Sunday, 8 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 7th JULY 2018




மாலத்தீவு - பாக்., இடையே மின் ஒப்பந்தம் கையெழுத்து
  • இந்தியாவுடன் தொடர்ந்து விரோத போக்கை கடைபிடித்து வரும் மாலத்தீவு, பாகிஸ்தானுடன் மிகப் பெரிய மின் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.தெற்காசிய நாடான மாலத்தீவில், அப்துல்லா யாமீன் அதிபராக உள்ளார். 
  • மாலத்தீவில், இந்திய கடற்படையின் பாதுகாப்பு விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதை, ஜூன், 30க்குள், இந்தியா, திரும்பப் பெற வேண்டும் என, மாலத்தீவு அரசு கேட்டுக் கொண்டது. இது, இரு நாடுகள் இடையிலான ராணுவ உறவில் கசப்பை உருவாக்கியது.
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்
  • மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
  • மேலும், இந்த தேர்வுகளை புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் எனும் நிறுவனம் நடத்தும் எனவும் அப்போது அவர் கூறினார். 
  • ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெ.இ.இ தேர்வும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும் நடத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவராக முகேஷ் அம்பானி மீண்டும் தேர்வு
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன (ஆர்ஐஎல்) தலைவராக முகேஷ் அம்பானி (61) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக் காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்ஐஎல் நிறுவனத்தின் தலைவராக இருந்த திருபாய் அம்பானி கடந்த 2002-ஆம் ஆண்டு ஜூலையில் மறைந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு 1977-ஆம் ஆண்டு முதல் ஆர்ஐஎல் இயக்குநர் குழுவில் இடம்பெற்றிருந்த முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரானார்.
  • முகேஷ் அம்பானியின் தற்போதைய பதவிக்காலம் வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், அவரது பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க கோரும் தீர்மானம் மும்பையில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் 41-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 98.5 சதவீத வாக்குகளும், எதிராக 1.48 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 
  • இதையடுத்து, பெரும்பான்மையான பங்குதாரர்களின் ஆதரவுடன் முகேஷ் அம்பானியின் பதவிக் காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதாக செபிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஐஎல் தலைவராக பொறுப்பு வகிக்கும் முகேஷ் அம்பானிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.4.17 கோடியும் மற்றும் இதர சலுகைகளாக ரூ.59 லட்சமும் வழங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment