Friday, 6 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 6th JULY 2018




தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக கோயல் நியமனம்
  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
  • டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இதன் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஒடிசா மாநில தலைமை நீதிபதியாகவும், கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு ரூ.26,227 கோடி வருவாய்
  • ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு மார்ச் வரை தமிழகத்துக்கு ரூ.26,227 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் கூறினார்.
  • மொத்தம் ரூ.50,972 கோடி: ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் தமிழக அரசுக்கு ரூ.26 ஆயிரத்து 227 கோடி, மத்திய அரசுக்கு ரூ.24 ஆயிரத்து 745 கோடி என மொத்தம் ரூ. 50 ஆயிரத்து 972 கோடி பண வருவாய் கிடைத்து உள்ளது. 
  • மேலும் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் 9 ஆயிரத்து 458 கோடி ரூபாய் பண வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்றுமதியாளர்களின் 5 ஆயிரத்து 157 விண்ணப்பங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 620 கோடி திருப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார். 
'வழக்கை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே'; பாரம்பரியத்தை மாற்ற முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
  • 'உச்ச நீதிமன்றத்தில், வழக்குகளை பிற நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், தலைமை நீதிபதிக்கே உள்ளது' என, உச்ச நீதிமன்றம், நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 'பாரம்பரியமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டாம்' என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மின் வாரியத்திற்கு 28வது, 'ரேங்க்' : மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சாதனை
  • மத்திய மின் துறை தயாரித்துள்ள, மாநில மின் வாரியங்கள் தரவரிசை பட்டியலில், தமிழகம், 28வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் மின்துறை, தமிழகம் உட்பட, 22 மாநிலங்களில் உள்ள, 41 மின் பகிர்மான நிறுவனங்களின், மின் வினியோகம், நிதி நிலைமை உள்ளிட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும், தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது. 
4.5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து ரயில் இயக்கம்
  • இந்திய பொறியாளர்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் ரயில்பாதையில் 4.5 மனி நேரத்தில் சுரங்கபாதை அமைத்து பின்னர் மீண்டும் ரயிலை இயக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். 



e="text-align: justify;">
சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முறிவு : மலேசிய பிரதமர் அறிவிப்பு
  • சீனாவுடன் முன்னாள் மலேசியப் பிரதமர் செய்துக் கொண்ட 3 ஒப்பந்தங்களை தற்போதைய மலேசியப் பிரதமர் ரத்து செய்துள்ளார்.
  • மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக் மீது ஊழல் புகார் உள்ளதால் அவர் மீது தற்போதைய பிரதமர் மகாதீர் முகமது விசாரணைக்கு உத்தரவிட்டார். வி
  • சாரனையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நஜிப் ரசாக் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார். மகாதீரின் அரசு நஜிப் ஏற்கனவே செய்துள்ள அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வரைவு அரசமைப்பு விதிகளை இறுதி செய்யும் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சீனாவின் வர்தகக் கல்வி கல்லூரியின் தலைவரான இந்திய பேராசிரியர்
  • சீனாவில் ஷாங்காய் நகரில் உலகப்புகழ் பெற்ற வர்த்தகக் கல்லூரியான சீனா ஐரோப்பா சர்வதேச வர்த்தகக் கல்லூரி அமைந்துள்ளது. இதில் பெட்ரோ நியூனோ என்பவர் தலைவராக கடந்த 28 வருடங்களாக பணி புரிந்து வருகிறார். தற்போது அவருக்கு பதில் 61 வயதாகும் இந்திய பேராசிரியரான தீபக் ஜெயின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய 'ஜூனியர்' பெண்கள் ஆசிய படகு வலித்தலில் தங்கம்
  • தென் கொரியாவில் நடந்த ஆசிய 'ஜூனியர்' படகு வலித்தல் சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது.
  • இந்தியா சார்பில் 20 பேர் அடங்கிய அணி பங்கேற்றது. இதில் பெண்கள் பிரிவில் தீபிகா, ஜார்னா, சோனாலி, ரித்த அடங்கிய அணி 7 நிமிடம், 22.330 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் திலிப் சிங், ரோகித், விஜய்பால் சிங், சுனில் அடங்கிய அணி, இரண்டாவது இடம் பெற்று வெள்ளி வென்றது.
  • இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கைப்பற்றியது.



ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்
  • நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் நிலையாக உள்ள நிலையில், இது குறித்து முக்கிய அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று துவங்குகிறது. 
  • இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. 
பூடான் பிரதமர் டோப்கே மோடி - சந்திப்பு
  • மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை,பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.இந்தியா மற்றும் பூடான் இடையே துாதரக ரீதியான உறவு ஏற்பட்டு, இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 
  • இதைக் கொண்டாடும் விதமாக, இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.நேற்று முன் தினம் இந்தியா வந்த டோப்கேவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். 
  • டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பூடான் பிரதமர் டோப்கேவை பிரதமர் மோடி யை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படடதாக கூறப்படுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment