Wednesday, 14 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 13th MARCH 2018



போக்குவரத்து மேலாண்மை- நீர்வாழ் உயிரின வளர்ப்பு: ஆஸ்திரேலிய அமைப்புகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
  • போக்குவரத்து மேலாண்மை, நீர்வாழ் உயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் தலைமைச் செயலகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் சாலை மற்றும் போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை விக்ரோஸ்ட் என்ற அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை அந்த அமைப்புடன் ஒருங்கிணைந்து மாநில அரசு செயல்படும். 
  • மீன்வளம்-நீர்வாழ் உயிரினம்: இதேபோன்று, தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலிய நாட்டின் வர்த்தகம்-முதலீட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி முன்னிலையில் பரிமாறப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மூலமாக, தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன் உற்பத்தி பெருக்கம், நிலைத்த நீடித்த மீன் வளர்ப்பை உறுதி செய்தல் போன்றவற்றுக்கு வழி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமருக்கு தனி விமான வசதி
  • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்துவதற்காக, இரு தனி விமானங்கள், சிறப்பு வசதிகளுடன் தயாராகி வருகின்றன. 2020ல், இது பயன்பாட்டுக்கு வரும்.
  • வி.வி.ஐ.பி.,க்களுக்கு என, தனியாக விமானம் வாங்க, அரசு திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், போயிங் நிறுவனத்திடம் இருந்து, 68 விமானங்களை வாங்க, ஏர் - இந்தியா நிறுவனம், 2006ல் ஒப்பந்தம் செய்தது. 
  • அதில், கடைசி மூன்று விமானங்கள், சமீபத்தில் வந்துசேர்ந்தன. இதில், போயிங் 747 - 300 ரக விமானங்கள் இரு, வி.வி.ஐ.பி.,க்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட உள்ளன.இந்த இரு விமானங்களை, ஏர் - இந்தியாவிடம் இருந்து, மத்திய அரசு வாங்க உள்ளது. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக, 4,469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழக கடற்கரை சுற்றுலாத் தல மேம்பாட்டுக்கு ரூ.99.92 கோடி ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
  • தமிழகத்தில் கடற்கரை சர்க்யூட்டில் 2016-17 நிதியாண்டில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்காக ரூ.99.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. 
  • உள்நாட்டு சுற்றுலா மையங்கள் மற்றும் திருத்தலங்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டம் வாயிலாக 67 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க, பாரம்பரியமிக்க ஆன்மிகத் திருத்தலங்கள் மாநிலம் வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் சுற்றுலா கட்டமைப்புகளை உலகத் தரம் வாய்ந்த வகையில் மாற்றவும் மேம்படுத்தவும், புணரமைக்கவும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
  • புதுச்சேரியில் கடற்கரை சுற்றுலா சர்க்யூட் மேம்பாட்டுக்காக 2015-16-இல் ரூ.85.28 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.38.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
  • 2017-18 -இல் புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 66.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.13.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்மிக சுற்றுலா சர்க்யூட்டில் ரூ.40.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.8.14 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாட்டில் கடற்கரை சர்க்யூட்டில் 2016-17 நிதியாண்டில் சென்னை - மகாபலிபுரம் - ராமேசுவரம் - க ன்னியாகுமரி சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.99.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.19.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
  • காஞ்சிபுரம் சுற்றுலா கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 16.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.3.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி சுற்றுலாத் தல மேம்பாட்டுக்கு ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1.12 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்
  • அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
`தீர்ப்பு வரும்வரை ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது!' - உச்ச நீதிமன்றம் 
  • ஆதாருக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அதேநேரம், செல்போன் எண்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்தக் காலக்கெடு கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தநிலையில், கடந்த டிசம்பர் 15-ல் அந்தக் காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
  • இந்தநிலையில், ஆதார் தொடர்பான வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தட்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்குக் கூட ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம், அரசு அளித்துவரும் மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்குத் தடை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
கடன் உத்தரவாத கடிதம் முறை ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி
  • எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை அதிரடியாக ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் உத்தரவாத கடிதங்களை கொண்டே நீரவ் மோடி கடன் பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கீடு
  • மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
  • திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
டெல்லியில் காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை
  • டெல்லியில் நடைபெறும் காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். காச நோயை இன்னும் நாம் முற்றிலும் ஒழிக்கவில்லை. இதில், அடுத்த 10, 15 ஆண்டுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும். 
  • இது குறித்த சூழ்நிலையை நாம் ஆராய வேண்டும். 2025க்குள் இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் ரூ.7.92 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • சிட்கோ தொழிற்பேட்டைகளில் ரூ.7.92 கோடியில் உலகத் தரம் வாய்ந்த நேர்த்திமிகு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment