Sunday, 13 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 11th,12th & 13th MAY 2018
35 செவிலியர்களுக்கு 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருது ஜனாதிபதி வழங்கினார்
 • சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது' வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமான மே 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
 • இந்த வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 35 பேருக்கு விருதுகளை வழங்கினர்.
ஆசிய கேடட் ஜூடோ இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்று அசத்தல்
 • ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன் போட்டி லெபனான் நாட்டில் நடைபெற்றது. இதில், இந்திய வீராங்னைகள் எஸ்.ரோஹிணி தேவி, தபபி தேவி ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், ஹரிஷ் வெண்கலப் பதக்கத்தையும் துவக்க நாளில் வென்றனர்.
 • லெபனானில் தற்போது நடந்து வரும் 12-வது ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன் போட்டிகள் மற்றும் 19-வது ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன் போட்டிகளுக்கு 40 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
 • அதன்படி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோஹிணி 40 கிலோ எடைப்பிரிவிலும், மணிப்பூரின் தபபி தேவி 44 கிலோ எடைப்பிரிவிலும் தங்கம் வென்றனர்.
 • தபபி ஏற்கெனவே கடந்த 2017-ஆம் கிரிகிஸ்தானில் நடந்த ஆசிய கேடட் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, ஆடவர் 50 கிலோ பிரிவில் ஹரியாணாவின் ஹரிஷ் வெண்கலம் வென்றார்.ஜோசப் அவரையே மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்த கொலீஜியம்
 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய கொலீஜியம் குழு நீதிபதிகள் காலியிடங்களுக்கான தேர்வை நடத்தியது.
 • இதில் தேர்வான உத்தரகாண்ட ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வக்கீல் இந்து மல்ஹோத்ரா (61) ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்குமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.
 • ஆனால், ஜோசப் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் நியமனம் குறித்த பரிந்துரையை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கொலீஜியம் கூடியது. எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
 • இந்நிலையில் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலீஜியம் குழு மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதில், ஜோசப் பெயரை மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி பந்தயம் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து அசத்தல்
 • ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5–வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி பந்தயம் பார்சிலோனாவில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
 • 309.952 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம்போல 10 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்டார் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி).
 • இவர் 1 மணி 35 நிமிடம் 29.972 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 25 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 2–வது வெற்றி இதுவாகும்.
அதிகாரபூர்வ மொழியாக தமிழ் தொடரும்'
 • ''சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். தமிழ் மொழியை காப்பதற்கு, அரசு உறுதுணையாக இருக்கும்,'' என, அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர், ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
 • தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதில், அரசு உறுதியாக உள்ளது. இளைஞர்கள் தினந்தோறும், அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி, அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும்.
 • சிங்கப்பூரில், அதிகாரபூர்வ நான்கு மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று. பள்ளிகளில் தாய் மொழியாகவும், தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ் மொழியும் இடம் பெறுகிறது. மேலும், அந்நாட்டு கரன்சியான, டாலரிலும், தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மதுரையில் ரூ.50 கோடியில் தமிழ் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம்
 • தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழர்களின் கலை, பண்பாட்டு வரலாறை விளக்கும் வகையில் ரூ. 50 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
 • அருங்காட்சியக முகப்பில் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஜல்லிக்கட்டு மற்றும் உழவுக் காளைகளின் சிலைகள் இடம் பெற உள்ளன. அதற்கடுத்ததாக ரூ.16 கோடி மதிப்பீட்டில் தமிழன்னை சிலையும் அமைக்கப்படவுள்ளது. 
 • இச்சிலையை ரோம் நகர சலவைக்கல்லில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே மொத்தம் 328 அம்சங்கள் அமையவுள்ளன. 
தேசிய, மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகள் 
 • தேசிய மற்றும் மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை கசியவிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையிலான சட்டமசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.
காச நோய் கட்டுப்பாடு திண்டுக்கல் முதலிடம்
 • காச நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குதல் ஆகிய மதிப்பீட்டில் 2017-ஆம் ஆண்டில் தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 
 • திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.72 கோடி மதிப்பில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ரூ.3 கோடி மதிப்பில் நடமாடும் எக்ஸ் ரே சாதனம் வழங்கப்படவுள்ளது. பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் 2025-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழகத்தில் காசநோயை முற்றிலும் ஒழித்திட முடியும்.
அணு குண்டு சோதனை மையத்தை அழிக்க வடகொரியா முடிவு
 • வட கொரியா தனது அணு சோதனை மையத்தை தடம் தெரியாமல் அழித்துவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். 
 • வடகொரியாவின் வடகிழக்கு மாகாணம் மண்ட்டாப் பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அணு குண்டு சோதனை மையத்தையும், அணு சேமிப்பு ரகசிய சுரங்கங்களையும் வரும் 23ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் தடம் தெரியாமல் அழித்து விட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளது. 
வயதான பெற்றோரை கைவிடுவோருக்கு 6 மாத சிறை
 • வயதான பெற்றோரை பராமரிக்காமல் பிள்ளைகளே கைவிடுவதால், நாடு முழுவதும் முதியோர் இல்லங்களின் பெருகி வருகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 • அதன்படி, வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டங்கள் அமலில் உள்ளன. அந்த சட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம், 3 மாத சிறைத்தண்டனையை 6 மாதங்களாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment