Thursday, 10 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 10th MAY 2018




டொனால்டு டிரம்ப் - கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல் சிங்கப்பூரில் நடக்கும்
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • தென்கொரியா-வுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் அடிப்படையான சிக்கலாக இருந்த நிலையில், வட கொரியா - தென் கொரியா உறவில் பதற்றம் தனியத் தொடங்கியது. பகைமை பாராட்டிவந்த இரண்டு சகோதர நாடுகளும் கூட்டாக ஒரே கொடியின் கீழ் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றன. 
  • கிம் ஜோங்-உன்னின் சகோதரி தென்கொரியா சென்று வந்தார். அமெரிக்கா சென்ற தென் கொரிய அதிகாரிகள் முதலில் கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்தனர். பிறகு இதை உறுதி செய்து டிரம்ப் டிவீட் செய்தார்.
  • சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருக்கிறது. அதே நேரம் சிங்கப்பூர்-வட கொரியா இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் உள்ளன. ஆனால், வடகொரியா அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து சர்வதேசத் தடைகள் கடுமையானபின், வடகொரியாவுடனான எல்லா வர்த்தக உறவுகளையும் சிங்கப்பூர் துண்டித்துக்கொண்டது.



சியாச்சின் முகாமிற்கு செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் முகாமிற்கு செல்கிறார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் இன்று முதன் முறையாக பனி சூழ்ந்த போர் பகுதியான சியாச்சின் செல்கிறார். 
  • இதற்கு முன்பு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது 2004ம் ஆண்டு சியாச்சின் சென்றார். இதனையடுத்து சியாச்சின் செல்லும் 2வது குடியரசுத் தலைவர் இவர் தான். சியாச்சின் செல்லும் ராம்நாத் கோவிந்த் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ள ஜவான்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment