Tuesday, 31 July 2018

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு / RESULT OF COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 - GROUP - IV & VAO 2018

TNPSCSHOUTERS
 • பதினேழரை லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சிகுரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை www.tnpsc.gov.in என்ற தனது இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
 • தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது. 
 • இதையடுத்து கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர்.. இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.
 • தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 • இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது.
COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4    (GROUP -IV)
(Date of Written Examination:    11.02.2018 FN)

MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION

Server-1          |||     Server-2

உங்களது ஹால் டிக்கெட் தொலைந்து விட்டாலும் தேர்வு முடிவைப் பார்க்கலாம், எப்படி? 
 • TNPSC தேர்வு எழுதும் சில பேர், தேர்வு முடிவு வரும் பொழுது தங்கள் தேர்வு அனுமதி சீட்டினைத் (Hall Ticket) தொலைத்து விட்டு பதிவு எண் (Reg. No) தெரியாமல், மதிப்பெண் மற்றும் நிலைப் பட்டியலை (Mark and Rank) பார்க்க முடியாமல் அவதிப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. 
 • பதிவு எண் இல்லை என்றால், கண்டிப்பாக தேர்வு முடிவினை பார்க்க இயலாது. 
 • இதனைத் தடுக்க கீழ்க்கண்ட மூன்று வழிகள் உள்ளன. 
 1. எப்பொழுதும் உங்கள் விண்ணப்பம் மற்றும் ஹால் டிக்கெட்டை உங்கள் மின் அஞ்சல் (Mail), அலை பேசியில் (Mobile) அல்லது கணினியில் (Computer) சேமித்து வையுங்கள். பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கும் ஹால் டிக்கெட் காலப் போக்கில் தொலைந்து விட வாய்ப்பு உண்டு. 
 2. உங்களது பதிவு எண்ணை அலைபேசி யில் குறுந்செய்தி (SMS) மூலமாக சேமித்து வைக்கலாம் அல்லது போன் நம்பரைப் போன்று பதிவு செய்து வைக்கலாம். இருப்பினும் மின்-அஞ்சலில் வைப்பதே சிறப்பு, ஏன் என்றால் அலைபேசி தொலைந்து விட வாய்ப்புண்டு.
 3. உங்களது வினாத் தாளை பத்திரமாக வைக்கவும். அதில் உங்களது பதிவு எண்ணை தேர்வு சமயத்தில் நீங்கள் எழுதி இருப்பீர்கள், அதிலிருந்து மீட்டுக் கொள்ளலாம். 
 • இம் மூன்றிற்கும் வழி இல்லாத பட்சத்தில், உங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்னைக் கண்டறிய தற்போது TNPSC உதவுகிறது. எப்படி என்றால், உங்கள் நிரந்தர பதிவு கணக்கில் (One Time Registration Account) உள்ளீடு (Login) செய்து பார்த்தால் , அதில் "VIEW APPLICATION HISTORY" என்று இருக்கும். 
 • அதனுள் சென்று பார்த்தால், நீங்கள் எழுதிய ஒவ்வொரு தேர்விற்கு உரிய தகவல்கள், அதாவது, 
 • i) தேர்வின் பெயர், 
 • ii) தேர்விற்கு விண்ணப்பித்த தேதி, 
 • iii) விண்ணப்ப எண், 
 • iv) தேர்வு பதிவு எண் 
 • v) விண்ணப்பித்த நாள்
TNPSC Group 4 & VAO 2018 Exam Level Cutoff Analysis
 • TAMIL – Normal Paper, Without careless mistakes one Can score 95+.
 • GENERAL ENGLISH – Similar to Tamil Paper, One Can score 95+.
 • GMA(MATHS) – Tougher can score 18+.
 • CURRENT AFFAIRS – From 2017 . (very factual)
 • GENERAL STUDIES – Good Paper as many Qns were Tricky and outside School Text Books-Good Trend.
TNPSC Group - 4 & VAO  2018 Expected Cut off Marks (Based on No.of correct questions)
MaleFemale
General172+167+
BC168+163+
MBC164+159+
BC(M)157+152+
SC156+153+
SC(A)152+148+
ST150+145+
Note: For PSTM deduct around 2-3 Qns in the respective Category.
For PH deduct around 4-9 Qns in the respective category.TNPSC Group 4 & VAO – Notification, Online Application, Call Letter, Result & Other Complete Details: 
 • Tamil Nadu Public Service Commission (TNPSC) conducts Combined Civil Services Examination- IV (Group 4 & VAO Services). This examination is conducted for the recruitment of Non Interview posts in various Tamil Nadu State Government departments. 
 • SSLC in relevant field is the minimum qualification to apply for these posts. Here provided the complete information regarding the TNPSC Group 4 Exam Notification, eligibility, selection procedure, exam pattern and syllabus, Previous papers, Reference Books for the candidates who are preparing for Group 4 Examination and complete overview.
TNPSC GROUP 4 & VAO EXAM ANALYSIS
S.No
Topic
2018
2016
2014
1
History
11
16
16
2
Economics
9
9
6
3
Polity
9
8
3
4
Geography
3
6
8
5
Physics
4
4
4
6
Chemistry
6
3
3
7
Botany
2
2
3
8
Zoology
4
6
6
9
General Knowledge
3
3
6
10
Aptitude
25
25
25
11
Current Affairs
24
18
10
12
Tamil/English
100
100
100
TOTAL NO OF QUESTIONS  = 200
TOTAL NO OF MARKS = 300
Wednesday, 25 July 2018

ஆசிரியர் நியமனம் 2 தேர்வுகள் / TRB CONDUCT 2 SEPARATE EXAM FOR TEACHER REQUIREMENT IN TAMILNADU

TNPSCSHOUTERS
ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்கான போட்டி தேர்வுகளை தனியாகவும் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டித் தேர்வினை தனியாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி, பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

Friday, 20 July 2018

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

TNPSCSHOUTERS
 • 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு பிப்.3 முதல் 17-ம் தேதி வரை 8 பிரிவுகளாக நடைபெறுகிறது. மார்ச் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யூஜீசி அறிவித்துள்ளது. 


Tuesday, 17 July 2018

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் (TAMILNADU LOKAYUTHA ACT) - TAMIL PDF

TNPSCSHOUTERSலோக் ஆயுக்தா என்றால் என்ன? 
 • பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.
எத்தனை உறுப்பினர்கள்?
 • ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 
உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
 • முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?
 • பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி (அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி (அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்
வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?
 • எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாதுநாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாதுஅரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாதுவேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது.
 • 45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது
உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
 • 5 ஆண்டுகள்.
லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?
 • லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்
லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?
 • இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்மாநில அரசு ஊழியர்கள்அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்
 • இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.
வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?
 • எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லைவிசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்
எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?
 • இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வுவழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? 
 • சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?
 • புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். 
 • அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 
விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?
 • அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?
 • விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். 
 • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 
நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?
 • அரசு ஊழியருக்கு
 • தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினருக்கு\
 • சபாநாயகர்,
 • அமைச்சர்களுக்கு.
 • முதலமைச்சர்,
 • முதலமைச்சருக்கு ஆளுநர்.
புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?
 • தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.
 • நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது
லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?
 • அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அது என்ன விதிகள்?
 • 45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

Saturday, 14 July 2018

குரூப் 2ஏ தேர்வு சான்றிதழ் குறைபாடுடையோர் நேரில் வர டிஎன்பிஎஸ்சி அழைப்பு / CERTIFICATE VERIFICATION FOR DOUBTFUL CANDIDATES OF GROUP 2A EXAM 2017 - 2018

TNPSCSHOUTERS
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES
EXAMINATIONS‐II (NON‐INTERVIEW POSTS)
(GROUP‐IIA SERVICES) (2017‐2018)
(DATE OF WRITTEN EXAMINATION: 06.08.2017)

ORIGINAL CERTIFICATE VERIFICATION SCHEDULE FOR PROVISIONALLY ADMITTED CANDIDATES

 • குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது. 
 • குரூப் 2ஏ தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோரில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மொத்தம் 6,836 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.
 • 6,171 விண்ணப்பதாரர்கள் மட்டும் அவர்களின் மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தனர். பதிவேற்றம் செய்யப்பட்ட 6,171 விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் 2 ,229 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்கள் வரும் 16 முதல் 23-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாணைய அலுவலகத்தில் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
1. Candidates those who are summoned for Original Certificate Verification have to download the Memorandum of Admission to Certificate Verification from the Commission’s website viz. www.tnpsc.gov.in and must bring all original documents along with Documents/Evidence/Fresh Documents called for and listed at the end of Memorandum of Admission to Certificate Verification.2. This original certificate verification only for doubtful cases so as to confirm their claims made in the online applications. Hence candidates those Register numbers not appeared in this list need not communicate to this Office. After finalization, a separate list for Counselling will be published subject to verification of all Original Documents in the Commission’s website.

Monday, 2 July 2018

DOWNLOAD TNPSCSHOUTERS CURRENT AFFAIRS JUNE 2018 TAMIL PDF

TNPSCSHOUTERS
 

TNPSC SHOUTERS  - JUNE 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st JUNE 2018
2.
2nd JUNE 2018
3.
3rd JUNE 2018
4.
4th JUNE 2018
5.
5th JUNE 2018
6.
6th JUNE 2018
7.
7th JUNE 2018
8.
8th JUNE 2018
9.
9th JUNE 2018
10.
10th JUNE 2018
11.
11th JUNE 2018
12.
12th JUNE 2018
13.
13th JUNE 2018
14.
14th JUNE 2018
15.
15th JUNE 2018
16.
16th JUNE 2018
17.
17th JUNE 2018
18.
18th JUNE 2018
19.
19th JUNE 2018
20.
20th JUNE 2018
21.
21st JUNE 2018
22.
22nd JUNE 2018
23.
23rd JUNE 2018
24.
24th JUNE 2018
25.
25th JUNE 2018
26.
26th JUNE 2018
27.
27th JUNE 2018
28.
28th JUNE 2018
29.
29th JUNE 2018
30.
30th JUNE 2018
இந்தியா-சிங்கப்பூர் நடுவே விமான போக்குவரத்து ஒப்பந்தம்
 • சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்குடன் 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதில் கடல்சார் ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.
 • சிங்கப்பூர் எப்போதுமே இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் முக்கியத்துவம் வகிக்கும் நாடு. சிங்கப்பூரில் தொழில் தொடங்கவே இந்தியர்கள் பலரும் விரும்புகிறார்கள். பல்வேறு நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் இந்தியாவை விரும்புவது தெரிகிறது. விரைவில் புதிதாக விமான சேவை போக்குவரத்து ஒப்பந்தம் உருவாக்கப்படும். 
சிங்கபூரில் மோடி அறிமுகம் செய்த இந்தியாவின் 3 மொபைல் செயலிகள்
 • இந்திய பிரதமர் மோடி அவர்கள் நேற்று நடந்த சிங்கபூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் தொழில்நுட்ப கண்காட்சியை நேற்று பார்வையிட்டார், அப்போது இந்தியாவின் மூன்று பரிவர்ததனை செயலிகளான BHIM, RuPay, SBI போன்றவற்றை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு மீன்வளப் பல்கலை., டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை என பெயர் மாற்றம்
 • தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அரசாணை மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மேலும் நாகை வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகமும், தரங்கம்பாடி கிராமத்தில் ரூ.120 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற பிரதமர் பதவி நீக்கம்
 • ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
 • பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக செயல்பட்டு வந்தார்.
 • நவீன ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ரஜோய் ஆவார்.
நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,016 கோடியாக குறைந்தது
 • கடந்த மே மாதம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலான வசூல், 94,016 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.இது, ஏப்ரலில், 1,03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
 • மே மாதம், 62.47 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்துள்ளன. மொத்தம், 94,016 கோடி ரூபாய்வசூலானது.இதில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15,866 கோடி; மாநில அரசுகளின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 21,691 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த வரி மூலம், 49,120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இத்துடன், இழப்பீட்டு வரியாக, 7,339 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, மே மாதம், ஜி.எஸ்.டி., வசூல் குறைவாக உள்ளது. 
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு
 • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
 • காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
 • இந்தியா - சிங்கப்பூர் இடையே, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படை தளவாடங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இரு தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது உட்பட, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 • இரு நாடுகளுக்கும் இடையே, ராணுவம் மற்றும் கடற்படை தளவாடங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளோம். இணையம் வழியே தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
தருமபுரியில் ஆலம்பாடி மாட்டு இன ஆராய்ச்சி மையம்
 • தருமபுரியில் ஆலம்பாடி மாட்டு இன ஆராய்ச்சி மையம் ரூ.4 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
 • 6 கால்நடை பன்முக மருத்துவமனைகள் மற்றும் 22 பெருமருத்துவமனைகளில் ரூ.2.59 கோடி செலவில் அறுவைச் சிகிச்சைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
மின்னணு வழித்தட ரசீது முறை இன்று முதல் அமல்
 • தமிழகத்துக்குள் சரக்குகளை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 2) முதல் மின்னணு வழித்தட ரசீது (இ-வே பில்) முறை அமலுக்கு வருகிறது.
 • மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கு இ-வே பில் முறை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மாநிலத்துக்குள்ளான சரக்குப் போக்குவரத்துக்கு இதை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று தொழில் நிறுவனங்கள் கோரியிருந்தன.
 • இதையடுத்து, ஜம்மு காஷ்மீர், கோவா, சத்தீஸ்கர், மிúஸுரம், பஞ்சாப், ஒடிஸு மாநிலங்களில் இ-வே பில் அமல்படுத்தப்படுவது ஜூன் 1ஆம் தேதிக்கும், தமிழ்நாட்டுக்கு ஜூன் 2ஆம் தேதிக்கும், மேற்கு வங்கத்துக்கு ஜூன் 3ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 • ஒருவரிடம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான மதிப்புடைய பொருள்களின் பல பில்கள் இருந்தாலும் அவர் இ-வே பில் போட வேண்டும்.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 புதிய நீதிபதிகள்
 • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.
 • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நீதிபதி பதவியிடங்கள் 75. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். புதிதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்துள்ளது.
 • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகிய 7 நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
இம்பாலில் நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலை
 • இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலையை இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.தேசிய விளையாட்டு பல்கலையை மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமைக்கும் மசோதாவுக்கு மே 23 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 
 • இம்பால் மாவட்ட கவ்டுருக் பகுதியில் 325.90 ஏக்கர் நிலம் மணிப்பூர் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி அடைய செய்வதே இந்த பல்கலையின் பணியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தென்ஆப்ரிக்கா புறப்பட்டார் சுஷ்மா ஸ்வராஜ்
 • வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் BRICS மற்றும் IBSA அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தென்ஆப்ரிக்காவிற்கு புறப்பட்டார். 
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் சென்னை, கேரள அணிகள் சாம்பியன் வென்று அசத்தல்
 • அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை சுங்கத் துறையும், மகளிர் பிரிவில் கேரள மின் வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
 • கோவையில் நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53-வது ஆடவர் கூடைப்பந்துப் போட்டி, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-வது மகளிர் கூடைப்பந்துப் போட்டிகள் கோவை மாவட்டம், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.
 • இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சென்னை சுங்கத் துறை அணி 69-63 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி இரயில்வே அணியைத் தோற்கடித்தது.
 • மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கேரள மின் வாரிய அணி 59 - 43 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா கிழக்கு இரயில்வே அணியை வீழ்த்தியது.