Sunday, 6 May 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MAY 2018 TAMIL PDF - 6th MAY 2018




சென்னை மெரினாவில் ரூ.50 கோடியில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது
  • சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. யாக பூஜை நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



திருமணம் செய்து கொள்ளாமல் ஆண், பெண் சேர்ந்து வாழ உரிமை உண்டு
  • குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் அரசு திருமனத்திர்க்கான வயது வரம்பை தெரிவித்திருந்தது. அதன்படி, இளைஞர்களுக்கு திருமண வயது 21-ஆகவும், பெண்களுக்கு திருமண வயதானது 18-ஆகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை என்றாலும் ஓரளவு குறைய ஆரமித்தது. 
  • வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. இதை சட்டம் இயற்றும் சபைகளும் அங்கீகரித்துள்ளன. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் இது பற்றிய சட்டப்பிரிவு இடம் பெற்றுள்ளது.
  • இந்த வழக்கை பொறுத்தவரை, நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ வயதை எட்டியவர்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது. துஷாரா, தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்ற கேரள ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தான் யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை, துஷாராவுக்கு இருக்கிறது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஃஆப் குறைப்பு
  • மருத்துவ மேற்படிப்புககான 'நீட்' கட் ஃஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இதனால் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுவாரகள். மருத்துவ மேற்படிப்பு காலியிடங்களை நிரப்பும் எண்ணத்திலும், மருத்துவதுறையை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment