Sunday, 11 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 11th MARCH 2018



அசாமில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல்
  • அசாம் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக சர்பானந்தா சோனோவால் இருந்துவருகிறார். இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் மாநில நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சார்மா தாக்கல் செய்ய உள்ளார். தற்போது சட்டசபையில் முதன் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 
  • இது குறித்து நிதித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப்லெட் வழங்கப்பட உள்ளது. இதில் பட்ஜெட் குறித்த அனைத்துக்குமான நிதி நிலை விவரங்கள் தெரிவிக்கப்ப ட்டிருக்கும். 
  • தொடர்ந்து பட்ஜெட் செய்தி சேகரிக்க வருகை தரும் நிருபர்களுக்கு பென்டிரைவ் வழங்கப்படும் என கூறினார். மேலும் பட்ஜெட் விவரங்கள் கூகுள் ஆப் மூலமும் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு துறைமுகம்
  • நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். தன்னிறைவு திட்டத்தின் கீழ் 51% நிதியை கிராமமும், 49% நிதியை அரசும் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கலில் தேசிய அளவிலான கிளிமூக்கு விசிறி சேவல் கண்காட்சி
  • திண்டுக்கலில் தேசிய அளவிலான கிளிமூக்கு விசிறி சேவல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன. 
சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜின்பிங் சட்ட திருத்தத்துக்கு பார்லி., ஒப்புதல்
  • சீனாவின் நிரந்தர அதிபராக, ஜி ஜின்பிங் நீடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கு, அந்த நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.அண்டை நாடான சீனாவின் அதிபராக, ஜி ஜின்பிங், 64, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். 
  • சீன அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, ஒருவர், இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. சீனாவில் ஆட்சி புரியும் ஒரே அரசியல் கட்சியான, சி.பி.சி., எனப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைவர், அதிபர் என, ஒரே நேரத்தில் மூன்று பதவிகளையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார், 
  • ஜின்பிங்.சீனா கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர், மாவோ ஜெடாங்குக்குப் பின், சீனாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக, ஜின்பிங் உள்ளார். கட்சி மற்றும் ராணுவத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள, ஜின்பிங், அதிபர் பதவியில் நிரந்தரமாக தொடர விரும்பினார்.
  • அதற்காக, அதிபர் பதவிக்கு உள்ள கால நிர்ணயத்தை நீக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.கடந்த, 1954ல், நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம், 1982ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், 1988, 1993, 1999 மற்றும், 2004ல் அதில் திருத்தம் செய்யப்பட்டது. 
  • கடந்த, 1949 முதல், ஒரு கட்சி ஆட்சி உள்ள சீனாவில், மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய அரசியல் மாற்றம் இது. அதிபர் பதவிக்கான கால நிர்ணயத்தை நீக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, சீன பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது; இதற்கு, 2,958 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


ஏர் இந்தியாவை கைப்பற்ற ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு முயற்சி
  • தொடர் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு ஏற்கனவே எடுத்துவிட்டது. 
  • இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ்-கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஏர் இந்தியா ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. 
11 மாதங்களில் 1.48 லட்சம் ரயில்கள் தாமதமாகச் சென்றதாக ரயில்வே அமைச்சகம் தகவல்
  • கடந்த ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக வெள்ளிக்கிழமை மக்களவையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழகத்தில் அரசு ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு
  • நாட்டில் உணவு கொள்முதல் மற்றும் விநியோகத்தை மேற்கொள்ளும் அரசு சார்ந்த நிறுவனமான ஃஎப்சிஐ நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பத்திரம் வெளியீடு மூலம் மேலும் ரூ. 12 ஆயிரம் கோடி திரட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உணவு மற்றும் பொது விநியோகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திவாகர் ரெட்டி தலைமையில் ஃஎப்சிஐ முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் திட்டம் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
  • முதலீட்டை ரூ. 50 ஆயிரம் கோடியுடன் நிலைநிறுத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ. 45 ஆயிரம் கோடி கடன் மூலமும், பங்கு முதலீடு மூலம் ரூ. 5 ஆயிரம் கோடியை திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயை 2 ஆண்டுகளில் முதலீடு வழங்கப்படவுள்ளது.
  • ஏற்கனவே ஃஎப்சிஐ வசம் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பத்திரங்கள் உள்ளது. அரசு பங்கு பத்திரம் மூலம் இதை மேலும் ரூ.32 ஆயிரம் கோடி உயர்த்த வேண்டும் என்று அந்த குழு குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்பு சட்டம் மூலம் ஃஎப்சிஐ உருவாக்கப்பட்டது.
  • கிராம மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 2,452 கோடியும், மனித வள மேம்பாட்டு துறை ரூ. 248 கோடியும், வெளியுறவு துறை அமைச்சகம் ரூ. 48 கோடியும் நிலுவை வைத்துள்ளது. ஃஎப்சிஐ உணவு தானிய கொள்முதல், இருப்பு வைத்தல், நகர்த்துதல், போக்குவரத்து, விநியோகம், உணவு தானிய விற்பனை ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment