Monday, 7 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 7th MAY 2018




ரஷ்ய அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புடின் பதவியேற்பு
  • கடந்த, 1999ல், ரஷ்ய அதிபராக பதவியேற்ற புடின், தன் பதவிக் காலத்தில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை மற்றும் சர்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியால் சரிந்த, ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கடுமையாக முயன்று வந்தார்.
  • இந்நிலையில், மார்ச்சில், ரஷ்ய அதிபர் தேர்தல் நடந்தது. இதில், புடின் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஏழு பேர் போட்டியிட்டனர். புடினுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும், 77 சதவீத ஓட்டுகள் பெற்று, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்; இதன்மூலம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, அவர் அதிபராக பதவி வகிப்பார். 
பெண்கள் மீதான வன்கொடுமைகளை கூடுதல் உதவி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க 9 மாநிலங்களில் கூடுதல் உதவி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகம், ஹரியானா, ஹிமாச்சல், மகாராஷ்டிரா, மிசோராம், நாகலாந்து, ஒடிசாவில் கூடுதல் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.



ரஷ்ய பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்
  • ரஷ்ய அதிபராக விளாமிர் புடின் இன்று பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு புதியவரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் டிமிட்ரி மெட்வடேவ்-ஐ மீண்டும் பிரதமராக புடின் நியமித்துள்ளார்.
இறக்குமதியாகும் மணல் விற்பனையில் தனிநபருக்குத் தடை: அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு
  • வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை தனி நபர்கள் விற்பனை செய்ய தடை விதித்து தமிழக பொதுப்பணித் துறை அரசாணைப் பிறப்பித்துள்ளது.
  • அந்த புதிய அரசாரணையில், இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனிநபர்கள் விற்பனை செய்ய முடியாது. தமிழக அரசின் பொதுப் பணித் துறை மட்டுமே மணல் விற்பனைக்கான உரிமம் பெற்ற அமைப்பாகும்.
  • விதிகளை மீறி இறக்குமதி மணலை விற்றால் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
  • இறக்குமதி செய்யப்படும் மணல் இருப்பு, கொண்டு செல்லுதல், விற்பனை என அனைத்தையும் பொதுப்பணித் துறையே அறிவிக்கும். தமிழக அரசை தவிர வேறு யாரும் இறக்குமதி மணலை விற்பனை செய்ய முடியாது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த எரிவாயு உற்பத்தி 6.3% அதிகரிப்பு : ஓஎன்ஜிசி
  • ராமநாதபுரம் காவிரி படுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான எரிவாயு எடுக்கப்பட்டுள்ளது என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . நாட்டின் மொத்த உற்பத்தி கடந்த ஆண்டை விட 6.3% அதிகரிப்பு என்றும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment