Wednesday, 7 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 7th MARCH 2018

வைகையை பாதுகாக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு
 • கழிவுநீர் கலந்தும், ஆக்கிரமிப்பில் சிக்கியும் தவிக்கும் வைகை நதியை பாதுகாக்க, மத்திய அரசு, 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
 • தேனி மாவட்டம், வருஷநாடு மூல வைகையில் உற்பத்தியாகும் வைகை நதி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக, 285 கி.மீ., பயணித்து, கடலில் கலக்கிறது. பல இடங்களில் கழிவுநீர் கலந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் சுருங்கி வருகிறது. 
 • தேசிய நதி நீர் பங்கீடு திட்டத்தில், ஆறுகளை சுத்தப்படுத்த மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வைகை நதியை சீரமைக்கவும், துாய்மையாக பாதுகாக்கவும், 120.09 கோடி ரூபாய், தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என, கடிதம் அனுப்பியுள்ளார்.
 • மதுரை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நகருக்குள் வைகை கரைகளை அழகுபடுத்த, மத்திய அரசு, 99.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் புதிய ஊதியம்
 • இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஊதியம் வீரர்களின் ஆட்டத் திறன் மற்றும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. 
 • இதில் ஆடவர் அணியில் ஒரு புதிய பிரிவை உண்டாக்கி அதில் இடம் பெறும் வீரர்களுக்கு அதிக ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • ஆடவர் அணிக்கு கிரேட் ஏ+ எனும் புதிய பிரிவு உண்டாக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவிலும் முன்பிருந்ததைப் போல் 200% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
 • தற்போது கிரேட் ஏ+ பிரிவு வீரர்களுக்கு ரூ. 7 கோடி, கிரேட் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடி, கிரேட் பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி மற்றும் கிரேட் ச் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 1 கோடி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் போன்ற தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு
 • நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகளை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்திவருகிறது. அந்த அமைப்பு, இத்தகைய தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
 • இந்த வழக்கில் பதிலளித்த மத்திய தலைமை வழக்கறிஞர், 'சி.பி.எஸ்.இயால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பாஸ்போட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று பதிலளித்தார். 
 • அதனைக் கேட்ட நீதிபதிகள், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை. இதனை, சி.பி.எஸ்.இ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டது.
மகளிர் தினத்தை முன்னிட்டு "ஜுன்ஜுனு" செல்கிறார் பிரதமர்
 • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் நாளை ராஜாஸ்தான் மாநிலம் "ஜுன்ஜுனு" செல்கின்றார்! பெண் குழந்தைகளின் கல்வியை காப்பாற்றும் நோக்கில், அரசாங்கத்தின் முன்முயற்சியை முன்வைக்க பிரதமர் அவர்கள், 'பேட்டி பச்சாவு பேட்டி படாவு' திட்டத்தினை இந்தியாவில் உள்ள 161 மாவட்டங்களில் இருந்து 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளார். 
தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
 • சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு தொடங்கியது. 3 நாட்கள் தொடங்கிய மாநாடு இன்று முடிவடைந்தது. அப்போது 84 திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.
 • ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும். 
 • சின்னமுட்லூர் பகுதியில் தடுப்பணைக்குப் பதிலாக நீர்த்தேக்கம் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 • வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளுக்கு வெள்ளாற்றிலிருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
 • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தையும் அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் பகுதியையும் இணைக்கும் வண்ணம் கொள்ளிடம் ஆற்றில் 56 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
 • கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதல் நீரேற்று நிலையம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கதவணை கட்டும் பணிக்கான நில எடுப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி கூடுதலாக 2 சதவீதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
பஞ்சாப் ஃபெடரேஷன் கோப்பை 10,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கம்
 • பஞ்சாப்பில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை 10,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கம் வென்றார். தங்கம் வென்றதன் முலம், காமன்வெல்த் போட்டிக்கும் சூர்யா தகுதி பெற்றார்.
சிறந்த ஆட்சியர்கள், சிறந்த மாநகராட்சி, சிறந்த கமிஷனர் மாநாட்டில் விருதுகள் வழங்கினார் முதல்வர்
 • சிறந்த ஆட்சியர்களுக்கான விருது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம் ஆட்சியர் ரோகினி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சிறந்த காவல் ஆணையருக்கான விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கினால் பாஸ்போர்ட் விவரங்கள் கட்டாயம் மத்திய அரசு அதிரடி
 • 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்குபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும்வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பேக்கர் 2-வது தங்கம் வென்று அசத்தல்
 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் மானு பேக்கர் தங்கம் வென்று சாதனை புரிந்தார்.
 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறுகிறது.
 • இந்தப் போட்டியில் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் தங்கம் வென்றிருந்தார்.
 • இந்த நிலையில், கலப்புப் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில், மானு பேக்கர், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 476.1 புள்ளிகள் பெற்று இவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
 • இந்த பிரிவில் ஜெர்மனி அணி 475 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், 415 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்த பிரான்ஸ் வெண்கலமும் வென்றது.
 • இதனிடையே, நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹூலி கோஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
 • இந்தப் பிரிவில் சீனா தங்கப் பதக்கமும், ருமேனியா வெள்ளியும் வென்றன. இந்தியாவின் ரவிக்குமார், அபூர்வி சந்தேலா 4-ஆவது இடத்தைப் பிடித்தனர்.
 • இந்தப் போட்டியில் 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment