Tuesday, 3 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 3rd JULY 2018
நேபாள இஞ்சி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
 • நேபாளத்திலிருந்து புதிதாக இறக்குமதி செய்யப்படும் இஞ்சிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 • இந்தோ-நேபாள் வர்த்தக ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நேபாளத்திலிருந்து புதிதாக இஞ்சியை இறக்குமதி செய்து கொள்ளலாம். அதேசமயம், இதர நாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்து கொள்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • கடந்த 2017-18 நிதி ஆண்டில் இந்தியா 61.10 லட்சம் டாலர் மதிப்பிலான இஞ்சியை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. உலக அளவில் இஞ்சி உற்பத்தியில் இந்தியா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. உள்நாட்டில் இஞ்சி உற்பத்தியில் கேரளா, ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகியவை முக்கிய மாநிலங்களாக திகழ்கின்றன. 
பல்லாவரம் அருகே 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவப்பெட்டி கண்டெடுப்பு
 • இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்லாவரம் அருகே 2,300 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டியை கண்டுப்பிடித்து உள்ளனர். தொல்லியல் நிபுணர்கள் அலெக்சாண்டர் காலத்தில் இருந்து 140 ஆண்டுகள் கடந்த பழமையான டெர்ரகோட்டா சவப்பெட்டியை மலைப்பகுதியில் இருந்து தோண்டி எடுத்தனர்.
 • ஜமீன் பல்லாவரத்தில் உள்ள பரிவேட்டுமலை அடிவாரத்தில் இரண்டு அடிகள் ஆழத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சி பழங்காலத்திய சவப்பெட்டி கிடைக்க வழிவகை செய்தது. 
 • இரும்பு கலவையினால் சவப்பெட்டி மூடப்பட்டிருந்தாலும் மண் அரிப்பு காரணமாக மலைக்கு கீழே இறங்கியுள்ளதாக தொல்லியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 12 கால்கள் கொண்ட சவப்பெட்டி 5.6 அடி நீளமும், 1.5 அடி அகலமும், 1.64 அடி ஆழமும் கொண்டுள்ளது.
டிஜிபி பணி நியமனங்கள் உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
 • டிஜிபி பணி நியமனங்கள் குறித்து உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள் ளது. இதன் காரணமாக பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது இனி தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • அதன்படி, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்திற்கான பணியை தற்போது பணியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதம் முன்னரே ஆரம்பிக்கவேண்டும். அதற்கான பட்டியலை யூபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 • அதிலிருந்து யூபிஎஸ்சி 3 பேர் பட்டியலை அனுப்பும்.
 • அந்த 3 பேர் பட்டியலில் இருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.,
 • பொறுப்பு டிஜிபி என்பது இனி கிடையாது.( உதாரணமாக உளவுத்துறை டிஜிபியாக வேண்டியப்பட்ட நபரை நியமித்து கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கை கவனிக்க சொல்வது)இந்தியாவின் பிரதான 8 தொழில் துறையின் வளர்ச்சி 3.6 சதவீதமாக குறைவு
 • இந்தியாவில் உள்ள 8 முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் 3.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி 4.6 சதவீதமாக இருந்தது. நாட்டின் மொத்த தொழிற்சாலை உற்பத்தி அட்டவணையில் இந்த 8 நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதமாகும்.
 • குருட் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய 2 துறைகளின் வளர்ச்சி மட்டுமே 2.9 சதவீதம் குறை ந்துள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு பொறுப்பேற்ப்பு
 • பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக அர்ஜித் பாசு நேற்று நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனராக பதவி வகித்து வந்தார். தற்போது அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.
 • மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவரானா அர்ஜித் பாசு, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னரே வங்கித்துறையில் கால் பதித்தார். இவர் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் பட்டதாரி பட்டமும் பெற்றுள்ளார். 
 • மேலும் இவர் எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் துறையில் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆகஸ்ட் 2014 முதல் மார்ச் 2018 வரை பணியாற்றி உள்ளார். இவர் பணியாற்றிய அக்டோபர் 2017 காலத்தில் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி வட்ட முதன்மை பொது மேலாளராகவும், ஜப்பானின் டோக்கியோவில் பிராந்திய தலைமை மற்றும் நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

2 comments:

 1. சவப்பெட்டிக்குள் யார் இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.

  ReplyDelete