Thursday, 8 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 8th MARCH 2018

தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக வீரர் அய்யாசாமி புதிய சாதனை
  • தேசிய சீனியர் தடகள போட்டியில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் பிடித்து தமிழக வீரர்கள் அசத்தினர். 
  • தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அய்யாசாமி, 49.45 நொடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 
மலேசியாவில் தமிழை வளர்க, மார்ச் 12-ல் தமிழறிஞர்கள் மாநாடு
  • மலேசியாவில் தமிழை வளர்க, மலேசிய தமிழ சார்ந்த ஆசிரியர்களுடன் மார்ச் 12-ல் தமிழறிஞர்கள் மாநாடு நடக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
  • யாழ்பாண நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்க விரைவில் இலங்கை செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். 
ஆளில்லா விமான பயன்பாட்டிற்கு விரைவில கொள்கை வெளியீடு மத்திய அரசு திட்டம்
  • ''இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை வெளியிட திட்டமிட் டுள்ளது'' என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே தெரிவித்துள்ளார்.
  • தரையில் இருந்து 200 அடி உயரத்திற்கு மட்டுமே ஆளில்லா விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் வரைவு கொள்கையில் குறிப்பிட்டிருந்தது. சர்வதேச அளவில் உள்ளது போல் 400 அடி உயரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
`லவ் ஜிகாத் அல்ல; ஹதியா திருமணம் செல்லும்!' - உச்ச நீதிமன்றம் அதிரடி
  • கேரள மாநிலம், கோட்டயத்துக்குட்பட்ட வைக்கம் ஊரைச் சேர்ந்த அசோகன் மணி, பொன்னம்மா ஆகியோரின் மகள் அகிலா. இவர், 2015-ம் ஆண்டு சேலம் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த காலத்தில், செபின் ஜகான் என்ற இளைஞர் மீது காதல் கொண்டார்.
  • இதையடுத்து, இஸ்லாம் மதத்துக்கு மாறினார் அகிலா. தன்னுடைய பெயரையும் ஹதியா என மாற்றிக்கொண்டார். இதனால், குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளான ஹதியா, தோழிகள் வீட்டில் தங்கியிருந்தார். 
  • இதன்பிறகு, காதலர் செபின் ஜகானைத் திருமணம் செய்துகொண்டார் ஹதியா. இந்தத் திருமணத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ' இது ஒரு லவ் ஜிகாத். இந்தத் திருமணம் செல்லாது' எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 
  • இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் ஹதியா. இன்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், ' பெண்களுக்குத் தங்களது வாழ்க்கை துணையைத் தேட முழு உரிமை உள்ளது. கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம்' என உத்தரவிட்டுள்ளனர். 
இந்திய கட்டிட வடிவமைப்பாளருக்கு நோபல் பரிசுக்கு சமமான விருது
  • இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷிக்கு நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதான பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கட்டிட வடிவமப்பாளர் உலகில் பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது என்பது நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதாகும். புகழ் பெற்ற இந்த விருது கட்டிட வடிவமைப்பாளர் பலரது கனவாக இருந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விருதுக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது.
  • பெருமைக்குரிய இந்த விருது இந்த வருடம் (2018) இந்தியக் கட்டிட வடிவமைப்பாளரான பாலகிருஷ்ண தோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் பல பழைய கட்டிடங்களை கிழக்கத்திய கலாசாரத்துக்கு ஏற்ப வடிவமத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
  • இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் பாலகிருஷ்ண தோஷி என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை 7.1 சதவிகிதம் ஆனது - 15 மாதங்களில் மிக அதிகம்
  • இந்தியாவில் வேலையில்லாமல் அவதிப்படுவோரின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 25-ம் தேதியுடன் முடிவடைந்த 71-வது வாரத்தில், 7.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, 15 மாதங்களில் பதிவானதில் மிக அதிகமான அளவு ஆகும். இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனும் அமைப்பு(CMIE) இத்தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஒன்றரை ஆண்டுகளில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையானது, முன்னதாக, கடந்த ஜனவரியில் வேலையற்றோரின் எண்ணிக்கை 5 சதவிகிதமாக இருந்தது. 
ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி
  • இந்தியாவில் உள்ள ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
  • அதேபோல நாடு முழுவதும் ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்த ரூ.5000 கோடி செலவிடப்படவுள்ளது. மேலும் 576 கிலோ மீட்டரான ரயில் தண்டவாளங்கள் ஜனவரி மாதம் மட்டும் மாற்றப்பட்டு, புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது
காவிரி விவகாரம் தொடர்பாக 4 மாநில ஆலோசனைக் கூட்டம்!
  • காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இந்த அலூசனைக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். 
ஸ்ரீபெரும்புதூர் அருகே வான்வழி பூங்கா 
  • சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் 250 ஏக்கரில் வான்வழி பூங்கா நிறுவப்பட உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களே இயக்கிய விமானங்கள்
  • உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று வானில் பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் பைலட் உட்பட முற்றிலும் பெண் சிப்பந்திகள்தான் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்சின் வெளிநாட்டு சேவைகளில் ஈடுபடுத்தப்பட்ட 8 விமானங்களில் அனைத்து ஊழியர்களும் பெண்களாகவே இருந்தனர். பெண் ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த விமான நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை நேரடி வரி வருவாய் 7.44 லட்சம் கோடி
  • நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை நேரடி வரி வருவாயாக மத்திய அரசுக்கு 7.44 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 
  • இதில் நேரடி வரி வசூல் முக்கிய அங்கம் வகிக்கிறது. பட்ஜெட்டில் வரி வசூல் இலக்காக முன்பு 9.8 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது 10.05 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று வருமான வரி கள அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 7.44 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது திருத்திய வி இலக்கில் 74.3 சதவீதம். முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வசூல் செய்யப்பட்ட வரியுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் கூடுதலாக 19.5 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் ரீபண்ட்டுக்கு முந்தைய கணக்கீட்டின்படி வரி வசூல் 14.5 சதவீதம் உயர்ந்து 8.83 லட்சம் கோடியாக உளளது. கடந்த மாதம் வரை ரீபண்டாக 1.39 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. நிறுவன வரிகள் 19.7 சதவீதமும், வருமான வரி 18.6 சதவீதமும் வசூலாகியுள்ளன என நிதியமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
கி.மு. 3 ம் நூற்றாண்டு கல்வட்டம் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை அருகே கி.மு. 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பெருங்கற்கால கல்வட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.கி.மு. 1000க்கு முன்பே இறந்தோர் நினைவாக பெருங்கற்களை கொண்டு கல்லறை எழுப்பி வணங்கும் பழக்கம் இங்கு இருந்துள்ளது. 
  • பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒருவகையாக கல்வட்டம் உள்ளது. இதில் சவக்குழியின் மேற்பகுதி அடைக்கப்பட்டு கற்கள் வட்டமாக அடுக்கப்பட்டிருக்கும்.சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டை அருகே கீழப்பூங்குடி சாலையில் 100க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. 
  • இவை கி.மு. 5 முதல் கி.மு. 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. பாதி கல்வட்டங்கள் மண்ணில் புதைந்தும், சேதப்பட்டும் காணப்படுகின்றன.
அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் 'ஓவா' மலையில் கண்டுபிடிப்பு
  • திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தாலுகா சித்தரேவு ஊரின் வடமேற்கு 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஓவா மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.வெள்ளை நிற ஓவியங்கள் : ஓவா மலையில் பெருமாள் பொடவு என அழைக்கப்படும் பழங்கால குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியத் தொகுப்பை கண்டறிந்துள்ளோம்.
  • இதே பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்வதன் மூலம் வரலாற்று தொன்மையான தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன, என்றார்.
சேலத்தில் 1,000 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி மையம்: பாராசூட் உள்ளிட்ட தளவாட பொருள்கள் தயாரிக்க வாய்ப்பு
  • சேலத்தில் 1,000 ஏக்கரில் அமையும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் மூலம் ராணுவத்துக்குத் தேவையான பாராசூட், துணி வகைகளைத் தயாரிப்பதற்கு தொழில்வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
  • ராணுவத்துக்குத் தேவையான துப்பாக்கிகள், இலகு ரக இயந்திர துப்பாக்கிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக விமானத்திற்கு உதிரிபாகங்களைத் தயாரிப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு முதல் பரிசு
  • 2017ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவு மூலம் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தொடர்பாக 1094 மனுக்கள் பெறப்பட்டது. 
  • இம்மனுக்கள் மீது வாரியத்தின் சார்பில் குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான உரிய பதிலையும் கடந்த டிசம்பர் 31ம்தேதிக்குள் தனிப்பிரிவுக்கு சென்னை குடிநீர் வாரியம் சமர்ப்பித்தது. இதை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு முதல் பரிசை வழங்கி முதல்வர் பாராட்டினார். 
கர்நாடகாவுக்கு தனி கொடி
  • கர்நாடகா மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையான கடந்த ஆண்டு அமைத்தார். இக்குழு கடந்த பிப்ரவரி 5ம் தேதி கொடி வடிவமைப்பு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
  • மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என 3 நிறங்களுடனும், மத்தியில் வெள்ளை நிறத்துவடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருக்கும். இதற்கு அனைத்து தரப்பிலும் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சித்தராமையா இந்த கொடியை வெளியிட்டார்.
இந்த நிதியாண்டில் கூடுதல் செலவுக்கு ரூ. 85 லட்சம் கோடி.நாடாளுமன்ற ஒப்புதலுக்கு தாக்கல்
  • லோக்சபாவில் 2017-18ம் ஆண்டின் மானிய துணைநிலை கோரிக்கைகள் அடங்கிய 4வது நிதி ஒதுக்கீடு ஆவணங்களை நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று சமர்ப்பித்தார்.
  • அதில், அமைச்சகங்கள், அரசு துறைகளில் உள்ள சேமிப்புகள் என்ற அளவில் ரூ.8.21 லட்சம் கோடி நிதி மற்றும் ரூ.85 ஆயிரத்து 315 கோடி நிகர ரொக்கம் என மொத்தம் ரூ.9.06 லட்சம் கோடி அளவிலான நிதியை கூடுதல் செலவினத்திற்கு ஒதுக்க நாடாளுமன்ற ஒப்புதல் கோரப்பட்டது. 
  • நிகர ரொக்க தொகையான ரூ.85,315 கோடியில் 71 சதவீதம் என்ற அளவில், ரூ.61,215.58 கோடி வருவாய் துறைக்கு ஒதுக்கப்படும். அவற்றில் ரூ.58,999 கோடி மாநிலங்களுக்கான வருவாய் இழப்பு தொகையாகவும், ரூ.1,384 கோடி மத்திய விற்பனை வரி இழப்பீடாகவும் வழங்கப்படும். மேலும், ரூ.15,065.65 கோடி மானிய உதவி மற்றும் முதலீட்டு சொத்துகள் உருவாக்கத்திற்கு செலவிடப்படும்.
  • அதன்பின்னர் ரூ.9,260 கோடி நிதி பாதுகாப்பு துறை ஓய்வூதியம் மற்றும் ரூ.5,721.90 கோடி சந்தை கடன்கள் மற்றும் கஜானா பில் ஆகியவற்றுக்கு வட்டி செலவுக்கு ஒதுக்கப்படும்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment