Thursday, 5 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 4th JULY 2018




'சியட்' டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். 
  • ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட் நிறுவனத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 
திருநங்கையருக்கு ஒதுக்கீடு : கேரள அரசு அதிரடி முடிவு

  • கல்லுாரி மற்றும் பல்கலைகளில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை, கேரள மாநில அரசு பிறப்பித்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 
  • இங்கு வசிக்கும் திருநங்கையர், போதிய வருவாயின்றி வறுமையில் வாடுவதாகவும், சமூகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதால், கல்வி கற்க முடியாமல் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில், கேரள மாநில கல்வித் துறை சார்பில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
  • மாநிலம் முழுவதும் உள்ள, கலை - அறிவியல் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இதன்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், கூடுதலாக இரண்டு இடங்கள் உருவாக்கப்பட்டு, அவை, திருநங்கையருக்கு ஒதுக்கப்படும்.
  • திருநங்கையர், சமூகத்தில் புறக்கணிப்புக்கு ஆளாவதால், அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில், சமூக நீதித்துறையின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் டிஜிட்டல் மையம் அமைக்கிறது நிசான்

  • டிஜிட்டல் செயல்பாடுகளுக்காக உலக அளவில் புதிய டிஜிட்டல் மையத்தை நிசான் நிறுவனம் அமைக்கிறது.ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மையமாக நிஸான் டிஜிட்டல் மையம் அமைந்துள்ளது. 
  • இந்த நிறுவனம் முதல் முதலாக இந்தியாவில் டிஜிட்டல் மையத்தை அமைக்க உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையம் கேரள அரசின் தொழிற்பூங்காவாக திகழும். முதலில் க்னோபார்க்கில் அமையும் இந்த மையம் பின்னர் நகரின் நிரந்தர அமைவிடத்துக்கு மாற்றப்படும். 
  • இதற்காக கேரள அரசுடன் நிசான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
நெல்லுக்கு ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியது

  • நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • நெல் விலை ஏற்கனவே இருந்த விலையில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.1750 ஆக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கா சோளத்துக்கு ஆதாரவிலை ரூ. 1425 ல் இருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.250 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பருப்பு வகைகளில் துவரம் பருப்புக்கான ஆதார விலையில் குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. பாசிப்பயிறு உள்ளிட்ட மற்ற பயிர் வகைகளுக்கும் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ. 15 கோடி செலவு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.




உயர்கல்வி நிதி நிறுவனத்திற்கு ஒப்புதல்

  • மத்திய அமைச்சரவை கூட்டம் பிதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்விக்கு புதிய அமைப்பு மூலம் ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • உயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐஐடி, மத்திய பல்கலை.,கள், மருத்துவ கல்லூரிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
  • டெல்லியில் மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இதனிடையே, டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்றம் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்படி, துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 
  • நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் பெற வேண்டும் என்று அவசியமல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் சீன வங்கிக்கு அனுமதி

  • இந்தியாவில் சீன வங்கி நடத்துவதற்கு, ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி, சீன தலைவருடன் போடப்பட்டஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment