Friday, 9 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 9th MARCH 2018



குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: ராஜஸ்தான் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்
  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
  • ஏற்கனவே குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை அரியானா மாநிலஅரசு, மத்தியப் பிரதேச மாநில அரசு நிறைவேற்றி உள்ள நிலையில் தற்போது ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
  • இந்த சட்ட திருத்தத்தின்படி, பாலியல் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையானது 14 ஆண்டுகள் மட்டுமல்ல என்றும், ஆயுள் முழுவதும் அவர்கள் சிறையைவிட்டு வெளியே வர முடியாது என்றும், 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜி.சி.கட்டாரியா தெரிவித்துள்ளார்.
அருந்ததி ராய், மீனா கந்தசாமிக்கு பிரிட்டன் விருது
  • இந்திய எழுத்தாளர்கள் அருந்ததி ராய் மற்றும் மீனா கந்தசாமிக்கு பிரிட்டனில் சிறந்த நாவலாசிரியருக்கான விருது வழங்கப்படுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆங்கிலத்தில் நாவல் எழுதும் பெண் எழுத்தாளருக்கான விருது பட்டியல் பிரிட்டனில் வெளியிடப்பட்டது. இந்த விருது பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
  • இதில் தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமியின் 'வென் ஐ கிட் யு: ஆர் ,ஏ போட்ரியாட் ஆப் தி ரைட்டர் அஸ் ஏ யங் வைப்' எனும் நாவலுக்கும் அருந்ததி ராயின் 'தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ேஹப்பினஸ்' எனும் நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அருந்ததி ராய் ஏற்கனவே தனது' சின்ன விஷயங்களின் கடவுள் எனும் நுாலுக்காக புலிட்சர் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தமிழ் இணைய மாநாடு கோவையில் நடத்த திட்டம்
  • கோவை, வேளாண் பல்கலையில், ஜூலை, 6 முதல், 8ம் தேதி வரை, 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. உலகில், இணையப் பட்டியலில், ஆங்கிலத்திற்கு அடுத்த இடத்தில், தமிழ் உள்ளது. படைப்புகளில், ஆறாவது இடத்தில் உள்ளது. 
சரக்கு மற்றும் சேவை வரியில் 1.03 கோடி நிறுவனங்கள் பதிவு
  • நடப்பு மார்ச், 2 நில­வரப்­படி, ஜி.எஸ்.டி.,யில், 1 கோடியே, 3 லட்சத்து, 99 ஆயிரத்து, 305 நிறு­வ­னங்­கள் பதிவு செய்­துள்­ளன. இதில், 64.42 லட்­சம் நிறு­வ­னங்­கள், முந்­தைய வரி நடை­மு­றை­யில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறி­யுள்­ளன. புதி­தாக, 39.56 லட்­சம் நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­துள்­ளன.
மீளமுடியாத நோயுள்ளவர்களின் 'கருணைக்கொலைக்கு' இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி
  • "வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
  • கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை துரிதப்படுவதற்கு அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையானது நிறுத்தப்படும் என்பதே இதற்கு பொருள்.
பிஐபி.க்கு புது இயக்குனர் நியமனம்
  • பிஐபி (பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ) தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மே 1ம் தேதி முதல் இவர் பதவி ஏற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை அஞ்சும் வெள்ளிப் பதக்கம்
  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 50 மீ. ரைபில் பிரிவில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
உலக அளவில் இணையத்தில் தமிழ் மொழிக்கு 2-வது இடம்
  • உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் தமிழுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில் அதிக இணையதளங்கள் உள்ளதாக உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. 
  • ஜப்பன், சீன மொழிகளை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை தமிழ் மொழி பிடித்துள்ளது.
ஆசிய கோப்பை வில்வித்தை: மூன்று தங்கங்கள், இரண்டு வெண்கலங்கள் வென்று இந்தியா அசத்தல்
  • ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் இந்தியா மூன்று தங்கங்கள், இரண்டு வெண்கலங்கள் என ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.
  • ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 
  • அதேபோன்று ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி 27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
  • மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • இதேபோல, மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 
  • மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார் - திவ்யா தயால் - மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment