Tuesday, 8 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 8th MAY 2018




2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11ஆம் தேதி நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி
  • இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாள பிரதமராக பதவியேற்ற கே.பி. ஷர்மா ஒலி இந்தியா வந்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
  • இதையடுத்து பிரதமர் மோடி வரும்11-ம் தேதி நேபாளம் செல்கிறார் . அங்கு 900 மெகாவாட் ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்திட்டம், பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.



இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு
  • இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
  • அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க ஆயத்தம் மேற்கோள்வதாக இரான் கூறியுள்ளது.
  • இரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 90 மற்றும் 180 நாள் காலக்கெடு நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கத்துவா சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநில கோர்ட்டிற்கு மாற்றம்
  • காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
  • இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று காஷ்மீர் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
  • காஷ்மீரிலேயே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாகவும் உறுதி அளித்தது. இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் கோர்ட்டிற்கு மாற்றி உத்தரவிட்டது.
  • சுப்ரீம் கோர்ட் வழக்கை மாற்றிய சிறிது நேரத்திலேயே அது பற்றி தெரிவித்த பதன்கோட் கோர்ட், கத்துவா வழக்கு விசாரணை நாள்தோறும் நடத்தப்படும். வழக்கின் விசாரணை வீடியோப் பதிவு செய்யப்படும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 9 ம் தேதி நடக்கும் என வழக்கை ஒத்திவைத்தது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment