Tuesday, 6 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 6th MARCH 2018

5 ஆண்டுகளில் ரூ. 52 ஆயிரம் கோடி வங்கி மோசடி: நிதி அமைச்சர் தகவல்
  • ''2013-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன'' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
  • 2016-17 நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.
  •  ''2013-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன'' என்று குறிப்பிட்டார்.
கால் டாக்சி, ஆட்டோக்களை முறைப்படுத்த புதிய சட்ட வரைவு: போக்குவரத்து ஆணையம் தகவல்
  • தமிழகத்தில் கால் டாக்சி, ஆட்டோக்களை முறைப்படுத்த தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத் திருத்த வரைவு மசோதாவை மாநில போக்குவரத்து ஆணையம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம் முதன்முறையாக வாய்ப்பு
  • மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ''ரியோகோ அஜூமா (வயது 44) என்ற இந்த கமாண்டன்ட் இனி ஆயிரம் சிப்பந்திகளை கொண்ட 4 போர் கப்பல்கள் பிரிவை வழிநடத்தவுள்ளார். இந்த பணிக்கு ஒரு பெண் நியமனம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.
  • இந்த தற்காப்பு படையில் 14 ஆயிரம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்த எண்ணிக்கையில் இவர்கள் வெறும் 6 சதவீதம் தான். பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் பின் தங்கியுள்ளது. 465 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்தில் 47 இடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment