Sunday, 11 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 10th MARCH 2018

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு
  • சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்று கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
  • தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் அதிக பெரிய அளவில் அகழாய்வு நடந்து கொண்டு இருக்கிறது.நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் கீழடியில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இவ்வளவு கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய்திகள் இருக்கிறது.
  • ஏற்கனவே 2017 நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்த பொருட்கள் மிகவும் பழமையானது. அங்கு கிடைத்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதுதான் மிகவும் பழமையான நாகரீகம் என்றும் கூறப்பட்டது.
  • இதில் காணப்பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் ஆகும். இதில் பழைய தமிழ் எழுத்து முறைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபித்துள்ளார்கள். சங்க கால தமிழ் ஓலைச்சுவடிகளை போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின்றது.
  • இந்த மாதிரியான எழுத்துக்கள் சிந்து சமவெளி ஆய்விலும் கிடைத்து இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் ஆகும். இதனால் சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்று கூறப்பட்டு இருக்கிறது.
செளதிக்கு பிரிட்டன் போர் விமானங்கள் விற்பனை
  • சௌதி அரேபியாவுக்கு 48 டைஃபூன் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக பிரிட்டனின் விமான உற்பத்தி நிறுவனமான பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.
  • பிரிட்டனின் பாதுகாப்புத் துறை செயலாளர் கேவின் வில்லியம்சன்னை, செளதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 65 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு செளதி இளவரசரின் பிரிட்டன் பயணத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என பிரிட்டன் தரப்பு கூறியுள்ளது.
டெல்லியில் எம்பி, எம்எல்ஏ மாநாடு தொடங்கியது
  • டெல்லியில் 2 நாள் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். மாநாட்டில் அதிமுக சார்பில் எம்எல்ஏக்கள் இன்பதுரை, சின்னராஜ், பாஸ்கர், கீதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.ராஜா ஆகயோர் பங்கேற்றுள்ளனர். 
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாடு
  • 23 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இன்று புதுடில்லியில் துவங்குகிறது.
  • பருவநிலை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய, சில ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின. 
  • இதில் சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகள் எரிபொருளுக்கு பதில் சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துதல் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. 
  • இம்மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 45 நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
  • புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் துவங்க உள்ள இந்த மாநாட்டினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டில் பங்கேற்க வருபவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்கின்றனர்.
  • குறைந்த செலவில் சூரிய சக்தியை சேமிக்கும் முறை, அதனைப் பயன்படுத்தும் முறை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான 24 திட்டங்கள் நிறைவேற்றபடலாம் என கூறப்படுகிறது.
உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க 56 விமான நிலையங்களை புதுப்பிக்க திட்டம்
  • உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குவதற்கு நாடு முழுவதும் 56 விமான நிலையங்களை புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  
  • இதன்படி குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்து இயக்க, மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்பு திட்டம் (உதான்) திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 
  • சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வழி வகுக்கும் வகையில் விமான போக்குவரத்தை செயல்படுத்துவது இதன் நோக்கம். ஒரு மணி நேர விமான பயணம் அல்லது 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிக பட்ச கட்டணம் ரூ.2,500 மட்டுமே. 
  • கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் உதான் திட்டத்தை செயல்படுத்த விமான நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்னும் 18 மாதங்களில் 56 விமான நிலையங்கள் 31 ஹெலிபேட்கள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன. 
  • உதான் திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே 20 விமான நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன. எஞ்சியவற்றை உரிய காலக்கெடுவுக்குள் புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடியும். 
இந்தியா, பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
  • இந்தியா மற்றும் பிரான்ஸுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்.
  • இதைத் தொடர்ந்து, இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் மோடி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கிடையே விண்வெளி, அணுஆயுதம், பொருளாதாரம், கடல்பாதுகாப்பு, ரயில்வே, தொழில், சூரிய மின்சக்தி உள்ளிட்ட 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 
  • அதன்பின், இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மேலும், பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படுவோம் என்று தெரிவித்தனர். 
விதிமுறைகளை மீறி முறைகேடு செய்த ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு 5 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி
  • கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்கள் எதுவுமின்றி, விதிமுறைகளை மீறி வங்கி கணக்குகளை தொடங்கி முறைகேடு செய்த ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 
  • பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்களிடம் சிம் கார்டு விற்பனை செய்யும் போது அடையாள அட்டையாக ஆதார் நகலை பெரும், அப்போது வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இன்றி ஏர்டெல் பேமென்ட் வங்கி கணக்கை தொடங்கியுள்ளது. 
  • இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய 47 கோடி ரூபாய் அளவுக்கான அரசின் மானிய தொகையை ஏர்டெல் நிறுவனம் தனது வங்கி கணக்கிற்கு திருப்பிவிட்டுள்ளது. 
  • கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர் தற்குறிப்பு விவரங்களை சேகரிக்கால், வெறும் ஆதாரை மட்டுமே வைத்து வங்கி கணக்கு தொடங்கியதை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, ஏர்டெல் பேமென்ட் வங்கிக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 
  • இதேபோன்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாது செயல்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு 40 லட்சம் ரூபாயும், ஆக்சிஸ் வங்கிக்கு 3 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. 
விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம்
  • விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பாக விமான போக்குவரத்து துறை அளிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. அக்கட்சிய சார்பில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அஷோக் கஜபதி ராஜு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மண் அறிவியல் துறை அமைச்சர் ஒய் எஸ் சவுத்திரி ஆகியோர் பதவி விலகினர்.
தமிழகத்தில் தென்பெண்ணை ஆறு மிகவும் மாசடைந்துள்ளது: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
  • தமிழகத்தில் தென்பெண்ணை ஆறு மிகவும் மாசடைந்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி ஆறும் மனித கழிவுகள் கலப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment