Monday, 14 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 14th MAY 2018




மத்திய அரசின் விளம்பர செலவு 4 ஆண்டுகளில் ரூ.4,300 கோடி
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நான்கு ஆண்டு களில், விளம்பரத்துக்காக, 4,300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
  • கடந்த, 2014, ஜூன் முதல், 2015, மார்ச் வரையிலான காலத்தில், விளம்பரங்களுக்காக, 953 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவு செய்துள்ளது. 2015 - 16 நிதியாண்டில் இத் தொகை, 1,171 கோடி ரூபாயாக அதிகரித்தது; இது, 2016 - 17 நிதியாண்டில், 1,263 கோடி ரூபாயாக உயர்ந்தது.
  • கடந்த, 2017, ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில், மத்திய அரசு, விளம்பரங்களுக்காக, 955 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 
மத்திய அமைச்சரவை மாற்றம் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு
  • மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயலுக்கு, நிதித்துறை, தற்காலிகமாக, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  •  நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து, நிதி இலாகாவை, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்மிருதி இரானி வகித்து வந்த, தகவல் ஒலிபரப்பு துறை, மத்திய விளையாட்டு துறை அமைச்சர், ராஜ்யவர்தன் ரத்தோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறை அமைச்சராக நீடிப்பார்.



ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்கு தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல்
  • டெலிநார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்கான ஒப்பந்தம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆந்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரபிரதேசம் (கிழக்கு), உத்தரபிரதேசம் (மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஏழு வட்டங்களில் டெலிநார் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்தி ஏர்டெல் கையகப்படுத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
  • இந்த கையகப்படுத்தல் திட்டத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஆணையம் (சிசிஐ) ஏற்கெனவே ஒப்புதல் அளித்து விட்டது. 
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு நிவாரண உதவி வழங்க உயர்மட்டக்குழு ஒப்புதல்
  • இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ.1,161.17 கோடி நிவாரண உதவி வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. லட்சத்தீவுகள், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், சிக்கிம், ராஜஸ்தானுக்கு நிவாரண உதவி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம்
  • ஹேனவாரில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் மற்றொரு இந்திய வீராங்கனை நிவேதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment