் புகார்களை லோக்-ஆயுக்த அமைப்பு விசாரிக்கும்.
  • லோக் ஆயுக்த அமைப்பு தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்படும். அதாவது, அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து லோக் -ஆயுக்த அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், நிதி மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றுள்ள நபர் இருப்பார். லோக்-ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களாக நான்கு பேர் இருப்பர். இந்த நான்கு பேரில் இரண்டு பேர் நீதித் துறையைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருப்பர். 
  • லோக் ஆயுக்த அமைப்பின் தெரிவுக் குழுவின் தலைவராக முதல்வர் இருப்பார். சட்டப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். 
  • இந்தக் குழுவுக்கு பெயர்களைப் பரிந்துரைக்க தனியான ஒரு தேடுதல் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் சார்பில் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, தெரிவுக் குழுவிடம் அளிக்கப்படும்.
  • தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் என்பது ஐந்தாண்டு காலம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் 70 வயதை அடையும் வரையில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவி வகிப்பர். 
மெட்ரோ ரயில் நிர்வாக கட்டடத்துக்கு அமெரிக்க நிறுவனம் விருது
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றின்கீழ் அமைக்கப்பட்டுள்ள, சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டடத்துக்கு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டப்படும் கட்டடங்களுக்கு யு.எஸ்.கிரீன் பில்டிங் கவுன்சில்' என்ற அமெரிக்க நிறுவனம் சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான கட்டுமானம், குறைந்த செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு எல்.இ.இ.டி சான்றிதழை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 
மாசுக்கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு வழங்க தடை
  • மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு வழங்கக்கூடாது என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. 
  • இதில், அனைத்து பொது காப்பீடு நிறுவனங்களும், உரிய மாசு கட்டுப்பாடு நிறுவன சான்று அனுமதி இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் காப்பீடு புதுப்பிக்கப்பட வேண்டும். ஓராண்டுக்கு மேல் காப்பீடு எடுத்துக்கொள்ளவும் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. 
நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
  • டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது
  • டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 
  • இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 6 பேர்களில் ஒருவர் சிறை வளாகத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறுவர் சிர்திருத்த பள்லியில் சிறை தண்டனை அனுபவித்து அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
  • இந்த நிலையில் மீதியுள்ள முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.



நீதிமன்ற வழக்குகள் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதி மன்றம்
  • உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகள் விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.
  • நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணை மற்றும் சட்டமன்றங் களில் நடைபெற்று வரும் விவாதங்கள், பணி நியமன நேர்காணல் போன்றவை களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருன்றனர்.
  • இந்த நிலையில், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், விசாரணை நீதிமன்றங் களில் நடைபெறும் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.
  • இவ்வாறு நேரடிய ஒளிபரப்பு செய்வதன் காரணமாக, விசாரணை குறித்து கிராமப்புற மக்களும் அறிந்து கொள்ள முடியும் என்று நீதிமன்ற செயல்பாடுகள், வழக்கு விசாரணைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்து உளளது.
மலோசியாவில் இருந்து இறக்குமதியான மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல்
  • மலோசியாவில் இருந்து இறக்குமதியான மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மணல் இறக்குமதி செய்த நிறுவனத்துடன் நாளை மறுநாள் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 
  • உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனம் மலோசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment