Tuesday, 10 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 10th JULY 2018




வர்த்தகம் நடத்த உகந்த மாநிலம் : ஆந்திராவுக்கு முதல் இடம்
  • இந்தியாவில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்கள் வரிசையில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
  • "இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த மிகவும் உகந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. அதைத் தொடர்ந்து தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. அம்மாநிலங்களுக்கு அடுத்த படியாக ஜார்கண்ட் (4), குஜராத் (5), சத்தீஸ்கர் (6), மத்தியப்பிரதேசம் (7), கர்நாடகா (8), ராஜஸ்தான் (9) மற்றும் மேற்கு வங்கம் (10) ஆகிய இடங்களில் உள்ளன.
  • மேலே உள்ள 10 மாநிலங்களும் 95% க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக 90% முதல் 95% வரை ஐந்து மாநிலங்கள் உள்ளன. அவைகளில் தமிழ்நாடு 90.68% மதிப்பெண் பெற்று 15ஆம் இடத்தில் உள்ளது.
  • இந்த வரிசையில் வெறும் 0% மதிப்பெண் பெற்று கடைசி இடங்களில் அருணாசலப் பிரதேசம், லட்சத்தீவு,மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தலைநகர் டில்லி\ 31.6% மதிப்பெண் பெற்று 23ஆம் இடத்தில் உள்ளது.
திருவண்ணாமலை அருகே 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் 2-ஆம் நந்திவர்மன் ஆட்சிக் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
  • 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட கல்லில் 2 வீரர்களின் உருவம், புடைப்புச் சிற்பமாக 5 வரி கல்வெட்டுடன் நடுகல் காணப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் 2-ஆம் நந்திவர்மன் (கி.பி. 730 - 795) ஆட்சிக் காலத்திய நடுகல் என்பது தெரியவந்தது. 
  • போரிலும், ஆநிரை (பசுக்கள், மங்கைகள்) மீட்கும் முயற்சியிலும் உயிரிழக்கும் வீரர்களின் நினைவாக இதுபோன்ற நடுகல் நடப்படுவது அந்தக் கால மக்களின் வழக்கம். இந்த நடுகல் மூலம் அந்தப் பகுதி பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது. நடுகல் பலகையில் உள்ள வரிகளில் மணியன்னாரம் மகன் இடரன் என்ற பெயர் செதுக்கப்பட்டுள்ளது. எனவே, நடுகல் கல்வெட்டில் இருப்பவர்கள் தந்தை, மகனாக இருக்கலாம். 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் மலையனூர் என்று அழைக்கப்பட்டுள்ளது.
  • நடுகல்லின் வலது பக்கத்தில் தந்தையைப் போல் உள்ள முதியவரின் உருவமும், இடது பக்கத்தில் மகன் போன்ற தோற்றத்தில் உள்ள வீரரின் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் உள்ள வரிகளின் கடைசி வரி முற்றிலும் சிதைந்துள்ளது.



புதுமைப் பள்ளி-கனவு ஆசிரியர் விருதுகள்
  • தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதையும் திறமையாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதையும் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
  • சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்றுவித்த 140 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கனவு ஆசிரியர் விருதுகள் அளிப்பதன் அடையாளமாக 5 பேருக்கு கனவு ஆசிரியர்கள் விருதுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
ரஷ்யாவில் இந்தியா, பாகிஸ்தான், சீன ராணுவ வீரர்கள் ஆகஸ்டில் கூட்டு பயிற்சி
  • இந்தியா, பாகிஸ்தான், சீனா ராணுவத்தினர் இணைந்து அடுத்த மாதம் ரஷ்யாவில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
  • ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை அமைதி மிஷன் 2018 என்ற இந்த நிகழ்வு ரஷ்யாவின் தெற்கு உரால்ஸ் பகுதியில் உள்ள செபார்குல்ஸ்கை ஏரிக்கரையில் நடக்கிறது. இதற்காக இந்தியாவின் ராஜ்புட் 5வது பட்டாலியனில் இருந்து 200 வீரர்கள், சில இந்திய விமானப் படை வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 விமானங்கள் மூலம் ரஷ்யா செல்கின்றனர்.
  • மேலும், ரஷ்யா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கசகஸ்தான் வீரர்களும் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் துருப்புகள் கலந்தகொள்கின்றனர். இதேபோன்ற பயிற்சி 2014ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென் கொரியா இடையே 11 ஒப்பந்தங்கள்
  • தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, பயோ டெக்னாலஜி, பயோ - எகானாமிக்ஸ், தொலை தொடர்பு உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



வோடபோன் - ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல்
  • வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் நிறுவனமும் இணைய முடிவு செய்தனர்.
  • இதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் வோடபோன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ.3,926 கோடியை செலுத்த தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. ஐடியா செல்லுலர் நிறுவனம் ரூ.3,042 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • இந்த நிபந்தனைகளுடன் இரு நிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய தொலைப்பேசி நிறுவனமான வோடபோன் - ஐடியா நிறுவனம் உருவாக உள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் மிகப்பெரிய செல்போன் நெட்வொர்க் சேவை நிறுவனமாக செயல்படவுள்ளன.
தலைசிறந்த 6 Institute of Eminence (or) சிறந்த நிறுவனங்கள்
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு இயங்கி வருகின்றது. சமீபத்தில், இந்த மானியக்குழு தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) தேர்வு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
  • இந்த பட்டியலில் உள்ள 6 நிறுவனங்களில் ஐஐடி மும்பை, ஐஐடி டில்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ள மூன்றில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment