Thursday, 5 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 5th JULY 2018




மோடி கேர்  ஆக.,15ல் அறிமுகம்
  • மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே 50 கோடி இந்தியர்களுக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 50 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மோடி கேர் திட்டம் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வரும் மத்திய அரசு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, திட்டத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக, தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 
  • மோடி கேர் திட்டத்துக்கு, மாநிலங்களும் பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதால், ஒரு சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை குறிவைத்துள்ள பாஜ, தேர்தலுக்கு முன்பே 50 கோடி இந்தியர்களுக்கும் மோடி கேர் திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விண்கலத்திலிருந்து பயணக் குழு தப்பிக்கும் ஒத்திகை இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை
  • மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்துக்கு முக்கியத் தேவையான விண்வெளி பயணக்குழு தப்பிக்கும் முறைக்கான முதல் ஒத்திகை ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
  • விண்கலத்தை ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தும்போது கோளாறு ஏற்பட்டால், அதிலுள்ள விண்வெளி வீரர்களை பாதுகாப்பான தொலைவுக்கு வெகு விரைவாக மீட்டுக் கொண்டு வரும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்தச் சோதனைக்கான 5 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு, செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி வீரர்கள் குழுவினருடன் 12.6 டன் எடை கொண்ட கலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து காலை 7 மணிக்குச் செலுத்தப்பட்டது. 
  • பூமியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியதும், வங்காள விரிகுடாவை நோக்கி வளைக்கப்பட்டது. பின்னர் பாரசூட் மூலம் பாதுகாப்பாக ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து 2.9 கிலோ மீட்டர் தொலைவில் இறக்கப்பட்டது. 
  • பின்னர் 3 படகுகளில் மீட்புக் குழுவினர் சென்று அந்தக் கலத்தை மீட்டனர். இந்த ஒத்திகை 4 நிமிஷங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வை 300 தொலையுணர்வுக் கருவிகள் பதிவு செய்தன.
பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை
  • பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பந்தயம், சூதாட்டத்துக்கு தடை உள்ளதால் கறுப்புப்பணம் அதிகரித்துள்ளது என்றும் பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவு
  • டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவு பெற்றது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் இம்மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் செந்தில் குமார் பங்கேற்றார். 



சீனாவின் கோரிக்கையை ஏற்றது இந்தியா
  • தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாக கருதக்கூடாது எனக்கூறி வருகிறது. மேலும், சைனீஸ் தைபே என குறிப்பிடும்படி, அனைத்து நாட்டு விமான நிறுவனங்களையும், சீனா கடிதம் மூலம் கேட்டு கொண்டது. ஷாங்காய் நகரில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் இந்த கடிதம் வந்தது.
  • இந்நிலையில், ஏர் இந்தியாவும் தனது இணையதளத்தில், தைவான் பெயரை சைனீஸ்தைபே என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.சீனாவின் ஷாங்காய் நகருக்கு, ஏர் இந்தியா ஒரு விமானத்தை இயக்கி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு போதைமருந்து பரிசோதனை செய்ய பஞ்சாப் முதல்வர் உத்தரவு
  • பஞ்சாப்பில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போதை மருந்து பரிசோதனை செய்ய முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். போதை பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருப்பகுதியாக அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • அரசு பணிகளுக்கு புதிதாக ஊழியர்கள் சேர்க்கப்படும் போதும், பதவு உயர்வு அளிக்கும் போதும், ஆண்டு தோறும் நடைபெறும் மருத்துவ பரிசோதனையின் போதும் போதை மருந்து பரிசோதனையை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கைகள் காவல்துறையினருக்கும் பொருந்தும் என்று அம்ரீந்தர் சிங் தெரிவித்தார். மேலும் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு கட்டாயமாக பரிசோதனை செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment