Tuesday, 6 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 5th MARCH 2018உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 
 • 11-ஆம் வகுப்பு மாணவியான மானு பேக்கர், ஆர்ஜென்டீனாவில் நடைபெற இருக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தை ஏற்கெனவே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இதுவரை இந்தியா 2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது விழா
 • லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.
விருதுகளின் விபரம்,
 1. தி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது
 2. சிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)
 3. சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்
 4. சிறந்த நடிகர்- கேரி ஓல்டுமென் ( டார்க்கஸ்ட் அவர்)
 5. சிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்
 6. சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்
 7. கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர்... சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது
 8. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)
 9. சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)
 10. சிறந்த ஒலி கலவை - கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)
 11. சிறந்த ஒலி தொகுப்பு - ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)
 12. சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)
 13. சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)
 14. சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ
 15. சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)
 16. சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி(ஐ, டோன்யா)
 17. சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல்( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி)
சிறந்த ராணுவம் இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்
 • உலகில் உள்ள 133 நாடுகளின், ராணுவத்தின் வல்லமை அடிப்படையில் குளோபல் ஃபயர்பவர் -2017 என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் அம்சங்கள் மற்றும் மனிதசக்தி உள்ளிட்ட 50 முக்கிய அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், அமெரிக்கா ராணுவம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும் மூன்றாம் இடத்தில் சீனாவும் இடம்பிடித்துள்ளன.
 • இந்த நாடுகளைத் தொடர்ந்து இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. உலகளவில் பாகிஸ்தான் ராணுவம் 13-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானில் இந்து பெண் எம்.பி.யானார்
 • பாகிஸ்தானில் பெனசிர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறை என கூறப்படுகிறது.
 • முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.


தமிழ்ப் பல்கலை. - மோரீஷஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பு ஒப்பந்தம்
 • தமிழ்ப் பல்கலைக்கழகமும் மோரீஷஸ் நாட்டின் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பும் இணைந்து தமிழர்களின் தத்துவம் தொடர்பான ஆய்வுகளில் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை செய்து கொண்டன.
 • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவ மையம், மோரீஷஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பு இணைந்து சைவ சித்தாந்தம், வைணவத் தத்துவங்கள், கெளமார வழிபாடு, கோயில்கள் அமைப்பின் தத்துவம், திருக்கோயில்கள் அமைப்பு ஆகிய வெவ்வேறு துறைகளில் பன்னாட்டுக் கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றை இக்கல்வியாண்டு முதல் நடத்தவுள்ளன.
காவிரி: 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு: 9-இல் தில்லியில் கூட்டம்
 • காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழகம், கர்நாடகம் உள்பட நான்கு மாநில தலைமைச் செயலாளர்களுடன் தில்லியில் வரும் 9-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை நடத்தவுள்ளது.
விஐபிகளுக்காக 10 நிமிடம் மட்டுமே போக்குவரத்தை நிறுத்தலாம் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
 • ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். 
 • அதிக நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மருத்துவமனை செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் பாதுகாப்பு பணியின் போது இந்த விதிகள் பொருந்தாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை: மத்திய அரசு தகவல்
 • தமிழகத்தில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்துள்ளார். 
 • சென்னை அருகே வல்லூர், எண்ணூர், ஆசனூர், தருமபுரி மற்றும் நெல்லையில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளதபக கூறப்பட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment