Thursday, 10 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 9th MAY 2018




மலேசியாவில் எதிர்கட்சிகள் ஆட்சி: 92 வயது மகாதீர் முகமது பிரதமராகிறார்

  • மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரதான எதிர்கட்சி தலைவரும் மாஜி பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளன.மலேசியாவின் 13-வது நாடாளுமன்றம் கடந்த 7-ம் தேதி கலைக்கப்பட்டது.
  • மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளதாகவும் இதன் மூலம் மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது 
  • உலகின் மிகவும் வயதான பிரதமர்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை மகாதீர் முகமது பெறுகிறார்



அமேசான் நிறுவனத்துக்கு போட்டியாக பிளிப்கார்ட் பங்குகளை கைப்பற்றிய வால்மார்ட்

  • இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை உலகின் மிகப் பெரிய ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்துதலின் மதிப்பு சுமார் 1,07,644 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • 2007-ம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் என்பவர்களால் பிளிப்கார்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை இடம் பெங்களூரில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட இ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட் படிப்படியாக முன்னேறி, இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்தது. 
  • கடந்த இரண்டு வருடமாக வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து முழு விவரங்கள வெளியாகியுள்ளன. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ 1,07,644 கோடி 
மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்ல ஜூன் 2ஆம் தேதி முதல் இ - வே பில் அமல்

  • தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் சரக்குகளை எடுத்துச் செல்ல, இ - வே பில் பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் பின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு, கண்டிப்பாக இ - வே பில் பெறுவது அவசியம்.
  • கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கு பயன்படும் சரக்கு பரிமாற்றம் (Stock Transfer) என்னும் முறைக்கு எந்தவிதமான ஆவணங்களை பயன்படுத்துவது என்பதில் வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் பெரும் குழப்பம் இருந்து வந்தது.
  • வர்த்தகர்களின் நிலைமையை புரிந்துகொண்ட ஜிஎஸ்டிஎன் ஆணையம், சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் (E-Way Bill) படிவங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், கூடிய விரைவில் அவை முழுமைபெற்று நடைமுறைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தது.
  • அதுவரையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்றுமாறு ஜிஎஸ்டிஎன் ஆணையம் தெரிவித்தது. ஜிஎஸ்டிஎன் ஆணயம் சொன்னதுபோலவே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் இ- வே பில் முறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. கூடவே, இ-வே பில் முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
  • தொழில் துறையினரும், வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுபோலவே, இ-வே பில் முறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கூடவே 50000 ரூபாய் வரையில் சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு இ-வே பில் தேவையில்லை என்றும், வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் இ-வே பில் தேவையில்லை என்றும் அறிவித்தது. அதேபோல, மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்வதற்கு, இ-வே பில் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
  • ஜூன் 1 முதல் அனைத்து மாநிலங்களும், இன்ட்ரா ஸ்டேட் இ - வே பில் முறையை அமல்படுத்த வேண்டும் என. மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. தற்போது ஜூன் 3ஆம் தேதி வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment