Tuesday, 3 July 2018

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JULY 2018 TAMIL PDF - 2nd JULY 2018
ஆல்பா பள்ளிக்கு தேசிய விருது
 • முத்தியால்பேட்டை ஆல்பா ஆங்கில பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.மும்பையில் தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பின் விழா நடந்தது. 
 • இதில் புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆல்பா மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த கல்வியை வழங்கியதற்கான தேசிய கல்வி சிறப்பு விருதும், சிறந்த பள்ளிக்கான குவாலிட்டி பிராண்ட்ஸ் என்ற விருதும் வழங்கப்பட்டது. 
டில்லி அரசுப் பள்ளிகளில் 'மகிழ்ச்சி பாடத்திட்டம்' அறிமுகம்
 • டில்லியில் அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக 'மகிழ்ச்சி பாடத்திட்டம்'' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வரும். கல்வி துறை பொறுப்பு அமைச்சருமான மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 • இந்த புதிய பாடத்திட்டம் நர்சரி வகுப்புகள் முதல் 8ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தியானம், மதிப்பு கல்வி, மன நல பயிற்சி, 6 மாத தன்னார்வலர் பயிற்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. 40 டில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர். 
புதிய DDCA தலைவராகிறார் பத்திரிகையாளர் ராஜத் சர்மா
 • டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!! டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் முடிந்தது
 • பெரும் எதிர்பார்ப்புகளிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம், ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டில்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உறுப்பினர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
 • டில்லியில் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் வரவு - செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆணையத்திற்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, ஊழியர் நியமனம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.ஆதாருடன் பான் கார்டை மார்ச் 31,2019 வரை இணைக்கலாம்
 • ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 • மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட பயன்களும், நாட்டின் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், கடந்த 2009ம் ஆண்டில் ஆதார் எண் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக்கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தியது.
2018ம் ஆண்டுக்கான ஐசிசி “ஹால் ஆஃப் ஃபேம்” பட்டியலில் ராகுல் டிராவிட்
 • கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் ஐசிசி “ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்த்து கவுரவிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சில வீரர்களை அந்த பட்டியலில் இணைத்து ஐசிசி கவுரப்படுத்துகிறது.
 • அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று இன்றளவும் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிளெர் டெய்லர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
 • ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணையும் 5வது இந்திய வீரர் ராகுல் டிராவிட் ஆவார். டிராவிட்டுக்கு முன்னதாக பிஷன் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகிய நான்கு இந்திய வீரர்கள் இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.மெக்சிகோ : புதிய அதிபராக லோபஸ் ஆப்ரதோர் தேர்வு
 • மெக்சிகோ அதிபர், மற்றும் பிராந்திய பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.. இதில் அதிபர் பெனா நொய்டோவின் தலைமையிலான ஐஆர்பி மற்றும் இடது சாரி இயக்கமான தேசிய ரிஜெனரேஷன் ஆகியவை போட்டியிட்டன. 
 • தேசிய ரிஜெனரேஷன் சார்பில் போட்டியிட்ட லோபஸ் ஆப்ரதோர் மெக்சிகோ அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இடது சாரி ஆதரவாளர் ஆவார்.
சர்வதேச அளவில் மும்பை விமான நிலையத்திற்கு 513வது இடம்
 • சர்வதேச அளவில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள் குறிப்பிட்ட நேரத்தை கடைப்பிடிப்பதில் மோசமான நிலையில் உள்ளது. 
 • சர்வதேச அளவில் உள்ள 513 விமான நிலையங்களை ஒப்பிட்டு பார்த்ததில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் 509வது இடத்தையும், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 451வது இடத்தையும் பெற்றது வருத்தப்படக்கூடிய ஒன்றாகும். 
 • இதனை தொடர்ந்து ஹைத்ரபாத் 246வது இடத்தையும், பெங்களூரு 262வது இடத்தையும், கொல்கத்தா விமான நிலையம் 270 இடத்தையும் பெற்றுள்ளது.
 • உலகில் உள்ள மிகப்பரிய 65 விமான நிலையங்களில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்துவதில் ஏர் இந்தியா மிக மோசமான விமான நிலையமாக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment